Jump to content

சதாம் தூக்கிலப்பட்டார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதாமுக்கு 30 நாட்களில் தூக்கு

inl01ym8.jpg

பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.

கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் <உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்சான் அல் திக்ரிதி மற்றும் ஈராக் முன்னாள் நீதிபதி அவாத் அல் பன்தர் ஆகிய மூவருக்கும் துõக்கு தண்டனை விதித்து பாக்தாத் சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

அமெரிக்காவால் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க ஆதரவாளர்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த கோர்ட்டின் விசாரணை ஒரு தலைப்பட்சமாகவும், நேர்மையற்றதாகவும் நடந்ததாக சதாம் உட்பட சர்வதேச மனித உரிமை போராளிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே, சதாம் உட்பட மூவரும் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவால் எந்த பலனும் இல்லை என அப்போதே சதாம் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், சதாம் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சதாமின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. "சதாமுக்கு எதிராக கடந்த நவம்பரில் பாக்தாத் சிறப்பு கோர்ட் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்படுகிறது. ஈராக்கின் உயர் மட்ட தீர்ப்பாயத்தை வழிநடத்தும் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சதாமுக்கு வழங்கப்பட்டுள்ள துõக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் அப்பீல் கோர்ட் செய்தித் தொடர்பாளர் நேற்று இதை தெரிவித்தார். சதாமுடன் அவரின் சகோதரர் மற்றும் முன்னாள் நீதிபதிக்கும் துõக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈராக் சட்ட விதிகளின் படி, அப்பீல் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர், அடுத்த முப்பது நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதனால், அடுத்த 30 நாட்களுக்குள் சதாம் உசேனும் மற்றவர்களும் துõக்கிலிடப்படுவர்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஈராக் நாட்டை சின்னாபின்னமாக சிதைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சதாமுக்கு தூக்குத் தண்டனை உறுதி அமெரிக்க அதிபர் ஜேர்ஜ் புஷ் மகிழ்ச்சி.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹ{சேனின் மேன் முறையீட்டை நிராகரித்து ஈராக் உயர் நீதிமன்றம் சதாமுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இதன் மூலம் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. அது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சட்டத்தின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

தனது ஆட்சிக்காலத்தில் 148 ஷியா முஸ்லிம்களைக் கொன்று குவித்த வழக்கில் சதாமுக்கு நவம்பர் மாதம் பக்தாத் நீதிமன்று தூக்குத் தண்டனையைத் தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து சதாம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார் இதனை விசாரித்த நீதிமன்று சதாமுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்ததுடன் 30 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

www.sankathi.com

Link to comment
Share on other sites

'யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே'. சதாம் அமெரிகாவின் கைப்பிள்ளையாய் இருக்கும் போது, எல்லாம் நன்றாக நடந்தது.UNESCO விருது கூட கிடைத்தது.ஆனால் இப்போ?

பல அப்பாவி மக்களின் கொலைக்கு காரணமான சந்திரிக்காவுக்கு UNESCO பதவியும் கொடுகிறார்கள். அமெரிக்காவுக்கு வால் பிடித்தால் எல்லா விருதும் கிடைக்கும், முக்கியமாக, ஐநா விடமிருந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதாமிற்கு தூக்கு எதிரொலி பாக்தாத்தில் குண்டு வெடிப்பு

fpn06om1.jpg

பாக்தாத்:சதாமுக்கு துõக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாக்தாத்தில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கத் துவங்கியுள்ளன.

துஜெய்ல் படுகொலை வழக்கில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு துõக்கு தண்டனை வழங்கி பாக்தாத் சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அப்பீல் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் சதாம் துõக்கிலிடப்படலாம் எனத் தெரிகிறது.

சதாமின் தூக்கு தண்டனை அறிவிப்பை அப்பீல் கோர்ட் நேற்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து பாக்தாத் உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடித்து வருகின்றன.சதாமின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்தாத்தின் மையத்தில் உள்ள பரபரப்பான மார்க்கெட்டில் நேற்று சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் சிக்கி ஏழு பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். மேலும், 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் அமெரிக்காவுக்கு தோல்வியே இல்லை.ஏனென்றால் எது அங்கே நடக்க வேண்டுமென நினைத்தார்களோ அது நன்றாகவே நடக்கின்றது.

Link to comment
Share on other sites

ஈராக்கின் இன்றய நிலையில் தீர்ப்பை வழங்கி விட்டு நிறை வேற்றுவதில் காலம் தாழ்த்துவது வம்பை விலை கொடுத்துவாங்குவதற்கு சமன்.

எப்படியும் புதுவருடத்திற்குள் கதையை முடித்துவிடுவார்கள். பழய விடையங்களிற்கு முடிவுகட்டி ஒரு புதிய திசையில் போக புதிய வருடம் பற்றி ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கும் செய்தியாக்கா சதாமின் மரண தண்டனை நிறைவேற்றல் பயன்படுத்தப்படும். எப்படியும் அடுத்த 48 மணத்தியாலங்களிற்குள்....

Link to comment
Share on other sites

சதாமின் மரணதண்டனை நிச்சயமாக இரகசியமாக நிறைவேற்றப்பட்டு பின்பு அறிவிக்கப்படும். ஆனால் இதனால் ஈராக்கிற்கு விடிவு வருகின்றதோ இல்லையோ ?? அமெரிக்கா , பிரித்தானியாவிற்கெதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்பது மட்டும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் உசேனை காப்பாற்றுங்கள்: உலக தலைவர்களுக்கு வக்கீல் கோரிக்கை

பாக்தாத், டிச.29-http://www.maalaimalar.com/

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்பீல் மன்றம் உறுதி செய்ததை அடுத்து அவருக்கு 30 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சதாம் உசேன் வக்கீல் குழு தலைவர் கலில் அல் துலாமி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

சதாம் உசேன் போர் குற்றவாளி. சர்வதேச சட்டத்தின்படி போர் குற்றவாளியை அவரின் எதிரிகளிடம் ஒப்படைக்க கூடாது. தற்போதைய ஈராக் அரசு சதாமின் எதிரிகளால் நடத்தப்படுகிறது. எனவே சதாமை அவர்களிடம் ஒப்படைப்பது குற்றம்.

எனவே உலக தலைவர்கள் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாட்டு சபை, அரபு லீக் நாடுகள் இதில் தலையிட வேண்டும். சதாம் உசேன் உயிரை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சதாம் உசேனை தூக்கில் போடுவதற்கு போப் ஆண்டவரின் அலுவலகமும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கார்டினால் ரெனாட்டோ மார்டினோ கூறும்போது'' சதாம் உசேன் ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்தவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது. எனவே அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது'' என்றார்.

சதாம் உசேனை தூக்கில் போடுவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் இருந்தாலும், முன்கூட்டியே தூக்கில் போடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசிய இடத்தில் வைத்து தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Link to comment
Share on other sites

அமெரிக்க படைகளின் காவலில் இருந்த சதாம் உசைன் சற்று முன்பு ஈராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க படைகளின் காவலில் இருந்த சதாம் உசைன் சற்று முன்பு ஈராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி உண்மையா?

நம்பக்கூடியதாக இல்லை மதன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மக்களுக்காக உயிரை தியாகம் செய்ய தூக்கு மேடைக்கு செல்ல தயாராகவுள்ளேன் - ஈராக் மக்களுக்கு எழுதிய இறுதிக்கடிதத்தில் சதாம்.

[Friday December 29 2006 08:33:31 AM GMT] [pathma](www.tamilwin.com)

எனது மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்வதற்கு நான் தூக்கு மேடைக்கும் செல்வதற்கு தயாராகவுள்ளேன் என ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

சதாமுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பான மேன்முறையீட்டை விசாரித்த மேல் நீதிமன்றம், மரணதண்டனையை உறுதிசெய்ததோடு அதை 30 நாட்களுக்குள் நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஈராக் மக்களுக்கு சதாம் ஹுஸைன் எழுதிய கடைசிக் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மக

Link to comment
Share on other sites

2 நாளில் சதாமுக்கு தூக்குஅமெரிக்க ராணுவம்

டிசம்பர் 29, 2006

பாக்தாத்: டிசம்பர் 31ம் தேதிக்குள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவார் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் சதாம் தூக்கிலிடப்படுவார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஈராக்கின் துஜைல் நகரில் ஷியா முஸ்லீம்கள் 148 பேரை கொலை செய்த வழக்கில் சதாமுக்கு பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை சமீபத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

ஈராக் சட்டப்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த 30 நாட்களுக்குள் அதை நிறைவேற்ற வேண்டும். எனவே சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் சதாம் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது குறித்து ஈராக் அரசு கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

பக்ரீத் விடுமுறை தொடங்குவதற்கு முன்பாகவே சதாமைத் தூக்கிலிட அமெரிக்கா தீவிரமாக உள்ளது. எனவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அதாவது இன்னும் 2 நாட்களுக்குள் சதாமைத் தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்க ராணுவமே செய்து வருகிறது. ஈராக் கூட்டணி அரசில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் சதாம் தூக்கிலிடப்படுவார்.

அவர் தூக்கிலிடப்படுவது வீடியோவில் படமாக்கப்படும் என்று அந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதாம் உசேன் மீதான விசாரணையில் அமெரிக்காவின் தலையீடு இருந்தது என்பது குறித்து ஏற்கனவே பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில் தற்போது சதாமைத் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்க ராணுவமே செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் சர்ச்சையை வலுப்படுத்தியுள்ளது.

சதாமை தூக்கிலிட உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அவசரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை இராக் அதிபர் தான் எடுக்க வேண்டும்.

அவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் ஜார்ஜ் புஷ்சின் முடிவை அவர் ஆதரித்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

தான் தூக்கில் போடப்படுவது உறுதியாகிவிட்டதால் தனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரை சதாம் சிறையில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் நாட்டுக்காக தூக்குக்குப் போக நான் தயார் என சதாம் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தனது குடும்பத்தினருக்கு சதாம் கடிதமும் தந்தார்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

Primary Navigation

HomeU.S.BusinessWorldEntertainmentSportsTechPoliticsScienceHealthTravelMost Popular

Secondary Navigation

Middle East Europe Latin America Africa Asia Canada Australia/Antarctica Kevin Sites Search: All News Yahoo! News Only News Photos Video/Audio Advanced

--------------------------------------------------------------------------------

Judge: Saddam to be executed by Saturday 10 minutes ago

BAGHDAD, Iraq - Saddam Hussein has been transferred from U.S. custody, his lawyers said, and an Iraqi judge authorized to attend the former dictator's hanging said he would be executed no later than Saturday.

The physical hand-over of Saddam to Iraqi authorities was believed to be one of the last steps before he was to be hanged, although the lawyers' statement did not specifically say Saddam was in Iraqi hands.

"A few minutes ago we received correspondence from the Americans saying that President Saddam Hussein is no longer under the control of U.S. forces," according to the statement faxed to The Associated Press.

"Saddam will be executed today or tomorrow," said Munir Haddad, a judge on the appeals court that upheld Saddam's death sentence. "All the measures have been done."

Haddad is authorized to attend the execution on behalf of the judiciary.

"I am ready to attend and there is no reason for delays," Haddad said.

thanks yahoo.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை அதிகாலை சதாமை தூக்கிலிடப்போவதாக ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை சனிக்கிழமைக்குள் சதாம் தூக்கிலிடப்படுவார் ! மனித உரிமை ஆணையம் கண்டனம். குடும்பத்தினர் கண்ணீர், சிலர் கொண்டாட்டம்.

ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் உசேன் நாளை சனிக்கிழமைக்குள் தூக்கிலிடப்படுவார் என்று சதாம் வழக்கின் பிரதான நீதிபதி முனீhர் கடார் ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு சற்று முன்னர் தெரிவித்தார். தூக்கிலிடப்படுவதற்காக வெள்ளியன்றே சதாம் ஈராக்கிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்தது என்று சட்டத்தரணி காலில் அல் டுலீமி தெரிவித்தார். இன்று வெள்ளி அல்லது நாளை அவர் தூக்கிலிடப்படுவார் என்று அவர் தெரிவித்தார். என்.பி.சி தொலைக்காட்சி இதுபற்றி தெரிவிக்கும்போது நாளை சனிக்கிழமை மாலை சூரியன் மறைவதற்கு முன்னர் அவர் தூக்கிலிடப்படுவார் என்றும் தெரிவித்தது.

http://www.alaikal.com

___________________________________________________

2 நாளில் சதாமுக்கு தூக்குஅமெரிக்க ராணுவம்

டிசம்பர் 31ம் தேதிக்குள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவார் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் சதாம் தூக்கிலிடப்படுவார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஈராக்கின் துஜைல் நகரில் ஷியா முஸ்லீம்கள் 148 பேரை கொலை செய்த வழக்கில் சதாமுக்கு பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை சமீபத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

ஈராக் சட்டப்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த 30 நாட்களுக்குள் அதை நிறைவேற்ற வேண்டும். எனவே சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் சதாம் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது குறித்து ஈராக் அரசு கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

பக்ரீத் விடுமுறை தொடங்குவதற்கு முன்பாகவே சதாமைத் தூக்கிலிட அமெரிக்கா தீவிரமாக உள்ளது. எனவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அதாவது இன்னும் 2 நாட்களுக்குள் சதாமைத் தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்க ராணுவமே செய்து வருகிறது. ஈராக் கூட்டணி அரசில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் சதாம் தூக்கிலிடப்படுவார்.

அவர் தூக்கிலிடப்படுவது வீடியோவில் படமாக்கப்படும் என்று அந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதாம் உசேன் மீதான விசாரணையில் அமெரிக்காவின் தலையீடு இருந்தது என்பது குறித்து ஏற்கனவே பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில் தற்போது சதாமைத் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளையும் அமெ>க்க ராணுவமே செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் சர்ச்சையை வலுப்படுத்தியுள்ளது.

சதாமை தூக்கிலிட உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அவசரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை இராக் அதிபர் தான் எடுக்க வேண்டும்.

அவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் ஜார்ஜ் புஷ்சின் முடிவை அவர் ஆதரித்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

தான் தூக்கில் போடப்படுவது உறுதியாகிவிட்டதால் தனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரை சதாம் சிறையில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் நாட்டுக்காக தூக்குக்குப் போக நான் தயார் என சதாம் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தனது குடும்பத்தினருக்கு சதாம் கடிதமும் தந்தார்.

Link to comment
Share on other sites

புஷ் மட்டுமா மகிழ்ச்சியை தெரிவிக்கலாம் நானும் கங்காரு படையணி சார்பில் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்

:unsure:<_<:lol::D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இலங்கை நேரப்படி 8.00 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார்

Link to comment
Share on other sites

இன்று ஈராக் நேரப்படி காலை 5-30 மணியளவில் சதாம் உஷைன் தூக்கிலிடப்பட்டார்.

-BBC NEWS-

Link to comment
Share on other sites

சதாம் தூக்கிலிடப்பட்டார்.

ஈராக்கின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் குசேனிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் சேர்த்து மேலும் இருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1982ம் ஆண்டு டுயால் நகரில் வைத்து 148 சியா பிரிவு மக்களைப் படுகொலை செய்தமைக்காக கடந்த நவம்பர் 5ம் நாள் சதாம் குசேனிற்கு ஈராக்கிய நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

இன்று அதிகாலை அறு மணிக்கு முன்னதாக சதாம் குசேனிற்கும் அவரது கூட்டாளிகள் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈராக்கிய அரசை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சதாம் குசேனிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள அவரது ஆதரவாளர்களால் ஈராக்கில் பெருமெடுப்பில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடலாமென அஞ்சப்படுகிறது.

இதேவேளை சர்வதேச நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதால் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்ததந்த நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிவிக்கின்றன.

www.sankathi.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கொடியவனாக சித்தரிக்கப்பட்டாலும், எதிரியிடம் சரணைடையாமல் தூக்கில் இறந்த சதாம் குசேனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி

Link to comment
Share on other sites

எனது மக்களுக்காக உயிரை தியாகம் செய்ய தூக்கு மேடைக்கு செல்ல தயாராகவுள்ளேன் - ஈராக் மக்களுக்கு எழுதிய இறுதிக்கடிதத்தில் சதாம்.

[Friday December 29 2006 08:33:31 AM GMT] [pathma]

எனது மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்வதற்கு நான் தூக்கு மேடைக்கும் செல்வதற்கு தயாராகவுள்ளேன் என ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

சதாமுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பான மேன்முறையீட்டை விசாரித்த மேல் நீதிமன்றம், மரணதண்டனையை உறுதிசெய்ததோடு அதை 30 நாட்களுக்குள் நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஈராக் மக்களுக்கு சதாம் ஹுஸைன் எழுதிய கடைசிக் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மக

Link to comment
Share on other sites

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்சியில் இருந்து அமெரிக்கா விரட்டியது. அணு ஆயுதங்களை சதாம் ஏராளமாக தயாரித்து ரகசியமாக பதுக்கி வைத்து இருப்பதாக கூறி இந்த நட வடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது.

குடும்பத்தை பிரிந்து தனியாக தப்பி ஓடிய சதாம் உசேனை 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது சொந்த ஊரான திக்ரித்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் பாதாள அறையில் இருந்து கைது செய்தனர். அவரை பாக்தாத்தில் உள்ள கேம்ப்கிராப்பர் எனும் இடத்தில் தனிமை சிறையில் அமெரிக்கா அடைத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

சதாம்உசேன் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக 1982-ம் ஆண்டு அவர் 148 ஷியா முஸ்லிம்களை படுகொலை செய்தது முக்கிய வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாக்தாத் தனிநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. இதில் சதாமே தனக்காக வாதாடினார். நீண்ட விவாதத்துக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை அளிப்பதாக கோர்ட்டு தீர்ப்பளித்தது.

30 நாட்களுக்குள் சதாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. எனவே அவர் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை ஈராக்கில் நிலவியது. இந்த நிலையில் பக்ரீத்துக்கு முன்பு சதாமை தூக்கிலிட வசதியாக அவரை தங்கள் பொறுப்பில் இருந்து ஈராக் அரசிடம் ஒப்படைப்பதாக நேற்று அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து சதாம் உசேனை தூக்கில் போடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இன்று காலை 6 மணிக்கு சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார். இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சதாம் உசேனுக்கு பாக்தாத்தில் எந்த இடத்தில் வைத்து தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காலை 8.35 மணிக்கு சதாம் மரண தண்டனை செய்தியை ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சியான அல்- ஹூரா மற்றும் அரபியா சானலும் வெளியிட்டன. ஈராக் ரேடியோவும் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை உறுதி செய்தன.

சதாம் உசேன் தன் சிறை அறையில் இருந்து தூக்கு மேடை வரை அழைத்து வரப்படும் காட்சிகள் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டன. அவர் தூக்கில் போடப்படுவதையும் அமெரிக்க மற்றும் ஈராக் அரசுகள் தனித்தனியே படம் பிடித்தன.

சதாம்உசேன் தூக்கி லிடப்படுவதை அரசு மற்றும் மத அதிகாரி, வக்கீல், டாக்டர், ஆகியோர் பார்வையிட்டனர்.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு மற்றொரு பகுதியில், அவரது சகோதரர் பர்ஷன் அல்- திக்ரித் தூக்கில் போடப்பட்டார். முன்னாள் நீதிபதி அவத்- அல் பங்குதருக்கும் இன்று காலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

3 பேரின் உடல்களும் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டன. இதை அரபிக் தொலைக்காட்சி அரேபியா வெளியிட்டது.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வெளியானதும் ஈராக்கில் சிறுபான்மையினராக உள்ள சன்னி முஸ்லிம்களிடம் சோகம் ஏற்பட்டது. அவர்கள் வேதனை மல்க கண்ணீர் விட்டனர். சன்னி இன மக்கள் வசிக்கும் ஊர்களில் கருப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

அதே சமயத்தில் ஷியா முஸ்லிம்கள் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை ஆதரித் தனர். பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒருவித அமைதி நிலவியது. என்றாலும் உலகம் முழுவதிலும் சதாமின் மர ணம் இஸ்லாமியர்களின் மனதை உலுக்கி, வாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

சதாம்உசேன் தூக்குதண்டனையை தொடர்ந்து கலவரம், நாசவேலைகள் நடந்து விடக்கூடாது என்ப தற்காக ஈராக் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்க ராணுவ முகாம்களில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. பாக்தாத்தில் ராணுவ கவச வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன.

ஈராக் முழுவதும் ஒருவித பதட்டநிலை நிலவுகிறது. இதனால் 90 சதவீதம் பேர் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தனர்.

அமெரிக்காவிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. அது போல உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கா தூதரகங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்!

பாக்தாதில் உள்ள ரகசிய இடத்தில் சதாம் உசேன் இன்று காலை 6.00 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

தூக்கு மேடைக்கு சதாமை அழைத்துச் சென்றபோது அவர் எந்தவித எதிர்ப்பபும் காட்டாமல் அமைதியாகவும், நிதானமாகவும், திடமாகவும் நடந்து சென்றார். தூக்கு மேடையில் நின்றபோது ஒரு கையில் திருக்குரானை இறுகப் பிடித்தபடி தூக்குக் கயிற்றுக்கு தனது தலையை அவர் காட்டினார் என இராக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.

மேலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்க அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்றும் தெரிகிறது.

2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கில் நுழைந்த சில நாட்களில் சதாம் உசேன் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அவர் சொந்த ஊரான திக்ரித் நகரில் வைத்து பிடிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சதாம் உசேன் உள்ளிட்டவர்கள் மீதான புகார்களை விசாரிக்க அமெரிக்க ஆதரவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு நவம்பர் 5ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சதாம் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இதுதவிர இன்னொருவரின் ஆயுள் தண்டனையையும் தூக்குத் தண்டனையாக மாற்றியது.

Saddamஇதைத் தொடர்ந்து சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சதாமுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஈராக் அரசு எந்தக் கருத்தையும், முடிவையும் வெளியிடாமல் இருந்த நிலையில் அமெரிக்க தரப்பில் ஈராக் அரசுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற நிர்ப்பந்தம் எழுந்தது.

அதுவரை தங்களது பொறுப்பில் இருந்து வந்த சதாமை, தண்டனையை நிறைவேற்றக் கூறி ஈராக் அரசு அதிகாரிகளிடம் அமெரிக்க படைகள் ஒப்படைத்தன. மேலும் சதாம் தூக்குத் தண்டனைக்கான ஏற்பாடுகளையும் அமெரிக்காவே செய்தது.

இன்னும் 36 மணி நேரத்திற்குள் சதாம் தூக்கிலிடப்படுவார் என்று நேற்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார்.

சதாம் தூக்கிலிடப்பட்டதை அமெரிக்க ஆதரவு ஈராக் தொலைக்காட்சியான அல் ஹுர்ரா டிவி முதலில் தெரிவித்தது. தூக்குத் தண்டனை முழுவதும் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அவரது வழக்கறிஞர், மத குரு, டாக்டர் ஒருவர் உடன் இருந்ததாகவும் அந்த டிவி செய்தி தெரிவித்தது.

தம்பியும், நீதிபதியும் தூக்கிலிடப்படவில்லை:

இதற்கிடையே, சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரரான பர்ஸான் அல் திக்ரிதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் இன்னும் தூக்கிலிடப்படவில்லை என்று ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முவாபக் அல் ருபையா மறுத்துள்ளார். முன்னதாக இவர்கள் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வந்தன.

இது குறித்து முவாபக் கூறுகையில், சதாம் உசேன் மட்டும்தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். அல் திக்ரிதி, அல் பாந்தர் ஆகியோர் தூக்கிலிடப்படவில்லை. நான் சதாம் தூக்கிலிடப்பட்டதை பார்த்தேன். அப்போது அவர் உடைந்து போய்க் காணப்பட்டார் என்றார் ருபையா.

அல் திக்ரிதியையும், அல் பாந்தரையும் பக்ரீத் முடிந்த பிறகு தூக்கிலிட ஈராக் அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது. ஆனால் நாளை அவர்கள் தூக்கிலிடப்படக் கூடும் என்று இன்னொரு செய்தி கூறுகிறது.

சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதுதொடர்பான படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. Saddam

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஈராக் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சதாம் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது. கராச்சி உள்ளிட்ட இடங்களில் சதாமுக்கு ஆதரவாக பலரும் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். சதாம் புகைப்படங்களை ஏந்தியபடி, அமெரிக்க கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்தியாவிலும் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லீம்கள் ஒன்று கூடி அமெரிக்காவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஏமனில் உடல் அடக்கம் சதாமின் கடைசி விருப்பம்:

இதற்கிடையே தனது உடலை ஏமன் நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என சதாம் உசேன் தனது மகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடைசி விருப்பமாக தெரிவித்துள்ளார்.

சதாமின் மகள் ரக்த் தற்போது ஜோர்டானில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். அவர் கூறியதாக சதாம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில், தனது உடலை தற்காலிகமாக ஏமனில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஈராக் விடுதலை பெற்றவுடன் சதாமின் உடலை ஈராக் கொண்டு சென்று மறு அடக்கம் செய்ய சதாம் விருப்பம் தெரிவித்துள்ளார். என சதாம் விருப்பம் தெரிவித்து ரக்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எனவே சதாம் உடலை ஏமனில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என் ரக்த் விரும்புகிறார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சதாம் தரப்பு வழக்கறிஞர் இஸ்ஸாம் ஜஸ்ஸாவி முன்னதாக கூறுகையில், சதாமின் மரணத்தை எதிர்கொள்ள அவரது மகள்கள் தயாராகி விட்டனர். அவர் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தி அடைய அவர்கள் இறைவனை இறைஞ்சிக் கொண்டுள்ளனர் என்றார்.

கொண்டாட்டமும் சோகமும்:

சதாம் உசேன் தூக்கில் போடப்பட்ட செய்தி வெளியானதும் துஜைல் நகரில் உள்ளவர்கள் வீதிகளில் கூடி அதை வரவேற்றுக் கொண்டாடினர். அதேபோல ஷியா முஸ்லீம்களும் சதாம் தூக்கிலிடப்பட்டதை வரவேற்று கொண்டாடினர்.

அதேசமயம், சதாம் ஆதரவாளர்களும், அவரது சொந்த ஊரில் உள்ளவர்களும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் பெரும் கலவரத்தில் இறங்கலாம் என்பதால் தலைநகர் பாக்தாத் உள்பட நாடு முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

http://www.nerudal.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.