Jump to content

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 2


Recommended Posts

முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல.

சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்பனையும் பெரிசாகிற்று. சின்னு வீடுகள் மும்முறமா தேடவெளிக்கிட்டான். ராசாத்தி ஊரில நல்ல காணியா தங்கச்சி மகனிட்ட பார்க்க சொல்லிட்டா.

அடுத்த மாசத்துக்கான கூறல் வந்திற்று. அண்ணாச்சி கடையில சனம் கூடுது. கழிவ உயர்த்துறது நிறைய பேருன்ர ஆசை. காசு யாரும் கேக்காட்டி குலுக்கி குடுப்பினம், அது எப்புடியும் நடக்காது. யாராவது ஒருத்தன் கட்டாயம் அவசரமா கேப்பான், வடிவா சீட்ட கேட்டு கழிக்கலாம். வெள்ளையும் சொள்ளையுமா பாண்டி வந்து நிக்குறார்;. வேலைக்கு போன களைப்பு உடம்பில தெரியிது. கழிவு கொஞ்சம் போனா எடுப்பம் எண்டுற யோசின. புறோக்கர் ஆறுமுகம் தனக்கு இண்டைக்கு எடுக்க வேணும் இல்லாட்டி பட்ஜெட் இறுகீரும். வங்கியும் உடனடடிய மிச்சம் உள்ள 130‘000 கட்ட சொல்லி கடிதம் போட்டிருக்கு. இல்லாத பொல்லாதுக்கு வேற இடத்தில இன்னொரு சீட்ட வேற ஒரு ஆழிட்ட கைமாறிட்டார். அந்த சீட்டு கடைசியா தன்ர கையால அந்த ஆக்களுக்கு இவர் குடுக்க வேணும,; அது தான் ஒப்பந்தம். பெரிய வீடுதானே கட்டுறார், காசு தேவையா இருக்கு. முழுசி முழுசி கூட்டத்த பார்க்கிறார். சின்னு கையக்கட்டி வேடிக்க பார்க்கிறான். வீடு என்னும் பார்க்கிறதால அவசரம் இல்லை. கழிவு எப்படியும் கூடும் என்று இவனுக்கு வடிவா தெரியும். முருகேசண்ண தனியா வந்து இருக்கிறேர். கொஞ்சம் கழிவ கூட்டசொல்லி உத்தரவு வீட்டில இருந்து. இன்னும் ஆறு வருசத்தில பென்சன் இவருக்கு. சொந்தங்களை வெளிநாடு கூப்பிட்டு மனுசனிட்ட காசு பெரிசா இல்லை. குடுத்த காசும் திரும்பி வரேல்லை, கேட்டா வேலை போயிட்டு, கடன் எண்டு மழுப்புறினம். தங்களுக்கு எண்டு ஏதாச்சும் வேணும் தானே, அதுக்குத்தான் புது வீடு கட்ட பாக்கினம் இந்த வயசான காலத்தில.

80‘000 ஆயிரத்துக்கு 24‘000 கழிவு. கட்டாய கழிவு 1 வீதம், அதாவது 14‘400 போக கூவி கூவி 56‘000 பிராங்கில நிண்டிச்சு. சில பேருக்கு சந்தோசம் சில பேருக்கு கவலை. கட்டுக்காசு 2‘800 பிராங் வாற 10 திகதிக்கு முதல் குடுக்கோணும். மாணிக்கம் எண்ட ஒரு ஆள் கேட்டிருக்கிறார். பெட்ட சாமத்திப்பட்டிற்று அத பெரிசா கொண்டாட வேணும், அதோட மனிசீன்ர தம்பி வெளிநாடு வர இந்தியா வந்திற்றான். அவசரமா கேட்டிருக்கிறார். குறைய தான் எண்டாலும் தேவையா இருக்கு. சரி சாமத்திய வீட்டில நல்ல மௌய் விழும் தானே. நிறைய பேருக்கு காசு கொண்டே போட்டவர், இது தான் அவற்ற குடும்பத்தில முதலாவது நிதழ்ச்சி. இண்டைக்கு புறோக்கர் எதிர்பார்த்தது நடக்கேல. கவலை அதோட என்ன செய்றது எண்டு வழி தெரியேல. கழிவு கூடிப்போச்சு. வங்கீட்ட புது வீட்டின்ர முதல் கட்டவேண்டிய தவணய ஒரு மாசம் கூட்டி கேப்பம் எண்ட யோசினை, என்ன வங்கி வட்டி கேக்கும். அத தவிர வேறு வழி இல்லை. நிறைய பேரிட்ட கடன் கேட்டு இல்லை எண்டாச்சு. இப்ப தன்ர ரெண்டு சீட்டுகள், பழைய வீட்டுக்கு வட்டி வேற கட்ட வேணும். இந்த மாசம் யாரும் புது வீடு வாங்கேல்ல, கூட்டி கொண்டே காட்டினவர். அரவாசி பேருக்கு சம்பளம் காணாது எண்டு வங்கி மாட்டன் எண்டு சொல்லுது.

தொடரும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.