Jump to content

மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் காணப்படும் 2G, E, 3G, H, H+ - இவற்றை பற்றி தெரியவேண்டாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.   1).

நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.

இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

   

2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.

4). Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152475&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விளங்குது....! நன்றி தமிழரசு....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.