Jump to content

ஐம்பது டொலர் " விவ்டி டொலர்ஸ்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் சொல்லி தந்த சொறி,தங்க்யூ என்றஇரண்டு வார்த்தைகள் எனக்கு இலகுவாக இருந்தது, அந்த வண்ணசிங்களத்தியுடன் மன்னிப்பு கேட்பதற்கு.‍பாக்கை மாற்றி கொண்டு அவளிடம் விடைபெற்றேன்.

வரிவிலக்கு கடையில் உற்சாகபாணம் இரண்டை வாங்கி சென்றால் உறவுகளுக்கு கொடுத்து நானும் இன்பம் காணலாம் என்ற எண்ணத்துடன் அருகிலிருந்த கடைக்குள் சென்று விலைகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது எதை தெரிவுசெய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. குறைந்த விலையில் நிறைந்த இன்பம் காணக்கூடியதாக  இரண்டு புட்டிகளை தெரிவுசெய்து இரண்டின் விலைகளையும்  கூட்டி பார்த்தேன் அமெரிக்கன் டொலர் 50 வந்தது, அதை அவுஸ்ரேலியா டொலருக்கு மாற்றியபொழுது கிட்டதட்ட இரண்டு 50 டொலருக்கு துட்டு விழுந்தது.

பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியபடியே பச்சை கதவினுடாக வெளியே வந்து, வெள்ளை யூனிபோர்ம் அணிந்து கறுத்த தோல் பட்டிகளுடன்  நின்று அரைட்டை அடித்துகொண்டிருந்தஉத்தியோகத்தர்களை பார்த்து புன்னகையை செலுத்த அவர்களும் பதில் புன்னகையுடன் வெளியே செல்ல அனுமதித்தனர்.

வழமையாக ஆயுதங்களுடன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டிருக்கும் விமானப்படையினரைத்தான் அதிகமாக காணலாம் .ஆனால் இந்த தடவை அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.ஒரு சில படையினர் ஆயுதங்களின்றி நின்றனர் .முன்பு இந்த கோதாரிபிடித்த சிறிலங்கா ஆயுதபடையினரை கண்டால் நேரா முகத்தை பார்ப்பதை தவிர்ப்பதுண்டு, ஊரிலசின்ன வயசில அவையளை பார்த்து அடி வாங்கிய அனுபவத்தின் எதிரொலியாக அவர்களை கண்டால் பார்ப்பதில்லை,மற்றும் இன்னுமொரு காரணம் இவன் கொத்துரொட்டி விற்பவன்,கொடி பிடிப்பவன் என  யாராவது போட்டு கொடுத்திருந்தால் என்ற பயம். இந்த தடவை ஆயுதமின்றி நின்றதனால் பார்த்தேன்."குட் மொர்னிங்" என்றார் பதிலுக்கு "குட் மொர்னிங்" சொல்லிவிட்டு சென்றேன்.

நீ ஆயுதமின்றி என்னை வரவேற்பதால் நீயும் உனது படையும் நீ வாழும் நாடும் எனது நண்பன் என்று  நினைக்கவில்லை.நீ விசில் அடித்தால் ஒரு நிமிடத்தில் உன்கையில் ஆயுதம் வந்து சேரும் அத்துடன் மேலதிக நண்பர்களும் உனக்கு துணையாக வந்து பலம் சேர்ப்பார்கள் .நீ மனித உரிமையை மீறினாலும்   உன்னை பாதுகாக்கும் உன் அரசு .நான் பொதுமகன் எந்த குற்றசாட்டையும் நீ வைக்கலாம் என்று மனதில் நினைத்தபடியே வரவேற்பு பகுதியை சென்றடைந்தேன்.

உறவுகள் எனக்காக காத்திருந்தார்கள் .அக்கா வந்து கட்டியணைத்து கண்ணீர் மல்கினார்.

"என்னடா எப்படியிருக்கிறாய் ,மெலிந்து போனாய்,அவுஸ்ரேலியாவில பஞ்சமே" என நக்கலாக  கேட்டார்.இதே கேள்வியை இரண்டு வ‌ருடங்களுக்கு முதல் நான் போகும் பொழுதும் கேட்டவர்.

"நல்லாய் இருக்கிறன் வயசு போகுது அதுதான் அள‌வாய் சாப்பிடுகிறனான்"என போன முறை சொன்ன பதிலை இந்த முறையும் சொன்னேன்.

"நீங்களும் நல்லாய் மெலிந்து போயிட்டியள்"

"நானும் டயட் தான்"இருவரும் கதைத்துகொண்டு நடக்கும்பொழுது மருமகன் மொபைலில் " அண்ணே மாமா வந்திட்டார் வானை கொண்டு வாங்கோ " என்றான் .

மருமகன் வானில் சமான்களை ஏற்றினான் .டுயுட்டி விரி பாக்கை நான் கையில் பத்திரமாக வைத்துகொண்டேன்.

"என்ன உது புதுப்பழக்கம் போல கிடக்கு"

"சித்தப்பாவும் ,சினேகிதப்பெடியனும் கேட்டவையள் "

"சித்தப்பா  ஒருநாளும் எங்கன்ட வீட்டை வரமாட்டார் ,உதை மட்டும் உன்னட்ட அடிச்சு கேட்டிருக்கிறார்,கொண்டுபோய் கொடுக்காத டெலிபோன் அடிச்சு சொல்லு அவ‌ர் வந்து எடுக்கட்டும். "

"ம்ம்ம்ம்ம்"

"இப்ப ம்ம்ம் என்று சொல்லுவாய் பிறகு நீ நினைத்தைதான் செய்வாய்"

 

குடும்ப அரசியலை நோக்கி கதை போக,

"அத்தான் மைத்திரி என்னவாம்"

"மைத்திரி கொடுக்க நினைத்தாலும் சிங்களவன் விடுகிறானே,இந்தியாகாரன் வேற உதுக்குள்ள நிற்கிறான் ஒன்றும் கொடுக்கவிட மாட்டான்"

"மாமா உங்கன்ட ஆட்கள் எங்களிட்ட நேற்று வாங்கிகட்டிச்சினம்"

"நீங்கள் 13 பேர் விளையாடினா வெல்லுவியள் தானே"

"13 பேரோ"

" பின்ன என்ன? உங்கன்ட அம்பயரும் சேர்ந்து விளையாடினார்"

"சும்மா நொட்டை சாட்டு சொல்லாதையுங்கோ,தோத்தது ,தோத்ததுதான்"

மருமகனுடன் விளையாட்டைப்பற்றியும்,அக்காவுடன் குடும்ப அரசியல் ,அத்தானுடன் நாட்டு அரசியல் கதைத்துகொண்டு பயணம் தொடர்ந்தது.

"என்னடா புதுப்பாதையால் போறாய்"

"இதுதான்  எங்கன்ட மோட்டர் வே,உங்கன்ட நாட்டை மாதிரித்தான் இப்ப எங்கன்ட நாட்டிலயும் மோட்டர் வே வந்திட்டுது"

 கட்டுநாயக்க கொழும்பு பாதையால் 75 ஆம் ஆண்டளவில் முதல்முறையாக தொடங்கிய எனது பயணம் கடந்த 2015 ஆம்  ஆண்டு மோட்டர் வேக்கு மாறியது .

71 ஆம் ஆண்டு கம்னியூச கிளர்ச்சியை முறியடிக்க பல முதலாளித்துவ நாடுகள் ஆதரவளித்தன.முறியடித்த கையோடு வெளிநாட்டுதலைவர்களை வரவழைத்தனர்

பொது நலவாய நாடுகளின் மாநாடும்,அணிசேரா நாடுகளின் மாநாடும் அடுத்துஅடுத்து கொழும்பில் நடை பெற்றமையால் வெளிநாட்டு பிறமுகர்கள் வந்து செல்வதற்காக அந்த பாதை அகலமாக்கப்பட்டது .பாதை அகலமாக்குவதற்காக வீதிக்கு அருகாமையிலிருந்தபலர் தங்களது வீடுகளை இழக்க  நேரிட்டது, நஷ்டஈடு பலருக்கு கிடைக்கவில்லை .மாநாடுக்கு வந்து சென்றவர்கள் அறிக்கை விட்டார்கள் சிலோன் அழகியஅமைதிப்பூங்கா என்று, அப்பா,பெரியப்பா ,மாமா,சித்தப்பா,பக்கத்துவீட்டு அங்கிள்மார் ஒன்றாக கூடி திண்ணை அரசியல் பேசும் பொழுது, ரொகனா வீஜயவீரா சீனா ஆதரவா செயல்பட்டாரா?ரஸ்யா ஆதரவா செயல்பட்டாரா? என விவாதிப்பார்கள்.கடைசிவரை அதற்கு விடை தெரியாமல் அவர்கள் இறந்துவிட்டார்கள்.

பதின்ம வயதில்  ஊரிலிருந்து வந்த எனக்கு அந்த பாதை மிகவும் ஆச்சரியத்தை தந்தது.இலங்கையில் அப்பொழுது இருந்த மிகவும் அகலமான பாதை அதாகதான் இருக்கும்.

கிறிஸ்தவ தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,விகாரைகள்,என அந்தபாதை ஒரு பல்கலாச்சாரத்துக்கு சாட்சியாக இருந்தது.ஆனால் இந்து கோயில் அந்த பாதையில் மருந்துக்கும் காணவில்லை என்று மனது ஏங்கியது. வீதியோர கடைகளில் "உர மஸ்" என  சிங்களத்தில் எழுதியிருக்கும் .சிங்களம் எழுத்துகூட்டி வாசிப்பேன் ஆனால் கருத்து தெரியாது.அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் அது பண்டிறைச்சி என்று.

பழைய நினைவில் முழ்கி கொண்டிருக்கும் பொழுது,

"மாமா நித்திரையோ"

"இல்லை சொல்லு"

"நீங்கள் போட்டிருக்கிறது பிரான்டட் சப்பாத்தே"

"இல்லை, ஏன்"

"என்ன மாமா அவுஸ்சில இருந்து வாறீயள் ஒரு பிரான்டட் சூவை வாங்கி போட்டுக்கொண்டு வாரது,நான் பிரான்டட் சூ,சேர்ட் தான் போடுறனான்"

"அதுக்கெல்லாம் காசுக்கு எங்க போறது,அந்த காசுக்கு இப்ப நான் போட்டிருக்கிற சப்பாத்தை போல நாலு சோடி வாங்கி போடுவன்.

"அதுசரி நீ போட்டிருக்கிற சப்பாத்து என்ன விலை" ,

"  அண்ணா அவுஸிலிருந்து போன முறை வரும் பொழுது தந்தவர்,இது அங்க என்ன விலை வரும்"

"உது 200 டொலருக்கு கிட்ட வரும்,நான் போட்டிருக்கிறது 50 டொலர் தான்

ய‌ஸ்ட் ஃபிவ்டி பக்ஸ் "

வீடு வந்ததே தெரியவில்லை அவ்வளவுக்கு விடுப்பு கதைத்தோம்.குளித்து விட்டு அக்கா எனக்காக விசேடமாக தாயாரித்த உணவுகளை பரிமாறினார்.

"அப்பா இன்றைக்கு அம்மா  நல்லாய் ருசியா சமைத்திருப்பா வாங்கோ சாப்பிடுவோம்"

"இல்லாட்டி நீ அப்பாவும் பட்டினிதானே கிடக்கிறனீயள்"என அக்கா அவர்களை பார்த்துமுறைத்தார்.

"இட் இஸ் ஒகே அம்மா...கூல் யஸ்ட் ஃபோ வன்"என்றான்

வயிறுமுட்ட சாப்பிட்டு ,போடவேண்டிய மருந்துகுளிசைகளையும் போட்டுவிட்டு மீண்டும் உரையாடலை தொடர்ந்தோம்.

"மாம்ஸ் நாளயண்டைக்கு டிரிங்கோவுக்கு போவோம்"

"அங்க யாரட இருக்கினம்"

"உங்கன்ட சொந்தக்காரர் இருக்கினம் தானே"

"அவையளுடன் எனக்கு அவ்வளவு தொடர்பில்லையே?"

"அம்மாவுக்கு தொடர்பு இருக்கு, நீங்கள் தயார் என்றால் ஒரு கோ ல் பண்ணி சொல்லி போட்டு வெளிக்கிட வேண்டியதுதான்"

சிறிலங்காவுக்கு வந்து கொழும்பிலகுந்தியிருந்து போட்டு அவுஸ்க்கு போய் என்னத்தை சொல்லுறது என்று நினைத்து டிரின்கோ போவதற்கு சம்மதித்தேன்.கையிலிருந்த போனை இளையான் கலைப்பது போல கிறுக்கினான் பின்பு காதில தூக்கி வைத்தான் .அண்ணே நாளையண்டைக்கு  டிரிங்கோ போகவேணும்  உங்களுக்கு வசதியா இருக்குமோ?மறுமுனையிலிருந்து சாதகமான பதில் வந்திருக்க வேணும் என்பது அவனது பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.

குறிப்பிட்ட நேரத்திற்கு வான் வந்தது .சாரதியிடம் என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன்.இரவு நேரத்தில் பயணப்பதில் எதாவது பிரச்சனைகள் உண்டோ என்று கேட்டேன்.பல தடவைகள் தான் இரவு நேரங்களில் சென்று வந்ததாகவும் பிரச்சனைகள் எதுவுமில்லை என்றார்.இராணுவ சோதனைகளும் இல்லை என்றார்.மனதிலிருந்த பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. எல்லோரும் டிரின்கோ நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.இரண்டு மணித்தியால ஓட்டத்தின் பின்பு சாரதி வழமையாகதேனீர் அருந்தும் கடைக்கு அருகாமையில் நிறுத்தினார் .

உள்ளே சென்று இயற்கை கடன்களை முடித்துவிட்டு ஒரு மேசையில் வந்து அமர்தோம் .

பக்கத்து மேசைக்கு அருகில் மூன்று வாத்திய கலைஞர்கள் நின்று சிங்கள பைலா பாட்டு பாடிகொண்டிருந்தார்கள் .பின்பு எமது மேசைக்கு கிட்ட வந்து பாடத்தொடங்கினார்கள் .நாங்கள் தமிழர்கள் என்று புரிந்து கொண்டு "என்னடி ராக்கம்மா" பாடினார்கள்.பேர்ஸை பாதுகாப்பு கருதி வெளியே எடுக்காமல் முன் பொக்கற்றில் வைத்திருந்த 500 ரூபா தாளை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.தங்கயூ சொல்லி அடுத்த மேசைக்கு சென்றார்கள் .மருமகன் சுடச்சுட கோப்பியும் ,மாலு பன்,சீனிபன் எல்லாத்தையும் சர்வர் மூலம் மேசைக்கு வரவழைத்தான்.

500 ரூபாகொடுத்திருக்க தேவையில்லை,இருநூறு கொடுத்திருக்கலாம் என்று அத்தான் சொன்னார்,அவுஸ் காசுக்கு 5 டொலர் தான் வருகிறது என நியாயம் சொன்னேன்.  மீண்டும் எமது பயணத்தை தொடர்ந்தோம். இரவு நேரப்பயணம் என்றபடியால் இடங்களை அறியமுடியாமல் இருந்தது.

அன்றுதான் முதல்முதலாக அந்த பாதையால் சென்றிருப்பேன் என நினைக்கிறேன்.மாலுபன் சாப்பிட்டயக்கம்,வாகனத்தின் தாலாட்டும் என்னை நித்திரா தேவி மெல்ல அரைவணைக்க தொடங்கினாள்.

விடியற்காலை 3 மணியளவில் ஒன்றைவிட்ட தங்கைச்சியின் வீட்டை சென்ற டைந்தோம்.உறவுடன் வரவேற்றார்கள் ,தேனீரா,கோப்பியா எத்தனை சீனி என்ற கேள்விகள் இல்லாம் ,நல்ல பசுப்பாலில் சுடச்சுட தாராளமாக சீனியை போட்டு கோப்பி தந்தார்கள்.

சகோதரி தனது பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும்  என்னை அறிமுகப்படுத்தினார்.கிட்ட தட்ட முப்பதைந்து வருடங்களுக்கு முதல் தங்கச்சி யாழ் பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைத்து வந்த பொழுது கண்டதன் பின்பு அன்றுதான் கண்டேன்.மொபைலில் அலார்ம் அடிக்கஎழும்பி வேலைக்கு போய் பழக்கப்பட்ட நான் ,அன்று சகோதரியின் வீட்டுக்கு அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்டு எழும்பினது ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது.நாப்பது வருடங்களுக்கு முதல் ஊர் கோயில் மணியோசைகள் கேட்பது உண்டு ஆனால் அந்த வயதில் அதனை பெருதாக கணக்கில் எடுக்கவில்லை வயது அப்படி.

காலை அவர்களது வளவை சுற்றி பார்த்தேன் ,இரண்டு பசுமாடுகள் ,இருபது கோழிகள் ,நாலைந்து முயல்கள் அத்துடன் நாய்,பூணை  என்பனவும் இருந்தன.தங்கச்சியின் கணவன் தான் சகலதையும் பராமரிக்கின்றார்.ஒரு கையில் செம்பும் தண்ணியும்,மற்ற கையில் கூடையுடன் வந்தவர் "வணக்கம்,எப்படி பிராயாணம்,நல்லாய் நித்திரை கொண்டியளோ"

"ஒமோம் ஒமோம் நல்லாய் நித்திரை கொண்டன் ,"

சொல்லும் பொழுது நுளம்பு காலில் கடித்துகொண்டிருந்தது.அதை கையால் அடித்து கையிலிரிந்த இரத்தை மரத்தில் தடவி சுத்தம் செய்தேன்.

"வளவுக்குள்ள நுளம்பு இருக்கு ,வெளிநாட்டுக்காரர் நுளம்புக்கு ஸ்பிரே ஒன்றை கையில கொண்டுதிரிவினம் நீங்கள் கொண்டு வரவில்லையோ?"

"கொண்டு வந்தனான் அது கொழும்பில விட்டிட்டு வந்திட்டன், நுளம்புக்கு பழக்கப்பட்ட உடம்பு தானே"

தங்கச்சி முட்டை பொறியலும் புட்டு தயார் பண்ணிவைத்திருந்தார் என்னையும் கணவனை சாப்பிட அழைத்தார்.

சாப்பாட்டு மேசைக்கு அருகில் பாவித்த உடைகள் பல குவியளாக இருந்தது .நான் அதை பார்த்தபடி சாப்பிட தொடங்கினேன் .

"அண்ணே!  ஒரு கிராமம் இருக்கு அங்க ரியா கஸ்டப்பட்ட குடும்பங்கள் இருக்கு அதுகளுக்கு இந்த உடுப்புகளை கொடுக்க வேணும் அதுதான் சேர்த்து வைச்சிருக்கிறோம்"

"நல்ல விடயம் புண்ணியம் கிடைக்கும் உங்கள்  எல்லோருக்கும்"

என பெரியமகான் போன்று சொல்லி விட்டு கையை கழுவி நேராக சென்று பேர்ஸிலிருந்து இரண்டு 5000 ரூபா தாள்களை எடுத்தேன்.ஐம்பதுடொலரை தானம் பண்ண போறியா நூறு டொலரை தானம் பண்ணபோறீயா?மனம் இருநிலையில் தத்தளித்தது,இறுதியில் ஒரு 5000 தாளை  கொடுத்து இதிலும் எதாவது வாங்கி கொடுங்கள் எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டும்  என்றேன்.

"அண்ணே இதில எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி கொடுக்கவா,அல்லது ஒரு ஆளுக்கு மட்டும் கொடுத்து எதாவது தொழில் பண்ண உதவட்டா?"

"ஐயாயிரத்திற்கு என்ன தொழிலை தொடங்கலாம்,.....கி கி"

"ஏன் முடியாது ?அந்த கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை ஐந்தாறு கட்டை நடந்து போனால் தான் கடைகளே இருக்கு, ஒரு ஆள் நடந்து போய் அரிசியை வாங்கி கொண்டு வந்து தங்களுடைய ஆட்களுக்கே  விற்கலாம்,இப்படி பல  சின்ன தொழில்களை செய்யலாம்"

"உங்களுக்கு எது நல்லது என்று படுகுதோ  அதை செய்யுங்கோ"

"மச்சான்,வாங்கோவன் மார்க்கட் பக்கம் போயிட்டு வருவம்"

அவர்களது வீட்டில் கார்,மோட்டார் சைக்கிள்,பிள்ளைகளுக்கு சைக்கிள் என சகல வசதிகளும் இருந்தது.

"அண்ணே மதியம் இறைச்சியா ? மீனா,இறாலா சமைக்க?"

"இறால் நல்லாய் இருக்கும் "

"மச்சான்,வாங்கோவன் மார்க்கட் பக்கம் போயிட்டு வருவம்"

சந்தைக்கு போகும் வழியில் அண்ணாசி வியாபாரி கூடையில் அண்ணாசிகள் வைத்து கூவிகொண்டு திரிந்தார்,இன்னோருவர் கடலை விற்றுகொண்டிருந்தார் ,அவர்கள் தொழிலுக்கு போட்டமுதல் பத்தாயிரத்தை தாண்டி யிருக்காது.

 

இறால்,மீன் வாங்கி அதற்கு மூவாயிரம் கொடுத்தார்.நான் கொடுக்க போக தடுத்துவிட்டார்.

 

வீட்டில் தங்கச்சி மையல் செய்ய மச்சான் அங்கும் இங்குமாக ஒடித்திரிந்தார் .எனக்கும் கடல் உணவுகளின் வாசம் உற்சாக பாணம் இருந்தால் ன்றாக இருக்கும் போல் இருந்தது .ஆனால் மச்சானிடம் எப்படி கேட்பது என்ற கவலையுடன் இருந்தேன்.

அவரே வந்து மச்சான் நீங்கள்தண்ணி பாவிக்கிறணியளோ"

"ஒமோம் ஓமோம் என்று சிரித்தபடியே சொன்னேன்,நான் கொண்டுவந்த‌னான்,நீங்கள் பாவிப்பியளோ தெரியாது அதுதான் பேசாம‌ல் இருந்த‌னான் ,இருங்கோ போய் எடுத்திட்டு வாரன்"

நான் வெளிநாட்டு மதுவை கொண்டுவர அவர் ,உள்நாட்டு மதுவையும் கிளாஸ்,சைட் டிஷ் எல்லாம் தயார் படுத்தினார்.

நான் உள்நாட்டு சர‌க்கை இறால் பொறியலுடன் ருசிக்க அவர் வெளிநாட்டு சரக்கை ருசி பார்க்க......வெளிநாட்டு போத்தல் என்னை பார்த்து விவ்டி டொலர்ஸ் ஒன்லி என்று சொல்வது போல‌வும் ,உள்நாட்டு போத்தல் அவரை பார்த்து இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்பது போலவும் இருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது தொடரும் என நம்புறன், அல்லது புத்தன் இறால் பொரியல் உள்நாட்டு மெண்டிசோட முடிச்சு வைக்கிற ஆளோ?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசத்துடன் பண்டமாற்று என்டு சொல்லுறியள்....!  tw_blush:

நல்லாய் இருக்கு கதை....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்...உங்கட கதையை..ஆர..அமர இருந்து வாசிக்க வேண்டும் என நினைத்து இன்று தா வாசிக்க முடிந்தது!

ஆயிரம் தடவை எழுதுங்கள்,,ஊரைப் பற்றி வாசிக்கும் போது சலிப்பே ஏற்படுவதில்லை!

நானும் ஆமிக்காரன் அல்லது நேவிக்காரன் சிரித்தால் பின்னால் திரும்பிப் பார்ப்பது உண்டு! அவர்களுக்கே இவனைப் பார்த்து ஏனடா சிரித்தோம் என்று நினைக்க வைத்து விடும்!

ஒரு முறை பயணத்தால இறங்கிக் கொட்டாஞ்சேனையில் மனைவியுடனும் மகளுடனும் இரவு தங்கினோம்! பக்கத்தில் பள்ளி வாசல் இருந்திருக்க வேண்டும்! விடியக்காலை அஞ்சு மணிக்கு அலுப்பின் உச்சத்தில் அயர்ந்திருந்த போது.....அல்லாஹூ அக்பர் என்று ஒலிபெருக்கி சத்தம் போட....அருகில் படுத்திருந்த மகள்.. 'வட் த ஹெல் இஸ் கோயிங் ஓன்?" என்று சத்தம் போட...நான் அவளுக்கு முழு விளக்கமும் கொடுக்க.. ஏறத்தாழ விடிந்தே விட்டது?

எனக்கும் 'பிராண்டட்' தான் போட விருப்பம்! இருந்தாலும்.. நண்பர்கள், உறவினர்கள் வேறு நாடுகளிருந்து  கொண்டு வருபவற்றையும் போட மனம் வருவதில்லை! அடுத்த முறை ஊருக்குப் போகும் போது உறவுகளுக்குக் கொடுத்து விடுவேன்! இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் எனப் பலமுறை நினைப்பதுண்டு! ஆனால் முடிவதில்லை!

போத்தில் விஷயம்,,, அதைப் பற்றி எழுதினால்..உங்கள் கதையை விடவும் நீண்டு விடும்!

தொடர்ந்து எழுதுங்கள்.. புத்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 09/03/2016 at 4:45 AM, Justin said:

உது தொடரும் என நம்புறன், அல்லது புத்தன் இறால் பொரியல் உள்நாட்டு மெண்டிசோட முடிச்சு வைக்கிற ஆளோ?:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்.....தொடரும் மெண்டிஸ் ஸ்பேசலுடன்tw_tounge_wink:

On 09/03/2016 at 6:36 AM, suvy said:

பாசத்துடன் பண்டமாற்று என்டு சொல்லுறியள்....!  tw_blush:

நல்லாய் இருக்கு கதை....!!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்  சுவே .....எல்லாம் ஒரு பண்ட‌மாற்றுத்தானே

23 hours ago, புங்கையூரன் said:

 

எனக்கும் 'பிராண்டட்' தான் போட விருப்பம்! இருந்தாலும்.. நண்பர்கள், உறவினர்கள் வேறு நாடுகளிருந்து  கொண்டு வருபவற்றையும் போட மனம் வருவதில்லை! அடுத்த முறை ஊருக்குப் போகும் போது உறவுகளுக்குக் கொடுத்து விடுவேன்! இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் எனப் பலமுறை நினைப்பதுண்டு! ஆனால் முடிவதில்லை!

 

தொடர்ந்து எழுதுங்கள்.. புத்தன்!

நான் ஒரு பிராண்டட் கதை எழுதவேணும் என்று முயற்சிக்கிறன் சரிவருதில்லை:rolleyes:.....எப்படியாவது எழுதிபோடுவன்...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 09/03/2016 at 5:03 PM, putthan said:

நான் உள்நாட்டு சர‌க்கை இறால் பொறியலுடன் ருசிக்க அவர் வெளிநாட்டு சரக்கை ருசி பார்க்க......வெளிநாட்டு போத்தல் என்னை பார்த்து விவ்டி டொலர்ஸ் ஒன்லி என்று சொல்வது போல‌வும் ,உள்நாட்டு போத்தல் அவரை பார்த்து இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்பது போலவும் இருந்தது.

நான் இண்டைக்குத்தான் வாசிச்சன், அருமை, பச்சை போடமுடியவில்லை "ட்ப்வ்ஜ்ட்க்ப்ஜ்ட்வ்ப்வுஎக்ப்ப்" எண்டு என்னை பேசுது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஓடாத் தேய்ந்து உழைப்பதிலும் (யாருக்கோ!) வரி கட்டுவதிலும் (வேலை செய்யாமல் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுக்கத்தான்!) நேரம் போவதால் அடிக்கடி ஊருக்குப் போக ஆசை இருந்தாலும் முடிவதில்லை! 

புத்தனின் விரல்களுக்கிடையே காற்றும் போகமுடியாது போலுள்ளது. காசில வலு கவனம்<_<

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

எங்களுக்கு ஓடாத் தேய்ந்து உழைப்பதிலும் (யாருக்கோ!) வரி கட்டுவதிலும் (வேலை செய்யாமல் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுக்கத்தான்!) நேரம் போவதால் அடிக்கடி ஊருக்குப் போக ஆசை இருந்தாலும் முடிவதில்லை! 

இது கிருபனின் மற்றைய கருத்துக்களுடன் ஒத்துப் போகவில்லையே. எம்மை அரவணைத்த நாட்டிற்கு வரி கட்டுவது சுமையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இது கிருபனின் மற்றைய கருத்துக்களுடன் ஒத்துப் போகவில்லையே. எம்மை அரவணைத்த நாட்டிற்கு வரி கட்டுவது சுமையா?

வரி கட்டுவது பிரச்சினையில்லை. All in it together என்று அரசியல்வாதிகளும், முதலாளிகளும் சரியான வரியைக் கட்டுவதில்லை. வேலை செய்யாமல் அரசாங்க உதவியில் இருப்பவர்களிலும் ஒரு பகுதியினர் வேறு வழிகளில் பணம் சம்பாதித்துக்கொள்கின்றனர். இடையில் இருக்கும் எம்மைப் போன்றவர்கள்தான் எல்லாச் சுமையையும் காவவேண்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

 

புத்தனின் விரல்களுக்கிடையே காற்றும் போகமுடியாது போலுள்ளது. காசில வலு கவனம்<_<

காசேதான் கடவுளடா பொலிசி.......

:rolleyes:

 

On 27/04/2016 at 3:42 AM, ஜீவன் சிவா said:

நான் இண்டைக்குத்தான் வாசிச்சன், அருமை, பச்சை போடமுடியவில்லை "ட்ப்வ்ஜ்ட்க்ப்ஜ்ட்வ்ப்வுஎக்ப்ப்" எண்டு என்னை பேசுது.  

நன்றிகள் ஜீவன் சிவா .....பச்சை முக்கியமில்லை வாசித்து கருத்து கூறிய‌மைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

வரி கட்டுவது பிரச்சினையில்லை. All in it together என்று அரசியல்வாதிகளும், முதலாளிகளும் சரியான வரியைக் கட்டுவதில்லை. வேலை செய்யாமல் அரசாங்க உதவியில் இருப்பவர்களிலும் ஒரு பகுதியினர் வேறு வழிகளில் பணம் சம்பாதித்துக்கொள்கின்றனர். இடையில் இருக்கும் எம்மைப் போன்றவர்கள்தான் எல்லாச் சுமையையும் காவவேண்டியுள்ளது. 

கிருபன் உங்கள் பார்வை பிழை.

நாம் உழைத்து கட்டும் வரியில்தானே நாங்களும் பல வசதிகளையும் அனுபவிக்கிறோம். உதாரணத்திற்கு என்னையே எடுங்களேன் - இங்கிருந்துகொண்டு 36% வரியை இப்பவும் கட்டிக்கொண்டுதானே இருக்கிறேன். நாம் கட்டும் வரியை வைத்துக்கொண்டு அரசும் எவ்வளவு நல்ல விடயங்களை செய்கிறார்கள். அதைவிட வரி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியமானது. எத்தனை ஊனமுற்றவர்களை அரசு உங்கள் வரிப்பணத்தில் பாதுகாக்கின்றது. ஒரு சிலர் இவ்வசதியை தமது சுயநலத்திற்காக பாவிப்பதால் வரி ஒரு சுமை என்று மொத்தமாக சொல்லக்கூடாது. இது ஒவ்வொரு பிரஜையின் கடமை. 

இலங்கை மாதிரி படிப்பு இலவசம், வைத்தியம் இலவசம், வரியும் இல்லை என்றால் நாட்டின் பொருளாதாரத்தை யோசித்து  பாருங்கள். எந்தவித இயற்கை வளமும் இல்லாத டென்மாக்கை பாருங்கள். அங்கு 40%வரி என்பது சாதாரணம். ஆனால் வாழ்வதற்கு சந்தோசமான இடம் என்று பெயர் எடுத்துள்ளது. வரி பற்றி இனியும் அதிகம் பேசினால் பொருளாதார வகுப்பு எடுக்கின்றான் என்று தூங்கினாலும் தூங்கி விடுவீங்கள்.

woman-mad-about-taxes.jpg

24 minutes ago, putthan said:

நன்றிகள் ஜீவன் சிவா .....பச்சை முக்கியமில்லை வாசித்து கருத்து கூறிய‌மைக்கு நன்றிகள்.

குத்திட்டேனே பச்சைய :grin:

கிட்டத்தட்ட உங்கள் எழுத்துநடையில் எழுதும் இன்னொருவரையும் எனக்கு தெரியும். தான் சந்தித்த மனிதர்களை பற்றி மிக அழகாக எழுதுவார். விரும்பினால் பாருங்கள் - http://visaran.blogspot.no/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

கிருபன் உங்கள் பார்வை பிழை.

நாம் உழைத்து கட்டும் வரியில்தானே நாங்களும் பல வசதிகளையும் அனுபவிக்கிறோம். உதாரணத்திற்கு என்னையே எடுங்களேன் - இங்கிருந்துகொண்டு 36% வரியை இப்பவும் கட்டிக்கொண்டுதானே இருக்கிறேன். நாம் கட்டும் வரியை வைத்துக்கொண்டு அரசும் எவ்வளவு நல்ல விடயங்களை செய்கிறார்கள். அதைவிட வரி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியமானது. எத்தனை ஊனமுற்றவர்களை அரசு உங்கள் வரிப்பணத்தில் பாதுகாக்கின்றது. ஒரு சிலர் இவ்வசதியை தமது சுயநலத்திற்காக பாவிப்பதால் வரி ஒரு சுமை என்று மொத்தமாக சொல்லக்கூடாது. இது ஒவ்வொரு பிரஜையின் கடமை. 

இலங்கை மாதிரி படிப்பு இலவசம், வைத்தியம் இலவசம், வரியும் இல்லை என்றால் நாட்டின் பொருளாதாரத்தை யோசித்து  பாருங்கள். எந்தவித இயற்கை வளமும் இல்லாத டென்மாக்கை பாருங்கள். அங்கு 40%வரி என்பது சாதாரணம். ஆனால் வாழ்வதற்கு சந்தோசமான இடம் என்று பெயர் எடுத்துள்ளது. வரி பற்றி இனியும் அதிகம் பேசினால் பொருளாதார வகுப்பு எடுக்கின்றான் என்று தூங்கினாலும் தூங்கி விடுவீங்கள்.

பிரித்தானியாவில் தினமும் வரி பற்றியும், offshore இல் பதுக்கி வைக்கும் நபர்கள் பற்றியும் வரும் செய்திகளைக் கேட்டால், மத்திய தர வர்க்கத்தினர்தான் பொருளாதாரத்தின் சுமையை அதிகம் தாங்குகின்றனர் என்பது புரியும்.

வரி ஏய்ப்பு செய்பவர்களையும், உழைப்பதைக் கணக்குக் காட்டாமல் அதற்கு வரி கட்டாமல் பந்தா காட்டுபவர்களையும் நீங்கள் காண்பதில்லைப் போலுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஊர் பக்கம் வந்து போனது  போல வாழ்த்துக்கள் 

கதை இன்னும் தொடர்ந்து கொண்டு செல்லுமா புத்தன் அண்ணா 

ஊர் வந்தால் சொல்லுங்களப்பா சந்தோசமாக சந்தித்து பேசலாம்?

எங்க ஊர் சப்பட்டையை அடிச்சுக்க என்ன வெளிநாட்டு பிராண்ட் வந்தாலும்  இயலாது ஆனால் வெளிநாட்டு சரக்கு என்றால் ஒரு ஈர்ப்புதான் இங்குள்ளவர்களுக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

என்ன ஊர் பக்கம் வந்து போனது  போல வாழ்த்துக்கள் 

கதை இன்னும் தொடர்ந்து கொண்டு செல்லுமா புத்தன் அண்ணா 

ஊர் வந்தால் சொல்லுங்களப்பா சந்தோசமாக சந்தித்து பேசலாம்?

எங்க ஊர் சப்பட்டையை அடிச்சுக்க என்ன வெளிநாட்டு பிராண்ட் வந்தாலும்  இயலாது ஆனால் வெளிநாட்டு சரக்கு என்றால் ஒரு ஈர்ப்புதான் இங்குள்ளவர்களுக்கு? 

அடுத்த முறை வரும்பொழுது நிச்சயம் அறியத்தருகின்றேன் எனது உறவினர்கள் அங்கு இருக்கின்றனர்......கதை தொடரும் ,அடுத்த அத்தியாயம் திருகோணமலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

அடுத்த முறை வரும்பொழுது நிச்சயம் அறியத்தருகின்றேன் எனது உறவினர்கள் அங்கு இருக்கின்றனர்......கதை தொடரும் ,அடுத்த அத்தியாயம் திருகோணமலை 

ம் நன்றி தொடரட்டும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.3.2016 at 0:33 PM, putthan said:

இன்னுமொரு காரணம் இவன் கொத்துரொட்டி விற்பவன்,கொடி பிடிப்பவன் என  யாராவது போட்டு கொடுத்திருந்தால் என்ற பயம். இந்த தடவை ஆயுதமின்றி நின்றதனால் பார்த்தேன்."குட் மொர்னிங்" என்றார் பதிலுக்கு "குட் மொர்னிங்" சொல்லிவிட்டு சென்றேன்.

.........

சொல்லும் பொழுது நுளம்பு காலில் கடித்துகொண்டிருந்தது.அதை கையால் அடித்து கையிலிரிந்த இரத்தை மரத்தில் தடவி சுத்தம் செய்தேன்.

 

"வளவுக்குள்ள நுளம்பு இருக்கு ,வெளிநாட்டுக்காரர் நுளம்புக்கு ஸ்பிரே ஒன்றை கையில கொண்டுதிரிவினம் நீங்கள் கொண்டு வரவில்லையோ?"

 

"கொண்டு வந்தனான் அது கொழும்பில விட்டிட்டு வந்திட்டன், நுளம்புக்கு பழக்கப்பட்ட உடம்பு தானே"

நன்றாக..... உள்ளது புத்தன்.tw_blush:

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

"வளவுக்குள்ள நுளம்பு இருக்கு ,வெளிநாட்டுக்காரர் நுளம்புக்கு ஸ்பிரே ஒன்றை கையில கொண்டுதிரிவினம் நீங்கள் கொண்டு வரவில்லையோ?"

 

"கொண்டு வந்தனான் அது கொழும்பில விட்டிட்டு வந்திட்டன், நுளம்புக்கு பழக்கப்பட்ட உடம்பு தானே"

அண்ணை யாழ்பாணத்தில இப்ப வெக்கை கூடி நுளம்பு குறைவு. இல்லாட்டி மணிக்கூடு கட்டின மாதிரி ஒரு அஞ்ச மணிக்கெல்லாம் டாண் எண்டு வந்திடுங்கள். அப்புறம் கொஞ்சம் எம்மாந்தாலும்  சேர்ந்து தூக்கிட்டே போயிடுங்கள். 

இப்ப சனமெல்லாம் 5 மணிக்கே கதவை பூட்டீற்று உள்ளுக்கு தான் வாழ்க்கை. இப்பவெல்லாம் மாலை நேரம் முத்தத்தில் இருந்து அலட்ட நுளம்பு விடாதண்ணை. ஆனால் அளவெட்டி, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் நுளம்பு இல்லையென்றே சொல்லலாம்.

நீங்க இஞ்ச வாறதெண்டால் மறக்காமல் கொண்டு வாங்கோ - நுளம்பு மருந்தை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

அண்ணை யாழ்பாணத்தில இப்ப வெக்கை கூடி நுளம்பு குறைவு. இல்லாட்டி மணிக்கூடு கட்டின மாதிரி ஒரு அஞ்ச மணிக்கெல்லாம் டாண் எண்டு வந்திடுங்கள். அப்புறம் கொஞ்சம் எம்மாந்தாலும்  சேர்ந்து தூக்கிட்டே போயிடுங்கள். 

இப்ப சனமெல்லாம் 5 மணிக்கே கதவை பூட்டீற்று உள்ளுக்கு தான் வாழ்க்கை. இப்பவெல்லாம் மாலை நேரம் முத்தத்தில் இருந்து அலட்ட நுளம்பு விடாதண்ணை. ஆனால் அளவெட்டி, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் நுளம்பு இல்லையென்றே சொல்லலாம்.

நீங்க இஞ்ச வாறதெண்டால் மறக்காமல் கொண்டு வாங்கோ - நுளம்பு மருந்தை.

mosquito-smiley-emoticon.gifஜீவன் சிவா....  முன்பு ஊரில் இருக்கும் போதும்.... மழைக்காலத்தில் கொஞ்ச  நுளம்பு வரும், 
அதற்கு.... தேங்காய் மட்டை ஒரு சட்டியில் வைத்து எரிக்க.... எல்லாம் போய் விடும்.
அனால் இப்ப வருடம் பூராகவும் நுளம்பு mosquito-smiley.gif கடிக்கின்றது. அத்துடன் அது... கடித்தால், அந்த இடம் பெரிதாக வீங்கி தொல்லை தருகின்றது.
எல்லா... ஸ்ப்ரே களும் நுளம்பை விரட்டுவதில்லை என்று சென்ற முறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் ஜீவா.

Link to comment
Share on other sites

எல்லா... ஸ்ப்ரே களும் நுளம்பை விரட்டுவதில்லை என்று சென்ற முறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் ஜீவா.

 

2rzyt0i.jpg

முயற்சி பண்ணி பாருங்கள். நோர்வேயில் 20 யுரோ வரும், உங்கள் நாடுகளில் தெரியாது. ஒரு போத்தல் இருவருக்கு 4 கிழமைக்கு தாராளம்.

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

அருமை !கதை நல்லா இருக்கு

 

16 minutes ago, நிழலி said:

அருமை !கதை நல்லா இருக்கு

கோமாவால் ஒருத்தர் தப்பி வந்திட்டார் tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்குப் புத்தன். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.