Jump to content

IPL 9 செய்திகள் கருத்துக்கள்


Recommended Posts

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

 

பிடித்த வீரர், பிடித்த அணி, பிடித்த சியர் கேர்ள் (அவ்வ்...) என்பதை எல்லாம் கடந்து, டெக்னிக்கலாக ஏதாவது ஒரு வகையில் ஐபிஎல் ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அப்படி நம்மை ‘வாவ்’ போட வைத்த டாப் 5 டெக்னிக்கல் விஷயங்கள் இங்கே...

அம்பயர் கார்டு

brucexfordipl.jpg

இந்த ஐபிஎல்லில் வீரர்கள் நுழைவுக்குப் பின் பலரும் பார்ப்பது ஆஸ்திரேலிய அம்பயர் ப்ரூஸ் ஆக்சன் ஃபோர்டைதான். தனது இடது கையில் ப்ரூஸ் வைத்து இருக்கும் கண்ணாடி தடுப்புதான் இந்த ஆண்டு டாப் வைரல். கண்ணாடியால் செய்யப்பட்ட டென்னிஸ் பேட் போல் இருக்கும் இதை, ப்ரூஸ் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறார். டி20 உலக கோப்பையின் போது, ப்ரூஸ் இதை பயன்படுத்தினார்.  பவுலர்கள், பேட்ஸ்மென் போன்றவர்களின் பாதுகாப்பில் கவனமாய் இருக்கும் ஐசிசி, அம்பயர்கள் பற்றி பெரிதும் கண்டுகொள்வதில்லை. ப்ரூஸின் இந்த ஐடியாவை எல்லா அம்பயர்களும் பின்பற்றவேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்பைடர் கேம்

spider-cam-cricket1.jpg

“என்னை ஃபீல்டிங் செய்ய விடாமல் அடிக்கடி குறுக்கே வருகிறது” என ஒருமுறை புகார் செய்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அவர் திட்டியது சகவீரரை அல்ல, மைதானத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவைத்தான். மைதானத்தின் நான்கு மூலைகளிலும் இருக்கும் கயிற்றைக்கொண்டு இந்த கேமராவை இணைத்திருக்கிறார்கள். வலையின் நடுவே இருக்கும் சிலந்தி போல், அட்டகாசமாய் அமர்ந்து இருக்கிறது இந்த கேமரா. ஜூம், டில்ட், பேன், ஃபோக்கஸ் என பலவற்றையும் ஒரு மனிதர், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு  பயன்படுத்தலாம். நிஜ ஆல்ரவுண்டர் இந்த ஸ்பைடர் கேம் தான்.

அம்பயர் கேம்

umpire-cam-cricket1.jpg

’ தொப்பி தொப்பி தொப்பி ‘ என்பது போல், அம்பயர் தொப்பியிலும் கடந்த ஆண்டிலிருந்து கேமரா வைத்துவிட்டார்கள். தொப்பியில் இருக்கும் சிறு கேமரா, அதற்கு சார்ஜ் ஏற்ற பின் தலையில் இருக்கும் சிறு பேட்டரி, அவ்வளவுதான் மொத்த செட்டப். திரையில் பார்க்கும் நமக்கு,  பந்து பவுலர் கையில் இருந்து வெளியேறி, பந்து செல்வது போல் தெரியும். ஆனால், பேட்ஸ்மென் அம்பயர் நோக்கி அடிக்கும் ஷாட்கள் தான் தெறி லெவல். கிரிக்கெட்டை ஆக்‌ஷன் படமாகவும், சில சமயம் பேய் படமாகவும் மாற்றுகிறது அம்பயர் கேம்.

ஜிங் விக்கெட் சிஸ்டம்

487751.jpg

இதுக்கா இந்த பேரு?ன்னு நீங்க யோசிக்கலாம். ஃப்ளாஷ் லைட் வச்ச ஸ்டம்புக்களுக்குதான் இந்தப் பெயர் வைத்து இருக்கிறார்கள். ஸ்டம்பிங், ரன் அவுட் சமயங்களில் எல்லாம்  அம்பயர்களுக்கு தெய்வமாய் வந்து இருக்கிறது இந்த ஃப்ளாஷ் லைட் ஸ்டம்புகள்.  தோனி ஒருமுறை ஜெயித்தவுடன், ஸ்டம்புகளை எடுக்க செல்ல, பதறியடித்துக் கொண்டு வந்துவிட்டனர். ஒரு போட்டிக்கு தேவைப்படும் பைல்களுக்கும், ஸ்டம்புகளுக்கு மட்டும் 25 லட்ச ரூபாய் ஆகிறதாம். ஸ்டம்ப்பை உடைப்பதில் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸனர் புகழ்பெற்றவர். அவர் காலத்தில் ஜிங் விக்கெட் சிஸ்டம் இல்லாதது நல்லதுதான்.

பிளேயர் கமென்ட்ரி

ஹர்ஷே போக்லேவின் இனிய  குரலையும், நவ்ஜத்  சித்துவின் அலறல்களையும் மட்டுமே வர்ணனையாக கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வீரர்களே பேசுவது புதுசுதான். லாங்க்-ஆன் ஃபீல்டிங்ல் இருக்கும் வீரர்கள், ஸ்லிப்பில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் ஹெட்-மைக் ஒன்றை வைத்து போட்டியின் போது பேச வைத்தார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸில், பேட்டிங் செய்யும் வீரர்களையும் வர்ணனை செய்ய சொல்ல, இந்தியாவின் முன்னாள் வீரர் சேவக் , பாட்டு பாடிக்கொண்டே சிக்ஸ் அடித்தது வைரல்.

http://www.vikatan.com/news/information-technology/63481-top-ipl-gadgets.art

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஜார்ஜ் பெய்லி

 

ஜார்ஜ் பெய்லி, தோனி. | கோப்புப் படம்: அகிலேஷ் குமார்.
ஜார்ஜ் பெய்லி, தோனி. | கோப்புப் படம்: அகிலேஷ் குமார்.

காயத்தினால் முன்னணி வீரர்களை இழந்துள்ள தோனி தலைமை புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வலுசேர்க்க மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி தற்போது அழைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்து விலகிய டு பிளெசிஸுக்குப் பதிலாக ஜார்ஜ் பெய்லி தற்போது அழைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித், கெவின் பீட்டர்சன், டு பிளெசிஸ், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்களை காயம் காரணமாக இழந்த புனே அணி தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஜார்ஜ் பெய்லி மற்றும் உஸ்மான் கவாஜாவை அழைத்துள்ளது.

கடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜார்ஜ் பெய்லி, இம்முறை ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்லி புனே அணியை அதன் இடர்பாடுகளிலிருந்து விடுவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/article8547626.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரிக்கெட்: டில்லி அணி அபார வெற்றி
 
 
 
Tamil_News_large_151510220160503233909.j
 

குஜராத்: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் டில்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. குஜராத் அணியின் தினேஷ் கார்த்திக் அரைசதம்(53) எடு்த்தார். ஜடேஜா 36 ரன்னும் ரெய்னா 24 ரன்னும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய டில்லி அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடு்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணியின் பான்ட்(69) அரைசதம் அடித்தார். டி காக் 46 ரன் எடுத்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1515102

Link to comment
Share on other sites

மோசமான பந்துவீச்சால் தோற்றோம்: பெங்களூரு வீரர் பின்னி கருத்து

 

 
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் யூசுப் பதான் மற்றும் சூர்யகுமார் யாதவ். படம்:பிடிஐ
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் யூசுப் பதான் மற்றும் சூர்யகுமார் யாதவ். படம்:பிடிஐ

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக பெங்களூரு தோற்றது என்று அந்த அணியின் வீரர் ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கே.எல்.ராகுல் 52 ரன்களையும், விராட் கோலி 52 ரன்களையும், வாட்சன் 34 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கல், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றிபெற 186 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த கொல்கத்தா அணி, 69 ரன்களுக்குள் காம்பீர் (37 ரன்கள்), உத்தப்பா (1 ரன்), லின் (15 ரன்கள்), மணிஷ் பாண்டே (8 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. இருப்பினும் இதன் பிறகு ஆடவந்த யூசுப் பதான் 29 பந்துகளில் 60 ரன்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உதவியாக ரஸ்ஸல் 39 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களையும் எடுக்க கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 189 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

இப்போட்டி குறித்து பெங்களூரு அணி வீரர் ஸ்டூவர்ட் பின்னி நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப் பதாக இருந்தது. முதலில் சில ஓவர்களை சரியாகப் போட்டாலும் அதன்பிறகு பந்துவீச்சில் சொதப்பி விட்டோம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோற்றதற்கு எங்கள் பந்துவீச்சுதான் முக்கிய காரணம்.

இப்போட்டியில் யூசுப் பதானும் ரஸ்ஸலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக ரஸ்ஸல் அடித்த சிக்சர்கள் எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டது. இவ்வாறு ஸ்டூவர்ட் பின்னி கூறினார்.

கொல்கத்தாவில் இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8554423.ece

Link to comment
Share on other sites

நாற்காலியை உதைத்த கம்பீருக்கு அபராதம்

 

 
விராட் கோலிக்கு கேட்சை விடும் கம்பீர். | படம்: பிடிஐ.
விராட் கோலிக்கு கேட்சை விடும் கம்பீர். | படம்: பிடிஐ.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கொல்கத்தா கேப்டன் கம்பீர் நாற்காலியை எட்டி உதைத்ததால் அவரது ஆட்டத்தொகையில் 15% அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ஓவர்களை அவரது அணி மெதுவாக வீசியதற்காக, ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதே ஐபிஎல் தொடரில் மெதுவாக ஓவர்களை வீசியதற்காக ஐபிஎல் தொடரில் 12 லட்சம் அபராதம் கட்டிய விராட் கோலி தற்போது ரூ.24 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 36 லட்சம் அபராதம் கட்ட நேர்ந்துள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா அணி வெற்றி பெற 36 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டது. யூசுப் பத்தான், ஆந்த்ரே ரசல் அதிரடி ஆட்டம் ஆட, கடைசியில் சூரிய குமார் யாதவ் யூசுப் பத்தானுடன் இணைந்தார். சூரியகுமார் யாதவ் சைனமன் பவுலர் டப்ரைஸ் ஷம்சியை ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்து வெற்றிக்கு அருகில் கொண்டி வந்த போது கம்பீர் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்த நாற்காலியை உதைத்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார், இதுதான் தற்போது அவரது பர்சிலிருந்து 15% தொகை அபராதமாக வசூலிக்கப்பட காரணமாக அமைந்த சம்பவமாகும்.

வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது கம்பீர் எதற்காக நாற்காலியை எட்டி உதைத்தார் என்பது பலருக்கு புரியாத புதிராகவே இருந்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8555873.ece

Link to comment
Share on other sites

 

ஜாகிர் கானின் அறிவுரைப்படி இயல்பாக ஆடி ரன்களைக் குவித்தேன்: டெல்லி வீரர் பந்த் மகிழ்ச்சி

 

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் எடுத்த டெல்லி வீரர் ரிஷப் பந்த். படம்: ஏஎப்பி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் எடுத்த டெல்லி வீரர் ரிஷப் பந்த். படம்: ஏஎப்பி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஜாகிர் கானின் அறிவுரைப்படி இயல்பாக ஆடி ரன்களைக் குவித்தேன் என்று டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்காட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி யை டெல்லி டேர்டெவில்ஸ் எதிர் கொண்டது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி, முன்னணி வீரர்க ளான ஸ்மித் (15 ரன்கள்), மெக் கல்லம் (1 ரன்), பின்ச் (5 ரன் கள்) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. இந்நிலை யில் தினேஷ் கார்த்திக்கும் (53 ரன்கள்), ஜடேஜாவும் (36 ரன்கள்) ஓரளவு நிலைத்து ஆடினர். இவர் களின் பொறுப்பான ஆட்டத்தால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து ஆடவந்த டெல்லி அணியில் 18 வயதான இளம் வீரர் ரிஷப் பந்த், அசுரத்தனமாக ஆடி 40 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். இவரது ஸ்கோரில் 9 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். பந்த்துக்கு இணையாக ஆடிய டிகாக், 46 ரன்களை விளாச, குஜராத் அணி நிலைகுலைந்தது. டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைக் குவித்து அபாரமாக வென்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷப் பந்த், நிருபர்களிடம் கூறியதாவது:

டெல்லி அணியின் வெற்றிக்கு என்னால் இயன்ற பங்களிப்பை செய்யமுடிந்ததில் மகிழ்ச்சி அடை கிறேன். எங்கள் அணியின் பயிற்சி யாளர், கேப்டன் மற்றும் சக வீரர் கள் என் மீது மிகுந்த நம் பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். இன்று பேட்டிங் செய்யச் செல்லும் முன் என்னிடம் பேசிய கேப்டன் ஜாகிர் கான், ‘எப்போ தெல்லாம் உனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை இரு கரங்களாலும் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் உன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். நானும் அவர் கூறியபடி என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தேன்.

இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.

இன்றைய போட்டி

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 6-வது இடத்தில் உள்ள புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஆடவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இன்றைய போட்டியில் டெல்லியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் புனே அணி உள்ளது.

பஞ்சாப் அணியில் ஆம்லா

பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த அணியில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆம்லா ஆடுவது இதுவே முதல்முறையாகும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8559970.ece

Link to comment
Share on other sites

நான் சூப்பர் கேப்டனா? - ஜாகீர் கான் தன்னடக்க மறுப்பு

 

 
 
குஜராத் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் விக்கெட்டை வீழ்த்திய ஜாகீர் கான். | படம்: ஏ.எஃப்.பி.
குஜராத் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் விக்கெட்டை வீழ்த்திய ஜாகீர் கான். | படம்: ஏ.எஃப்.பி.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு ஜாகீர் கான் கேப்டன்சி செய்து வரும் விதம் அவருக்கு ‘சூப்பர் கேப்டன்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

ஆனால் ஜாகீர் கானோ தான் இத்தனை ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ததைத்தான் செய்து வருகிறேன் என்று தன்னடக்கத்துடன் ‘சூப்பர் கேப்டன்’ அங்கீகாரத்தை மறுத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கேப்டன்சி அணுகுமுறையில் மனோபாவத்தில் கபில்தேவை நினைவூட்டி வருகிறார் ஜாகீர் கான். இவர் காயங்களை கொஞ்சம் திறமையுடன் நிர்வகித்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் கும்ளேவுக்கு அடுத்தபடியாக ஜாகீர் கான் கேப்டன் பதவி பெற்றிருக்க வேண்டும். ஆனால் காயம் காரணமாக அவரால் சரிவர அணியில் இடம்பெறாத நிலை ஏற்பட்டது, இந்திய அணிக்கு துரதிர்ஷ்டம்தான், இவர் தனது கரியரை கொஞ்சம் அக்கறையுடன் கையாண்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் புதிய பந்தை எடுக்காமல் மேலும் 60 ஓவர்களை வீசி ஆட்டத்தைக் கோட்டை விட்ட துரதிர்ஷ்டங்கள் உட்பட அயல்நாடுகளில் வரிசையாக வாங்கிய டெஸ்ட் உதைகளும் கூட நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் கூறும் போது, “இத்தனை ஆண்டுகளாக நான் என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன். ராகுல் திராவிட் உதவியுடன் திட்டமிடப்பட்ட விஷயங்களை, உத்திகளை கறாராக செயல்படுத்தி வருகிறோம். அடிப்படைகளை முதலில் சரிவர பரமாரிப்பதே எங்கள் கவனம். அடிப்படைகளை சரிவரச் செய்வது என்பது எளிதானதாக ஒலிக்கும் ஆனால் நடைமுறையில் இதனைச் சாதிப்பது கடினம்.

ஆட்டத்தின் போக்கிலேயே சென்று களத்தில் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும். இதில் வெற்றி பெற்றால் தலைவராக வெற்றி பெறுவோம். இல்லையெனில் கடினம்தான்.

நான் சூப்பர் கேப்டனா? இல்லை, டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன். சில களவியூகம் மரபை மீறியதாக அமைத்தேன். ஆனாலும் ஒரு பவுலர் இந்த கள வியூகத்திற்கு எந்த அளவுக்கு சவுகரியமாக உணர்கிறார் என்பதைப் பொறுத்தே பரிசோதனை முயற்சிகள் வெற்றியடையும். இந்த அணியைப் பொறுத்தவரை திட்டங்களைச் செயல்படுத்தும் விதமான ஒரு பந்து வீச்சு அமைந்துள்ளது எனக்கு அதிர்ஷ்டம்தான்.

என்னைப் போன்றவர்களுக்கு டி20 கிரிக்கெட் வடிவம் சரியாகப் பொருந்தி வருகிறது. கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிவிட்டதால் இப்போது சரியாகச் செய்ய முடிகிறது. டி20-யில் ஆட்டத்தின் தீவிரம் மற்ற வடிவங்களைக் காட்டிலும் குறைவு, நான் 4 ஓவர்களை வீசினால் போதும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாளொன்றுக்கு 18 ஓவர்களையாவது வீசுவது அவசியம். டி20 இந்த விதத்தில் அவ்வளவு கடினமானதல்லா, ஆனால் பயணம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அனைவருமே வரம்புகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். எல்லைக் கோட்டருகே காட்டும் பீல்டிங் திறமைகள் உண்மையில் அசத்துகிறது. பேட்ஸ்மென்கள் புதுப்புது ஷாட்களை ஆடுகின்றனர், பவுலர்களும் ஒவ்வொரு பந்துக்கும் ஏதாவது புதிதாகச் செய்ய முடியுமா என்று பார்க்கின்றனர். எனவே இது உற்சாகமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய நல்ல பந்துகளை மட்டும் கவனித்து வருகிறேன்.

விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கடினமான கோணங்களை உருவாக்க வேண்டும். அடிக்க முடியாத லெந்த்களில் பந்து வீச வேண்டும், ரிவர்ஸ் ஸ்விங் முயற்சி தேவை, பேட்ஸ்மெனின் கால் நகர்த்தலை உன்னிப்பாக பார்க்க வேண்டும். புதிய மற்றும் பழைய பந்துகளில் அதிகபட்சமாக சாதகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலில்லாமல் ஒவ்வொரு கணமும் முயன்றுகொண்டே இருக்க வேண்டும். விக்கெட் வீழ்த்தும் மகிழ்ச்சியே ஒரு அனுபவமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அணிக்கு சுமையாக நான் இல்லை என்பதே போதும். என்னிடம் இன்னும் கிரிக்கெட் திறன்கள் இருக்கிறது என்ற நிலையில்தான் சர்வதேச கிரிக்கெட்டை துறந்தேன். பிரியாவிடை அளிப்பது மிகவும் கடினம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அதுதான் சிறந்தது என்று தெரிகிறது. ஆனால் என்னிடமுள்ள போர்க்குணத்தைத் தக்க வைத்துள்ளேன்.

இவ்வாறு கூறினார் ஜாகீர் கான்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8560784.ece

Link to comment
Share on other sites

பிரிமியர் லீக் கிரிக்கெட்: புனே அணி வெற்றி
 
 
 
Tamil_News_large_151639520160505234226.j
 

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த போட்டியில் புனே, டில்லி அணிகள் மோதின.

 

'டாஸ்' வென்ற புனே அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. டில்லி அணிக்கு ரிஷபா (2), சாம்சன் (20) நிலைக்கவில்லை. கருண் நாயர் 32 ரன்கள் எடுத்தார். பாட்யா 'வேகத்தில்' பில்லிங்ஸ் (24) ஆட்டமிழந்தார். கேப்டன் டுமினி 34 ரன்கள் எடுத்தார். முடிவில், டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. நேகி (19), ஷமி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ரகானே அரை சதம்:

பின் களமிறங்கிய புனே அணிக்கு கவாஜா 30 ரன்கள் எடுத்தார். ரகானே அரை சதம் கடந்தார். தாகிர் 'சுழலில்' சவுரப் திவாரி (21) சிக்கினார். கடைசியில் கேப்டன் தோனி (27) அதிரடி காட்ட வெற்றி உறுதியானது. முடிவில், புனே அணி 19.1 ஓவரில் 3 விக் கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரகானே (63), திசரா பெரேரா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1516395

Link to comment
Share on other sites

சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன்: கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் விருப்பம்

 

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துவீசும் கொல்கத்தா அணி வீரர் ரஸ்ஸல். படம்:கே.ஆர்.தீபக்
பஞ்சாப் அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துவீசும் கொல்கத்தா அணி வீரர் ரஸ்ஸல். படம்:கே.ஆர்.தீபக்

சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன் என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஸ்ஸல் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் காம்பீரும் (54 ரன்கள்), உத்தப்பாவும் (70 ரன்கள்) முதல் விக்கெட்டுக்கு 101 ரன்களைச் சேர்த் தனர். இவர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தின் உதவியால் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்களை எடுத்தது.

அடுத்து ஆடவந்த பஞ்சாப் அணி விஜய் (6 ரன்கள்), ஸ்டோ னிஸ் (0), வோரா (0) ஆகியோ ரின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. இதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல் தன்னந்தனியாக போராடி, பஞ்சாப் அணியை வெற் றிக்கு அருகே கொண்டுசென்றார். ஆனால் 42 பந்துகளில் 68 ரன்களை எடுத்து மேக்ஸ்வெல் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு திசை திரும்பியது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீச வந்த ரஸ் ஸல் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி, ஆட்ட நாயக னாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஸ்ஸல் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் அணி என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்தது. எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதுவே எனக்கு சிறப்பாக செயல்பட ஊக்கத்தை வழங்கியது.

ஒரு பந்துவீச்சாளன் என்ற முறையில் சவாலான சூழ்நிலைகளில் பந்துவீசி எனது அணிக்கு வெற்றியை பெற்றுத்தர விரும்புகிறேன். பணிச்சுமையை நான் பெரிதும் நேசிக்கிறேன். என் பணி அத்தனை எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் கடைசிவரை போராடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தர விரும்புகிறேன். எங்கள் தலைமைப் பயிற்சியாளர் காலிசும், பந்துவீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரமும் எனக்கு மிகவும் உதவியாக உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article8564205.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஜாகீர் கான் இல்லாத டெல்லி அணியை வீழ்த்தியது புனே

 

 
படம்: கெட்டி இமேஜஸ்
படம்: கெட்டி இமேஜஸ்

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க புனே அணி இலக்கை விரட்டி 166/3 என்று வெற்றி பெற்றது.

இவ்வகைப் போட்டிகளெல்லாம் ஐபிஎல் தொடருக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்டி, இதன் தர்க்கம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான பிரத்யேக தர்க்கம். ஜாகீர் கான், குவிண்டன் டி காக் இல்லை. டெல்லி அணிக்கு கேப்டன் டுமினி. டெல்லி அணி வெற்றி பெறுவதற்காக ஆடியது போல் தெரியவில்லை. தோனி அணியை அவ்வளவு எளிதாக வெளியேற்றிவிட்டால் ஐபிஎல் ‘மாடல்’ என்பதே கேள்விக்குறியாகிவிடுமே?

அமித் மிஸ்ரா நோ-பால் வீசுகிறார் அதுவும் மிகப்பெரிய நோ-பால், அடுத்த பந்தே நெஞ்சுயர புல்டாஸ் வீசுகிறார். மொகமது ஷமி படுமோசமாக வீசி 3.1 ஓவர்களில் 50 ரன்கள் கொடுக்கிறார். அதுவும் 18-வது ஓவரில் ஷமி வீசிய வைடுக்காகவே அவரை 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். லெக் ஸ்டம்பிலிருந்து அரை கி.மீ. தள்ளி ஒரு பந்தை வீசுகிறார் இந்திய அணியின் முன்னணி பவுலர். அது 5 வைடாக மாறியது. டுமினி கடைசி நேரத்தில் பவன் நெகியை பந்து வீச அழைக்கிறார். இவையெல்லாம்தான் ஐபிஎல் கிரிக்கெட்டின் பிரத்யேக குணாம்சங்கள்.

இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ராவின் நுட்பமான பந்து வீச்சினால் கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் என்று புனே அணிக்குத் தேவையாக இருந்த போது இருதரப்பிற்கும் வெற்றி சாத்தியமாக இருந்தது. அப்போதுதான் மொகமது ஷமி ஆட்டத்தின் 18-வது ஓவரில் மோசமான 5 வைடுகளுடன் தோனிக்கு எங்கு பந்து வீசக்கூடாதோ அங்கு வீசினார். அவரும் ஒரு பவுண்டரி ஒரு நேர் சிக்ஸ் அடித்தார். இதனால் 3 ஓவர்கள் 37 ரன்கள் என்ற சமன்பாடு ஷமியின் கைங்கர்யத்தினால் 12 பந்துகளில் 17 ரன்கள் என்று ஆனது.

19-வது ஓவரின் முதல் பந்தில் 27 ரன்கள் எடுத்த தோனி இம்ரான் தாஹிர் பந்தை தூக்கி அடித்து பவுண்டரி அருகே சாம் பில்லிங்ஸின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். ஆனால் திசர பெரேரா இறங்கி 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாச கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஹானே பிளிக்கில் பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். ரஹானே 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், திசர பெரேரா 5 பந்துகளில் 14 நாட் அவுட். முன்னதாக உஸ்மான் கவாஜா 8 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். சவுரவ் திவாரி 21 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்தார்.

டெல்லி அணியில் ஜெயந்த் யாதவ் விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாக வீசினார், இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ரா முறையே 2 மற்றும் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக புனே அணி வேகப்பந்து வீச்சாளர் டிண்டா, டெல்லி தொடக்க வீரர் ரிஷப் பண்ட்டை பவுல்டு செய்ய கருண் நாயர், சஞ்சு சாம்சன் சில பவுண்டரிகளை அடித்து செட்டில் ஆயினர் ரன் விகிதம் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் சென்றது. ஆனால் பவர் பிளேயின் கடைசி பந்தில் சாம்சன் எளிதான கேட்ச்சுக்கு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார், டுமினி 32 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். சாம் பில்லிங்ஸ் கடைசியில் அதிரடியாக ஆடினார். அஸ்வினை இவர் இரண்டு தொடர் சிக்சர்களை அடித்தார். பிராத்வெய்ட், முருகன் அஸ்வினை இரண்டு சிக்சர்கள் அடித்தார். ஆனால் ரஹானே, சவுரவ் திவாரியின் அற்புதமான பீல்டிங்கினால் 2 ரன் அவுட்கள் ஏற்பட்டது. பவன் நெகி 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க டெல்லி அணி ஓரளவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. ஆட்ட நாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87/article8565306.ece?homepage=true

Link to comment
Share on other sites

முயன்று அடைந்த வெற்றி: தோனி பெருமிதம்

 

 
தோனி, ரஹானே. | படம்: பிடிஐ.
தோனி, ரஹானே. | படம்: பிடிஐ.

டெல்லி அணியை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நேற்று ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியதையடுத்து மிகவும் அவசியமான வெற்றி இது என்று புனே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஆட்டம் முடிந்தவுடன் வெற்றி குறித்து தோனி கூறியதாவது:

பவுலர்கள் திட்டமிட்டபடி வீசினர். 160 ரன்களுக்க்கு டெல்லியை மட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. பவுலிங்தான் எங்களது கவலையாக இருந்து வரும் நிலையில் இந்த வெற்றியின் மூலம் நிறைய உடன்பாடான அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம்.

களவியூகத்திற்கு ஏற்ப பந்து வீசினர், திட்டமிட்டபடி பந்தை எங்கு வீச வேண்டுமோ அப்படி வீசினர். இறுதிக் கட்ட ஓவர்களில் நல்ல பவுலர்கள் பேட்ஸ்மென்களை சாதுரியமாக ஏமாற்றுபவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

களத்தில் ஆடும்போது அசவுகரியமாக உணர்ந்தேன். டெல்லி ஸ்பின்னர்கள் நன்றாக வீசினார்கள். பிட்சில் பந்துகள் கொஞ்சம் மெதுவாக வரத் தொடங்கியது. மிஸ்ரா, தாஹிர் அபாரமாக வீசினர். மொத்தமாக முயன்று அடைந்த வெற்றி இது. 5 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நம் வழியில் வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த வெற்றி அவசியமானது, எங்களுக்கு சிறிது தன்னம்பிக்கை அளிக்கும் வெற்றி இது என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

டெல்லி கேப்டன் டுமினி கூறும்போது, இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8565444.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
 

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியி்ல் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்தது. குஜராத் அணியின் பின்ச்(51) அரைசதம் அடித்தார். இதனையடுத்து களமிங்கிய ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1517081

Link to comment
Share on other sites

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

 
 
புனே கேப்டன் தோனி மற்றும் பெங்களூரு கேப்டன் கோலி (கோப்பு படம்)
புனே கேப்டன் தோனி மற்றும் பெங்களூரு கேப்டன் கோலி (கோப்பு படம்)

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க போராடும் பெங்களூரு மற்றும் புனே அணிகள் ஐபிஎல்லில் இன்று மோதுகின்றன. இதனால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இது வரை 9 போட்டிகளில் ஆடியுள்ள புனே அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இப்போட்டி பெங்களூருவில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அது கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது. கிறிஸ் கெயில், வாட்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக இருந்தாலும் கடந்த ஐபிஎல் போட்டிகளை போல அவர்கள் அசுரத்தனமாக ஆடாதது பெங்களூரு அணிக்கு பலவீனமாகவே உள்ளது. இது போதாதென்று அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். பல ஆட்டங்களில் 180 ரன்களுக்கு மேல் குவித்தும் பெங்களூரு அணி வெற்றி பெறாதது இதற்கு சான்றாக உள்ளது. இந்த குறைகள் நீங்கி இன்றைய போட்டியில் பெங்களூரு வெற்றிபெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதே சமயம் கடந்த போட்டியில் டெல்லியை வென்றதால் உற்சாகமாக இருக்கும் புனே அணி, அதே வேகத்தில் இன்று பெங்களூருவை வெல்ல காத்திருக்கிறது. கவாஜா, பெய்லி ஆகிய இரு வீரர்கள் அந்த அணியில் புதிதாக சேர்ந்திருப்பது அவர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி - பஞ்சாப் மோதல்

மொகாலியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள டெல்லி அணி, கடந்த போட்டியில் ஜாகிர்கான் உட்பட தங்களின் முக்கியமான 4 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. அப்போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இன்று களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்று கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8568775.ece

Link to comment
Share on other sites

கோலி சதத்தில் சிதறிப்போனது புனே!
13177233_1934769890082745_45294884310125

புனே அணி விதித்த 192 ரன்கள் என்ற கடின இலக்கை எதிர்த்து களமிறங்கியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். புனே பந்துவீச்சை சிதறடித்த பெங்களூர் 19.3 பந்துகளில் 3 விக்கெட்டுகளுக்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் கோலி அபாரமாக சதம் விளாசினார். ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார் கோலி.

Link to comment
Share on other sites

விரட்டல் மன்னன் விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி

 
  • நடப்பு ஐபில் தொடரின் மிகச்சிறந்த சதத்தை அடித்த விராட் கோலியை பாராட்டும் சக வீரர்கள். | படம்: பிடிஐ.
    நடப்பு ஐபில் தொடரின் மிகச்சிறந்த சதத்தை அடித்த விராட் கோலியை பாராட்டும் சக வீரர்கள். | படம்: பிடிஐ.
  • விராட் கோலி கவருக்கு மேல் அடித்த சிக்சரை ஆச்சரியத்துடன் பார்க்கும் தோனி. | படம்: கெட்டி இமேஜஸ்.
    விராட் கோலி கவருக்கு மேல் அடித்த சிக்சரை ஆச்சரியத்துடன் பார்க்கும் தோனி. | படம்: கெட்டி இமேஜஸ்.

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திகழ தோனியின் புனே அணியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

7 போட்டிகளில் 6-ல் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பீல்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணியின் ‘உஷ்! கண்டுக்காதீங்க கணங்கள்!’

புனே அணி பேட் செய்த போது உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 6 பந்துகளில் 16 ரன்கள் என்று விளாசல் தொடக்கம் கண்ட போது ரஹானேயுடனான தவறான புரிதலில் இருவரும் ஒரே முனையில் நிற்க கவாஜா ரன் அவுட் ஆனார். அந்த இடத்தில் ரஹானே தன் விக்கெட்டைப் பாதுகாத்துக்கொள்ள முனைந்தார், ஆனால் அதற்கான நியாயத்தை பேட்டிங்கில் செய்தார், அவர் இன்றும் சிறப்பாக ஆடி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 74 ரன்களை விளாசினார். சவுரவ் திவாரி 39 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 69 பந்துகளில் 106 ரன்களைச் சேர்த்து பின்னால் நல்ல அதிரடிக்கு வித்திட்டனர்.

ஆனால் தொடக்கத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் மோசமான பீல்டிங்கினால் ரஹானே, சவுரவ் திவாரி இருவரும் பல முறை பிழைத்தனர், இதில் இருவரும் அவுட் செய்யப்பட்டிருந்தால் புனே அணியின் ஸ்கோர் 150-ஐ எட்ட திணறியிருக்கும்.

பாதிக்கப்பட்ட பவுலர் வருண் ஆரோன்! இவர் ஆட்டத்தின் 6-வது ஓவரை வீசிய போது 3-வது பந்தில் சவுரவ் திவாரி கவர் பாயிண்டில் கொடுத்த கேட்சை பின்னி கோட்டை விட்டார். பிறகு அடுத்த பந்தே பாயிண்டில் வந்த எளிதான கேட்சை சச்சின் பேபி என்ற பீல்டர் நழுவ விட்டார்.

மீண்டும் 8-வது ஓவரின் முதல் பந்தில் இதே வருண் ஆரோன், ரஹானேவுக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச ரஹானே சற்றே திணறி அதனை அடிக்க டாப் எட்ஜ் சிலி மிட் ஆனில் கேட்சாகச் சென்றது ஆரோன் இதனை பிடிப்பது கடினம், வாட்சன் ஏனோ இந்தக் கேட்சை பிடிக்க முயற்சி செய்யவில்லை. அவருக்கு முன்னால் பந்து விழுந்தது.

9-வது ஓவரில் இம்முறை விக்கெட் கீப்பர் ராகுல், சாஅல் பந்தை திவாரி மேலேறி வந்து சுழற்ற பந்து சிக்காமல் பின்னால் சென்றது பந்தை பிடிக்கத் தவறினார் விக்கெட் கீப்பர் ராகுல். பிழைத்தார் திவாரி.

இந்த வாய்ப்புகளுக்குப் பிறகே அவர்கள் செட்டில் ஆகி 106 ரன்களைச் சேர்த்தனர். 14-வது ஓவரில் திவாரி 52 ரன்களில் சாஹல் பந்தில் இம்முறை ராகுல் ஸ்டம்ப்டு செய்ய வெளியேறிய பிறகு ஒரு சிக்சர் அடித்த தோனி 9 ரன்களில் வாட்சனிடம் வீழ்ந்தார். பெரேரா 14 ரன்களைச் சேர்க்க, பாட்டியா 9 ரன்களையும் அஸ்வின் 10 ரன்களையும் சேர்க்க புனே அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியில் வாட்சன் சிக்கனமாக வீசி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

விராட் கோலியின் அதிரடி சதம்:

விரட்டல் மன்னம் விராட் கோலி ராஹுலுடன் இன்னிங்சை தொடங்கினார். ஆனால் 4 ரன்களில் இருந்த போது கோலியை சுலபத்தில் ரன் அவுட் செய்ய வேண்டிய வாய்ப்பை ஜார்ஜ் பெய்லி தவறவிட்டார், அதன் பலன் தோல்வி!

ராகுலும் கோலியும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 94 ரன்களைச் சேர்த்தனர். 35 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்து 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸி. லெக் ஸ்பின்னர் ஸம்ப்பாவிடம் ராகுல் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஆர்சிபி அதிர்ச்சியடையும் விதமாக டிவில்லியர்ஸ் 1 ரன்னில் அவுட் ஆனார். அவுட் ஆவதற்கு முதல் பந்தே பலத்த எல்.பி முறையீடு எழுந்தது. ஆனால் அடுத்த பந்தே ஸம்ப்பா டிவில்லியர்ஸை வீழ்த்தினார். 12 ஓவர்களில் 97/2 என்ற நிலையில் வாட்சன், கோலியுடன் இணைந்தார்.

ஏற்கெனவே 3 சிக்சர்களை அடித்திருந்த விராட் கோலி, பாட்டியா ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு 2 ரன்களை எடுத்து 31 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார்.

இந்நிலையில் 13 ஓவர்கள் முடிவில் 103/2. அதாவது 7 ஓவர்களில் 89 ரன்கள் தேவை என்ற கிட்டத்தட்ட ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் வாட்சன் அதிரடியில் புகுந்தார்.

அஸ்வின் எங்கே?-பெரேரா ஓவரில் 5 பவுண்டரிகள்:

14வது ஓவரை பெரேரா வீச முதல் 3 பந்துகள் ஆஃப் திசையில் தேர்ட்மேன் பாயிண்ட் பகுதிகளில் பவுண்டரி ஆனது. இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார் வாட்சன். 4-வது பவுண்டரியும் தேர்ட் மேன் திசையில், 5-வது பவுண்டரி லாங் ஆஃபில் விளாசப்பட்டது. ஒரே ஓவரில் வாட்சன் 5 பவுண்டரிகள் 5-ம் ஆஃப் திசையில்.

ஆனாலும் அடுத்த ஓவரில் கூட அஸ்வினை கொண்டு வரவில்லை தோனி. மீண்டும் ரஜத் பாட்டியாவை அழைக்க வாட்சன் லாங் ஆனில் வானத்திற்குள் சென்று விடுவது போல் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார். கோலி ஏற்கெனவே முதல் பந்தில் பவுண்டரி அடித்திருந்தார். இந்த ஓவரில் 19 ரன்கள். 2 ஒவர்களில் 39 ரன்கள் வந்துவிட சமன்பாடு 6 ஓவர்களில் 69 என்பதாகக் குறைந்தது. இன்னும் கூட அஸ்வினின் நினைவு வராத தோனி ஆர்.பி.சிங்கை அழைத்தார், ஆனால் ஆர்.பி.சிங் அருமையான பந்தில் வாட்சனை எல்.பி.செய்தார், ஆனால் வாட்சன் 13 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசி திருப்பு முனை இன்னிங்ஸாக அமைந்தது. 17-வது ஓவரில்தான் அஸ்வின் அழைக்கப்பட்டார், கோலி கவரில் பவுண்டரி விளாசி வரவேற்றார். கோலிக்கு பந்து கால்பந்து அளவுக்கு தெரியும் தருணத்தில் அஸ்வினைக் கொண்டு வந்தது என்ன கேப்டன்சியோ தெரியவில்லை.

ஒரு ஓவரில் 7 ரன்கள் பிறகு அஸ்வின் கொண்டு வரப்படவில்லை. 18-வது ஓவரை ஸம்ப்பா வீச, கோலி ஸ்லாக் ஸ்வீப்பில் ஒரு சிக்சரையும் பிறகு நேராக ஒரு சிக்சரையும் அடித்தார். மீண்டும் ஒரு பவுண்டரியையும் தேர்ட் மேனில் அடிக்க, இந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. 4 ஓவர்களில் 64 ரன்கள் தோனி அணிக்கு ஆணியடித்தது. 19வது ஓவரை ஆர்.பி.சிங் வீச அதுவும் லெக் திசையில் வீச கோலி பிளிக்கில் சிக்ஸ் அடித்து 96 ரன்களுக்கு வந்தார், பிறகு ஒதுங்கிக் கொண்டு நேராக மற்றொரு சிக்ஸ்! அது கோலியின் சத சிக்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது சதம், கோலி டி20-யின் 2-வது சதம். 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 102 ரன்களை எடுத்தார் கோலி. 20-வது ஓவரை டிண்டா வீச சம்பிரதாயம் கோலியின் அருமையான பிளிக் பவுண்டரி மூலம் முடிந்தது.

மீண்டும் அஸ்வினை குறைவாக தோனி மதிப்பிட்டுள்ளார், இது குறித்து அவரது சாக்குபோக்குகளைக் கேட்க முடியவில்லை. ஆட்ட நாயகன் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8570343.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

துல்லியமான கடைசி ஓவர்களை வீசி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

 

 
வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் அணி. | படம்: அகிலேஷ் குமார்
வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் அணி. | படம்: அகிலேஷ் குமார்

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இலக்கைத் துரத்தும் போது கடைசி 36 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்க்கு 54 ரன்கள் தேவை. எளிதான வெற்றியாக முடிந்திருக்க வேண்டியது ஆனால், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் சர்மா, மோஹித் சர்மா ஆகியோரின் துல்லியமான இறுதி ஓவர்களினால் 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி தழுவ நேரிட்டது. மோஹித் சர்மா கடைசியில் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

இத்தனைக்கும் கிரீசில் பிராத்வெய்ட், கிறிஸ் மோரிஸ் ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தனர். ஆனால் வேகம் குறைந்த லெக் கட்டர்கள், சில வேக ஷார்ட் பிட்ச் பந்துகள் மற்றும் யார்க்கர்கள் ஆகியவற்றை டெல்லி வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இலக்கைத் துரத்தும் போது குவிண்டன் டி காக் தனது வழக்கமான அனாயாச அதிரடியில் 30 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். முதல் 4 ஓவர்களில் 23 ரன்களையே எடுத்தாலும் பிறகு அதிரடியினால் 8வது ஓவர் முடிவில் 70 ரன்கள் என்று அதிகரித்தது. சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தார். குவிண்டன் டி காக் 52 ரன்களில் ஸ்டாய்னிஸிடம் வெளியேறினார்.

சாம்சன், கருண் நாயர் 6 ஒவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர். சாம்சன் 49 ரன்களில் ஸ்டாய்னிசிடம் வெளியேற 23 ரன்களில் கருண் நாயர் கரியப்பாவிடம் வீழ்ந்தார். 15.3 ஓவர்களில் 134/3 என்ற நிலையில் 27 பந்துகளில் 48 ரன்கள் வெற்றிக்குத் தேவை.

சந்தீப் சர்மாவை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்த பிராத்வெய்ட் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மோஹித் சர்மா 3 ரன்களையே 19-வது ஓவரில் விட்டுக் கொடுத்தார். 20-வது ஓவரை சந்தீப் சர்மா 2 யார்க்கர்களுடன் முடித்தார், டெல்லி அணி வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி தழுவியது. ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி பீல்டிங் மோசமாக அமைந்தது, ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஓவர்களில் 48 ரன்கள் என்ற தொடக்கத்தைப் பெற்றது ஆனால் விஜய், ஆம்லா அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். ஜாகீர் கான் குறைந்த தூரம் ஓடி வந்து வீசினார் 3 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஸ்டாய்னிஸ், சஹா ஆகியோர் அரைசதங்கள் எடுத்தனர். இதனையடுத்து கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8572634.ece

Link to comment
Share on other sites

ஐதராபாத்துடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா மும்பை

 

 
மும்பை இந்தியன்ஸ் அணி. | படம்: கே.ஆர்.தீபக்.
மும்பை இந்தியன்ஸ் அணி. | படம்: கே.ஆர்.தீபக்.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தி யன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. மும்பை அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றியும், ஐதராபாத் 8 ஆட்டத்தில் 5 வெற்றியும் பெற்றுள்ளது.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட மும்பை அணி கடைசியாக மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்தது. ஐதராபாத் வலுவான குஜராத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோது கின்றன. ஏப்ரல் 18-ல் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

இரு அணிகளுமே பேட்டிங்கில் வலுவானவைதான். ஐதராபாத் கேப்டன் வார்னர் இந்த தொடரில் 410 ரன்களும், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 383 ரன்களும் குவித்துள்ளனர். ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும் அம்பாட்டி ராயுடு, பார்த்திவ் படேல் கை கொடுக்கின்றனர்.

அதேபோல் ஐதராபாத் அணி யில் ஷிகர் தவண், ஹென்ரிக்ஸ் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். யுவராஜ் சிங்கும் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரை இரு அணியுமே வேகங்களையே நம்பி உள்ளது. மும்பை அணியில் மெக்லினஹன் 13 விக்கெட்களும், ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 12 விக்கெட்களும் இந்த தொடரில் கைப்பற்றியுள்ளனர்.

மும்பை அணிக்கு ஜஸ்பிரிட் பும்ரா, டிம் சவுத்தி ஆகியோரும் ஐதராபாத் அணிக்கு முஸ்தாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரும் வலு சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்தில் ஐதராபாத்தை அணியை காட்டிலும் மும்பையே சற்று வலுவுடன் உள்ளது.

கொல்கத்தா-குஜராத்

இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து தடுமாற்றத்துடன் உள்ளது.

பிரண்டன் மெக்கலம், ஆரோன் பின்ச், டிவைன் ஸ்மித் ஆகியோரை நம்பியே பேட்டிங் அமைந்துள்ளது பலவீனமாக உள்ளது. ரெய்னா, தினேஷ் கார்த்திக், டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் பட்சத்தில் வெற்றிக்கு வழிகாணலாம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/article8572827.ece?homepage=true

Link to comment
Share on other sites

மும்பை அணி படுதோல்வி
 
 

விசாகப்பட்டினம்: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

தவான் அரை சதம்:

ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. வார்னர் (48) அரை சத வாய்ப்பை இழந்தார். ஹர்பஜன் 'சுழலில்' வில்லியம்சன் (2) சிக்கினார். பின் இணைந்த தவான், யுவராஜ் ஜோடி அதிரடியாக ரன் குவித்தது. யுவராஜ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.தவான் அரை சதம் கடந்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. தவான் (82), ஹென்ரிக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சொதப்பல் 'பேட்டிங்':

இதை விரட்டிய மும்பை அணிக்கு நெஹ்ரா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் ரோகித் (5), ராயுடு (6) சிக்கினர். பார்த்திவ் படேல் 'டக்-அவுட்டானார்'. குர்னல் பாண்ட்யா 17 ரன்கள் எடுத்தார். பட்லர் (2), போலார்டு (11) அணியை கைவிட்டனர். பின் வந்தவர்களும் அடுத்தடுத்து கிளம்ப, மும்பை அணி 16.3 ஓவரில் 92 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, வீழ்ந்தது. ஹர்பஜன் (21) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக நெஹ்ரா, முஸ்தபிஜுர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1518176

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரி்க்கெட்: குஜராத் அணி வெற்றி
 

 

 

கோல்கட்டா: கோல்கட்டாவிற்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோல்கட்டா அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கோல்கட்டா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து 164 எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1518252

Link to comment
Share on other sites

ஷிகர் தவண், ஆஷிஸ் நெஹ்ரா அசத்தல்: 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி- புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

 
 
ஆஷிஸ் நெஹ்ரா பந்தில் போல்டான ரோஹித் சர்மா.
ஆஷிஸ் நெஹ்ரா பந்தில் போல்டான ரோஹித் சர்மா.

ஐபிஎல் தொடரில் மும்பை அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதரா பாத் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியால் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவண் 57 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அவர் 9.5 ஓவரில் 85 ரன்கள் சேர்த்தார்.

வார்னர் 33 பந்தில், 7 பவுண் டரிகள், 1 சிக்ஸருடன் 48 ரன் எடுத்து ஹர்பஜன்சிங் பந்தில் போல்டானார். அடுத்து வந்த வில் லியம்சன் 2 ரன்னில் ஆட்ட மிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவணுடன் இணைந்த யுவராஜ்சிங் அதிரடியாக விளை யாடி 23 பந்தில், 3 பவுண் டரிகள், 2 சிக்ஸருடன் 39 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை சேர்க்க உதவினார்.

அவர் 19.4-வது ஓவரில் மெக்லி னஹன் பந்தில் ‘ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் இரு பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங் இரு விக்கெட் கைப்பற்றினார். 178 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் எதும் எடுக்காத நிலையில் பார்த்திவ் படேலை எல்பிடபிள்யூ ஆக்கினார் புவனேஷ்வர் குமார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆஷிஸ் நெஹ்ரா பந்தில் போல்டானார். அடுத்து களம்புகுந்த அம்பாட்டி ராயுடுவை ரன் எதும் எடுக்காத நிலை யிலும், ஜாஸ் பட்லரை 2 ரன்னிலும் வெளியேற்றினார் நெஹ்ரா.

4 ஓவரில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மும்பை அணி தவித்தது. அதன் பின்னர் வந்த கிருனால் பாண்டியா 17, பொல்லார்டு 11, ஹர்திக் பாண்டியா 7, டிம் சவுத்தி 3, மெக்லினஹன் 8, பும்ரா 6 ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணி 16.3 ஓவரில் 92 ரன்களுக்கு சுருண்டது.

ஐதராபாத் தரப்பில் நெஹ்ரா, முஸ்டாபிஸூர் ரஹ்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஐதராபாத் அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக நெஹ்ரா தேர்வானார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-85-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8575316.ece

Link to comment
Share on other sites

தொடர் தோல்வியால் கவலை இல்லை: குயிண்டன் டி காக் கருத்து

 

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் பஞ்சாப் அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் புனே அணியிடமும் டெல்லி தோல்வியை சந்தித்திருந்தது.

பஞ்சாப் அணிக்கு எதிராக 182 ரன்கள் இலக்குடன் விளை யாடிய டெல்லி அணிக்கு கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் சர்மா, மோஹித் சர்மா ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர் களை மிக துல்லியமாக வீசி டெல்லி அணியின் வெற்றிக்கு தடை போட்டனர்.

மோஹித் சர்மா ஆட்டத்தின் கடைசி பகுதியில் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத் தார். அதிரடி வீரர்களான பிராத் வெய்ட், கிறிஸ் மோரிஸ் ஆகி யோர் களத்தில் இருந்த போதும் வேகம் குறைந்த லெக் கட்டர்கள், வேகமான ஷார்ட் பிட்ச் பந்துகள் மற்றும் யார்க்கர்கள் ஆகியவற்றால் டெல்லி வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல் வியை தழுவியது. 9 ஆட்டத்தில் விளையாடி உள்ள டெல்லி அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இந்த தோல்வி தொடர்பாக டெல்லி அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் கூறும் போது, "தொடர்ச்சியான இரு தோல்விகளால் எந்த கவலை யும் இல்லை. இன்னும் எங்க ளுக்கு போதுமான ஆட்டங் கள் உள்ளன. நிச்சயம் நாங் கள் வெற்றிப்பாதைக்கு திரும்பு வோம்.

எங்களது பீல்டிங் மோச மாக இருந்தது. இறுதி கட்ட ஓவர்களில் மோஹித் சர்மா, சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டனர். இதுவே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது" என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8575311.ece

Link to comment
Share on other sites

விசாகப்பட்டினத்தில் இன்று மோதல்: ஐதராபாத் அணியை சமாளிக்குமா புனே?

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான புனே ரைசிங் சூப்பர் ஜயண்ட்ஸ், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

புனே அணி 10 ஆட்டத்தில் 3 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 6 வெற்றிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

பிளேப் ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்திலும் வரும் ஆட்டங்களிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது புனே அணி.

கேப்டன் தோனிக்கு இந்த தொடர் கடினமானதாகவே அமைந் துள்ளது. சொந்த மைதானத்தில் கூட 4 தோல்விகளை சந்தித் துள்ளார். அணியில் புதிததாக சேர்க்கப்பட்டுள்ள உஸ்மான் கவாஜா, ஜார்ஜ் பெய்லி ஆகியோ ராலும் தொடர் வெற்றிகளை சாத்தியப்படுத்த முடியவில்லை.

பேட்டிங்கில் போராடி ரன் சேர்த்தாலும் பந்து வீச்சு படுமோசமாக உள்ளது. அஜிங்க்ய ரஹானே 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். 10 ஆட்டங்களை முடித்துள்ள புனே அணியில் இதுவரை எந்த பந்து வீச்சாளரும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஐதராபாத் அணி வலுவான பந்து வீச்சால் தொடர்ச்சியாக வெற்றிகளை வசப்படுத்தி வருகிறது. கடைசியாக நடப்பு சாம்பியன் மும்பை அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

வார்னரின் அதிரடி அணிக்கு பலம் சேர்க்கிறது. அவர் இந்த தொடரில் 5 அரை சதங்களுடன் 458 ரன்கள் குவித்துள்ளார். ஷிகர் தவணும் பொறுப்பை உணர்ந்து விளையாட தொடங்கி உள்ளது அணியின் வலிமையை அதிகரித்துள்ளது.

ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸூம் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ள யுவராஜ்சிங் கடந்த ஆட்டத்தில் 23 பந்தில் 39 ரன் விளாசினார். அவரிடம் இருந்து இன்றும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு அதீத பலத்துடன் காணப்படுகிறது. ஆஷிஸ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், முஸ்டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோர் அடங்கிய நால்வர் கூட்டணி இன்றைய ஆட்டத்தில் புனே வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

இரு அணிகளும் இந்த தொடரில் 2-வது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 26-ல் நடைபெற்ற ஆட்டத்தில் புனே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87/article8578960.ece

Link to comment
Share on other sites

கடினமான சூழ்நிலையில் அபார பேட்டிங்: முரளி விஜய் இன்னிங்ஸ் குறித்து கோலி பாராட்டு

 

 
89 ரன்கள் விளாசிய முரளி விஜய் புல் ஷாட் ஆடும் காட்சி. | படம்: அகிலேஷ் குமார்.
89 ரன்கள் விளாசிய முரளி விஜய் புல் ஷாட் ஆடும் காட்சி. | படம்: அகிலேஷ் குமார்.

மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபாரமாக இலக்கைத் துரத்தியும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி தழுவியது.

முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முரளி விஜய் 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 89 ரன்கள் என்று அபாரமான இன்னிங்சை ஆடியும் 174 ரன்கள் எடுத்து கிங்ஸ் லெவன் தோல்வி தழுவியது. கிங்ஸ் லெவன் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய்யின் இந்த இன்னிங்ஸ் மற்றும் பெங்களூரு வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

2 புள்ளிகள் கிடைத்தது. முதல் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போது ஏற்பட்ட உணர்வுக்கு சமமான இனிய உணர்வைக் கொடுக்கிறது இந்த வெற்றி. முடிவில் உண்மையில் பதற்றம் அதிகரித்தது.

நான் முரளி விஜய்யை பாராட்டவே செய்வேன். பேட்டிங் சுலபமில்லாத பிட்சில் முரளி விஜய் ஆடிய விதம் அபாரம். நிறைய 2 ரன்களை ஓடினார். நான் நின்று ஆட முயற்சி செய்தேன். 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் இழந்தது கிரிமினலாகும் (ராகுல், கோலி இருவரும் 8-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்). அந்தத் தருணத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர் ஒருவர் தேவை, அந்தப் பணியை டிவில்லியர்ஸ் அபாரமாக நிறைவேற்றினார் (35 பந்துகளில் 64 ரன்கள்) அவர் ஆடிய சில ஷாட்களை வேறு ஒருவரும் அவ்வளவு எளிதில் ஆடி விட முடியாது.

இந்த வடிவத்தில் ஒவ்வொரு பந்துமே முக்கியத்துவம்தான். முந்தைய பந்தில் என்ன தவறு செய்தோம் என்பதை யோசிக்க இது வடிவமல்ல. கிறிஸ் ஜோர்டானையும் பாராட்டுகிறேன், கடைசி 2 பந்துகளில் அவர் தனது பொறுமையைக் காத்து எங்களுக்கு 1 ரன் வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

இவ்வாறு கூறினார் கோலி.

முரளி விஜய் கூறியது: கடைசி ஒவர் வரை வெற்றி பெறும் நிலையில் இருந்தோம். வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இது ஒரு நல்ல கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. டிவில்லியர்ஸ் இன்னிங்ஸுக்குப் பிறகே பெங்களூருவை 170 சொச்ச ரன்களுக்கு மட்டுப்படுத்தினோம்.

நான் களவியூகத்தை பெரிதாக மாற்ற விரும்பவில்லை, எப்படியிருந்தாலும் அவர் கள்வியூகத்துடன் விளையாடவே செய்வார். எனவே திட்டமிட்டபடி வீசுமாறு கூறினேன். கடைசி வரை நிற்குமாறு ஸ்டாய்னிஸுக்கு அறிவுறுத்தினேன்.

பிட்சில் பவுன்ஸ் இல்லை, எனவே முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடி கடைசி வரை நின்றால் எதுவும் நடக்கும் என்று கூறினேன். இந்தப் போட்டி எங்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக அமைந்ததில் மகிழ்ச்சி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8580572.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.