Jump to content

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12790994_471874553007194_504743019456425

* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும் 
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

 

 

FB

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புற்று நோய்க்கு அவனவன் மில்லியன் கணக்காகச் செலவு செய்து ஆராய்ச்சி செய்தும் கணையப் புற்று நோய், சில மூளைப் புற்று நோய்களுக்கு மருந்து இல்லை, மரணமே இறுதி முடிவு என்ற நிலை இன்னும் தொடருது! இங்க பார்த்தால் ஒன்றுமே செய்யாமல் முகநூலில வந்து "ஆரம்ப புற்று நோயை பீற்றூட் குணமாக்கும்" எண்டு எழுதிப் போட்டு நோபல் பரிசு வேண்டாமெண்டு ஒளிச்சுத் திரியுறார் இந்த விஞ்ஞானி! நல்லா வருவீங்கடா!tw_rage:

Link to comment
Share on other sites

பீற்றூட்  பல  நோய்களை வருமுன் காக்க உதவும் உணவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Penny said:

பீற்றூட்  பல  நோய்களை வருமுன் காக்க உதவும் உணவு.

பென்னி, பொதுவாக மரக்கறிகள் பழங்கள் ஆரோக்கியமானவை தான். காரணம், கொழுப்பை அதிகரிக்காமல் விற்றமின்களையும் கனியங்களையும் பெற மரக்கறிகள், பழங்கள் உதவுகின்றன. ஆனால், மேலே பட்டியலில் இருக்கும் நோய்களையெல்லாம் பீற்றூட் தடுக்கும் அல்லது குணமாக்கும் என்பது ஆதாரமற்ற பொய்! மேலும், சில தகவல்கள் நிரூபிக்கப் பட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரான தகவல்கள்:
உதாரணம்:

"பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்"  சொல்கிறார் முகநூல் விஞ்ஞானி.


நிரூபிக்கப் பட்ட தகவல்: முருங்கைக் காய், வெங்காயம், தக்காளி போலவே பீற்றுட்டிலும் ஒக்சலேற் (oxalate) உப்பு அதிகம். எனவே சிறு நீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க பீற்றூட்டை அளவாக உண்ண வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

பென்னி, பொதுவாக மரக்கறிகள் பழங்கள் ஆரோக்கியமானவை தான். காரணம், கொழுப்பை அதிகரிக்காமல் விற்றமின்களையும் கனியங்களையும் பெற மரக்கறிகள், பழங்கள் உதவுகின்றன. ஆனால், மேலே பட்டியலில் இருக்கும் நோய்களையெல்லாம் பீற்றூட் தடுக்கும் அல்லது குணமாக்கும் என்பது ஆதாரமற்ற பொய்! மேலும், சில தகவல்கள் நிரூபிக்கப் பட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரான தகவல்கள்:
உதாரணம்:

"பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்"  சொல்கிறார் முகநூல் விஞ்ஞானி.


நிரூபிக்கப் பட்ட தகவல்: முருங்கைக் காய், வெங்காயம், தக்காளி போலவே பீற்றுட்டிலும் ஒக்சலேற் (oxalate) உப்பு அதிகம். எனவே சிறு நீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க பீற்றூட்டை அளவாக உண்ண வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

சும்மா

அங்க இங்க நின்று தடி எடுக்காமல் 

இப்படி வகுப்பெடுக்கலாம் தானே ஐயா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

சும்மா

அங்க இங்க நின்று தடி எடுக்காமல் 

இப்படி வகுப்பெடுக்கலாம் தானே ஐயா....

விசுகர், நியாயம் தான், யோசிக்கிறேன். ஆனால், விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதின தொடர்களில் நுழைந்தும் அந்தத் தொடரை நக்கல் பண்ணி வேறு திரியிலும் எழுதியவர்களால் நான் எல்லா இடத்திலும் தடியோடு நிற்பது தவிர்க்க இயலாததாகி விட்டது!

Link to comment
Share on other sites

justin வந்து இப்படி கேள்வி கேட்பார் என்றுதான் நான் இந்த பக்கமே வருவதில்லை..<_<

உண்மையில் இந்த விடயத்தில் எந்த ஆதாரமும் இல்லாத பதிவுகளை பதிய நான் விரும்புவதில்லை.

justin எல்லா இடமும் தடியோடு நிற்பதும் நல்லதுதான்..<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.