• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ராசவன்னியன்

தமிழ் போல் வாழ வாழ்த்துக்கள்..!

Recommended Posts

18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழிற்கு வாழ்த்துகள் :)
நாளுக்கு ஒரு தடவையாவது எட்டி பார்க்காமல் விட்டதே இல்லை.
மோகன் அண்ணாக்கும் நிர்வாகத்தினர் / மட்டுறுத்தினர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

Share this post


Link to post
Share on other sites
நித்தம் நித்தம் வந்தவர்கள் எத்தனைபேர் - யாழ்
களத்தினிலே எழுதியவர் எத்தனைபேர்
(நித்தம்..)
எழுதிப்போட்டு அழித்தவர்கள் எத்தனைபேர் - அதில்
தலை கவிழ்ந்துநின்றவர்கள் எத்தனைபேர்
(நித்தம்..)

கரு வந்த இடத்தில் பல கதை முளைத்தது - அது
முடியுமுன்னே வேறும்பல செயல் விளைந்தது
கருத்துக்கள பூட்டுவந்து கடமை என்றது - கூட
தணிக்கை என்றும் சிவப்பில் வந்து வெருட்டி நின்றது
(நித்தம்..)

கவிதை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது - சிலர்
கருத்தும்கூட ஆண்கள் என்று அடிக்க வந்தது
பெண்களெல்லாம் அடிமையென கருத்தும் வந்தது - சில
ஆண்க ளென்ன பெண்க ளென்ன சமமே என்றது
(நித்தம்..)

தனிமகனாய் சோர்விழந்து உழைத்தது ஒன்று - அதன்
துணைக்கு வந்து எழுதிக் காட்டி நின்றது ஒன்று
இருவருக்கும் வாழ்த்து என்று சொல்வதில் இன்று - நாம்
யாழ் களத்தை வரவேற்போம் வாழ்க வாழ்கவே..
 
யாழ்களத்தின் மூத்த உறுப்பினர் சோழியனின் வாழ்த்துக்கவிதை (2003)

http://www.yarl.com/forum/index.php?showtopic=42&mode=threaded&pid=183

Share this post


Link to post
Share on other sites

களம் தந்த யாழ் கள்மே!

காவியமாய் வாழ் பல நூற்றாண்டு.

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை ஒரு ஆறாக வழிந்தோடிக் கொண்டிருப்பது...காலப் பாத்திரத்தில் நினைவுகள் தேங்கிகொண்டேயிருக்கும்...பழைய முகங்களின் பிரிவில் வாடியும் புதிய முகங்களின் துளிர்ப்பில் பூத்தும் கிடக்கும் யாழ்...காட்சிகள் உதிர்ந்து காலச்சுழலில் அள்ளுண்டு போக புதியன துளிர்க்கும்...

வெளியே இலைகளின் சலசலப்பிலும்,மழைத்துளிகளின் சலனங்களிலும் ஏதேதோ நினைவுகள்.. இழப்புகளில் துவண்டு கிடந்த நேரங்களில் தனிமையை தேடி பயணிக்கையில் அரட்டைகளில் என்று என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகால வாழ்வோடு யாழுடனா பயணமும்.. யாழைதவிர்த்துவிட்டு என் புலம்பெயர்வாழ்வை எழுதிவிட முடியாது..

புலம்பெயர் வாழ்வின் காலநீட்சியில் மண்ணுக்கும் எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழிற்கு அதன் ஆயுட்கால வாசகனாய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 

 

 

Edited by சுபேஸ்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.