Jump to content

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 4


Recommended Posts

பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டுக்கு தந்த காசுகளை தனக்கு எடுத்திட்டேர், இப்ப 20,000 தாறன், மிச்சம் 4 மாசத்தில தாறன் எண்டு சொல்லீட்டார். எங்க முறையிடுறது? சீட்டுக்கு பத்திரங்கள் இல்ல, எல்லாமே வாய்பேச்சில தான் நடக்கு. நடத்துற ஆக்களே இப்புடி செய்றது தவறு.

ஊரில சீட்டுகள் சுத்தினதால நிறைய பேர் கடனாழியா ஆகீற்றினம். இந்த சீட்ட எடுத்து மற்றது கட்டுவம் எண்ட ஆக்கள் நல்லா நாறி பொயிற்றினம். எடுக்கிற சம்பளம் 5000 மாசம் 4000, 4000 எண்டு இரண்டு சீட்டு புடிக்கிறது எப்படி. சீட்ட எடுத்த ஆக்களுக்கு முதல் 20,000 தாறன், மிச்சம் 5 மாசத்தில தாறன் எண்டு சீட்டு நடத்தின ஆக்கள் சொல்லீற்றினம். அடுத்த கூறல் நடக்கேக்க கட்டுக்காசு குடுக்க வேணும், ஆனா எத்தின மாசம் கட்டுறது. 20,000 முடிஞ்சா எங்க போறது. குடும்பம் குட்டி சாப்பாட்டுக்கு என்ன செய்றது. சில பேர் வட்டிக்கு காசு வாங்கி சீட்ட கட்டீற்று வாறினம். கட்டாட்டி மிச்ச காசும் வராமா போயிரும், அதோடு முகங்களில முழிக்க வேணும், அது நண்பரா இருக்கலாம். முதலில சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசுகள் சரியா தான் வந்தது, பிறகு தான் ஒருத்தன் சுத்த மற்றவன் சுத்த வெளிக்கிட்டான்.    

அண்ணாச்சீல நம்பிக்க வச்ச ஆக்கள் காச கட்டீற்று தான் வாறினம். சரி வேற வழி? எடுத்த ஆக்கள் கட்டாட்டி ஊரில வேற ஆக்கள் முகத்தில முழிக்க ஏலாது, மனசாட்சியும் வேணும். அண்ணாச்சி வருமானம் காணாது எண்டு தான் சீட்டு தொடங்கினவர். இரண்டு பேர் சுத்தீற்றினம், ஆறுமுகம் தருவன் தருவன் எண்டு இழுக்கிறேர். சில பேர் அண்ணாச்சீட்ட கட்டின காசயாவது தாங்க நாங்கள் சீட்டில இருந்து விலகுறம் எண்டும் கேட்டு; பார்த்திச்சினம். சீட்டுக்கு எண்டு விதிமுறைகள் இருக்கு, நடத்திறவர் எல்லாத்துக்கும் பொறுப்பு.

சந்திரன் வீட்டில தட்டினா மனிசி அவர் இல்ல எண்டு திருப்பி அனுப்பீற்றா. திரும்ப போக தப்பா நடந்தனிங்கள் எண்டு சொல்லி பொலிஸ்ட சொல்லீருவன் எண்டு மிரட்டி இருக்கிறா. இதுக்கு மேல என்னத்த பண்ண. சந்திரன் பாண்டிய பார்த்துத்தான் கட்டாட்டி எப்படியும் யாரும் ஒண்டும் பண்ண ஏலாது எண்டு தெரிஞ்சிற்று. பாண்டீன்ர மகள் புது வாகனத்தில திரியுறது ஆக்கள் பார்த்து இருக்கினம். புறோக்கர் இண்டைக்கு தாறன் நாளைக்கு தாறன் எண்டு தான் இன்னும் சொல்லுறேர். எடுக்கிற 6000 சம்பளத்திற்கு ரெண்டு சீட்டு, பழைய வீட்டு வட்டி, புது வீட்டுக்கு வட்டி, ரெண்டு கடனா எடுத்த சீட்டு அடுத்தது வட்டிக்கு வாங்கின காசு. பிள்ளைகள் மனிசியோட விடுமுறை போக சிங்கப்பூர்க்கு டிக்கட் போட்டிட்டார். மற்ற சீட்டும் கட்டாம திரியுறேர். எங்கட ஆக்கள் வீடு பாக்குறதுக்கு இவர புறோக்கர புடிச்சது. ஏனி புடிக்க தேவை இல்ல எண்டு தெரிஞ்சிற்று. விபரம் தெரிஞ்ச ஆக்கள் நிறைய பேர் இருக்கேக்க, எதுக்கு இவருக்கும் காசு குடுக்க வேணும். இதிலயும் பவுடி என்ன எண்டா, வீடு வித்தா இவருக்கு வீடு வாங்குற ஆக்கள் காசு குடுக்கினம், வீடு விக்குறவன் காசு குடுக்கிறான் அடுத்தது வங்கி காசு குடுக்குது. இது இவர்ர பக்கத்தது பிஸ்ணசு, இப்ப படுத்திட்டு. கடன்களால யாரும் வீடும் வாங்க வரவும் மாட்டினம்.

அடுத்த கூறலில திரும்ப அந்த 3 பேரின்ர காசு வரேல்ல, இன்னும் ஒரு கிழைமையில மிச்சம் தாறன் எண்டு சொல்லி அண்ணாச்சி அனுப்பீற்றார். போன முறை காசு யாரிட்டையோ கைமாறி குடுத்தவர். கிட்டத்தட்ட இந்த கூறலுக்கு 12000 குடுக்குமதி இருக்கு. இரண்டு பேர் சுத்தின காசு கிட்டத்தட்ட 90,000 கிட்ட வருது, இதில ஆறுமுகம் 50,000கு மேல குடுக்க வேணும். வருமானமும் கெட்டு போச்சு.

ஒரு நாள் சாமத்தில அண்ணாச்சிக்கு நித்திர வரேல்ல. இரவு முழுக்க ஜோசனை. ஒரு சிந்தனையும் இல்லாமல் கயித்த எடுத்தார், நல்ல இடம் தேடினார், தூக்க போட்டார். என்னடா சத்தம் கேக்குது எண்டு மனிசி ஓடிவர இவர் தொங்குறத பார்த்து அலரி அடிச்சு ஓடிவந்து கால புடிச்சிட்டா. இவர் விடு விடு எண்டு கத்த, குடும்பத்த குட்டிகளை யோசிக்கேல்லையே எண்டு மனிசி அலறிச்சு. படுத்த பிள்ளைகளும் ஓடிவந்து கத்த வெளிக்கிட்டுதுகள். கதிரைய காலுக்கு வச்சு இறக்கிச்சினம். என்னால முடியேல எண்டு அண்ணாச்சி அழுகை. உடனே மனிசி வீடுகளை விப்பம் எண்டு சொல்லிச்சு. வீட்ட வித்தா கூட எல்லா காசும் வராது, வங்கீன்ர பணம் (மோர்கேச்) ஒரு 600,000 இருக்கு, விக்குறது எண்டா 750,000 விக்கலாம், அனா யாராச்சும் வாங்க வேணுமே. போட்ட முதல் 150,000 வரும். அதுக்கு ஏற்ற வழிய பார்க்க வேணும். கடையில சேருறது உடனே கடனுக்கு போகுது. எனி யாரும் சுத்தாம இருந்தா சரி இல்லாட்டி இன்னும் தலையிடி. இந்த சீட்டோட அண்ணாச்சி நொந்து நூலாகிற்றார். சீட்டு முடிய இன்னும் 6 மாசம் இருக்கு, அதோட கொஞ்சம் நிம்மதி.

முடிவு…

கருத்து கூறல்:

நன்றி வாசித்தமைக்கு. எனது முதல் தொடர்கதை, தவறுகளுக்கு மன்னிக்கவும்.

சீட்டு 80,000 என்பது சிறிய தொகை. உண்மையில் 100,000 மேல் நடைபெறுகிறது. சம்பளம் குறைவாக எடுப்பவர்கள் கூட முதலில் கழித்து எடுத்து மீதியை கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த சூதாட்டத்தில் இணைகிறார்கள். அதிக கழிவில் எடுப்பது நட்டம், அதனால் சில காலம் பொறுத்து எடுப்பம் என்பது சிலரது விருப்பு. சேர்த்து வைத்த காசுpனை ஈடுபடுத்தி நட்டம் பட்டவர்கள் அதிகமானவர்கள்.

பேராசைகள் நம்மவர்களுக்கு வந்தது போட்டி பொறாமையால். ஒருவர் வீடு வாங்கி விட்டார் நாங்களும் வாங்க வேண்டும். பணத்தை சேர்த்து வாங்குவதர்க்கு இரண்டு மூண்டு வருடங்கள் ஆகி விடும் அத்தோடு விலைகள் உயர்ந்து விடும். விரைவில் பணம் வேண்டும் என்றால் சீட்டே தகுந்தது. இது பிழையான சிந்தனை.

சீட்டினை சுத்தினவர்கள் தாங்கள் தருவம் தருவம் எண்டே சொல்லி காலத்தை ஓட்டுகிறார்கள். மற்றவரின் பணத்தில் சாப்பிடுவது எப்படி எண்டு தெரியவில்லை. தொண்டையில் உணவு ஒட்டுமா தெரியவில்லை.

நன்றி

கரன் தர்மலிங்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மைகளை எழுதியதற்கு நன்றி கரன். சீட்டுப் பிடிப்பவர் அடாவடியான ஆளாய் இருந்தால் கட்டுறவர்களோ,எடுத்தவர்களோ சுத்த மாட்டார்கள்... ஆனால் அவரிடம் கழிவுகள் குறைவாய் இருக்கும்.

கடன் பட்டு வாறவர்களுக்கு முதலில் விசாவும் இருக்காது, களவாய் வேலை கடனை அடைக்க ஒரே தெரிவு  அறா வட்டிக்கு காசு வாங்குதல் மற்றும் சீட்டுத்தான்.

சிலர் விழுந்த சீட்டைக் கேட்கப் போனவரிடம் " இப்ப என்னட்டை காசு இல்லை அடிக்கப் போறியோ அடிச்சுட்டுப் போ பிறகு காசு தரமாட்டன்" என்பார்கள்.

ஆனாலும் சீட்டுகள் ஜோராய் நடந்து கொண்டுதான் இருக்கு...! 

Link to comment
Share on other sites

கரன், 

முதல் தொடர்கதையையே நன்றாக தொய்வில்லாமல் எழுதியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்தும் எழுதுங்கள்.

சில எழுத்துப்பிழைகளையும் கவனத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.