Jump to content

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்படியான ஆறப்போடும் காரணங்களினால்தான் நான் யாழ்களத்தின் ஊடாக எவ்வித உதவி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அவசரம் அவசரமாக பணத்தை சேர்த்து விட்டு.......உடனடியாக யாருக்கும் உதவாமல்  பணம் வங்கியில் புளுக்கூடு கட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆயிரம் ஈரோவை வைத்து அறுபத்தெட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

வளங்களும் தேவைகளும் அதிகரித்துள்ள சூழலில் பாதிக்கப்பட்டுப் பராமரிப்பற்ற நிலை ஒதுக்குதல் ஓரங்கட்டுதல் போன்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என்பன இடம்பெறும் நிலையில் புலத்திலேயிருந்து உதவும் உறவுகள் நிதானமாகச் செயற்படவேண்டியது அவசியமானது. செய்யும் உதவி சரியாகச் சென்றடைவதையும் அது எந்தவகையிலே பயனாளிகளுக்குப் பயன்படுகிறது என்பதையும் அவதானித்துக் கையாளுதல் அதனைப் பொறுப்பேற்றுச் செய்வோரின் கடமையும் கூட என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டுமல்லவா?

1. இந்த நிதியை அந்தப் பிள்ளைகள் கற்கும் அதிபரோடு தொடர்புகொண்டு ஆராய்ந்து அதனடிப்படையில் உதவுதல்.

2. அவசரஉதவி தேவைப்படும் குடும்பங்களின் தரவுகளைப்பெற்று அவர்களில் ஒரு குடும்பத்துக்கு முழுமையாக உதவுதல். பொருத்தமானதாகும்.

3. நிழலியவர்களின் கருத்தையும் உள்வாங்குவதும் சாத்தியமானது.

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இப்படியான ஆறப்போடும் காரணங்களினால்தான் நான் யாழ்களத்தின் ஊடாக எவ்வித உதவி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அவசரம் அவசரமாக பணத்தை சேர்த்து விட்டு.......உடனடியாக யாருக்கும் உதவாமல்  பணம் வங்கியில் புளுக்கூடு கட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆயிரம் ஈரோவை வைத்து அறுபத்தெட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

ஆயிரம் euro  உங்களுக்கு வேண்டுமானால் சின்ன தொகையாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்குமல்ல. செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராக போய்விடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பது ஒன்றும் தவறல்லவே.

Link to comment
Share on other sites

On 10.4.2016 at 2:18 PM, வாத்தியார் said:

வணக்கம் சாந்தி அக்கா
nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal ஊடாக 100 € வியாழன் அன்று அனுப்பியிருந்தேன்.
IWAN GERT என்ற பெயரில் வந்திருக்கும்
கள உறவுகளின் ஆலோசனைப்படி எந்தத் திட்டத்திற்காவது
எனது பங்களிப்பையும் சேர்த்து விடுங்கள் .
நன்றி

வாத்தியார், உங்கள் உதவி கிடைத்தது. 

சனிக்கிழமை வரை உதவிய நணபர்களின் கருத்தை தொகுத்து முடிவெடுக்கலாம் என்பது என் கருத்து.  வளர்மதிக்கு பல்வேறு வழிகளில் இச்செய்தி வருவதற்கு முன்னரும் கிடைத்து கொண்டிருந்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

இதுவரையில் பலரது விரும்பமும் மேற்படி உதவியை பயனுள்ள வகையில் வேறு உறவுகளுக்கு கொடுக்கலாம் என்பதே. 

Eppothum Thamizhan நீங்கள் அனுப்பிய ஒருவருடத்திற்கான உதவியை முன்னாள் போராளியொருவரின் பெண்பிள்ளைகளின் கலுவிக்கு வழங்கலாம் என்பது எனது முடிவு. உங்கள் விருப்பத்தை அறியத்தாருங்கள். 

தாய் போரில் இறந்துவிட்டார்.  தந்தை கையொன்றை தோளோடு இழந்துவிட்டார். 3பெண் பிள்ளைகளையும் கூலித்தொழில் செய அது பராமரித்து வருகிறார். 15, 13வயதான மூத்த பிள்ளைகளை இளவாலையில் கொஸ்ரலில் விட்டு படிப்பிக்கிறார். மாதம் கொஸ்ரலுக்கு 2பிள்ளைகளுக்கும் ஆறாயிரம் ரூபா கட்டிக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வாழும் இடத்தில் வைத்து கல்வியை கொடுப்பது என்பது தந்தையால் முடியாது உள்ளது. தனது ஒற்றைக்கையோடு மேசன் தொழில் செய்தே பிள்ளைகளை படிப்பிக்கிறார். இளைய மகளை பகலில் உறவினர் ஒருவரிடம் பொறுப்பு கொடுத்தவிட்டே வேலைக்கு போய் வருகிறார். 

முட்டைக்கோழி 100 வளர்க்க உதவி கோரியுள்ளார். இதுவரையில் 40ஆயிரம் ரூபாய் ஒரு கிறிஸ்தவ சபைமூலம் பெற்றுள்ளார். மேலதிகமாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.  பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நீங்கள் பிள்ளைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்ளலாம். குறித்த போராளியுடன் உங்கள் தொடர்புகளை பேணிக் கொள்ளலாம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, shanthy said:

இதுவரையில் பலரது விரும்பமும் மேற்படி உதவியை பயனுள்ள வகையில் வேறு உறவுகளுக்கு கொடுக்கலாம் என்பதே. 

Eppothum Thamizhan நீங்கள் அனுப்பிய ஒருவருடத்திற்கான உதவியை முன்னாள் போராளியொருவரின் பெண்பிள்ளைகளின் கலுவிக்கு வழங்கலாம் என்பது எனது முடிவு. உங்கள் விருப்பத்தை அறியத்தாருங்கள். 

தாய் போரில் இறந்துவிட்டார்.  தந்தை கையொன்றை தோளோடு இழந்துவிட்டார். 3பெண் பிள்ளைகளையும் கூலித்தொழில் செய அது பராமரித்து வருகிறார். 15, 13வயதான மூத்த பிள்ளைகளை இளவாலையில் கொஸ்ரலில் விட்டு படிப்பிக்கிறார். மாதம் கொஸ்ரலுக்கு 2பிள்ளைகளுக்கும் ஆறாயிரம் ரூபா கட்டிக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வாழும் இடத்தில் வைத்து கல்வியை கொடுப்பது என்பது தந்தையால் முடியாது உள்ளது. தனது ஒற்றைக்கையோடு மேசன் தொழில் செய்தே பிள்ளைகளை படிப்பிக்கிறார். இளைய மகளை பகலில் உறவினர் ஒருவரிடம் பொறுப்பு கொடுத்தவிட்டே வேலைக்கு போய் வருகிறார். 

முட்டைக்கோழி 100 வளர்க்க உதவி கோரியுள்ளார். இதுவரையில் 40ஆயிரம் ரூபாய் ஒரு கிறிஸ்தவ சபைமூலம் பெற்றுள்ளார். மேலதிகமாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.  பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நீங்கள் பிள்ளைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்ளலாம். குறித்த போராளியுடன் உங்கள் தொடர்புகளை பேணிக் கொள்ளலாம்.  

 

சாந்தி, அப்படியே செய்துவிடுங்கள். யாராவது கஷ்டப்படும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு உதவுவதே எனது நோக்கம். படிப்புத்தான் எமது சொத்து, எமது விடிவுக்கான பாதை. அவர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து கல்வி சம்பந்தமான செலவுகளுக்கு உதவ நீங்கள்  எப்போதும் என்னை நாடலாம். என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.4.2016 at 7:01 PM, Eppothum Thamizhan said:

ஆயிரம் euro  உங்களுக்கு வேண்டுமானால் சின்ன தொகையாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்குமல்ல. செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராக போய்விடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பது ஒன்றும் தவறல்லவே.

எனது உள்கருத்து பண தொகையை பற்றியது அல்ல.

கதையை எழுதி விட்டு கதைக்கு தலையங்கம் வைப்பது நல்லதா?
இல்லையேல் தலையங்கம் வைத்து விட்டு கதை எழுதுவது நல்லதா?


இன்னாருக்கென்று உதவியை திரட்டிவிட்டு....அதன் பின் அவருக்கா இவருக்கா என்ற ஆலோசனகளும்...அதற்கான இழுத்தடிப்புகளும் உதவி செய்யும் மனப்பான்மையை பின்னடிக்க வைக்கின்றன.
இப்படியான தாமதம் முதற்தடவையல்ல....

Link to comment
Share on other sites

On 19.4.2016 at 3:40 PM, Eppothum Thamizhan said:

சாந்தி, அப்படியே செய்துவிடுங்கள். யாராவது கஷ்டப்படும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு உதவுவதே எனது நோக்கம். படிப்புத்தான் எமது சொத்து, எமது விடிவுக்கான பாதை. அவர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து கல்வி சம்பந்தமான செலவுகளுக்கு உதவ நீங்கள்  எப்போதும் என்னை நாடலாம். என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

வணக்கம் Eppothum Thamizhan,
தனிமடலில் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையை ஏற்படுத்தி தாருங்கள். குறித்த போராளி குடும்பத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

Eppothum Thamizhanஅவர்களின் உதவி இரண்டு பிள்ளைகளின் கல்விக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதி பணத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதனை மற்றவர்கள் யாரும் தெரிவிக்காமையால் எனது பரிந்துரையை மட்டும் தெரிவிக்கிறேன். சிலருக்கு இந்த முடிவு சங்கடமாகவும் இருக்கலாம். பணம் என்னிடம் இருப்பது எனக்கும் சங்கடத்தை தரும் விடயம்.

நோயோடு போராடும் பாடகர் மாவீரர்கள் இருவரைத் தந்த தந்தை சாந்தன் அவர்களது மருத்துவத்திற்கு கொடுத்தால் என்ன ? ஓம் என்றால் தெரிவியுங்கள் அவருக்கு அனுப்பி வைப்போம்.

 

Link to comment
Share on other sites

நோயோடு போராடும் ஒருவருக்கு, அவர் எவராக இருந்தாலும், மருத்துவ உதவி செய்வதை வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு, உதவி செய்துவிடுங்கள் அவருக்கு, சந்தோஷம் எனக்கு கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி சேர்வதால்

Link to comment
Share on other sites

மொத்தம் யூரோவில் கிடைத்த உதவி - 1158. 86€. 

இலங்கை ரூபாவிலை கிடைத்த உதவி - 42125. 00ரூபாய். 

வளர்மதிக்கு வழங்கப்பட்ட உதவி - 30000. 00 ரூபாய். 

எப்போதும் தமிழ் உதவிய உதவி போராளி குடும்பம் ஒன்றின் பிள்ளைகளுக்கான உதவி 450. 00€

பாடகர் சாந்தன் அவர்களின் மருத்துவ உதவி -700. 00€( இத்தோடு 12125ரூபாயும் சாந்தன் அவர்களின் மருத்துவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

முழுத்தொகையும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, shanthy said:

முழுத்தொகையும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

நன்றி 

Link to comment
Share on other sites

கிடைத்த உதவிகள் எங்கள் துன்பங்களை எந்தளவிற்கு நீக்கப் பயன்பட்டது என்பதைப் பயனாளிகள் மூலம் அறிந்து அதனை இங்கு அனைவரும் அறியும்படி தெரிவிக்க முடிந்தால் அது உதவும் உறவுகளுக்கு மேலும் உதவிபுரியக்கூடிய மனதை வளர்க்கும். புதியவர்களும் இணைவதற்கு வாய்ப்பளிக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உதவிகள் பாடகர் சாந்தன் , மற்றும் இன்னொரு குடும்பத்தின் குழந்தைகளின் கல்விக்கும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். முன்னேற்ற அறிக்கை விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.