arjun

Niyoga - நியோகா

Recommended Posts

1910061_930860826967813_8895603285208585

 

  

 

DSC02015-X2.jpg

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு .

Share this post


Link to post
Share on other sites

உது என்ன படம்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

உது என்ன படம்?

கனடாவில் வெளிவர இருக்கும் முழு நீளத்தமிழ்ப்படம் .

Share this post


Link to post
Share on other sites

பெயர் குழு குளுப்பாக  இருக்கிறது .....

Share this post


Link to post
Share on other sites

படத்தின் பெயரும்,கதாநாயகியும் வித்தியாசமாய் இருக்குது.நன்றி அண்ணா

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

கறுப்பிக்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்க வேணும்...கேக்கிறனெண்டு குறை நினைக்கக்கூடாது.....உந்தப்படம் குடும்பமாய் ஐமீன் பிள்ளை பேரப்பிள்ளையளோடை  இருந்து பார்க்கக்கூடிய படமோ? ஏனெண்டால் Niyoga  எண்டு கூகிளிலை தேடேக்கை குண்டக்க மண்டக்க படமெல்லாம் வருது அதுதான் கேட்டனான்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்க வேணும்...கேக்கிறனெண்டு குறை நினைக்கக்கூடாது.....உந்தப்படம் குடும்பமாய் ஐமீன் பிள்ளை பேரப்பிள்ளையளோடை  இருந்து பார்க்கக்கூடிய படமோ? ஏனெண்டால் Niyoga  எண்டு கூகிளிலை தேடேக்கை குண்டக்க மண்டக்க படமெல்லாம் வருது அதுதான் கேட்டனான்.

நியோகா என்பது பெருமாள்முருகன் மாதொருபாகன் எழுதி பிரச்சனை பட்ட விடயம் தான் .

பிள்ளை இல்லாதவர்கள் கடவுளிடம் பிள்ளை கேட்பது தான் நியோகா .

கேட்க அசிங்கமாக இருந்தாலும் பெருமாள்முருகன் முருகன் கதைகள் வாசிக்கும் போது அத்தனயும் அடிபட்டு போய்விடும் .

படம் எப்படி என்று பார்த்த பின் தான் விமர்சனம் எழுதமுடியும் .

 

One Part Woman is a novel based on an ancient and supposed cultural practice among Tamil Hindus, called Niyoga. It is the story of a childless couple with a strong desire of having a child, depicted with sensitivity, anguish and gentleness. However, in this work of fiction, Murugan used actual names of places and communities, thereby casting aspersions on the parentage of many generations of the community. This invited a backlash from the community and from other organizations in support

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தப் படம் நியோகா, தீபன் படம்போல் பொதுஜனத் திரைகளில் ( பிரான்சில்) வருமா...!

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

12961587_10154788714365752_5897558644034

12794605_10154788714540752_2315786886499

12932651_10154788715690752_7099675056276

April 02/ 2016
இன்று York சினிமாவில் 'நியோகா' கனடியத் தயாரிப்புத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. திரைப்படம் நிறைவு பெற்றதும் பலருக்கும் பல கேள்விகள் இருந்தாலும் தரமான திரைப்படம் பார்த்தோம் என்ற மனநிறைவு இருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. திரைப்படத்தின் பெயர் மற்றும் முடிவு என்பவற்றில் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. என்வரையில் இந்த முடிவு பிடித்திருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சிந்திக்காமல் வெளியே வருவதைவிட சுவைஞர்களை சிந்திக்கத்தூண்டும் உத்தி பேசப்பட வேண்டிய ஒன்று. கதாநாயகியின் நடிப்பு உச்சந்தொடுகின்றது. பிள்ளையின் தந்தை யார் என்ற தேடல் மற்றைய வந்து போன பத்திரங்களை நினைவுபடுத்துகின்றது. தமிழ்த்திரைப்படங்களில் காணாத விடயங்களை கற்பனைக் காட்சிகளாக காட்டி மக்களை ஏமாற்றும் வணிக முயற்சிகள் எதுவுமில்லாமல் நல்ல திரைப்படமாக தந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். 
என்ன இவன் படத்தைப் பற்றிக் கூறவில்லை முடிவைப்பற்றிப் பேசுகின்றானே என்று கேட்கலாம். எமது உலகம் சமூகம் என்ன கூறும் என்ற அங்கலாய்ப்பில் தம் சுயத்தை இழந்து தம் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உழன்றுகொண்டிருக்கின்றது. தனி மனித உணர்வுகளை மதிக்காமல் வதைக்கின்ற எமது சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டை அடி இந்தத் திரைப்படத்தின் முடிவு என்று கூறலாம்.

கதை நடைமுறையை வெளிப்படுத்தி நின்றாலும் கனடிய குடிவரவாளர்கள் கனடிய வசதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் புற நடையாக துணையிழந்து தனிமையில் வாடும் ஒருவரின் உணர்வுகளைப் உற்றார் உறவுகள் முதல் பெற்றோர் வரை பொருட்படுத்தாமல் இருக்கும் அபத்தம் எங்களிடம் புரையோடிப்போய் இருப்பதைக் கண்கூடாகப்பாரக்கின்றோம். தனிமையின் தவிப்பும் துணையின்றி துடிக்கும் பெண்மையின் உணர்வின் வெளிப்பாடு திரைப்பட மொழியில் காண்பிக்கப்பட்டமை மெச்சத் தகுந்தது. தமிழர் சமூகத்தில் இவை பற்றி பேசிவிட்டால் தீட்டு என்னும் நிலை மாற்றம் வரவேற்கத்தக்கது.

தனிமையில் வாடும் ஒருவரின் அக நிலைசார்ந்த உணர்வின் போராட்டமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம். பெண்ணின் தனிமையின் வலியை பெண்ணால் தான் வெளிப்படுத்த முடியும் என்ற சில பெண்ணியவாதிகளின் கருத்து இங்கு நிலை நிறுத்தப்படுகின்றதோ என்று எண்ணும் வகையில் திரைப்படம் பார்வையாளர்களுடன் பேசுகின்றது. (இயக்குனர் பெண் படைப்பாளி சுமதி)
இனிக் கதையாக்கம் திரைப்படமாக்கல் என்று பார்த்தால் புலம் பெயர் தமிழரின் திரைப்பட முயற்சியின் நம்பிக்கைக் கீற்றுக்கள் இருளைக் கிழித்து புறப்படுகின்றன. இசைச் சேர்க்கை திரை மொழி பல திரைப்படங்களை வழங்கிய இயக்குனருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இருக்கின்றன. இந்தப் படத்தில் நடித்தவர்களும் தங்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். மொத்தத்தில் போலிகள் அற்ற பேசாப் பொருளைப் பேசி உண்மை நடைமுறைகளை உடைத்துப் போட்டு வெற்றி பெற்றுள்ளது 'நியோகா'

இனி எப்போது திரையிடுவார்கள் என்ற ஆவலை நியோக ஏற்படுத்தியுள்ளது

நடராஜா முரளிதரன் .

 • Like 2

Share this post


Link to post
Share on other sites


இணைப்புக்கு நன்றி. எம்மவர்கள் இந்தத்துறையில் மெதவாகவென்றாலும், ஆனால் உறுதியாகப்பயணிக்க நாமும் வாழ்த்துவோம்.

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • படித்தக் கருத்திட்டமைக்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி. 
  • இன்று போதனா வைத்தியசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான  ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     - Dr. Thangamuthu Sathiyamoorthy   අද දින ශික්ෂණ රෝහලේ දෙදෙනෙකුත් කෝපායි ප්‍රදේශයේ දහ අට දෙනෙකුත් කොරෝනා ආසාදනය වී ඇද්දැයි නිගමනය කිරීමට විද්‍යාගාර පර්යේෂණයට යොමු කරන ලදී. කිසිවකුටත් රෝගය ආසාදනය වී නොමැති බව තහවුරු වී ඇත
  • saudi aramco குறிப்பிட்ட அளவான பங்குகள் ரசியர்கள் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் இந்த கொரனோ  வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட எவருமே தயாரில்லை .  
  • நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான். அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்.. அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில். ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா. மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம். மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு. அப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன். மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு.. ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா.  எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான். எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு.. நல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம்.