Jump to content

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்


Recommended Posts

ரதிக்கு விபரமாக ஒரு பதில் எழுதினேன் காணவில்லை .

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் தூக்கும் அளவிற்கு என்னத்தை அண்ணெய் அப்பிடி எழுதினீங்கள் ? நான் வாசிக்கேல்ல???
முடிந்தால் தனி மடலில் அனுப்பவும்

Link to comment
Share on other sites

நிர்வாகம் தூக்கும் அளவிற்கு எதுவும் அதில் இருக்கவில்லை .

என்ன நடந்ததோ தெரியவில்லை 

எழதியது நினைவு இருந்தால் திரும்ப எழுத முயற்சிகின்றேன் .tw_dissapointed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில கருத்துக்களை வாசிக்க 
நான் வேறு ஒரு தளத்தில் இந்து அடங்கா பிடாரிகளுடன் 
விவாதிப்பதுபோல் இருக்கிறது.
பசுமாட்டை கொல்வது பாவம் என்று அவர்கள் பித்தலாட்டம் பேசுவார்கள்.
நான் ஆதராம் போட்டேன் 
வான்முகியின் இராமனயத்தில் சீதை நெய்யில் வாட்டி மாட்டு கறியை 
காதலோடு பரிமாறிக்கொண்டு இருந்தாள்  என்று வருகிறது. 

ராமனும் சீதையும் பாவம் என்றால் ஏன் உண்டார்கள் ?
புலால் உண்ணாமை என்பதை முதன் முதலில் 
சமண சமயமே தமது ஆறு சத்தியத்தில் முதன் முதலாக புலால் 
உண்ணாமையை வலியுறுத்துகிறது. 

பின் நாளில் இந்து பிடாரிகள் அதை கொப்பியடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது 
எமது சைவ மதத்தில் சமணம் ஊடாக எப்போதோ வந்திருக்க வாய்பிருக்கிறது 

ஆதி மனிதன் இறைச்சியைதானே சாப்பிட்டான் 
தோட்டம் செய்வது கி.மு 300இல் தான் வருகிறது 
என்றால் 

முன்பு சாப்பிட்டது தப்பில்லையாம் 
இறைச்சி சாப்பிடுவதும் தப்பிலையாம் 
இப்போ பசுவை கொல்வது தப்பு!

அதுவே ஆடு பன்றியாய் இருந்தால் ஓகே ?

இங்கிருக்கும் சிலர் இந்து பிடாரிகளிடம்தான் பயிற்சி எடுத்து வருகிறார்கள் 
என்று நினைக்கிறேன். 

கொல்லப்பட வேண்டியவர் 
ஆனால் கொல்லப்பட கூடாதவர்.

வரும் .............. ஆனா வராது !

Link to comment
Share on other sites

2 hours ago, arjun said:

ரதிக்கு விபரமாக ஒரு பதில் எழுதினேன் காணவில்லை .

ரதிக்கு இந்தத் திரியில் பதில் எழுதவில்லை. அதுவும் விபரமாக எழுதியது என்பதை நம்ப முடியாதது. :rolleyes:

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

எந்த முக்கியமான நிகழ்விலும் conspiracy theories நிறைய இருக்கும் தான். ஆனால், கோசான் சொன்னது போல ஏன் புலிகளிடம் இருந்து மறுப்பு வரவில்லை என்பதே புலிகள் இதில் விரும்பி ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டி நிற்கிறது.விளைவுகள் இதையொட்டித் தான் இருக்குமேயொழிய யார் யாரோ புத்தகம் எழுதி விற்கப் பாவிக்கும் conspiracy theory இனால் அல்ல!  

லண்டனில் இருந்து கிட்டு அவர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டார் என ஞாபகம்.

மேலும் நான் சொன்ன நபர்களின் பெயர் கள் ஜெயின் கமிஷன் அறிக்கையில் வந்திருந்தவை. அவர்களை ஏன் சரியாக விசாரிக்கவில்லை என கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. வெறும் Conspiracy Theory அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர், இந்தியா இலங்கைப் பிரச்சினைகளில் இருந்து சற்று ஒதுங்கியவேளையில் புலிகள் பலம்பெற்றார்கள். ஆனாலும் இராணுவ ரீதியாக பெற்ற பலத்தைக் கொண்டு ஒரு தீர்வை எட்டமுடியவில்லை. அதில்தான் புலிகள் தவறுவிட்டார்கள்.

ஏன் நோர்வே தமிழர்கள் விடயத்தில் மூக்கை நுழைத்தது என்பதையும் சொல்ஹைம் எழுதியிருப்பார், ஆனால் உண்மையான காரணத்தை எழுதியிருப்பாரோ தெரியவில்லை.

பி.கு.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட துக்கம் வரவில்லை, புலிகள் பிழைவிட்டுவிட்டார்கள் என்று மனம் சிந்திக்கவில்லை. 

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட துக்கம் வரவில்லை, புலிகள் பிழைவிட்டுவிட்டார்கள் என்று மனம் சிந்திக்கவில்லை.

புலிகளின் வெற்றியே அதுதான் .

முறிந்த பனை வாசித்தால் மிக தெளிவாக இருக்கு . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

புலிகளின் வெற்றியே அதுதான் .

முறிந்த பனை வாசித்தால் மிக தெளிவாக இருக்கு . 

ஒபரேசன் லிபரேசன் நேரம் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்துவிட்டதால் இலங்கை இராணுவத்தை நேரடியாகக் காணவில்லை. கண்டதெல்லாம் இந்திய இராணுவத்தைத்தான். அவர்களின் சுற்றிவளைப்புக்குள் தினம் தினம் சிக்குப்பட்டதும், அவர்களின் அட்டூழியங்களை நேரடியாகப் பார்த்ததும் கொடிய இராணுவம் என்றால் இந்திய இராணுவம்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. இதில் புலிகள் வந்து மூளைச்சலவை செய்யவில்லை.

பி.கு.

முறிந்த பனை எல்லாம் வாசித்தாயிற்று (ஆங்கிலத்தில் வாசித்துப் பின்னர் தமிழிலும் வாசித்தேன்(. இப்போது ராஜன் ஹூலின் விழுந்த பனையை வாங்கி வைத்துள்ளேன். வாசிப்பேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்கக போராளிகளுக்கு இந்திய இராணுவத்தின் கொடூர முகம் தெரியாது. 

Link to comment
Share on other sites

இந்திய இராணுவத்தின் கொடூர முகம் தெரிந்த படியால் தான் வங்கம் தந்த பாடம் எழுதினார்கள் .

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பெரிய சாதகமான விடயங்கள் இல்லை என்று தெரிந்தும் மற்ற அமைப்புக்கள் தலையை ஆட்டினார்கள் .

சிறு கற்பனை குறிப்பு -

சோனியா ,ராகுல் ,பிரியங்கா மூவருக்கும் "ரோ" ஒரு அறிக்கை கொடுக்குது .அந்த இரண்டு உயிர்களுக்காக ஆயிரம் கணக்கில்  போராளிகளையும் நூறாயிரம் கணக்கில் அப்பாவி பொது மக்களையும் பலி கொடுக்க வேண்டுமா?

நேருவின் பேரன் ,இந்திராவின் மகன் ,இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி யாரென்று அவர்களுக்கு தெரியவேண்டும் இத்தனை உயிர்களும் அந்த ஒரு உயிருக்கு சமம் என்று அவர்களுக்கு என்றும் நினைவு இருக்கவேண்டும் .

ராஜபக்சாவிற்கு தலையை ஆட்டிவிடுங்கள் .

முள்ளிவாய்கால் முடிந்து அடுத்தநாள் இந்த மூன்று பேருக்கும் அவர்களின் அழிவை பார்த்து  இப்படிதான் சிந்தனை வந்தது .

கிருபன்  சிந்தித்த மாதிரி ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட துக்கம் வரவில்லை, புலிகள் பிழைவிட்டுவிட்டார்கள் என்று மனம் சிந்திக்கவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் புத்தகத்திற்குள் தான். 

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலை என்பது பின்நாளில் எம்மை தமிழக மக்களிடம் இருந்து முற்றாக அந்நியப்படுத்தியது மட்டும் அல்லாது தமிழக ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் எமது தரப்பு செய்திகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை. ஆர்வப்படவும் இல்லை.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பாகவோ மக்கள் இழப்பினைக் கூட தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தமை எமக்கு பாரிய பின்னடைவினையே தந்து இருந்தன.

தமிழக ஊடகங்களுடனான நெருக்கத்தினை ஆனந்த விகடனுக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் வழங்கிய பேட்டியுடன் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நெருக்கத்தினை அந்தக் கால கட்டத்தில் தொடங்கி வைத்தவர் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பிரான்சைச் சேர்ந்த கி.பி. அரவிந்தன் அவர்களே.  

இந்திய இராணுவத்துடனான மோதல் இடம்பெற்ற காலத்திலேயே விடுதலைப் புலிகள், அருள்-89 உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினை தமிழ்நாட்டில் தொடர்ந்தும் இயக்கி வந்து இருந்தனர்.  இந்தியப் படையினருடனான மோதல் இடம்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் புலிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கூட தமிழ்நாட்டில் இருந்துதான் தருவிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டு காவல்துறையோ அல்லது கடலோர காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எமக்கு பாரிய நன்மைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை கிடைத்தது என்பது மிகப் பெரிய சாதனை. அதனை நாம் பெற்றுக் கொண்டு அதில் இருந்து முன்னேறி இருக்கலாம். ஆனால், பிரபாகரன் ஆசைப்பட்டது தமிழீழம்.

பிரபாகரனுக்கு அரசியல் தீர்வில் துளி கூட விருப்பம் இருந்தது இல்லை. அதில் இருந்து முன்னேறும் ஆசை கூட இருந்தது இல்லை. அதுதான், பின்னர் பிரேமதாசாவுடனும் சந்திரிகாவுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை பிரபாகரன் முறித்து இருந்தார்.

இன்று நாம் எங்கே நிற்கின்றோம் என்பபதனை புரிந்து கொள்ள எம்மவர்கள் முயற்சிக்கவில்லை என்பது கவலைக்கு உரிய விடயம். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு கொண்டு வருவதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டே தருவித்தனர். 

ராஜீவ் காந்தி நல்லவர் இல்லை. அது உண்மை. இதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியப் படையினர் எனது கண்ணுக்கு முன்பாகவே எமது உறவுப் பெண்களுடன் சேட்டை புரிந்ததும், சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் நான் சிறு வயதில் கண்கூடாக கண்ட காட்சி. 

முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இளம் தலைவராகவும் அதே சமயம் கவர்ச்சிகரமான தலைவராகவும் அவர்களை இந்திய மக்கள் பார்த்தனர். அவரைப் போய் அவர்களது நாட்டுக்கு உள்ளேயே போய் கொலை செய்தது பாரிய தவறுகளில் ஒன்று.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் பின்நாளில் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பி. கூட என்று "தமது இயக்கம் ராஜீவ் காந்தியை கொலை செய்ததோ அன்றில் இருந்து தமக்கு ஒவ்வொரு முயற்சியும் பெரும் போராட்டமாகவே முடிவடைந்ததாக" குறிப்பிட்ட அவர், இயக்கம் விட்ட பாரிய தவறுகளில் இந்த கொலையும் ஒன்று" என்று தெரிவித்தார்.

ஒரு காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் தம்மை தேடி வராதா என்று இந்தியா விரும்பி இருந்ததாம். அதே இந்தியாவை எம்மவர்கள் எவராலும் நெருங்க முடியாத நிலையே இன்று காணப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nirmalan said:

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் பின்நாளில் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பி. கூட என்று "தமது இயக்கம் ராஜீவ் காந்தியை கொலை செய்ததோ அன்றில் இருந்து தமக்கு ஒவ்வொரு முயற்சியும் பெரும் போராட்டமாகவே முடிவடைந்ததாக" குறிப்பிட்ட அவர், இயக்கம் விட்ட பாரிய தவறுகளில் இந்த கொலையும் ஒன்று" என்று தெரிவித்தார்.

இவர் இப்போது யார் பிடியில் அல்லது யாரடியில் இருக்கின்றார்? இவரால் யாருக்கு ஆதரவாக கதைக்க முடியும்? ஏதோ இலங்கையும் இந்தியாவும் கருத்து சுதந்திரபூமி போல் கதையளக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

இவர் இப்போது யார் பிடியில் அல்லது யாரடியில் இருக்கின்றார்? இவரால் யாருக்கு ஆதரவாக கதைக்க முடியும்? ஏதோ இலங்கையும் இந்தியாவும் கருத்து சுதந்திரபூமி போல் கதையளக்கின்றீர்கள்.

உண்மைதான். அது மறுப்பதற்கு இல்லை. ஆனாலும், அவர் கூறும் நியாயப்பாடுகள் பிழை என்று வராதே. ராஜீவ் கொலைக்குப் பின்னரும் அவர் ஆயுதங்களை இறக்குமதி செய்தவர் இல்லையா?. அப்போது, நடந்தவை எல்லாம் அவருக்குத்தானே தெரியும். ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு ஆயுதங்களை கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு இடர்களை நோக்கினார் என்பது. அதனைக் கூடவா நாம் மறுத்து உரைக்க வேண்டும்?

ராஜீவ் கொலைக்குப் பின்னரே கிட்டு உட்பட பல ஆயுதக் கப்பல்களை கடலில் எம்மவர்கள் இழந்தனர். சிறிது காலம் பிஜேபி ஆட்சியில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது என்பது உண்மை. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசுகள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவனிடம் சாட்டையும் கொள்ளும் இருக்கின்றதோ.......அவன் சொல்வதுதான் நீதியும் நியாயமுமாக இருக்கும். இதுதான் இன்றைய உலக நியதி.

Link to comment
Share on other sites

சிலவேளை யோசிப்பேன் ராஜீவை கொலை செய்யாமல் ஒரு தீர்வை புலிகள் எடுத்து ஆட்சியில் வந்திருந்தால் ?

நினைத்து பார்க்கவே முடியவில்லை ராஜீவை கொன்றதே நல்லது .

Link to comment
Share on other sites

நண்பன் சொன்னதுதான் நினைவு வருகின்றது ,

"கட்டயாம் தமிழ் ஈழம் வேண்டும் நான் நிம்மதியாக கொழும்பில் போய் வாழ்வதற்கு "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, arjun said:

நண்பன் சொன்னதுதான் நினைவு வருகின்றது ,

"கட்டயாம் தமிழ் ஈழம் வேண்டும் நான் நிம்மதியாக கொழும்பில் போய் வாழ்வதற்கு "

தெகிவளையில் நல்ல காற்றோட்டம்.

Link to comment
Share on other sites

2 hours ago, arjun said:

சிலவேளை யோசிப்பேன் ராஜீவை கொலை செய்யாமல் ஒரு தீர்வை புலிகள் எடுத்து ஆட்சியில் வந்திருந்தால் ?

நினைத்து பார்க்கவே முடியவில்லை ராஜீவை கொன்றதே நல்லது .

ஒரு சிலர் யாழிற்கு வருவதே எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று பீலா காட்டுவதற்கும் புலிகளை திட்டி தீர்ப்பதற்கும் தான்.  அந்த வகையில் உங களிக்கும். ஒரே என்ஜொய்தான். வெளுத்து வாங்குங்கள். இப்ப நேரமாச்சு போய்ப் படுங்க. நாளைக்கும் ஏதோ ஒரு தலைப்பு வரும் பீலா காட்டவும் புலிகளை திட்டவும். சேடம் இருக்கும் வரை யாழ் இருக்கிறது வக்கிரத்தை மட்டும் கொட்ட.  ஒரே என்ஜொய்தான். 

 

Link to comment
Share on other sites


நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ -இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், - நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ - அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்து இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேச விரும்புகிறேன்.

Sanjay gandhi, Indira Gandhi and Rajiv gandhiநம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது; நடந்தால் வலிக்கிறது. அந்தப் புண்ணை கீறிவிட்டுத்தான் ஆற்றவேண்டும். அதை நாம் யாரும் செய்யவில்லை. ‘நாம் அந்தப் புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற எனக்கு, அதை விளக்கவேண்டிய கடமை இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு இருக்கிறார்களா? காங்கிரஸ் தலைமையில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள். காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் நமக்கு வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிட மொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப் பார்க்கிறான். இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் நம்மினத்தவர்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாக வந்து நிற்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமது தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியவே இல்லை. எந்த்த தடயமும் காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழித் தீர்மானம் வந்தபோது இந்திக்கு ஆதரவாக சரிபகுதி வாக்குகள், இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள். காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை இந்திக்கு அளித்துதான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும். நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. கள்ள ஓட்டு போல, இந்த தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள்.

இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார் நேரு, ‘நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று. பெரியார் சொல்லுவார், ‘முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதி அவர்’ என்று. ஆனால், ‘நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று 1951-யில் சொன்ன நேரு, 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், ‘சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள்’ என்று.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதினார். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், அவர் மீது நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் அதற்கு வருவோம். ராஜீவ் காந்தி யார்? வேளாண்மை செய்யும் விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தியும் அதை எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

ராஜீவ் அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜான் நீல் என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டான். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்த்திருக்கிறோம், கட்டபொம்மன் சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று. இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமானது அல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா இன் சிறீலங்கா’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன. நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகத் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். அதில் பல செய்திகள், அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார்.

அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு ஹர்சரத் சிங்விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்கு தொலைபேசியில் சொல்கிறான், ‘இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு’ என்று. அவர் மறுக்கிறார். ‘நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் கீழ் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் கேட்கிறார். அதன்பின் தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார். ‘மறுத்துவிடு என்று சொல்லிவிடு. அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது’ என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு ‘முடியாது’ என்று சொல்கிறார்.

அப்போது தீட்சித் சொல்கிறான், ‘இதை நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது’ என்று. இதை தனது நூலில் எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் இராஜீவ் காந்தி இல்லையா? அப்போது அந்தத் தளபதி இராஜீவ் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை; ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், அவரைக் கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, ‘இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்’ என்று ஆர்.கே.தவானைக் காட்டுகிறது.

ஆனால் அவரை தனது கட்சிக்குப் பொது செயலாளராக நியமிக்கிறார் இராஜிவ் காந்தி. அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். இப்படி தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி அவன்.

ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போன இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இராஜீவ் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்வதற்கு.

1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னாடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் இவர்களுக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே, என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அதை நிறைவேற்ற இந்தக் காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக ‘உயிர்தியாகம் செய்த’ ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள் இது வரை? இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்தியாவிற்கு எதிரானவர்களை கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது சீன நாடு இலங்கையில் கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்? இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தாய், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தாய். இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், ஒரு ராஜீவ் காந்திக்கு இவர்களுக்கு இத்தனை ஏக்கம் வருகிறதே! ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே? ஆயிரம் பெண்களைக் கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே? வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லிச் சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரன் சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். தன்னுடைய மகன் ஸ்டாலினைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் சிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் பிரபாகரன் சொன்னார், ‘ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன்’ என்று சொன்னார். ஆனால் நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா?

தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார். ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், இரக்கம் இருக்கிறவன் அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார். முத்துக்குமார் தனது கடிதத்தில் ‘அறத்திற்கே அன்பு சார்பென்ப’ என்று திருக்குறளை நினைவூட்டுகிறார். வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம் என்று. அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்.

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு, கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா!

இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? காங்கிரஸ்காரன் கேட்கிறான். இலங்கை கப்பற்படை வீரன் இராஜீவை அடித்தானே, ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், செத்துப் போயிருப்பான். அந்த கப்பற்படை வீரனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், ‘நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது’ என்று.

காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், ‘நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான்’ என்று சொல்கிறானே, ‘நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை’ என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களைப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம் போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும்போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்பதுதான். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லி இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று முழங்க வேண்டும்.

சிங்களவனுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும். நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா என்று சந்தேகிக்க வேண்டும். சந்தேகிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி யுத்தம் தொடுத்தார்கள். அந்த நாட்டில் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம். 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது.

நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. எழுபதுகளில் ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் அப்போது 6 கோடி என்றால் இப்போது 100 கோடி ரூபாயுக்கும் மேல். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டியபோது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு என்ற சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன் ஈழத் தமிழ் அகதிகளுக்கு என்ன செய்தான்?

நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், கான்கிரீட் கட்டிடத்தில் வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது. 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. போகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு, பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, அவன் திபெத்தியன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழ்நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?

Rajiv Gandhiஈழத்தமிழர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழனை ‘புலிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைப்பதற்குத்தான் தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப் பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு. மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நாம் யோசிக்கிறோம், இது நம் அரசாக இருக்க முடியுமா? நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன், வெளிநாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்கிறான். இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை. 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஆங்கிலேயன் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம். அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். ‘அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் டயரைச் சுட்டுக் கொன்றான் உத்தம் சிங்.

அங்கே போய் உத்தம்சிங் சுட்டது, ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியில் சுட்ட டயரை அல்ல, அதாவது ஜெனரல் டயர் இல்லை. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சுட ஆணையிட்டவனின் பெயரும் டயர்தான். அதாவது மைக்கேல் டயர். நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கிற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினான். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்? அதனால் எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைத்தான் கொன்றான்.

21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் அடக்கம் செய்யப்பட்ட அவனது உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள்.

கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி. இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம். ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுக்கப்பட்டதற்குக் காரணமானவனை, உத்தம்சிங் போல் ஈழத்தமிழன் எவனாவது சுட்டுக் கொல்கிறான். உங்கள் நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும். நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான். நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், ‘இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா’ என்று. டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல. அகில இந்திய கட்சியில் இருக்கிற இன உணர்வு ஏன் நமக்கு இல்லை?

1972-யில் செல்வா தமிழ்நாடு வந்தார். பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்டார். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ‘ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை எப்படி உதவ முடியும்?’. நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம் இது வரை? இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும்.

1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

சத்தியமூர்த்தியைக் குறித்து குத்தூசி குருசாமி ‘அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். ‘தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு. அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள்’ என்று எழுதினார்கள். அடுத்த வாரமே சத்தியமூர்த்தி மீது அடித்தார்கள். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, ‘அதோ காங்கிரசுகாரன் போறாங்’கிறது கூட ஒரு போராட்டம்தான். அவனை அவமானப்படுத்த வேண்டும். வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம். எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி நடத்தவிருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

http://keetru.com/index.php/45-2009-08-13-01-32-02/2009-08-13-01-33-17/2009-2010-01-17-06-24-53

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

லண்டனில் இருந்து கிட்டு அவர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டார் என ஞாபகம்.

மேலும் நான் சொன்ன நபர்களின் பெயர் கள் ஜெயின் கமிஷன் அறிக்கையில் வந்திருந்தவை. அவர்களை ஏன் சரியாக விசாரிக்கவில்லை என கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. வெறும் Conspiracy Theory அல்ல.

யாரோடு எதை பேசுகிறோம் என்பது ரொம்ப முக்கியம் 
பூமி சதுரம் என்பவர்களுடன் சற்றலைட் மேலே சுற்றும் இந்த  காலத்திலும் 
உருண்டை என்று வாதிட்டால் அதை விட அரை கிறுக்கு வேறு ஏதும் இல்லை. 

நிறைய மர்மம் இருக்கு.

என்னுடைய கணிப்பில் இனியும் மூட முடியாத ஒரு நிலை எட்டிவருவதாக எண்ணுகிறேன்.

சிபிஐ கமிசன் கார்த்திகேசன் எந்த ஒரு போலிஸ் அனுபவமும் இல்லாதவர் 
இவர் 4 வருடம் ரசிய மொஸ்கோ துராலயத்திலும் 2 வருடம் விவசாய விபகாரமாக 
அவுஸ்த்ரேலிய துரலாயத்திலும் பணி புரிந்து இருக்கிறார்.

இவர் எப்படி திடிரென இதுக்குள் வந்தார் என்பது 
முக்கிய கேள்வி?

ஜெயின் கமிசன் நீதிமன்றில் போட்டு கிளி கிளி என்று கிழித்தும் 
சிபிஐ இன்னமும் எந்த பதிலும் இல்லை 

ராஜீவ் மேடையை நெருங்கும்போது கரண்ட் கட்டாகி இருக்கிறது 
சன நெரிசல் முண்டி அடித்தால் வயர் ஆடி அது தடைபட்டது.
இதை மேடையில் இருந்த ஒரே ஒரு கமெரா பதிவு செய்து இருக்கிறது 
சி டி இருக்கு இருக்கு என்றார்கள் ....
எந்த சிபிஐ யும் பார்க்கவில்லை நீதிமன்றும் பார்க்கவில்லை.
நாராயணன் கார்த்திகேசன் மட்டுமே சி டி பார்த்த ஆட்கள். 

காந்தி கொலைவழக்கு 
இந்திரா கொலை வழக்கு எல்லாம் வெளியாகத்தான் நடந்தது 
ஏன் இது மட்டும் தடா என்ற சட்டம் கொண்டுவந்து இருட்டுக்குள் போனது ?

தாணு கரும்புலியே இல்லை (இப்போ அவர்தான் முதல் பெண் கரும்புலி) 
காயபட்ட போராளி ஆதிரையை கொண்டு இந்தியா போனவர்தான் அவர்.
சடுகதியாக ஆதிரை டில்லிக்கு அனுப்ப பட்டிருக்கிறார் கொலை நடந்து 20வது நாள் 
4 மணிநேரம் யாரும் அழைக்க செல்லாது டெல்லி ரயில்வே நிலையத்தில் நின்றிருக்கிறார் 
அதன் பின்பு போலிஸ் சந்தேகத்தில் அவரை நெருங்கியபோதுதான் குப்பி அடித்து இறந்தார்.

இப்போதும் பேபி சுப்ரமணியம் அங்கு வெளியாகவே நடமாடிக்கொண்டு இருக்கிறார் 
யாரும் கைது செய்யவில்லை. 

ஜெயின் கமிசனின் முக்கிய குற்றவாளி கே பி இன்னமும் எந்த இந்திய 
அரசு ஆட்களும் அவரை இலங்கை சென்று விசாரிக்கவில்லை. 
முன்னரங்கில் நின்றவர்கள் இப்போதும் சிறையில் 
கே பி தனி கட்சி பிஸினெஸ் கிளாசில் நாடு கடத்தல் என்று உல்லாசமாகவே இருக்கிறார். 

அமிர்தலிங்கத்தை சுடுவதற்கு நிறைய காரணம் புலிகளுக்கு இருந்தாலும் 
விசு நேரில் சென்று சுடும் தேவை அந்த நேரத்தில் புலிகளுக்கு இருக்கவில்லை
ரோட்டில் வைத்தே சுட்டிருக்கலாம் அப்போதைய கொழும்பு நிலைமை அப்படிதான் இருந்தது.  

திட்டம் தீட்டபட்ட பின்னர்தான் இரு கொலையும் தலைமைக்கு தெரியபடுத்தி இருக்கிறார்கள் 
என்பது எனது தனிப்பட எண்ணம். 
கால அவகாசம் காரணம் காட்டபட்டு நடந்தேறி இருக்கவே அதிக சாத்தியம் இருக்கிறது 

தேர்தல் நேரம் மகிந்த புலிகளுக்கு காசு கொடுத்தார் என்பது 
மகிந்தவை விசாரித்தல் தெரியத்தான் போகிறது 
காசு யாரிடம் போனது? என்பதுதான் அறியப்பட வேண்டியது 
நிற்சயமாக ஒரு வெளிநாடு போயிருக்க வேண்டும். 

ராஜீவ் கொலையில் காசு கைமாறபட்டது என்று ஜெயின் கமிசன் சொல்கிறது 
சந்திர சுவாமியை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 
இன்றுவரை யாரும் விசாரிக்கவில்லை. 

இவளவும் இருக்க பிரியங்கா  திடிரென சென்று நளினியை சந்தித்தார் 
பரோலில் வந்த நளினி சொல்கிறார் வந்து தன்னை மிரட்டினார் என்று. 
பிரியங்கா ஏன் இந்த வேலைக்கு போனார் ???? 

நிறைய மர்மம் இருக்கிறது.
விலகும் காலம் நெருங்குகிறது என்று எண்ணுகிறேன். 

https://play.google.com/books/reader?id=SAZVQqntxY0C&printsec=frontcover&output=reader&hl=en&pg=GBS.PA19

71mWp-f-G0L.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

An Inside Job:

I have the evidence to prove that the Rajiv Gandhi murder was an inside job. But the SIT headed by then Inspector General of Police DR Karthikeyan never pushed the investigation in the right direction. The CBI took over the investigation on 24 May 1991, three days after the brutal murder. The team consisted of Karthikeyan, four DIGs, eight SPs, 14 deputy SPs, 44 inspectors and 55 subinspectors and constables. The members were handpicked by Karthikeyan. Most of them have a proven track record. They investigated the case for almost a year and filed the chargesheet on 20 May 1992. But the chargesheet revealed holes in the investigation and the bungling of the SIT. Even a constable would have done a better job in the case if he had got one year to investigate it. The designated court has convicted all the accused and it’s a fact that the SC acquitted 19 of the accused as the court found there was no substance in the evidence produced to prove their role in the conspiracy…

Rajiv Gandhi was assassinated on 21 May at 10.20 pm at Sriperumbudur when he was about to campaign for Maragatham Chandrasekar, the Congress candidate. Rajiv had already completed his campaign in Tamil Nadu. But on 18 May, the All India Congress Committee (AICC) charted his tour and included the campaign at Sriperumbudur after Visakhapatnam. But Dina Thanthi, a Tamil daily, published a news item on 17 May that Rajiv was going to address an election rally at Sriperumbudur on 21 May. None of the Congress leaders were aware about such a meeting. On 18 May, the committee responsible for Rajiv’s tour programme held a meeting at AICC and finalised the tour. How was the Dina Thanthi reporter able to write a story on Rajiv’s tour schedule before it was finalised by the AICC?

On 19 May, Vazhapadi Ramamurthy, then Tamil Nadu Congress chief, objected to Rajiv addressing a rally at Sriperumbudur and staying there — he made this clear when he deposed before the trial court. His objections were never taken into consideration as Maragatham was using her clout in Delhi to get Rajiv to address a meeting in her constituency. So the meeting was scheduled and local Congress leaders approached the police authorities to grant permission to hold the meeting at a school ground. But later, for reasons known to Maragatham, the venue was changed to a temple ground.

For changing the venue, the Congress leaders never sought police permission. And there was no proper security arrangement at the meeting.:

Now comes the new shocker from none other than the Chief Minister of Karnataka, Siddramiah.

Assassination attempt at Mysore;

“According to CM Siddaramaiah, there was an attempt to kill Rajiv Gandhi during his visit to Mysore.

Some 10 days before he was assassinated in Tamil Nadu, the former PM was touring Mysore, campaigning for the parliamentary polls. While his cavalcade was traveling on Narasimharaja Boulevard near Lalitha Mahal, an old woman had blocked the convoy leading to a chain of accidents.

Senior Congress leader Azeez Sait’s car rammed into another vehicle as the woman appeared suddenly, Siddaramaiah said, claiming it to be an attempt to kill Gandhi. “Only 10 days later he was killed. It is sad that the party lost a young leader. Only after his assassination was the Mysore incident taken seriously,” he stated, after paying homage to the former Prime Ministers Jawaharlal Nehru and Rajiv Gandhi at Congress office on Tuesday. ”

The Rajiv Brief.

‘I was part of various analysis teams of Indian intelligence agencies during the 80’s and 90’s and now live a anonymous life in a distant land. What I am going to propagate over a 3 part series in the next few days might seem very farfetched and even fantastic to most people and many conspiracy theorists might gleefully accept it as vindication for whatever they have been screaming from rooftops for quite some time now. My attempt though is neither to please any one nor to prove someone else wrong or right; it is just to come out with the truth as we perceived it. Most of the theory that I am going to put forward in part 1 is the work of us 5 people in 1991 while analyzing all the intelligence inputs over the years in connection with the assassination of former Prime Minister Mr. Rajiv Gandhi. We in the intelligence parlays termed it as “the Rajiv brief”…

Scenario 1: The Rajiv-Sonia marriage
 
 
At the outset there is nothing more than just another love story to Mr Rajiv Gandhi’sromance with Miss Antonia Albina Maino in the mid 1960’s. Any suggestion that there were characters in the Cambridge university campus that not only hooked them up but also nurtured the famous romance is too farfetched. But having said that, let us consider some of the London tabloid reports of that time which variously suggested Rajiv was “constantly influenced” by a couple of students of European origin (I would not take names and let researchers do some hard work) and that at least one of those students was later absorbed by the Vatican’s intelligence wing. It would also be farfetched to speculate on Indian intelligence requesting the help of MI5 to analyze the Rajiv-Sonia romance, at least am not aware of any such report ever being filed. All these rumours and theories have done their rounds in the intelligence quarters of Delhi, especially during 1991-1992, but then we are rushing ahead of time so we shall deal with that later. I would now present as to what intelligence agencies actually did, which was very little, and let people draw their own conclusion.
 
 
Coincidence?
 
There is definitely more than that meets the eye in Rajiv Gandhi’s assassination.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12801489_221971184821499_879692750463113

படிச்சதில் பிடித்தது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nirmalan said:

ராஜீவ் காந்தி கொலை என்பது பின்நாளில் எம்மை தமிழக மக்களிடம் இருந்து முற்றாக அந்நியப்படுத்தியது மட்டும் அல்லாது தமிழக ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் எமது தரப்பு செய்திகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை. ஆர்வப்படவும் இல்லை.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பாகவோ மக்கள் இழப்பினைக் கூட தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தமை எமக்கு பாரிய பின்னடைவினையே தந்து இருந்தன.

தமிழக ஊடகங்களுடனான நெருக்கத்தினை ஆனந்த விகடனுக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் வழங்கிய பேட்டியுடன் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நெருக்கத்தினை அந்தக் கால கட்டத்தில் தொடங்கி வைத்தவர் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பிரான்சைச் சேர்ந்த கி.பி. அரவிந்தன் அவர்களே.  

இந்திய இராணுவத்துடனான மோதல் இடம்பெற்ற காலத்திலேயே விடுதலைப் புலிகள், அருள்-89 உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினை தமிழ்நாட்டில் தொடர்ந்தும் இயக்கி வந்து இருந்தனர்.  இந்தியப் படையினருடனான மோதல் இடம்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் புலிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கூட தமிழ்நாட்டில் இருந்துதான் தருவிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டு காவல்துறையோ அல்லது கடலோர காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எமக்கு பாரிய நன்மைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை கிடைத்தது என்பது மிகப் பெரிய சாதனை. அதனை நாம் பெற்றுக் கொண்டு அதில் இருந்து முன்னேறி இருக்கலாம். ஆனால், பிரபாகரன் ஆசைப்பட்டது தமிழீழம்.

பிரபாகரனுக்கு அரசியல் தீர்வில் துளி கூட விருப்பம் இருந்தது இல்லை. அதில் இருந்து முன்னேறும் ஆசை கூட இருந்தது இல்லை. அதுதான், பின்னர் பிரேமதாசாவுடனும் சந்திரிகாவுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை பிரபாகரன் முறித்து இருந்தார்.

இன்று நாம் எங்கே நிற்கின்றோம் என்பபதனை புரிந்து கொள்ள எம்மவர்கள் முயற்சிக்கவில்லை என்பது கவலைக்கு உரிய விடயம். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு கொண்டு வருவதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டே தருவித்தனர். 

ராஜீவ் காந்தி நல்லவர் இல்லை. அது உண்மை. இதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியப் படையினர் எனது கண்ணுக்கு முன்பாகவே எமது உறவுப் பெண்களுடன் சேட்டை புரிந்ததும், சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் நான் சிறு வயதில் கண்கூடாக கண்ட காட்சி. 

முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இளம் தலைவராகவும் அதே சமயம் கவர்ச்சிகரமான தலைவராகவும் அவர்களை இந்திய மக்கள் பார்த்தனர். அவரைப் போய் அவர்களது நாட்டுக்கு உள்ளேயே போய் கொலை செய்தது பாரிய தவறுகளில் ஒன்று.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் பின்நாளில் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பி. கூட என்று "தமது இயக்கம் ராஜீவ் காந்தியை கொலை செய்ததோ அன்றில் இருந்து தமக்கு ஒவ்வொரு முயற்சியும் பெரும் போராட்டமாகவே முடிவடைந்ததாக" குறிப்பிட்ட அவர், இயக்கம் விட்ட பாரிய தவறுகளில் இந்த கொலையும் ஒன்று" என்று தெரிவித்தார்.

ஒரு காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் தம்மை தேடி வராதா என்று இந்தியா விரும்பி இருந்ததாம். அதே இந்தியாவை எம்மவர்கள் எவராலும் நெருங்க முடியாத நிலையே இன்று காணப்படுகின்றது. 

12805693_1085779478153955_32695758491011

ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை

தண்டனை பெற்றார்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.