Sign in to follow this  
தமிழரசு

கிளிநொச்சியில் எஸ்.கே அறிவுச்சோலை ( Zurich SKT Nathan ) கடை உரிமையாளரால் திறந்துவைப்பு

Recommended Posts

sk_arivakam_001.jpg
கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது.

மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினராகவும், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆளுநர் விஸ்வரூபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு எஸ்.கே.அறிவுச்சோலையின் பிரதான பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் எஸ்.கே.அறிவுச்சோலை கட்டடத்தினையும் திறந்து வைத்தனர்.

இந்த திறப்பு விழாவின் போது, பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி எட்டு ஏ ஒரு பி பெற்ற பாடசாலை மாணவி ஜெயராஜ் ஜெனர்த்தனிக்கு தளபாட உதவி வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆளுநர் விஸ்வரூபன் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

குறித்த சிறுவர் இல்லத்திற்கான முழுப்பணிகளையும் சுவிட்ஸர்லாந்தில் உள்ள வர்த்தகர் சுப்பிரமணியன் கதிர்காமநாதன் (Zurich SKT நாதன் கடை) அவர்களின் முயற்சியால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டதுடன் 2012இல் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் ஒன்றிணையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2009ஆம் ஆண்டு யுத்த மௌனிப்பிற்குப் பிற்பாடு அல்லலுறும் தமிழ் மக்கள் பலரின் வாழ்க்கை மேம்பட பல சமூகப் பணிகளை செய்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

sk_arivakam_002.jpg

sk_arivakam_003.jpg

sk_arivakam_004.jpg

sk_arivakam_005.jpg

sk_arivakam_006.jpg

sk_arivakam_007.jpg

sk_arivakam_008.jpg

sk_arivakam_009.jpg

sk_arivakam_010.jpg

Share this post


Link to post
Share on other sites

நன்மைபயக்கும் விடயம். 

Share this post


Link to post
Share on other sites

நல்லது.

சிலர் முகநூலில் காந்தரூபன் அறிவுச்சோலை SK அறிவுச்சோலை ஆகிவிட்டது என்று அழுதுவடிக்கினம். 

Share this post


Link to post
Share on other sites

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது.

1993ஆம் ஆண்டு, தனது பெற்றோரைச் சிறுவயதில் இழந்த மேஜர் காந்தரூபனின் வேண்டுகோளுக்கமைய,  பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது காந்தரூபன் அறிவுச்சோலை.

2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் திருவையாறு 2ஆம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கணினிப் பிரிவு இயங்கிவந்த 14 ஏக்கர் காணியில் இச்சிறுவர் இல்லத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை எஸ்.கே. என அழைக்கப்படும் சுவிஸ் வர்த்தகரான கதிர்காமநாதன் அணுகியுள்ளார்.

குறித்த 14 ஏக்கர் காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதுடன்,  சிறுவர் இல்லம் அமைப்பதற்காக விடுதலைப் புலிகளினால் அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்துப் பெறப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிலப்பரப்பில் சிங்களப் பொறியியலாளர்கiளால் சிறுவர் இல்லங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் குறித்த சிறுவர் இல்லம் இயங்கவில்லையென்பதுடன், விடுதலைப்புலிகளின் கணினிப்பிரிவு இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்தபின், இக்காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்காணிகளைப் பெறுவதற்கு  காணி உரிமையாளர்களால் கரைச்சிப் பிரதேச சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும் கரைச்சிப் பிரதேச சபையினால் கதிர்காமநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையினால் தனியொருவருக்கு 14 ஏக்கர் காணியை வழங்கமுடியாது. இதற்காக, அக்கிராமத்தில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலரின் பெயரை இணைத்து, தமது கிராமத்துக்கு சிறுவர் இல்லம் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கரைச்சிப்  பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கதிர்காமநாதனூடாக அனுப்பிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், காணி உரிமையாளர்களில் இருவர் சிறிதரனிடம் முறையிட்டபோது, உங்களது காணிகளைப் பெற்றுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் உங்கள் காணியைப் பெற்றுத் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிமையாளர்களான கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம் மற்றும் திருநாவுக்கரசு பொன்னம்பலம் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வவுனியாவில் இயங்கும் சிவன் ஆலயத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சியில், கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனால் இயக்கப்பட்டு வருகின்றது.

இதைவிட, கிளிநொச்சியில், கருணா நிலையம், மகாதேவா சிறுவர் இல்லம், காந்தி நிலையம் போன்ற சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்று அமைப்பதற்கு அவசியமேதுமில்லை.

அத்துடன், அரச சட்டத்தின்படி கண்டபடி சிறுவர் இல்லங்கள் அமைக்கமுடியாது. இந்நிலையிலேயே, சிறிதரன் அவர்கள் அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளுக்கூடாக, காந்தரூபன் அறிவுச்சோலை பதிவெண்ணில் எஸ்கே. அறிவுச்சோலைக்கான அனுமதியைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மக்களுக்கு தன்னையொரு விடுதலைப் புலிகளின் விசுவாசியெனக் காட்டுவதற்காக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பவற்றைக் கொண்டாடிக்கொண்டு மறுபக்கம், இவ்வாறு அடையாள அழிப்புகள் செய்துவருகின்றமை கண்கூடு.

http://inioru.com/கிளிநொச்சியில்-அடையாள-அழ/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this