Jump to content

செங்கை ஆழியான் ஆவணப்படுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூலகம் பற்றி உங்களுக்குப் புதிதாக அறிமுகப் படுத்த வேண்டியதில்லை.

 

www.noolaham.org இணைய நூலகத்தினையும் அதனுடனிணைந்த பல ஆவணப்படுத்தல் வேலைகளையும் செய்துவரும் நூலக நிறுவனம் எமது சமூகத்தின் நிதியுதவில் தங்கியிருக்கும் அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் நீங்கள் தொடர்ச்சியாகப் பங்களிக்க வேண்டும் என்று கோரியே இந்த மடல்......

 

இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஆவணப்படுத்தத் தவறியதால் இழந்த அறிவுச் செல்வங்கள் ஏராளம். எஞ்சியவற்றை ஆவணப்படுத்தவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் நூலக நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

 

* நூலக வலைத்தளத்தில் இப்பொழுது 16,500 க்கும் அதிக ஆவணங்கள் உள்ளன. இவை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஸ்கான் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டவை.

 

* 4000 க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிப் பக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 

* ஏறத்தாழ 1,700 நிறுவனங்கள் (நூலகங்கள், கோயில்கள், பாடசாலைகள்) மற்றும் 2,00 ஆளுமைகள் (கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சமூக சேவையாளர்....) தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

 

* தமிழில் ஆவணப்படுத்தல் தொடர்பிலான முதல் ஆய்வு மாநாடான தமிழ் ஆவண மாநாடு 2013 நடத்தப்பட்டு மிகப்பெரும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

 

* பாடசாலை மாணவருக்கான 1000 க்கும் அதிகமான கல்வி வளங்கள் மின்வருடப்பட்டுள்ளன.

 

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அலுவலகங்கள் உள்ளன. 9 முழு நேர ஊழியர்கள் உள்ளனர்.

 

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலை முழு மூச்சில் முன்னெடுக்கப் பெருமளவு உதவிகள் தேவையாக உள்ளன.

 

நூலகச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க நூலக நண்பர்கள் எனும் உதவி வட்டத்தினை உருவாக்கியுள்ளோம். ஒவ்வோராண்டும் தம்மாலியன்ற தொகையினை வழங்குவதனூடாக நூலகத்தினை முன்னெடுக்க அதில் இணைந்து கொள்ளக் கோருகிறேன்.

http://noolahamfoundation.org/wiki/index.php?title=Friends_of_Noolaham

 

நிதியுதவ விரும்பினால் :

 

Account Name: Noolaham Foundation 

Account Number: 1100063121 

Bank : Commercial Bank (Wellawatte Branch), Colombo, Sri Lanka 

 

ஆவணப்படுத்தல், இணைய நூலகம் போன்றவற்றில் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொண்டவர்கள் சிலரே. அவ்வகையில் தாங்களும் இப்பணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலதிக விபரங்கள்:

 

நூலக நிறுவன வலைத்தளத்தில் FAQ

http://noolahamfoundation.org/wiki/index.php?title=FAQ

 

நூலக நிறுவனம் பற்றிய அறிமுக பிரசுரம் - Introductiom

http://www.noolahamfoundation.org/documents/introductions/IntrodocNoolaham.pdf

 

நூலக நிறுவன கொள்கை, நிகழ்ச்சித்திட்டக் கையேடு Policy and Program Manual

http://www.noolahamfoundation.org/documents/introductions/PP_Manual_NF_2015.pdf

 

மேலும் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய முடிந்தால் பேருதவியாக இருக்கும்.

 

T. Kopinath

 

Source - email

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.