Karan T.

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 3

Recommended Posts

மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த சீட்டு முடிய என்னும் ஜந்து மாசம் தான் இருக்கு. ஆறுமுகமோ தான் ஜந்து மாசத்தில திருப்பி தாறன் எண்டு சொல்லீற்றார். இல்லாத பொல்லாததுக்கு தன்ர புது வீட்டை பெற்றி பெரிசா சொல்லி திரியுறார். தன்ர பழைய வீட்ட வாங்க நல்ல காசுக்கு கேக்கிறாங்கள் எண்டுற நம்பிக்கையான வார்த்தைகள சொல்லி சமாளிக்கிறார். வாறவன் பார்க்கிறவன் எல்லாம் வீடு சின்னன், அதுக்கு ஏத்த விலையும் இல்ல எண்டு புறுபுறுப்பு தான். ஜந்து மாசத்தில பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை வேற, எங்க போவம் எண்டு மனிசி கேட்டபடி, அதுக்கு ஒரு வழி பண்ண வேணும்.

மாசங்கள் ஓட எட்டாவது கூறலுக்கு வந்தாச்சு. 6வது சீட்ட சந்திரன் எண்டுற யாரோ எடுத்திற்றினம். 7வது சீட்ட 18‘000 கழிவுக்கு பாண்டி எடுத்திட்டேர். சும்மா எட்டிப்பார்க்கிற பாண்டிய இண்டைக்கு காணேல்ல. போன் பண்ணி கட்டுப்பணத்த மகளிட்ட சொல்லியாச்சு. பத்தாம் திகதி ஆகி கட்டுக்காசு இன்னும் வரேல்ல. போன் பண்ணினா தூக்கேல, கைபோனுக்கு அடிச்சும் தூக்கேல்ல. வேற சீட்டுக்காறர் அண்ணாச்சிட்ட கேட்டிருக்கிறினம் பாண்டின்ர கட்டுக்காசு வந்திற்றா எண்டு, ஏனெண்டா தங்களுக்கும் வரேல்லையாம். காட்டு தீ மாதிரி இந்த விசயம் பரவீற்று. பாண்டி சீட்ட சுத்தீற்றான், தொப்பி போட்டிற்றான் எண்டு கதை ஊர் முழுக்க.   

சின்னுக்கு விழுந்த சீட்ட வாங்க அவன் வந்திற்றான். இப்ப காசு குறையிது. அண்ணாச்சி தன்னட்ட இருந்தத போட்டு குடுத்திட்டேர். ஒரு காசு தான் வரேல்ல. குடுக்காட்டி நம்பிக்க போயிரும். இப்ப பிரச்சின அந்த ஒரு மாச கட்டுக்காசு இல்லை. பாண்டி 62‘000 எடுத்து இருக்கிறான். மொத்தமா கட்டின காசு ஒரு 20‘000 தான் வரும். இப்ப 42‘000 என்ன பதில் சொல்லுறது, எங்க போறது. சீட்டு தொடங்கினது இவர். அண்ணாச்சி பாண்டிய தேடி வீடு மட்டும் பொயிட்டேர், அங்க மகள் மட்டும் தான் நிண்டது. வீட்டு போன் வேலை செய்யேல, கைபோன் துலஞ்சிற்றாம். நம்பாம சிரிச்சிற்று வந்தார். திரும்ப ஒருக்கா போக யாரும் திறக்கேல. அடுத்த கூறலும் வருது. இந்த முறை காசு வராட்டி சனம் குழம்பீரும். கடைசியா ஒருக்கா பாண்டி வீட்ட போய் பார்ப்பம் எண்டு போனவர் தான், பாண்டின்ர மனிசி பொலிஸ்க்கு போன் அடிச்சிற்று. பொலிஸ் வந்தோண பாண்டி முகம் காட்டினான். பெரிசா ஒண்டும் கதைக்கேல, வைராக்கியமா உன்னால முடிஞ்சா காச வாங்கிப்பார் எண்டு சொல்லீட்டான். பொலிஸ் என்ன எண்டு கேக்க பாண்டி மட்டும் இவர் சும்மா சும்மா வந்து இடஞ்சல் பண்ணுறார் எண்டாச்சு. எனி இந்த பக்கம் வந்தா புடிச்சிற்று போயிருவம் எண்டு எச்சரிச்சாச்சு. ஐந்து நாளுக்கு பிறகு தான் தெரியும் பொலிஸ் வேறு ஒரு சீட்டு காரணையும் எச்சரிச்சது எண்டு. யாரும் பொலிஸிட்ட சொல்ல முடியாது பெரிய பிரச்சினை. இது கழவு வேலை புடிபட்டா சுவிஸ் பத்திரிகையில தலைப்பில வரக்கூடிய விடயம்.

அடுத்த கூறலில எல்லாரும் எடுப்பம் எண்ட எண்ணம் தான். பெரிய கலவரம் மாதிரி தான் இருக்கு. அண்ணாச்சி சீட்டுக்கு தான் பொறுப்பு கவலை பட வேண்டாம் எண்டு கொஞ்சம் சமாதானம் படுத்தினார். அடுத்த காசு கட்டுற திகதி வந்தாச்சு. 6வதா எடுத்த சந்திரனும், பாண்டி மற்றும் புறோக்கர் ஆறுமுகம் தரேல்ல. சந்திரன் இண்டைக்கு தாறன் தாறன் எண்டு மழுப்பல், பாண்டி வரப்போறது இல்ல. ஆறுமுகம் நேரடியா எடுத்த ஆக்களிட்ட குடுக்கிறன் எண்டு சொல்லீட்டான். 10 நாள் ஆச்சு இன்னும் காசு ஆறுமுகம் குடுக்கேல்ல. அண்ணாச்சி தலேல கை வைச்சு ஐயோ எண்டு கத்த வெளிக்கிட்டார்.

தொடரும்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள், கரன்!

நான் உங்கள் கதையின் முதலாவது பகுதியில் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வருகுது!

கதையும் சூடு பிடிக்கிற மாதிரிக் கிடக்கு...!

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கரன். ஒரே  திரியில்  ஒவ்வொரு தொடரையும் பதிந்தால் இலகுவாக வாசிக்கலாம்

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கரன்

Share this post


Link to post
Share on other sites

பாகம் 4 கடைசி பாகம் ஆகும். எழுதி முடித்து விட்டேன், திருத்த வேலைகள் செய்ய வேண்டும். விடுமுறை காரணங்களால் சிறு தாமதத்துடன் வெளிவரும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.   முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும்  டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது. எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526760
  • ரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தான் என்ற பெயரை தான் பின்னைய காலங்களில் முஸ்லிம்களின் தேசத்துக்கு பெயராக ஜின்னா, முஸ்லிம் லீக் வைத்தார்கள். அதற்காக ரஹ்மத் அலி கூறிய பிரதேசங்களை உள்ளடக்கி தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் ஜின்னாவோ, முஸ்லிம் லீக்கோ இருக்கவில்லை. ரஹ்மத் அலிக்கு பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகள் உருவான போது ஜின்னா பெரிய பாகிஸ்தானை பெறாமல் சிறிய பாகிஸ்தானை பெற்று விட்டார் என்பது அதிருப்தி. வங்காளம், பஞ்சாப் கூட முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதாக இருந்து பின் காங்கிரஸ், இந்துத்துவவாதிகள் அவை பிரிக்கப்படவேண்டும் என நின்று பிரித்தார்கள். 1948 ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு போனவர் அங்கு ஜின்னாவை, முஸ்லிம் லீக்கை தொடர்ந்து கண்டபடி விமர்சித்துக்கொண்டிருந்தார். 1948 செப்ரெம்பர் 11 ஆம் திகதி ஜின்னா மரணமடைந்ததும் ஒக்டோபர் மாதம் லியாகத் அலி கான் ரஹ்மத் அலியை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றினார். அது தான் அவர் மரணத்தின் பின்னும் தொடர்ந்த பிரச்சினை. இது தான் நான் அறிந்தது.
  • ஜின்னா முன்னர் தனிநாடு கோரவில்லை.  அதை அவரது 14 அம்ச கோரிக்கையில் கூட பார்க்கலாம். ஏற்கனவே அதை சுட்டிக்காட்டியிருந்தேன். The form of the future constitution should be federal, with the residuary powers vested in the provinces; A uniform measure of autonomy shall be guaranteed to all provinces; அன்றைய கோரிக்கையில் சிந்துவை பம்பாயிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்கப்பட வேண்டும், பலோசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்றவற்றையும் கேட்டார். Sindh should be separated from the Bombay Presidency. Reforms should be introduced in the North West Frontier Province and Balochistan on the same footing as in the other provinces. https://en.m.wikipedia.org/wiki/Fourteen_Points_of_Jinnah  இதில் வங்காளம் பற்றி கூட கதைக்கவில்லை. 1930 களில் லண்டனில் இடம்பெற்ற முதலாம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கூட ஜின்னா 14 அம்ச கோரிக்கையில் உள்ளதை தான் வலியுறுத்தினார். மூன்றாவது வட்ட மேசை மாநாட்டிற்கு ஜின்னாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 1937 தேர்தலின் பின் இடம்பெற்ற சம்பவங்கள் தான் 1940 லாகூர் பிரகடனத்திற்கு காரணம் என நான் கூறியிருந்தேன். லாகூர் பிரகடனத்தில் கூறப்படுவது, “No constitutional plan would be workable or acceptable to the Muslims unless geographical contiguous units are demarcated into regions which should be so constituted with such territorial readjustments as may be necessary. That the areas in which the Muslims are numerically in majority as in the North-Western and Eastern zones of (British) India should be grouped to constitute independent states in which the constituent units shall be autonomous and sovereign”. காஷ்மீர் என்பது பிரித்தானிய இந்திய மாகாணமாக இருந்த பகுதியல்ல, அது மன்னர் சமஸ்தானமாக இருந்த பகுதி. எனவே அதை ஜின்னா கோரவில்லை.
  • பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் அல்ல. அது ஒரு தேசத்திற்கு/நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயர். PAKSTAN இலிருந்து PAKISTAN வர முன் பாகிஸ்தான் என்ற பெயர் இல்லை. அப்படியிருக்க முன்னைய கருத்துகளுக்கு “பாகிஸ்தான்” பெயர் சூட்டுவது உங்கள் கருத்தை நியாயப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் உத்தி.
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன் Sep 17, 20190     நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-முறைமையை-ஒழிப்ப/