Jump to content

இது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.

ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்? 

Kenya%252520---%252520Kenya%252520Airway




இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள்ளையர்கள் என்கின்ற ஓர் தற்புகழ்ச்சி. எனது வாழ்கையில் எனது நிறத்தை நினைத்து சந்தோசப்பட்ட தருணங்கள் அங்குதான். கறுப்பு என்றாலே கொஞ்சம் முகம் சுளித்துக்கொண்ட நமக்கு அங்கு போய் பார்த்த பொழுதுதான் கறுப்பிலும் இவ்வளவு அழகு இருக்கிறதா என்பது புரிந்தது. எமது பெண்கள் கொஞ்சம் கலராக கழையின்றி இருப்பதை அங்கு கறுப்புப்பெண்கள் அழகாக இருப்பதை பார்த்தபோதுதான் உணர்ந்துகொண்டோம். ஏதோ என்னை விட என்னோடு இலங்கையிலிருந்து வந்த ரோஷானுக்குத்தான் அந்த கறுப்பு அழகு தேவதைகளை ரொம்பப்பிடித்திருந்தது. சரி அது வேற கதை.

5 நாட்கள் அயராத படிப்பு. அடிக்கடி 5 நிமிடங்கள் வகுப்புக்கு பிந்திப்போனதும் உண்டு. நாங்கள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டல் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அது ஒரு "இன்டர்நேஷனல் பீச் ஹோட்டல்". 5 நட்சத்திர தரம். எல்லாமே உயர்தரம் அங்கு வேலை செய்யும் பெண்கள் உட்பட. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஒரு கென்யா நாட்டவர் அல்ல. ஒரு இந்தியர். நீண்ட வருடங்களுக்கு முன் அங்கு வந்து கறுப்பில் மயங்கி செட்டில் ஆனவர் அவர். படிப்புக்கள் எல்லாம் சூப்பர் தான் அனாலும் கொஞ்சம் எங்களை enjoy பண்ண விட்டிருக்கலாம் என்பது எமது ஒரு ஆதங்கம். அதற்கு நேரம் கடைசிவரைக்கும் இடம்கொடுக்கவேயில்லை. அந்த ஹோட்டலின் விசேடங்கள் என்று சொல்லக்கூடியவை அதிகம். 9 அடி வரை நீண்டு பரந்த நீச்சல் தடாகம். நீலமயமாக அழகாக இருந்தாலும் அருகில் போனால் கொஞ்சம் நடுங்கும். யாரையும் உடைகளோடு பார்க்கமுடியாத அழகிய பீச், பீச்சுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ஆரவார அழகிய பார் (எம்மை அதிக நேரம் பார்க்க முடிந்தது இங்குதான்;), பாபிகியூப் எனப்படும் சுட்ட இறைச்சி, Agrobats எனப்படும் Gymnastic ஷோ, ஒவ்வொரு இராவுணவுக்கும் இலவசமாக வழங்கப்படும் விசேட இசை நிகழ்ச்சி மற்றும் அதில் இடுப்பை இலாவகரமாக எப்படி எப்படியெல்லாம் ஆட்டமுடியுமோ அப்படி அப்படியெல்லாம் ஆட்டி நடனமாடும் அழகிய கென்யா பெண்கள். (அவள்கள் எங்களை சாப்பிடவா விட்டார்கள், அவர்களை பார்த்துக்கொண்டே உணவை மூக்குக்குள் திணித்தவர்களும் இல்லாமலில்லை.) நானும் ஒருமுறை அவள்களுடன் நடனமாடினேன் என்றால் பாருங்களேன்???? (இதை நான் யாரிடமும் இதுவரை சொன்னதில்லை..)

உண்மையிலேயே கென்யாபெண்கள் ஒரு வித்தியாசமானவர்கள்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எங்களால் அங்கு அதிகம் ரசிக்கப்பட்டதும் பெண்கள்தான். (இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது, என்ன செய்வது வயசு அப்படி சில பெண்களுடன் அதிகம் பேசலாம், சில பெண்களுடன் அதிகம் சிரிக்கலாம், சில பெண்களுடன் அதிகம் பழகலாம், சில பெண்களுடன் அதிகம் அலட்டலாம். ஆனாலும் ஆண்கள் பெண்களைப்பார்த்து பயப்படும் வினோதத்தையும் இங்குதான் பார்த்தோம். அங்கு ஆண்கள் பெண்களில் ஆசைப்படுவதை விட பெண்கள் ஆண்களில் ஆசைப்படுவதைதான் அதிகம் பார்க்கமுடிந்தது. எமக்கு போதிய அளவு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் எமது அணியில் உள்ள சில காஞ்ச மாடுகள் கம்பில் விழுந்ததையும் பார்க்க முடிந்தது. (சத்தியமாக நாங்கள் இல்லை;).

Kenyans_970496488.jpg

 

இது இப்படியே இருக்க, ஒரே ஒரு நாள் மட்டும் இரவு நடனத்துக்கு (Night Disco Club ) போகவேண்டி ஏற்ட்பட்டது. (சகலரும் போனார்கள் அதனால்தான் நானும் போனேன்) அங்கு நிறைந்திருந்தவை மது, மாது, நடனம், வெளிப்படை முத்தம், திறந்த மேனிகள், இலாவகர கட்டியணைப்புக்கள், பொங்கிவளியும் காமம், பெண்களின் உடைகளுக்குள் காணாமல் போன ஆண்களின் கைகள் இப்படி பல (இன்னும் எப்படி சொல்வேன்;). என்ன கொடுமை சரவணா இது என்று சொல்லிக்கொண்டு எம்மை ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுக்கூட்டம் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காய் உடனடியாகவே எமது நடனங்களையும் ஆரம்பித்தோம். எமது ICRC ஆண் நண்பர்களை கடைசிவரைக்கும் அந்த பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே எமது ICRC பெண் நண்பர்களின் வேலையாய் போனது. அதிலும் எனது கற்பை காப்பாற்றிய பெருமை Hasni க்கே சாரும். விதம் விதமான டிஸ்கோ பெண்கள். அவர்களின் வேலை அங்கு வரும் ஆண்களை அணைத்து நடனமாடுவது, பின் அவர்களுக்கு தேவையான சில விடயங்களை தாராளமாய் கொடுப்பது இறுதிக்கட்டத்தில் அவர்களை அவர்களின் அறைகளுக்கு அழைத்துச்சென்று சகலதையும் கொடுப்பது. என்னா வினோதம். நமது பெண்கள் இத்தனை பத்தினிகளா என்று அங்குதான் அங்குதான் புரிந்தது. உண்மையிலேயே நமது பெண்கள் "பெண்கள்" தான். கடைசிவரைக்கும் இந்த சிங்கம் மாட்டவேயில்லை என்பது கவலைக்கிடமான விடயம் என்றாலும் எனது லட்சியம் அப்படித்தான் இருந்தது. ஒருவன் அல்லது ஒருத்தி கெட்டுப்போவதற்கு இந்த நைட் டிஸ்கோகளை தவிர சிறந்த இடங்கள் வேறு எங்கும் இருக்க முடியாது. 

என்னதான் இருந்தாலும் இது ஒரு புது அனுபவம். பார்ப்பதற்கு பல விடயங்கள் விநோதமாக இருந்தாலும் படித்துக்கொள்ளவும் நிறையவே இருந்தது. இவ்வாறாக கழிந்த எமது களியாட்டங்கள் ஒருவாறு இறுதிக்கட்டத்தை அடைந்தது. இன்றுவரை என்னால் மறக்கமுடியாத ஒன்று அங்கு அடித்த வெயில். AC யை கட்டிப்பிடித்துக்கொண்டே வாழவேண்டிய கட்டாயம் எமக்கு திணிக்கப்பட்டது. எமக்கு விரிவுரை வழங்கிய நிக்கோலஸ் பிரமாதமான அறிவாளி. என்ன செய்வது கடைசிவரை எம்மைத்தான் அவரால் மாற்றமுடியவில்லை. 

ஒருவாறு எமது ஒருவார பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் நேரம் வந்தபொழுது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. இருந்தும் மும்பாசாவிலிருந்து நைரோபியின் (கென்யாவின் தலைநகரம் இது சர்வதேச விமானநிலையம் நோக்கி பயணித்தோம். விமான நிலையத்தில் ஒரு வினோதம். அங்கு நிறைய கென்யா நாட்டவர்கள் எமக்கு உதவி செய்ய அவர்களாகவே முன் வருவார்கள். அப்படி பெருந்தன்மையாக வந்த ஒருவரிடம் மலசலகூடம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தோம். அந்த பெரிய மனிதர் இப்படி வாருங்கள் நான் அழைத்துச்செல்கிறேன் என்று எம்மை அழைத்துச்சென்றார். நாங்களும் அவரை தொடர்ந்து போய் அலுவலையும் முடித்த பின்னர் நான் அவரிடம் நன்றி சொன்ன போது அவர் என்னிடம் 10 டாலர் கொடுக்கும்படி கேட்டார். நானோ ஆச்சரியப்பட்டு எதற்காக என்று கேட்டேன். அவர் லஞ்சம் என்பதை மறைத்து coffee அருந்துவதற்கு என்றார். ஒன்றும் செய்யமுடியாத நிலை, புது இடம், புது மனிதர், பார்பதற்கு வேறு கறுப்பு பூதம் மாதிரியே இருந்தார். காசு கொடுப்பதை தவிர்த்து அருகிலுள்ள coffee shop இல் ஒரு cofee வாங்கி கொடுத்தேன். 10m தூரம் வழி காட்டுவதற்று 08 டொலர் coffee. அதுக்கு ஒரு அரசாங்க வேலை என்று பீலா வேறு. 

இன்னுமொரு நல்ல விடயம். கென்யாவில் எங்கு சென்றாலும் சராசரியாக இருவரில் ஒருவர் நன்றாகவே ஆங்கிலம் பேசுகிறார்கள். தாய்லாந்தில் 500 க்கு இருவர் தான் ஆங்கிலம் பேசியது ஞாபகம் வந்தது. 

கறுப்பு பெண்களை விட்டுப்பிரிவதென்பது எமக்கு ஏதோ ரொம்ப கஷ்டமான விடயமாகத்தான் அன்று இருந்தது. இருந்தும் இங்கு நமது கறுப்பிகள் இருக்கிறார்கள் தானே என்கின்ற ஒரு சமாதானம். டுபாயை அடைந்து இலங்கையை நோக்கிபுறப்படும் தருணத்தில் தான் கென்யாவை உண்மையாகவே மிஸ் பண்ணுவதாய் உணர்ந்தோம். 

நமது நாட்டில் பெண்களும் சூப்பர். கென்யாவில் பெண்கள்தான் சூப்பர்!!!
 

 பி.அமல்ராஜ்  http://rajamal.blogspot.de/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையே அங்க தான் வருகுது!

எல்லாமே ஒரு 'பார்வை' தான்!

ஊரில் படிக்கும் போது..எல்லாமே அழகு மாதிரி இருந்தது என்னவோ உண்மை!

பிறகு ஒவ்வொரு தேசமாகப் பயணிக்கும் போது... அந்தந்தத் தேசத்துப் பெண்களின் 'தனித்துவம்' புலப்படும்!

ஒரு வெள்ளையையும், கறுப்பியையும் நல்ல வெய்யிலில் நிற்க வைத்தால்  'கருமையின்' அழகு தனியாகத் தெரியும்!

எனக்கென்னவோ... ஆராதிக்கும் அழகு எங்கும் உண்டு...! அது காலத்துக்கும், இடத்திற்கும், மன நிலைகளுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்!

ஆனால் சேர்ந்து வாழத் துடிக்கும்  அழகு... எனில்  பிறந்து வளர்ந்த ஊரில் தான் உண்டு!:cool:

அழகை விடவும் பல விடயங்கள் முக்கியம்!

பிறகு சந்தனு.. கங்கா தேவியைக் கட்டின மாதிரிக் கதை முடிஞ்சு போகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் அண்ணன் அமல்ராஜ் எச் ஐ வி ரெஸ்ட் செய்து கொள்வது நல்லம். tw_blush:

கண் மனம் போன போக்கில் போகலாம்.. பத்திரமா தப்பி வந்திடும். கைகளும் மிச்ச உடலும் போகக் கூடாது. கட்டுப்பாடு அவசியம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.