• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Meera Kugan

இடை இடையே மனதினுள் வந்து போகிறான்

Recommended Posts

 

அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி

அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து  

 

தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள்

தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில்

 

வர்ணங்களில் வானவில்லை காண்பது போல்

வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும்    

 

நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால்

நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே   

 

கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் 

கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ?

 

சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும்  

சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும்   

 

ஆனாலும் தனிமையை வேண்டி அரவணைத்துக் கொண்டு   

ஆதரவு கரம் நீட்டும் காலத்திற்காக மீண்டும் வீணான காத்திருப்பு

 

இடை இடையே மனதினுள் மீண்டும் அவன் வந்து போனதால்

இக் காவிய காதலை காலமும் தூரமும் அழிக்க முடியாததை உணர்ந்து   

 

வென்மதியிடம் தூது விட்டு விடிவெள்ளிக்காய் பாத்திருந்து

வெகுமதியாய் என்னைத் தர, கொண்ட திமிர் தனை விட்டு விட்டேன்

 

மீரா குகன்

ஜேர்மனி

தலைப்பை தந்து சிறந்த கவிதைகளை வெற்றிமணி பத்திரிகையில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள் . எனது கவிதையும் தேர்ந்தேடுக்கபட்டமை மகிழ்ச்சியை தருகிறது .

 

 

 

Edited by Meera Kugan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம் மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/
    • நீங்கள் எப்போதுமே பங்காளிகள் தானே பங்காளி! இதென்ன புதுசாய் புதுப்பிக்கிறியள்? 
    • துல்பன், நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும்.  உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது.    
    • இப்பதான்  முரளிதரனுக்கு திரை விலக தொடங்கியிருக்குது. ஆனால் காலம் கடந்து போச்சுது. தான்  சிங்களத்தின்  அடிமை என்பதை வெகுவிரைவில்  உணருவார். மாரடைப்பு வருகுதோ, தற்கொலை செய்யும் துணிவு இருக்குமா இவருக்கு?  தீனி போட்ட எஜமான் பொட்டில போடப்போறார். இடையிடை புலிபுரளி  விடுவதன் காரணத்தில் இதுவும் ஒன்று. தன் அடிமைகளை வைத்து தான் எப்படி தப்புவது என்றே அவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.