யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • நீதேஷ் ராவத் பிபிசி மராத்தி   கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது. அமோல் தோர் குற்றப் பின்னணி உடையவர். சாராயம் விற்றது தொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். என்ன நடந்தது? ஆர்வி நகரத்தில் உள்ள ராணி லக்‌ஷ்மிபாய் பகுதியில் உள்ள ஜோகனா மாதா கோயிலில் மதிய நேரங்களில் பெரிதாக கூட்டம் இருக்காது. இது பிரபலமான கோயில் இல்லை. வட் பூர்ணிமா தினங்களில் மட்டுமே கூட்டம் வரும் என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திலீப். "அந்த கோயிலில் ஆலமரம் இருப்பதால், வட் பூர்ணிமா அன்று மக்கள் அங்கு திரள்வார்கள். மற்ற நேரங்களில் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சூதாடி கொண்டும், சாராயம் விற்றுக் கொண்டும் இருப்பார்கள். இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமோல் தோரும் சாராய தொழிலில் ஈடுபடுபவர்தான்" என்கிறார் திலீப். படத்தின் காப்புரிமை NITESH RAUT எப்போதும் போல், அந்த கோயில் பகுதியில் மதியம் 12 மணி அளவில் ஆர்யன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறான். அமோல் தோர் அங்குள்ள ஒரு தூண் அருகே அமர்ந்து இருந்திருக்கிறர். திடீரென, அந்த ஆர்யனை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார். பின், அந்த சிறுவனின் ஆடைகளை நீக்கி, அங்கிருந்த சூடான டைல்ஸில் அமர வைத்திருக்கிறார். வெயிலின் காரணமாக அந்த டைல்ஸின் வெப்பம் 45 டிகிரி என்ற அளவில் இருந்திருக்கிறது. ஆர்யனின் பின்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அந்த சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு ஓடி இருக்கிறார். காயங்களைன் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் தாய், அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். 'கடும் நடவடிக்கை' ஆர்யன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறைந்தது பத்து நாட்களாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்கிறார் அவரின் தந்தை கஜனன் கட்சே. பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய அவர், "அந்த குற்றவாளி என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என யோசிக்கவே முடியவில்லை. திருடினான் என்று ஆர்யனை தண்டித்தார்களா அல்லது சாதிய வன்மத்துடன் தண்டித்தார்களா? ஒருவேளை ஆர்யன் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ திருடி இருந்தால், அவனை திட்டி இருக்கலாம் அல்லது கன்னத்தில் அறைந்திருக்கலாம். ஆனால், அவனி ஆடைகளை நீக்கி 45 டிகிரி வெயிலில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவன் வலியில் அழுதிருக்கிறான். ஆனால் அவன் மீது எந்த கருணையும் காட்டப்படவில்லை." என்கிறார். "இதனை பார்த்த ஒரு பெண் இதனை நிறுத்தும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த நபர் ஆர்யனை விடவில்லை. இறுதியில் அந்த பெண்தான் ஆர்யனை காப்பாற்றி இருக்கிறார். அவர் என் மகனை கொல்லப்பார்த்தாரா என்று தெரியவில்லை. கடவுள் போல வந்து அந்த பெண் என் மகனை காப்பாற்றி இருக்கிறார். அவர் மட்டும் இல்லை என்றால் என் மகனை இழந்திருப்போம்" என்று பிபிசி மராத்தி சேவையிடம் அந்த பெண் தெரிவித்தார். 'விளையாட்டுக்காக' "தினமும் மதிய வேளையில் இந்த சிறுவன் கோயில் பகுதியில் விளையாடுவான். இது அமல் தோரின் சாராய தொழிலுக்கு பாதகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த சிறுவனை அமல் தோர் தண்டித்திருக்கலாம்" என்கிறார் திலீப். இந்த வழக்கை விசாரிக்கும் பர்மேஷ் அகாசே இதனை மறுக்கிறார். சட்டத்திற்கு புறம்பான எந்த தொழிலும் அந்த கோயில் வளாகத்தில் நடைபெறவில்லை. இந்த வழக்கில் சாதிய பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார் பர்மேஷ். இந்த சிறுவன் எதையாவது திருடி இருக்கலாமென அந்த நபர் நினைத்திருக்கலாம். அதனால் விளையாட்டிற்காக இதனை செய்திருக்கலாம் என்கிறார் பர்மேஷ். ஆர்யனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். தினக்கூலியில் வரும் வருமானத்தை வைத்தே அவர்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். பல அமைப்புகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கோரி கோரிக்கை வைத்துள்ளன. உரிய நடவடிக்கை கோரி பீம் டைகர் சேனா எனும் அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. இதற்கு முன்பும் அந்த கோயில் அருகே விளையாடிய குழந்தைகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மனிததன்மையற்ற முறையில் இவ்வளவு மோசமாக யாரும் தாக்கப்படவில்லை. https://www.bbc.com/tamil/india-48682343  
    • June 19, 2019 கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   நள்ளிரவு வேளை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் திடீரென வந்த குழு ஒன்று ரயர்கள் மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக இட்டு தீயிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் அவசர அழைப்பின் பிரகாரம் அவ்விடத்திற்கு வந்த கல்முனை காவல்துறையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் செயற்பட்டுள்ளதுடன் காவல்துறையினரின் வருகையை அடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். இந்நிலையில் தப்பியவர்களை தேடி இராணுவம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இடத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #நள்ளிரவில்  #ரயர் எரித்தவர்களை  #இராணுவத்தினர்  #தேடுதல் #கல்முனை பாறுக் ஷிஹான்     http://globaltamilnews.net/2019/124654/
    • June 19, 2019 கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.இன்று(19) காலை பத்து மணிக்கு மேற்படி குடியிருப்பு மக்கள் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை கூறியிருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு காட்டு யானைகளின் அழிக்கப்பட்ட பயிர்களின் எச்சங்களுடன் வருகைதந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதோடு, மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்கியிருந்தனர். தங்களின் குடியிருப்புக்களுக்கு காட்டு யானைகள் தொடர்ந்தும் உள் நுழைந்து வான் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருவதோடு, வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அண்மைய நாட்களில் தினமும் யானையின் அச்சம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பில் நாங்கள் பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்த ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைகள் கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் மின்சார வேலிகள் அமைத்து உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து தருமாறு கோருகி்ன்றனர். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில் உடனடியாக செய்ய வேண்டிய தீர்வு, நிரந்தர தீர்வு தொடர்பில் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள் உதவிப் பணிப்பாளாருடன் கலந்தாலாசித்துள்ளோம் , அந்த வகையில் முதற்கட்ட நடவடிக்கையாக கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு எல்லைகளில் யானைகளை கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் வனஜீவராசிகள் திணைக்கள் ஊழியர்களுடன் பொது மக்களும் இணைந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். இரண்டாம் கட்டமாக நிரந்தர தீர்வாக மின்சார வேலி அமைத்தல் பணி தொடர்பில் ஆராய்ந்துள்ளோம், கல்மடுநகர் தொடக்கம் இரணைமடுவரை குறித்த வேலி அமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2019/124667/
    • சந்தர்ப்பவாத அரசியல்  நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தங்கள் நாடாளுமன்றப் பதவியை விலக்கவில்லை.. அமைச்சர் பதவியை வகித்த நான்கு முஸ்லிம்கள், நான்கு இராசாங்க அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என மொத்தம் 9 அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள்.  அசாத் சாலி தனது ஆளுநர் பதவியை விலக்கிய மறு கணம் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசாமில் அதே இடத்துக்கு சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். அசாத் சாலிதான் ஞானசார தேரரின் விடுதலைக்கு  சனாதிபதி சிறிசேனா அவர்களின் தூதராகச் செயற்பட்டார்.  இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு முஸ்லிம்கள் சந்தர்ப்பவாத அரசியலை கச்சிதமாக கடைப்பிடித்து வருகிறார்கள். அன்று தொட்டு நேற்றுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் இடம்பெறாத அமைச்சர் அவை கிடையாது. அமைச்சர் பதவிகளை வகிப்பதன் மூலம்  முஸ்லிம் மக்களது  கல்வி, வாணிகம், கைத்தொழில், மருத்துவம், சட்டத்துறை என பல துறைகளிலும் முன்னேறக் காரணமாக  இருந்துள்ளார்கள்.  அதற்கொரு சின்ன எடுத்துக்காட்டு  ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலத்தில் (22.11.2010 - 28.12.2014)  சட்டக்கல்லூரிக்கு 2013 இல் அனுமதி பெற்ற  மொத்த மாணவர்களில் (309) 78 பேர் முஸ்லிம்கள். சிங்களவர்கள்  155 பேர். தமிழர்கள் 55 பேர்.   2011 இல் 51  பேர் சித்திபெற்றார்கள்.  2008 ஆம் ஆண்டு மொத்தம் 242 இல்  14  முஸ்லிம் மாணவர்கள்  மட்டும்  சித்தி பெற்றார்கள். 2013 இல் சித்தி பெற்றவர்களில்  முதல் 3 இடத்தைப் பிடித்த மாணவர்கள் முஸ்லிம்கள் ஆவர். முதல் 10 இடத்தில்  6 பேர் முஸ்லிம்கள். முதல் 50 இடத்தில் 28 முஸ்லிம் மாணவர்கள் சித்தி பெற்றார்கள்.     
    • அழ‌கான‌ புகைப் ப‌ட‌ம் த‌மிழ் சிறி அண்ணா 😍😍😍😍😍😍😍