Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :D:(

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

ஆதி என்ன நீங்கள் மாத்திரம் நிண்டு புலம்பிக்கொண்டு நிக்கிறீங்கள். நீங்கள் போட்ட அந்த பெரிய மாட்டு படத்த எங்கையோ பாத்தமாதிரி இருக்கிது. இது ஏதாவது ரீவி கேமில இல்லாட்டி புத்தக கவரில வந்ததா?

மாப்பு, ஆதி தனிய நிண்டு புலம்புகிறமாதிரியாத் தெரியுது?????? அது ஒண்டுமில்லை மாப்பு ஆதியிடம் எல்லாரும் கதைக்க பயந்து ஒளிச்சு நிற்கிறாங்கள். வந்து கதைக்கிறவர்கள், போகிறவர்கள் எல்லாரையும் ஆதி கோதாவில் இறக்கி காளை அடக்க நிற்பாட்டினா எப்படித் தப்பிப்பது? அதுதான் ஆதியை வேலியில போற ஓணான நினைச்சுப்போட்டாங்கள்.

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

Link to comment
Share on other sites

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :wub::lol:

சுவி அய்யா, நீங்களும் சரியான கிண்டல் பேர்வழிபோல....

உயர்திணையை அஃறிணை விரட்டுறது :lol: .....சீச்சீ அஃறிணையை உயர்திணை விரட்டுறது. :lol:

ஆ...இப்படியெல்லாம் ஆண்வர்க்கத்தை அவமானப்படுத்தக் கூடாது சுவி அய்யா. :wub:

ஆதி காட்டில இருக்கிற புலியெல்லாம் சிங்கத்தை அடக்கக் களமுனைகளில கம்பீரமா உலா வருகிற சேதி உங்களுக்குத் தெரியாத சுவி அய்யா? :unsure:

Link to comment
Share on other sites

சரி காளைவிரட்டுற மைதானத்தில நடக்கிற கதையைத் தொடருவம்.......

தூயவன் சொன்ன கோணல் எண்ட வார்த்தையைக் கேட்ட உடன யம்முப்பே(ய்)ப் வானவில்லின் காதுக்குள்ள இரகசியமா உம்மைத்தான் வானவில் தூயவன் சாடைமாடையாத் தாக்கிறார் என்று உசுப்பிவிட கொஞ்சக்காலத்திற்கு முன்பு காங்காருப்பமிலியாக இருந்த டைகர்பமிலியின் உறுப்பினர் வானவில் தூயவனை எந்த வகையில் தாக்கினா தான் செயிக்கலாம் என்று எண்ண ஓட்டத்தை தட்டி விட்டு ஓரமாப் போய் நின்று சதித்திட்டத்தைப் போட, அந்த நேரம் முனியம்மாவின் ஊட்டத்தில் சவடால் விட்டுக்கொண்டு உலாவந்த சாத்து தூயவனைச் சமாளிக்க முகத்தாரைக் கூப்பிட்டார். முகத்தாரும் சாத்துவுக்கு உதவ எண்ணி காலெடுத்து வைக்க, சின்னா தன்ரை கையில இருந்த கள்ளுப்பிளாவை நிலத்தில போட்டு முகத்தான் இதைத்தாண்டிப்போய் தூயவனை அண்டினியோ பிறகு நடக்கிறதே வேற என்று வெருட்ட, முகத்தாருக்கு பிளாவைத் தாண்டிப்போகத் தைரியம் இல்லாததால மெல்ல மெல்ல பின்னங்காலால தேய்ச்சுத் தேய்ச்சுப் பின்னுக்குப்போய் அந்த மைதானத்தின் இன்னொரு கோடிக்குப் போய்விட்டார்............தொடரும் :unsure:

Link to comment
Share on other sites

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

இல்ல ஏன் கேட்டனான் எண்டால் எங்கையோ பசு மாட்ட காள மாடு எண்டு சொல்லி யாரோ ஏமாத்தி இருந்தவேள் அதான். யாரோ மறி ஆட்ட கிடாமாதிரி உருமாற்றம் செய்து வேள்விக்கு வெட்டுறதுக்கு கொண்டுவந்தவங்கள் நான் அப்ப சின்னனா இருக்கேக்க ஊரில.

Link to comment
Share on other sites

அய்யய்யோ திரும்பவுமா?? :lol: போனவருசம் வருசம் ஒருத்தராலையுமே அடக்க ஏலாமல் போய் கடைசியா நான்தான் அடக்கினது.சரி அதுக்கு முதல் போன வருசத்து கதையை சொல்லுறன் . போனவருசமும் ஆதி இதே மாதிரி காளை மாட்டை கட்டவித்து விட்டுருந்துதா நான் சின்னப்பு குமாரசாமி எண்டு எங்களுக்குள்ளை போட்டி யார் அடக்கிறதெண்டு. முதல்லை வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு குமாரசாமிகோதாவிலை இறங்கினவர் அவ்வளவுதான் ஆள் கோமாவிலை ஆறு மாதம் கிடந்தவர்; குமாரசாமி கோமாக்கு போறது அடிக்கடி நடக்கிறதுதானே இதிலையென்ன புதுமையெண்டு கேக்காதையுங்கோ. :lol::lol:

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி . :(:lol:

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :unsure::wub:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம்.

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி :D .

கோடிகள் குவிந்தாலும் கோவணத்தை மறவேன் :lol:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

வேறையென்ன வேலை மாட்டு டாக்குத்தர்தான் :D

Link to comment
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

BullSmartMoney-1.jpg

:rolleyes::rolleyes::rolleyes:

கலைஞன் இந்த வேலைகளும் பார்க்கிறாரா?? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :(:huh:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :o

முனியம்மாக்கா ஒட்டகப்புலத்துக்கு புக்கைகட்ட போக வேணுமெண்டு ஓடித்திரிஞ்சவா போனவருசம். அதேன் சாத்திரி ?

நீங்கள் ஏதோ மாடுமுட்டி எழும்பேலாமல் இருக்கிறியளாமெண்டு புலம்பிக்கொண்டு லாச்சப்பலில அம்மிக்கல்லு வாங்கினவா அரைச்சகறி பத்தியம் வைக்கவெண்டு . ஆனால் நீங்கள் ஏதோ காளையை அடக்கினதெண்டு கதைசொல்றியள். :D

பாவம் சின்னப்பு நீங்கள் காளையடக்கின வீரத்தைப்பாத்திட்டு ஏன் வீண் வம்பெண்டு போட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(மாப்பிளை @ Feb 1 2007, 09:16 PM)

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

அடடா! சற்றுமுன்தான் மீசையை வழித்துவிட்டேன்! அதனால் இந்த வீரமான காளை சீ பசுமாடு தப்பிவிட்டது. ஹா..... ஹா...... :lol::D

Link to comment
Share on other sites

:unsure::o:blink::huh:

என்ன பனங்காய் யூரியூப்பில பாக்கிறதுக்குஎவ்வளவோ இருக்கிது. கருமம் இதையோ பாத்து சிரிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். :lol::):wub:

Link to comment
Share on other sites

வாழ்க.. வளர்க... பனங்காயண்ணோய்!

யாழ்க்களத்தில் ஆதிவாசி கதைப்பதை அநாகரீகமாக எடுத்துக் கொண்ட மதிப்பிற்குரிய நிர்வாகம் எப்படி இந்தப்பனங்காயைப் புழியாமல் விட்டா...கள். களநிர்வாகம் இப்படி ஓரவஞ்சனையாக நடப்பது ஆதிக்கு பலத்த மனச்சங்கடங்களைக் கொடுக்கிறது. களநிர்வாகத்திற்கு எதிராக ஆதி ஆக்சன் ஹீரோவாக மாறவேண்டுமா?

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::lol::unsure::o:blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு ஆதி! பனங்காயின் மங்கி செய்த ஜிம்னாஸ்டிக்கை உமது காளை மட்டும் செய்யட்டும் பார்க்கலாம். செய்தால் எடுத்த மீசையை மீன்டும் வளர்த்து விடுகிறேன். ஹா ஹா ஹா ஹா. :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆ ஆதி உங்க படத்தை இப்படியெல்லாம் போடுறாங்களே

Link to comment
Share on other sites

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::wub::mellow::rolleyes::lol::o

ஆதி,

நான் அறிமுகம் ஆகும்போதே நமக்குள்ளே ஒரு 'இது'... இப்ப என்ன புதுசா?

:huh:

Link to comment
Share on other sites

இப்பாரம்பரிய விளையாட்டு தொடர்ந்து வரும் காலங்களிலும் கலக்கவேண்டும் என்பதற்காக ஊரில் சாப்பிட்ட பம்பாய் மிட்டாய் போன்று இழுபடும்....

கதையைப்பறிகொடுத்த சோகத்தில் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

avatar5136ie0.gif

என்ன ஒருத்தரையும் இந்தப்பக்கம் கன நாளாக கானோம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

bullsmartmoney1qg1.jpg

அடடா ஆதியின் கவனம் கொஞ்சநாள் இல்லையென்று தெரிஞ்ச உடன கதையையே மாத்திப்போட்டாங்களோ? :D:D:)

avatar5136ie0.gif

என்ன ஒருத்தரையும் இந்தப்பக்கம் கன நாளாக கானோம் :lol:

வா ராசா....

கொஞ்சம் தைரியம் வந்திட்டுது போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா ராசா....

கொஞ்சம் தைரியம் வந்திட்டுது போல....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.