Jump to content

""""இந்தியாவே எம்மை காத்திடாயா....???""""[/


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

""""இந்தியாவே எம்மை காத்திடாயா....???""""

தேசம் எரியுது

தீயினிலே

தமிழ் உடல்கள்

வீழ்குது வீதியிலே....

அழுகுரல் வருகுது

காற்றினிலே

அட உலகே

விழலாயா உன்

செவியினிலே....???

குருதியில் நனையுது

புலவுகளே

வலி - கோரத்தில்

துடிக்குது உறவுகளே....

போக்கிடமின்றி

தவிக்கின்றதே

போகவும் வழியின்றி

துடிக்கின்றதே....

உணவுகள் இன்றி

வதங்கின்றதே

உதவுவார் இன்றி

கலங்கின்றதே....

தாவிட கூடுகள்

வேறில்லையே

தாவிய கூடுகள்

காணலயே...

அந்நியன் வன்முறை

அடங்கலயே

அகதி வாழ்வின்னும்

குறையலயே....

ஓடியே ஒதுங்கவும்

முடியலயே

ஒளிந்திட மறைவிடம்

இன்றில்லையே...

குண்டுகள் தோண்டிய

குழியதுவே - புதை

குழியாய்

நமக்கின்று கிடக்கையிலே...

அஞ்சி ஓடிட

முடியலயே

அழிவதை தவிர

வழியில்லையே...

கண்ணீரோடு

கெஞசு;கின்றோம் - உன்

பாதம் வீழ்ந்து

இரஞ்சுகின்றோம்...

பாரத தேசமே

வந்திடாயா

பகையிடை இருந்தெம்மை

காத்திடாயா...????

-வன்னி மைந்தன் -

post-2712-1167425173_thumb.jpg

post-2712-1167425189_thumb.jpg

post-2712-1167425264_thumb.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதம் எதற்கு? முடிந்தால் உபத்திரவம் தராமல் இருந்தாலே போதும்தானே?! இப்போது எமக்கு தேவை அங்கீகாரம்மட்டுமே!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரத மாதாவே!!! பொட்டலம் போட மாட்டாயோ???

என்று திருப்பி ஒப்பாரி வைக்க வேண்டியானே.

இந்தியாவின்ரை அருமை பெருமைகளை வானொலி தொலைக்காட்சிகளில் கவிதையாக் கறந்தா நல்லா இருக்கும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.