Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய காலத்தில் சில நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன், பொட்டுப் பற்றிய செய்தியை விட்டு மக்களை திசை திருப்புவதாகும். ஊடகங்கள் வழமைபோல வியாபாரத்தில் இறங்கியுள்ளன. போராளிகளில் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தத்தம் உள விருப்பிற்கு ஏற்ப இவ்வாறு நடந்தது அல்ல அவ்வாறு நடந்தது என்று ஊகங்களை முன்னிறுத்தி திருப்தி கொள்கின்றார்கள்.

ஆனால் அங்கு நடைபெற்றது யுத்த நெறி மீறல், படுகொலை, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு மறைமுக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் யுத்தகாலத்திலும் சரி யுத்தம் முடிந்ததாக அறிவித்த போதும் சரி அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றன. மனிதகுலத்திற்கு எதிரான அரசபயங்கரவாதம் தனது காட்டு மிராண்டித் தனத்தைக் திறந்தவெளிச் சிறையில் மக்கள் அனைவரையும் வைத்தே அழித்தொழித்தார்கள். அப்போ முழு உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.

இன்று அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்ற தேசத்தின் விடுதலை பற்றிய அக்கறையையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வேலைமுறைகளை கவனம் கொள்ளவிடாது திசைதிருப்பும் வேலைகளும், கருத்துருவாக்கமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள், மக்களின் செயற்பாடுகள் தான் அடக்குமுறைகளை உடைத்தெறியும் வல்லமை கொண்டதாகும். அநீதிக்கு எதிராக போராடுவது பயங்கரவாதம், வீண்வேலை, இன்னும் எந்த உயிரை மாய்க்க ஏன் தூண்ட வேண்டும் என்று எதிர்நிலைக் கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆயுதங்களினால் தான் உலகம் ஆளப்படுகின்றது என்பதை உணர மறுப்பது அல்லது ஏற்க மறுப்பது என்றாகியிருக்கின்றது. 

இதுதான் யேசுநாதர் உயிர்த்தெழுந்து வருவார் என்று மதவாதிகள் பேசுவது போல பிரபாகரன் வருவார், பொட்டு வருவார் தலைமை மறைவாக இருக்கின்றார் என்ற சிந்தனையை சிதறடிக்கும் செய்திகளாகும். எனவே தலைவர்கள் வருவார்கள் மீட்பர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதாலும் தலைவர்களை கடவுளாக்குவதும் மக்களின் விடுதலைக்கு எவ்வித பலன் கொடுக்கப் போவதில்லை. 

இறுதிக்காலத்தில் இடம்பெற்ற மனித குலவிரோதங்களை மறைப்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முன்னெடுப்புக்களும், சீன- மேற்கு (இந்திய நலனும்) நலன்களுக்கிடையோயான மோதலில் தம்மை நியாயவாதியாகவும் சரத் பொன்சேகாவினால் திசைமாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் வாதங்களும் பெருந்தேசியவாத இருப்பை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நகர்வுகளில் இருந்து வெளியாகும், அரசியல்வாதிகளின் கோமாளிக் கருத்துக்கள் மக்களை திசை திருப்பிக் கொள்கின்றது. 

ஜேவிபி இரட்டை முகம்-

தமிழ் தேசம் என்பது ஆயுதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. தமிழ் தேசம் என்பது ஆக்கிமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதை தேசியத்தை - சுதேசிய இறைமையை தவிர்ப்பாக (taboo) அல்லது துடக்காக எண்ணும் போக்குக் கொண்டவர்கள், தேசிய இனத்தையும் தேசத்தையும் போட்டுக்குழப்பும் குட்டிமுதலாளித்துவ ஊசலாட்டப் பிரிவு இவர்களுக்கு கசப்பானதுதான். 

இந்த இடது குட்டிமுதலாளியப்பிரிவு முள்ளிவாய்க்காலை மௌத்துடன் அல்லது பங்குபற்றிக் கொண்டே இருந்தார்கள். இன்று ஜீவகாரூண்யச் சிந்தனையை முன்னிறுத்தி (ஜேவிபி) பேசுகின்றார்கள்.
ஜேவிபி தலைவர் வடக்கில் மக்கள் மந்திரிகளின் மலசலகூடத்தை விட கேவலமான நிலையில் இருப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றார். இவர்கள் உரிமைக்காக போராடுவது இனவாதம், பிரிவினைவாதம் என்றவர்கள் பௌத்த சின்னங்களின் கட்டமைப்புகள் தமிழர் தேசங்களில் முளைப்பது பற்றி போலி இடதுசாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

பெருந்தேசியவாதம் மாறாத கட்டமைப்பு. இதனை எதிர்த்துப் பேசினால் தமிழ் இனவாதி - இனவெறி- போலித்தேசியம்- இன்னபிற சொல்லாடல். இதில் ஜேவிபி தலைவர் கிளிநொச்சியில் பௌத்த ஜீவகாரூண்ய முழக்கம் வேற சொற்பொழிவுகள்.

பௌத்த சிங்கள தேசியப் பெருமிதத்தின் மீது கட்டப்பட்ட சிந்தனை என்பது குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் எவ்வித தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. பௌத்த சிங்கள சிந்தனை வடிவம் என்பதும், தீர்வு என்பது பௌத்த சிங்கள சிந்தனைக்கு உட்பட்டது. இதற்கு அப்பால் ஒன்றுடமில்லை. ஆனால் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்றால் தரகு வர்க்கத்தை கடந்து தான் செல்லவேண்டியிருக்கின்றது. இதுதான் யதார்த்தம் மற்றவை அர்த்த மற்ற வெற்றுக் கூச்சலாகும்.

கலைகலைக்காகவா மக்களுக்காகவா?

கலை என்பது யாருக்காக என்ற வாதங்கள் பழையனதான். ஆனால் இன்று அரச ஒத்தோடிகளின் ஆவண எழுத்தின் உச்சத்திற்கு அடைந்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது இன்றைய அரசியல் சமூகப் போக்கு என்பது பெருந்தேசியத்தின், அன்னிய மூலதனச் சக்திகளின் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்ற தேசத்தின் விடுதலை நோக்கி பிரஞ்ஞை கொண்ட எழுத்துக்களும், மக்களின் அவலங்களை முன்கொண்டுவரக் கூடிய எழுத்து வகைதான் தேவையானது. அவலங்களை வைத்து வியாபாரம் நடத்துவது அல்லது அவலச் சுவையை முன்வைத்து தமது எழுத்துத் தகமையை வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரம் இரு கூட்டுத் தேவை, கூட்டு பொறுப்பு, வரலாற்றுக் கடமை என்ற எவ்வித அம்சத்தினுள் அடங்கிவிட முடியாது.
இந்த வகையில் தான் போராட்ட அனுபவங்கள், போராட்ட படிப்பினைகள், போராட்டத்தின் தேவையை முன்னோக்கி நகரக் கூடிய வழிமுறைகளில் அமைந்திருக்க வேண்டும். 
இன்று அரச ஒத்தோடிகளும், இணக்க அரசியல்வாதிகள், ஜீவனாரூண்ய சிந்தனை கொண்டவர்கள், அகிம்சைவாதிகள், புலியெதிர்ப்புவாதிகள் என்ற அனைத்து பழமைவாதிகளும் போராட்டத்தின் தோல்வியை, போராட்ட அமைப்பின் கோட்பாட்டுத் தவறுகளை வைத்து வியாபாரம் செய்ய முற்படுகின்றார்கள். 

தமிழினி முதலாளித்துவ தாராளாவாத பெண்ணியத்தை எதிர்த்த சிறப்பான கருத்தை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது அதுவும் புலிகளின் கொள்கைவகுப்பாளர்கள் கவனத்தில் பெண்ணியம் பற்றிய பார்வை தெளிவாக இருந்திருக்கலாம் அல்லது தெளிவற்று இருந்திருக்கலாம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் போது தமிழினி கொடுத்த கருத்துத் தான் நம்பகத் தன்மை கொண்டதாகும். வி்.பு பெண்கள் அணித் தலைவராக இருந்த தமிழினியின் எழுத்தாக முன்வைக்கப்படும் புத்தகத்தில் இருந்து வியாக்கியானம் செய்யலாம், செய்ய முடியும். ஒரு வரலாற்றின் பதிப்பும் சிந்தனையும் செயற்பாடும் என்ற வகையில் இருந்து

https://www.youtube.com/watch?v=XRWVQ9EazF4 

வீழ்ச்சியின் பின்னாரான காலங்கள் என்பது கட்டாய வாழ்வு, சிந்தனை கட்டாயம் படுத்தப்படுகின்றது, சிந்தனை மலடாக்கப்படுகின்றது, ஐயவாதம் முன்னிறுத்தப்படுகின்றது, போராட்டமே தவறென்று கட்டமைக்கப்படுகின்றது, சிந்திப்பது மனப் பிறழ்வு (மனநோயாளர்களா) முத்திரை குத்தப்படுகின்றது, இவ்வாறான நிலைகளைக் கடந்தே. சமூகத்தினை அறிவியல் சமூகமாக உருவாக்கவோ, மாற்றத்திற்கு உள்ளாக்கவோ முடியும். -- இங்கு தமிழினியில் கருத்து என்பது ஆய்விற்கு உட்பட்டதும் அதனை முழுமையாக நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

அதே போல ஜனரஞ்சக எழுத்து என்று எழுதும் எழுத்தாளர்கள் போராளிகளை கொச்சைப்படுத்துவது என்ற போர்வையில் போராட்டத்தின் ஆத்மாத்த உயரிய சிந்தனையை சிதைப்பது என்பது ஏற்கனவே பிற்போக்கு சமூக அமைப்பின் மேல் கட்டப்பட்ட (அரைசநிலமானிய பிற்போக்குச் சிந்தனைக்கான தூய்மைவாதம்) சமூக அமைப்பில் சாத்தியமாக இருக்கின்றது. இதனைத் தான் அரச ஒத்தோடிகள் இணைந்து கூட்டாக இதுதான் போராட்டத்தினை சிதைக்க தீயாக வேலை செய்கின்றார்கள். 

மனித குலவரலாற்றில் மனித குலத்தின் சிறு குழுமங்கள் வெவ்வேறு கட்டத்தை தாண்டி நகரும். அது சில பக்கிகளின் அறிவியல் தளத்தில் இருந்தும் அறியாமையில் இருந்து அல்ல.. மாறாக மனித குலத்தில் பிரிவுகள் வெவ்வேறு நிலைகளை அடைவது சாத்தியம். இது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் நிகழும் வரலாற்றுப் போக்காகும். சமூக அமைப்பிற்கேற்ப உருவாக ஒரு வர்க்கத் தலைமை மற்றவர்களை மீறி வளர்ந்தது. புறநிலையால் அது அழிந்தது. வீழ்ச்சி என்பது தோல்வியல்ல இது வளர்ச்சிப் போக்கில் ஒரு முன்னோக்கிய பாதையின் திறவுகோள்.
10294485_847552982034826_694285034642133

நன்றி. வேலன் 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.