Jump to content

[b]''கண்ணீர் துடை கலங்காதே.. வைகோ...""


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

''கண்ணீர் துடை கலங்காதே.. வைகோ...""

அண்ணனே வைகோ

நீ அழுவதா...???

உன் விழியில்

நீர் வீழ்வதா...???

நீ

சீறும் புலி

உன் நெஞ்சில்

என்ன வலி....???

உன்

கோட்டைக்குள் உளவாழி

உனக்கே இன்று

வெடி குண்டா...???

""மூக்கு கண்ணாடிக்கு""

முதுகு சொறிபவன்

உன் கட்சிற்குள்

ஏன் சவாரி செய்கின்றான்...???

துரத்தவனை

தூக்கி எறி

முடிந்தால்

தூக்கில் மாட்டு....

லஞ்சம் அங்கு

லட்சியம் மறக்கிறது

வஞ்சம் உனக்கு

வம்புக்கு வருகிறது....

துரோக சன்னங்கள்

உனை

துளையிட பார்கின்றது

விடாதே நீ எழு

வீழ்த்தவனை....

களம் கண்ட

புலி நீ

கண்ணீர் வடிப்பதா...???

சீறு

சிறுத்தையாய் எழு...

நீ மலை

உனை என்ன

செய்யும்

இந்த மடு....???

காகங்கள்

கரைகின்றன

கரையட்டும் விடு...

நீ குயில் கூவு

உனக்கு

கூட்டம் அதிகம்....

நீ

தாயக கோட்டை

உன்னை தகர்க்குமா

இந்த சீன வெடிகள்...???

நீ

நீதியின் கடை

நீயாயம்

வெல்லும் நட....

அதர்மம் அழி

""அரண்மனை ஏறு""

கபடங்கள் உனக்கு

கடிவாளம் இடுவதா....???

மக்களின் நண்பனே

எங்களின் தோழனே

சத்தியம் வெல்லும்

கண்ணீர் துடை

கலங்காதே....!!!

-

வன்னி மைந்தன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.