Jump to content

தமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “


Recommended Posts

இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

நமது சமூகத்தில் இலக்கியம் படிப்பவர்கள் எத்தனைபேர்?

தொடர்ந்தும் இந்த ஆயுதப்போராட்டம் பேசாப்பொருளாக இருக்கிறது. இதை பாவித்து சுயநலமிகள் தங்களது வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் புலி எதிர் – புலி ஆதரவு என்று பேசி பதவிப்போட்டியில் இறங்கினார்கள். இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிர்கொடுத்த ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவுசார் தர்க்கங்களை மக்களிடம் அவர்கள் எடுத்து செல்லவில்லை..

தமிழ் ஊடகங்கள் கலாச்சார பண்பாட்டுத்தளத்திலோ அரசியலிலோ எதுவிதமான பங்களிப்பை செய்யாது அமெரிக்க கால்பந்தாட்டத்தின்போது நடனமாடும் இளம் பெண்கள் செயரிங் குழுவாக இருந்தது.

பல்கலைக்கழகங்களைப் பற்றி பேசிப்பயனில்லை அதைவிட எங்கள் காலத்தில் இருந்த பொண்ட் ரியூட்டரியின் சமூகபங்களிப்பு அதிகம்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமீபத்தில் மாணவிகளின் உடைககளில் கவனம் செலுத்திவருகிறது

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் தமிழினியின் சுயசரிதை நூல் பல விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறது. எனது அறிவில் இருந்த சில வெற்றிடங்களை நிரப்புகிறது.

தமிழினியின் கூர்மையான எழுத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டு முகநூல் நண்பராகினேன்

இலக்கியம்

பல பெண்கள் தங்களது தாம்பத்திய உறவை முறித்தபின் தங்களுக்கு கணவனால் நடந்த கொடுமையை மடைதிறந்தால்போல் கொட்டுவார்கள் இதை நான் எனது தொழிலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்படியான செய்கை அவர்களது மனப்பாரத்தை இறக்குவதுடன் மீண்டும் வேறுதிசையில் பயணத்திற்கு தயார்ப்படுத்துகிறது. நான் நினைக்கிறேன் பெண்களின் தாய்மையோடு இது சம்பந்தபட்டுள்ளது. அவர்களது இலட்சியங்கள் உடலுறவு தாம்பத்தியத்துடன் முடிவடைவதில்லை. இந்த தன்மையுடன் தனது மனப்பாரத்தை மிகவும் தெளிவான மனதுடன் தமிழினி இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார்..

எஸ்பொவின் வரலாற்றில் வாழ்தல் யாழ்ப்பாணத்து சாதியின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் தனது மனதில் உள்ளபாரத்தை வெளிக்காட்டும கத்தாசிஸ் இலக்கியமாக அடையாளப்படுத்தினேன். . எஸ்பொவின் சுயசரிதையில் சில இடங்களில் நம்பகத்தைன்மை தெளிவற்று இருந்தது.

கத்தாசில் இலக்கியத்தில் (Catharsis literature )முக்கியமாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கவேண்டும். அதன்படி தமிழினியின் புத்தகம் சத்தியமான வார்த்தைகளைக் கோர்த்து கத்தாசில் இலக்கியம் படைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய பந்திகளை இங்கு அடையாளப்படுத்தியுள்ளேன்.

இதுவரைகாலமும் நாலுகால் மிருகங்கள் எட்டுக்கால் நட்டுவக்காலிகள் போன்றவர்கள் எல்லாம் ஈழத்து அரசியல் என்னுடன் பேசுவார்கள். இவர்களுடன் பழகுவதற்கு பலவருட படிப்பும் மிருகவைத்திய அனுபவம் துணை செய்தது.. இனிமேல் அரசியல் பேசவருபவர்களிடம் குறைந்தபட்சமாக ‘தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் படித்துவிட்டுவா ‘ என சொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

புத்தகத்தின் சில பகுதிகள்

தலைவரைப்பற்றியது :-

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதுார், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “

எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

உயிரோடு இருந்தால் ஏதோ அரசியல் லாபத்திற்காக தமிழினியால் எழுதப்பட்டது என்பார்கள். இறந்த பின்பு இதை எமக்கு தந்து விட்டதால் தமிழினி தனது மரணத்தை அர்த்தமுளளதாக செய்துவிட்டு போயிருக்கிறார். இவர் போல் எத்தனைபேர் யார் யாரோ கனவுகளுக்கு உயிர்கொடுக்க நினைத்து மாண்டார்கள் என்பது நினைப்பதற்கு கடினமானது.

தமிழினியின்ஆரம்ப வக்கீலாக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) மேல்கொண்டு தமிழினியின் கேஸ் எடுத்து செல்லப்பட்டது. தமிழினி மிகவும் குறைந்தகாலத்தில் சிறையில் இருந்து விடுதலையாகினார். தமிழினிக்காக ஆஜரானபோது எதுவித பணமும் வாங்காது மடடுமல்ல நோர்வேயில் இருந்து சில உறவினர் பணம்கொடுக்க முன்வந்தபோது மஞ்சுல பத்திராஜாவால் வாங்க மறுத்தார். தமிழினியை சந்திக்க சிறைக்கு செல்லும்போது உணவுப்பண்டங்களைக் கொண்டு செல்வது இவரது வழக்கம்.

இலங்கையில் போரில் இருசமூகங்கள் ஈடுபட்டபோதும் மனித விழுமியங்களை பலர் பாதுகாத்தனர் என்பது எதிர்காலத்ததை அடுத்த சந்ததியினருக்கு நம்பிக்கையுள்ளதாக்கும் என்பதால் இந்த விடயத்தைக் இங்கு குறிப்பிடுகிறேன்

ஒரு கூர்வாளின் நிழலில் – காலச்சுவட்டின் வெளியீடு

http://noelnadesan.com/2016/03/07/தமிழினியின்-சுயசரிதை-ஒ/

Link to comment
Share on other sites

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

மிகவும் சோகமான வரலாற்றுப் பதிவுகள்.... :(

அர்ஜூன் அண்ணரின் வரிகளை பார்த்தல் "எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன்" 

யாரையோ அடிப்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறதே.  :oO:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

Link to comment
Share on other sites

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

7 hours ago, MEERA said:

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி வெடி என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடவும் இல்லை ஒரத்தநாடு நாட்டிலிருந்து புடவை விற்க வரவும் இல்லை. 

நாங்கள் இலங்கையில் எத்தனையோ சம்பவங்களை பார்த்துத்தான் வந்திருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் தப்பி வந்தவர்களும் இருக்கிறார்கள் யாழில். 

6 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

 

 

ந்ந்தன் யாராவது ஒட்டுக் குழு உறுப்பினர் தனது இயக்கத்தில் நடந்தவற்றை எழுதியுள்ளார்களா?

5 hours ago, நந்தன் said:

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

என்க்கு தெரிந்த வரை 2009ற்குப் பின்னர் மற்றவர்கள் தலைவரை விமர்சித்து எழுத தமிழினி மட்டும் தான் அம்மானை விமர்சித்து எழுதியிருக்கிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொயல் நடேசனின் முன்னோட்டம் இந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரப் போகிறது. "மிருக வைத்தியப் படிப்பும் அதனால் வந்த தொழில் அனுபவமும் தேசிய அரசியல் பேசுவோருடன் உறவாட உதவியது" என்று சொல்லியிருப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இதற்குப் பல அர்த்தங்கள், சந்தர்ப்பங்கள் வரும் போது குறிப்பிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

நீங்க திருந்தவோ

பழிவாங்குதலை நிறுத்தவோ

பழிவாங்குதலுக்காக தேடுவதை ஆனால் அதை மறைப்பதை உணரவோ

போவதில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு.வாய்க்காலில் தோற்றவுடன் புலனாய்வுப் போராளிகள்,அரசியற் போராளிகளையும்,அரசியற் போராளிகள்,புலனாய்வு போராளிகளையும் மாறி,மாறி குற்றம் சொல்லத் தொடங்கிட்டினம்...நல்ல காலம் அக்கா,புத்தகம் வெளி வரேக்கு முதலே இறந்து விட்டார். இல்லா விட்டில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூர்வாளின் நிழலில் ... 

இந்த புத்தகத்திற்கு தமிழினி அக்கா வைத்த பெயரிலேயே போராட்டத்திதற்கான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது. 
    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

Link to comment
Share on other sites

 

 

32 minutes ago, arjun said:

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு விதி செய்வோம்... 
சீண்டாமை ..மதிப்போம்..
மீறினால் ஏறி மிதிப்போம் 

சும்மா ஒரு கவிதை நயத்துக்கு எழுதியது... 

Link to comment
Share on other sites

1 hour ago, வந்தியதேவன் said:

 

 

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

என்னை பொறுத்தவரை தமிழினி புலிகளில் இருந்தது பல உயிர்களின் இழப்புகளுக்கு துணை போன ஒருவர்தான் ,

இப்போ அவர் என்ன எழுதியிருகின்றார் என்று வாசிக்க ஆவல் அவ்வளவுதான் .இன்று பல தாம் செய்த தவறுகளுக்கு பிரயாசித்தம் தேடுகின்றார்கள் .

மற்றபடி சிலருடன் சொறிந்தாலும் கொஞ்சம் ஆரோக்கியம் இருக்கும் அதுவும் இல்லாதவர்களுடன் அதுவும் வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம்: "ஒரு கூர்வாளின் நிழலில்" - தெய்வீகன்

 
.
(மெல்பனில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் நடத்திய  அகில  உலகபெண்கள்  தினவிழாவில் அறிமுகமான   தமிழினியின்  புதிய  நூல்)

 
Thamilini%2BBook.png
 
விடுதலைப்புலிகள்  அமைப்பின்  மகளிர்  அரசியல்துறைபொறுப்பாளரான  தமிழினி அவர்கள்  எழுதிய  தன்வரலாற்று  நூல் ஒரு கூர்வாளின்  நிழலில். சாவதற்கு  முன்புவரை  தான் எதிர்கொண்ட  போராட்ட  வரலாற்றையும்  தான்  நடத்திய போராட்டங்களையும்  சத்தியத்தின் வழிநின்று  சாட்சியமாக்கியிருக்கும்  பதிவு

 
வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த  உயிரின்  கடைசித்துளிவரைக்கும்  தான்  மிகவும்  நேசித்தமண்ணுக்கும்  மக்களுக்கும்  உண்மைகளை  சொல்லவேண்டும் என்பதற்காக  பல  விடயங்களை  எழுத்தில்  பதிந்துவிட்டு சென்றிருக்கும்   வரலாற்று  பொக்கிசம்.

 ஒரு இனத்தின்  அகமும்  புறமுமாக  முப்பதாண்டு  காலம்  பெரு நம்பிக்கையுடன்  மேற்கொண்ட  ஆயுதப்போராட்டமானது  எவ்வாறு கொடூரமாக முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது  என்பதை உணர்வுபூர்வமாக  பேசியிருக்கும்  வரலாற்று  நூல்  என்று இதைக்கூறலாம்

 
 
 

 
Thamizini_Sivakamy.jpg
 
 
போர்  முடிவுற்ற  ஏழாண்டு  காலத்தை  எட்டிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில்  அது  ஏற்படுத்திய  எத்தனையோ  காயங்களையும்  வலிகளையும்  பல  எழுத்தாளர்கள்  தமதுபுனைவெழுத்துக்களின்  ஊடாக  இலக்கியமாக்கியிருக்கிறார்கள்போரிலக்கியத்தின்  நுண்கூறுகளைக்கூட  அவ்வப்போது  தொட்டும் சென்றிருக்கிறார்கள்.  ஆனால்,  தமிழினி எழுதியிருக்கும்  இந்த நூலின்  ஒவ்வொரு  பக்கமும்  ஈழத்தமிழர்கள்  அனைவரும்வாசிக்கவேண்டிய  அவசியத்தை  தன்னகத்தே  கொண்டிருக்கிறதுஅவர்  முன்வைக்கும்  நியாயங்கள்  அனைத்திலும்  உண்மையை தயங்காமல்  பேசியிருக்கிறார்.

 
 தன்னையும்  தான்  சார்ந்த  அமைப்பையும்  தங்களது  பிழைகளையும்  எந்த  சமரசமும்  இல்லாமல்  விமர்சித்திருக்கிறார்இதன்   மூலம்  தான்  நேசித்த  மக்கள்  எதிர்காலத்தில்கண்மூடித்தனமான  இறந்தகால  புனைவுகளுடன் பயணித்துவிடக்கூடாது  என்ற  கவனத்தை  பொறுப்புடன்  பதிவு செய்திருக்கிறார்

 
என்னை பொறுத்தவரை,  ஈழத்தின்  போர்  இலக்கிய  வரலாற்றில் பலரது  படைப்புக்கள்  -  முன்னர்  கூறியது  போல -  புனைவுகளாக பதிவு  செய்யப்பட்டு  கவனத்தை  ஈர்த்திருக்கின்றன.   கோவிந்தனின் புதியதோர் உலகம்  முதல் ஐயர்,  செழியன்,  புஸ்பராசா, புஸ்பராணி என்று   பலர்  தாம்  சார்ந்த  இயக்கங்கள்  குறித்தும்  மக்கள்  குறித்துசாதகமாகவும்   எதிர்நிலைகளிலிருந்தும்  தத்தமது  நியாயப்பாடுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.  ஆனால், தமிழினியின்  கூர்வாளின் நிழலில்  அவற்றிலிருந்து  தனித்து  நின்று  பேசுகிறது  என்றுதான் சொல்வேன்
  
Thamilini%2BBook.png


 
சில இடங்களை  வாசிக்கும்போது, கைகள்  நடுங்கியது.  உயிரை  உருவி  எடுத்து  வெளியில்  எறிந்தது போன்ற  வெறுமையுடன் அடுத்த  பக்கத்துக்கு  செல்லவேண்டியதாகவும்  இருந்தது.   மக்களின் முன்னால்  தயங்காமல்  தன்  குற்றங்களை  ஒப்புக்கொண்டு கூற்றவாளிக்கூண்டில் ஏறிநின்று  பேசுகின்ற  ஒப்புதல் வாக்குமூலமாகவும்   தனது  விசுவாசத்தினதும்  அதன்  வீரியத்தின் நீட்சியில்   புறக்கணிக்கப்பட்ட  பொதுக்கடமைகளையும் வெளிப்படையாகபேசுகின்ற  -  உண்மைக்கு  நெருக்கமான - படைப்பாகவும்  அது  காணப்படுகிறது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

 

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை உங்கள் யதார்த்தமான கருத்துக்கு.
புலிகளின் பாசறையில் தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த / தலைமைத்துவம் கொண்ட போராளி தான் தமிழினி அக்கா.                               அந்தர் பல்டி எல்லாம் அடித்து கதை எழுதி இருக்க மாட்டார் என்பதுவே என் யூகமும்.
யுத்த பூமியின் கொடூரம், அடைந்த சின்னபின்னம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், சிறை வாழ்வு, நோயுற்ற நிலை, உதவிக்கரம் நீட்டியவர்கள், சுடு சொல்லில் திட்டியவர்கள் என்பதன் பிரதிபலிப்புகளாக இந்த புத்தகம் இருக்கும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

இதுவரை எல்லாம் தெரிந்த மாதிரி பிலிம் காட்டிவிட்டு...... இன்று மிச்சம் மீதி இருப்பதையும் வாசித்து புலிவாந்தி எடுக்க புது புத்தகம் தேடுகின்றது ------

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

தமிழினி இருக்கும் போதே இவரது நூல் வெளியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது கோசான். அவர் உயிருடன் இருக்கும் போதே இது தொடர்பான விடயங்கள் தொடங்கப்பட்டு நடந்து வந்ததை அறிந்து இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒருமுறை தமிழினி மேலும் இரு போராளிகளுடன் சமாதான காலத்தில் சுவிஸ் நாட்டிற்கு வந்த சமயம் எனது வீட்டிற்கும் வந்திருந்தார். அவரை அழைத்துவந்த மாநிலப்பொறுப்பாளர் கடந்த வருடம் அவரின் முகநுhல் புறோபைல் படத்தில் நடிகர் விஜய் குடியிருந்தார் என்பது வேறு விடயம்.

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு நேரம். வரவேற்பறையில் தமிழினியும் இன்னபிற பணியாளர்களும் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு தமிழினி யார் என்றே தெரியாது. யாரோ ஒரு போராளி வந்திருக்கின்றார் என்பதோடு சரி.

சம்பிரதாயத்திற்காக வரவேற்பறை சுவரில் சாய்ந்துநின்று வணக்கம் வைத்தேன். அந்த சுவர் இப்படி எத்தனையோ வணக்கங்களை கண்டிருக்கின்றது.

இப்பொழுது அந்த மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரும் நானும் அப்போது தளபதி படத்தில் வரும் ரஜனி & மம்முட்டி போல் உயிர்நண்பர்கள். வெள்ளி இரவு என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது வழக்கம். அன்று அவன் தான் என்னை ஏற்றிச்செல்வதற்கு வந்திருந்தான். அப்படி தமிழினியுடனும் பேசும் வாய்ப்பு அவனிற்கும் அமைந்தது.

மரியாதை நிமித்தமாகவென்றாலும் ஏதாவது பேசியாக வேண்டும். என்ன கேட்கலாம் என்ற சிந்தனையில் இருந்த போது அவரே மேசையில் இருந்த கடிதத்தில் ஒரு நீண்ட ஜேர்மன் சொல்லைக்காட்டி அதனை வாசித்து காட்ட முடியுமா என்றார். நான் வாசித்துக்காட்டியதும் அவரும் அவருடன் வந்த பெண்ணும் (மெய்பாதுகாவலராக இருக்க வேண்டும்) ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

எவ்வளவு பெரிய ஒரு போராளிக்கு இவ்வளவு சின்ன ஆசையா என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது எனது முறை. ஏதாவது கேட்டாக வேண்டும். இல்லாதுவிடின் அவர் சென்ற பின்னர் எனக்கு அப்பாவால் இலவச வகுப்புகள் எடுக்கப்டலாம்.

அடுத்த நாள் தமிழனி பங்குபற்றும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. "பெடியனும் பெட்டையும் சேர்ந்து ஒரு அமைப்பில வேலை செய்யிறதை பெற்றோர்கள் தப்பா நினைக்கினம். இதைபற்றி நீங்கள் ஒருக்கா கூட்டத்தில கதையுங்கோ" என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவனவனுக்கு அவனவன்ரை பிரச்சனை முக்கியம்.

அந்த கோரிக்கைக்கு ஒரு காரணமும் இருந்தது. நான் அப்பொழுது ஒரு அமைப்பில் இருந்த ஒருத்தியை லைன் போட்டுக்கொண்டிருந்தது தான் காரணம். அப்புறம் என்னாச்சா? அந்த லைன் அறுந்து ரெம்ப நாளாகிவிட்டது. அது வெறும் அவுட்கோயிங்க் லைன் மட்டுமே. இறுதிவரை இன்கம்மிங்க வரவேயில்லை. 
தமிழினியக்கா என்ன நினைத்தாவோ தெரியவில்லை "சரி சொல்லுறனப்பன்" என்றுவிட்டு மற்றவர்களுடன் வேறுவிடயங்கள் பற்றி பேசத்தொடங்கினார்.

அதன் பின்னர் அவரை நான் சந்தித்ததும் இல்லை. அவ்வப்போது ஊடகங்களில் பார்க்கின்ற முகம் மட்டுமே. 
இறுதியாக யாராலுமே மறக்க முடியாத அந்த புகைப்படத்தில் தான் பார்த்தேன்.
நோய்தின்று முடித்த உடலை வெள்ளை துணிகளால் மூடி பெட்டிக்குள் வைத்திருந்த அந்த புகைப்படத்தை தான் சொல்கின்றேன்.

எவ்வளவு பெரிய ஒரு ஆளுமை. இப்படியா முடியவேண்டும்? எங்காவது பார்த்து பேசிய மனிதர்கள் மரணிக்கும் போது மட்டுமே மரணத்தின் வலியை உணருகின்றவர்களில் நானும் ஒருவன். தமிழினி அக்காவின் மரணம் அப்படி தான் இருந்தது.

அவரின் மரணத்திற்கு பின்னர் நடந்ததெல்லாம் என்னவோ சுயநல அரசியல்கள் தான். இறுதிவரை அவருடன் தொடர்பில் இருந்ததாக ஒருவர் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். ஆனால் தமிழினியின் குடும்பத்தாரோ இறுதிச்சடங்கிற்கு கூட பணமில்லாமல் பிச்சையெடுக்கும் நிலமை. இன்னொரு பகுதி அவரிற்கு என்ன பதவி கொடுத்து கெளரவிக்கலாம் என்ற சண்டையில் மும்முரமாக இருந்தது. அரசியல் தலைவியை வைத்தே அரசியல் செய்துகொண்டார்கள். ஆனால் பாவம். இறுதிவரை தமிழினியால் வழக்கறிஞரிற்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இக்கட்டாண நிலையிலிருந்தார். அவர் கட்டிக்காத்து வந்த அமைப்பை இப்பொழுது கொண்டிளுப்பவர்களோ, அவரை வைத்து அரசியல் செய்பவர்களோ அல்லது அவருடன் இறுதிவரை தொடர்பிலிருந்ததாக சொன்ன அந்த நபரோ இதைபற்றி அறிந்திருக்கவில்லை போலும்.

இறுதியில் சிங்கள வழக்கறிஞரான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் சிறையிலிருந்து தமிழினியை வெயியே கொண்டுவந்தார்.

இங்கே நான் சொல்வது யாரோ ஒருவரைபற்றியதல்ல.ஒரு தலைவியை பற்றி. அவரிற்கே இந்நிலையென்றால்...

தமிழினியின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும் பட்சத்தில் அவரையும் துரோகியாக்கவதற்கான வேலைகளில் இதே அமைப்புகள் இறங்கும் என்று உள்பெட்டியில் சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

இக்கருத்திற்கு வலுச்சேர்தாற்போல் ஒரு ஆரம்பகால பணியாளர் தனக்கு தமிழினியின் விடுதலை மீது சந்தேகம் இருப்பதாக என்னிடம் சில மாதங்களிற்கு முன்னர் கூறியிருந்தார்

"எல்லா மனிதர்களையும் போல் 2009ற்கு பின்னர் போராளிகளிற்கு விடிவதில்லை. அவர்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு, அவர்களை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைத்த எங்களிற்கு அவர்களின் கொள்கைப்பிடிப்பு பற்றி பேசுவதற்கு ஏதாவது அருகதையிருக்கிறதா" என்று கேட்டதும் அவர் ஆம்/இல்லை என்ற தோணியில் தலையசைத்திருந்தார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் கூர்வாளின் நிழலில் சுயசரிதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.

Google Play Storeஇல் இந்த புத்தகம் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. இலவசமாக சில பக்கங்களை வாசிக்கும் வசதியும் அங்கே உள்ளது. அப்படி வாசித்தவற்றில் முன்னுரையிலே அனைவரின் சந்தேககங்களிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் "விசாரணையின்போதோ அல்லது அதன் பின்னரோ சக போராளி ஒருவர்கூட தன்னால் எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்படவில்லை. தான் சார்ந்திருந்த அமைப்புக்கு உரியதான ஒரு சதம் பணத்தையோ சிறு பொருளையோ தான் எதிரியிடம் ஒப்படைக்கவோ அல்லது சொந்தப்பாவனைக்கு எடுத்துக்கொள்ளவோ இல்லை". என்று எழுதப்பட்டிருக்கின்றது.

"இனியும் ஆயுதப்போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக்கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகின்றேன். எமது எதிர்காலச்சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக்கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோகவேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கு அது தொடர வேண்டும் என நினைத்திருக்கவில்லை" இது தமிழினியின் வரிகள்.

இன்னுமோர் இடத்தில் இப்படி எழுதுகின்றார் "நாடு கிடைத்ததும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்களின் புத்திஜீவிகள் நாட்டை முன்னேற்றுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம்".

இப்பொழுது எனது மனசாட்சி என்னை கொல்வது போல் உங்களின் மனசாட்சியும் உங்களை கொன்றுகொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, நீங்கள் நினைக்கின்ற மாதிரி புத்தகம் இருந்தால் சந்தோசம்...எதற்கும் புத்தகம் வரட்டும் வாசித்து விட்டுக் கருத்துக் கூறலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.