Jump to content

தன்னை உருக்கி நமக்கு உருகொடுத்த இயேசு: இன்று புனித வியாழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரக்­கத்தின் யுபிலி ஆண்­டிலே நாம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். இறை­வனின் எல்­லை­யற்ற இரக்கம் இயே­சுவில் வெளிப் ­பட்­டதை நாம் அறிவோம். இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை­நி­கழ்ச்­சிகள் இறை­வ­னு­டைய இரக்­கத்தின் உச்­சக்­கட்ட வெளிப்­பா­டு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே புனித வாரத்தின் மிக­முக்­கிய நாட்­க­ளுக்குள் காலடி பதிக்கும் நாம், இறை­வனின் இரக்கம் இயேசு வழி­யாக எப்­படி வெளிப்­பட்­டது என்­பதை இந்­நாட்­களில் சிறப்­பாகச் சிந்­திப்போம்.Maundy-Thursday.jpg

புனித வியாழன் தின­மா­கிய இன்­றைய நாள் இயே­சுவின் வாழ்­விலும் அவ­ரு­டைய சீடர்­க­ளா­கிய கிறிஸ்­த­வர்­களின் வாழ்­விலும் முக்­கி­ய­மான நாள். இன்­றுதான் உலகம் உள்­ள­ளவும் தமது ஒப்­பற்ற உட­னி­ருப்பை உணர்த்தும் நற்­க­ருணை என்னும் அரு­ள­டை­யா­ளத்தை இயேசு நிறு­வினார். அந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். தாழ்ச்­சியின் மாட்­சியை இந்தத் தர­ணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்­தூ­தர்­களின் கால­டி­களைக் கழுவி, அன்புக் கட்­ட­ளையைக் கொடுத்­ததும் இந்த நாளே. இயே­சு­வி­னு­டைய இந்தச் சீரிய செயற்­பா­டு­களின் ஆழ­மான அர்த்­தத்தை புரிந்­து­கொள்ள முயல்வோம்.

உயி­ருள்ள நீங்­காத நினைவுச் சின்னம்

தாஜ்­மஹால் என்­பது ஏழு உலக அதி­ச­யங்­களில் ஒன்று. உல­கத்தின் பல்­வேறு மக்­க­ளையும் கவர்ந்து ஈர்க்கும் அழ­கிய கட்­டிடம் இது. ஏழு உலக அதி­ச­யங்­க­ளி­லேயே முதன்­மை­யான, முக்­கி­ய­மான அதி­ச­ய­மாக இன்று இந்த தாஜ்­மஹால் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்தத் தாஜ்­ம­ஹா­லி­னு­டைய வர­லாறு மிகவும் சுவா­ரஷ்­ய­மா­னது.

இற்­றைக்கு 350 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்­தி­யாவை ஆண்ட மொக­லாய சக்­க­ர­வர்த்­தி­யான சாஜகான் என்ற அரசன் இதைக்­கட்­டினான். எதற்­காக இந்த மாபெரும் அழ­கிய கட்­டி­டத்தைக் கட்­டினான்? குழந்­தைப்­பேற்­றின்­போது இறந்த தன் ஆருயிர் மனை­வி­யான மும்தாஜ் மஹாலின் நினை­வாக இந்தத் தாஜ்­ம­ஹாலைக் கட்­டினான். இது சாஜகான் என்ற அந்த அரசன் தன் மனை­வி­யான மும்­தாஜ்மேல் கொண்ட அன்பின் அடை­யாளச் சின்னம். இது காலத்தால் அழி­யாத காதல் சின்னம்.

இயே­சுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்­டத்தில் தாம் தந்­தை­யிடம் செல்­ல­வேண்­டிய நேரம் வந்­த­பொ­ழுது ஒரு நீங்­காத நினைவுச் சின்­னத்தை, தனது உயி­ருள்ள பிர­சன்­னத்தை விட்­டுச்­செல்ல விரும்­பினார். அதுதான் நற்­க­ருணை!

பூச்­சி­யத்­திற்­குள்ளே ஒரு இராச்­சி­யத்தை ஆண்­டு­கொண்டு புரி­யா­மலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்­து­கொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடு­கிறான் ஒரு கவிஞன். ஆம் உல­கமே கொள்­ள­மு­டி­யாத இறைவன், ஒரு சிறு அப்­பத்­திற்குள் தன்னை சுருக்­கிக்­கொள்­கிறார், தன்னை குறுக்­கிக்­கொள்­கிறார். இது எப்­ப­டிப்­பட்ட விந்­தை­யான விடயம்?

நற்­க­ருணை - புரி­யாத புதிரா?

இயேசு தான் வாழ்ந்த காலத்தில் நற்­க­ரு­ணை­யைப்­பற்றி பேசு­கின்றார். யோவான் நற்­செய்தி இதைப்­பற்றி நமக்குச் சொல்­கி­றது விண்­ண­கத்­தி­லி­ருந்து இறங்கி வந்த வாழ்­வு­தரும் உணவு நானே. இந்த உணவை எவ­ரா­வது உண்டால் அவர் என்­றுமே வாழ்வார். எனது சதையை உண­வாகக் கொடுக்­கிறேன்.

அதை உலகு வாழ்­வ­தற்­கா­கவே கொடுக்­கிறேன் (யோ 6: 51) என்று இயேசு கூறி­ய­போது இதை அன்­றைய மக்­களால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. நாம் உண்­ப­தற்கு இவர் தமது சதையை எப்­படிக் கொடுக்க இயலும் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளி­டையே எழுந்­தது (6: 52).

குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்

இந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் என்று சொல்லி இறை­ப­ணி­யா­ளர்­களை குருக்­களை இயேசு ஏற்­ப­டுத்­து­கின்றார். குருத்­து­வத்தை ஏற்­ப­டுத்­திய இந்­நா­ளிலே இயே­சுவின் பொதுக்­கு­ருத்­து­வத்தின் பங்­கா­ளி­க­ளா­க­வி­ருக்கும் நாம­னை­வரும் தாழ்ச்­சி­யுடன் பணி­பு­ரிந்து வாழ எம்மை அர்ப்­ப­ணிக்க வேண்டும்.

இறைய­ரசின் பணி­யா­ளர்­க­ளா­கிய திருத்­தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்­செய்திப் பணி­யாற்றும் அனைத்து கிறிஸ்­தவப் பணி­யா­ளர்­க­ளுக்­காவும் சிறப்­பாக இறை­வேண்டல் செய்­கின்ற நாளாக இந்நாள் அமை­கின்­றது. தமது வார்த்­தை­யாலும், வாழ்­வாலும் கிறிஸ்­து­வுக்குச் சாட்­சி­ப­கர இவர்­க­ளுக்கு இன்னும் இன்னும் இறை­யருள் கிடைக்க வேண்­டு­மென செபிக்க நாம் அழைக்­கப்­ப­டு­கின்றோம்.

நமக்குத் தரப்­பட்ட

வாழ்க்கைப் பாடம்

தங்­க­ளுக்குள் யார் பெரியவர் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளுக்குள் ஏற்­ப­டு­வதை இயேசு காண்­கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவ­ரு­டைய சீடர்கள் அதைப் புரிந்­து­கொள்­ள­வில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்­கின்றார்.

பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை! அதிகாரமும், அகங்காரமும், நான் என்ற தன்முனைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக செய்முறைப் பயிற்சியாக செய்து காட்டுகின்றார்.

எனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.

 

அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் 

 

http://www.virakesari.lk/article/4511

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.