Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவரை.. அடுத்தவர்களுக்கு..  கைகாட்டி விட்டு தாங்கள் செளகரியமான இடத்தில் வாழ்ந்து கொள்வது நம்மவருக்கு கைவந்த கலை. tw_blush:

மக்கள் ஓரிருவரின் சொல் செயலில் முடிவெடுக்க வேண்டியதில்லை. நிலமைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் நல்லம்.

பிரித்தானியா கூட சொறீலங்காவில்.. தனது பிரஜைகளுக்கு இராணுவ நடமாட்டங்கள் இனவாதிகள் உள்ள இடங்களுக்குச் செல்ல எச்சரித்துள்ளது.  அவுஸியும் கூட. 

பிரித்தானிய குடியகழ்வு குடிவரவுத் துறை.. உள்நாட்டு அமைச்சகம்.. நாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை  (country guidance) சமர்ப்பிக்கின்றது. அவற்றை வாசித்து ஓரளவு நடுநிலைமையாக விடயங்களை உணர்ந்து கொண்டு.. செயற்படுவதே நன்று.

சொறீலங்கா.. சிங்கள இராணுவம்.. ஒட்டுக்குழு.. காடைக்குழுக்கள்.. வாள்வெட்டுக் குழுக்கள்.. கொள்ளைக் குழுக்கள்.. செயற்பாடுகளின் கீழ் பாதுகாப்பான ஓர் இடம் இல்லை. குறிப்பாக வடக்குக் கிழக்கு நிலைமை மோசம். 

மேலும் வெடிபொருட்களின் ஆபத்தும் வடக்குக் கிழக்கில் உள்ளது. 

ஒரு சிலரின் அரைவேக்காட்டுத்தனமான சிந்தனைகளுக்கு மக்கள் பலியாக வேண்டும் என்றில்லை. மக்கள் நிலைமைகள் ஆராய்ந்து தீர்மானித்து முடிவெடுப்பது நல்லம். tw_blush:

Link to post
Share on other sites
 • Replies 168
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நாட்டில் இருப்பவன் என்ற அடிப்படையில் நானும் சில விடயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் ...... நீங்கள் எண்பதுகளில் நாட்டை விட்டு சென்றவர்கள் என்றால் ....உங்கள் நினைவில் இருக்கும் நாட்டை மறந்து விடுங்க

ஆடுதல், பாடுதல், சித்திரம், கவி ..ஆய கலைகளில்...ஆடித் திளைப்பவர் ...பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்!   அர்ஜுன் முதல் கொண்டு...கோஷான் வரை நிலைமை இது தான்! எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்னர் அவு

நான் செய்யும் தொழில் யாழ் மாவட்டத்தில் நிச்சயமாக ஒருவரும் செய்யமாட்டார்கள். இலங்கயிலே இருப்பவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.அடையாளத்தை யாழில் மறைக்குமளவுக்கு தேவை இதுவரை இல்லை. பாட்டாவும் சாரமும்

 • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போவதும் விடுவதும் அதற்க்குச் சொல்லும் காரணங்களும் ஒரு புறம் இருக்க.புலம் பெயர்ந்தவாகள் நாடு திரும்புவது அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நாட்டுக்கு பல நன்மைகள் உண்டு.இங்கு ஆக்கிரமிப்பு என்டு கத்துறம்.ஆனால் அங்கு பல ஊர்கள் வெறிச்சோடிப்போய் உள்ளது.மற்றும் இன்னும் பலர் வெளி நாடு வரும் நோக்கில் வீடு வழவுகளை எந்த இனத்தவருக்கும் விற்பதற்க்கு தயாராக உள்ளனர்.எம்மவர் அங்கு சென்று வாழ்வதோடு அங்கு உள்ளவர்களையும் வாழ்வதற்க: ஊக்குவிக்க வேண்டும்.இல்லேயில் அங்குள்ள அனைவரையும் வெளிநாட்டிற்க்கு எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.
 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊருக்கு போவதும் விடுவதும் அதற்க்குச் சொல்லும் காரணங்களும் ஒரு புறம் இருக்க.புலம் பெயர்ந்தவாகள் நாடு திரும்புவது அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நாட்டுக்கு பல நன்மைகள் உண்டு.இங்கு ஆக்கிரமிப்பு என்டு கத்துறம்.ஆனால் அங்கு பல ஊர்கள் வெறிச்சோடிப்போய் உள்ளது.மற்றும் இன்னும் பலர் வெளி நாடு வரும் நோக்கில் வீடு வழவுகளை எந்த இனத்தவருக்கும் விற்பதற்க்கு தயாராக உள்ளனர்.எம்மவர் அங்கு சென்று வாழ்வதோடு அங்கு உள்ளவர்களையும் வாழ்வதற்க: ஊக்குவிக்க வேண்டும்.இல்லேயில் அங்குள்ள அனைவரையும் வெளிநாட்டிற்க்கு எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.
 

நீங்கள் கூறுவது சரிதான் சுவைப்பிரியன். எல்லோரும் பயந்துகொண்டு இருப்பதில் பயன் இல்லை. காலம் போகப் போக ஒருவரை பார்த்து ஒருவர் தம் மனதை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

மனம் இருந்தால் இடம் உண்டு தாயே

நல்லதொருபதில் ஜீவா. இதுதான் உண்மையான காரணம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் எவ்வளவு காலம் சிங்களவனோடு அவனுடைய இடத்தில் வாழ்ந்துவிட்டு இதை அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களா..??! வெள்ளவத்தையில் பம்பலப்பிட்டியில் கொட்டகேனவில் மோதரையில் குப்பை கொட்டிட்டு அள்ளிவிடக் கூடாது. சும்மா சும்மா எல்லாம் எடுத்துவிடக் கூடாது. tw_blush:

சிங்களவனின் உண்மை முகம் பல்கலைக்கழகத்தில் இருந்து அவனுடைய பட்டிதொட்டி வரை அனுபவித்தவர்கள் நாங்கள் (எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பொதுமைப்பாடான சிந்தனை குறித்தே இங்கு பேசுகிறோம்). பெருமையாக அல்ல.. யதார்த்தமாகச் சொல்கிறோம். அதுதான். tw_angry:

உண்மைதான் இனம் என வரும் போது சிங்களவர்களை மாற்ற முடியாது நெடுக்ஸ். 

83 கலவரத்தில் அடித்தபோது பல நல்ல சிங்களவர்களை நான் கண்டடேன். அதை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது. 

ஐந்து தலை முறையாக மோதரயில்தான் குப்பை கொட்டினோம், ஆனால் இப்போழுது அது யாழ்பாணிகள் நிறைந்து விட்டது. 

மோதரா நன்னத்தாரவேலா தெங்.....:grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, arjun said:

சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் 

யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .

 

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

நன்றிகள் குசா. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். எங்கே தனிமனித தாக்குதல் என்று சொல்வார்களோ என்று எழுதவில்லை. 

 

Link to post
Share on other sites
17 minutes ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

நன்றி குமாரசாமி அண்ணை 
மேலுள்ளது ஏற்கனவே என்னால் பதியப்பட்டதுதான் இருப்பினும் மறுபடியும் பதிகிறேன்.  அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள், யாரையுமே யாரும் இப்படித்தான் வாழ் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் தங்கள் தேவை நிலைமை சார்ந்துதான் முடிவேடுக்க வேண்டும்.

ஆனால் தாயகத்தை மறந்திடாதீங்க 

 

பல காலமாகவே புலம்பெயர் தமிழர்களும், தாயக வரவும் எனும் தலைப்பில் அரசியலை தவிர்த்து பொருளாதார ரீதியிலான அணுகுமுறையில் ஒரு கட்டுரை எழுத  விரும்பினான். இத் திரி அதற்கு ஒரு ஊக்கத்தை தந்துள்ளது - நன்றி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

நன்றி குமாரசாமி அண்ணை 
மேலுள்ளது ஏற்கனவே என்னால் பதியப்பட்டதுதான் இருப்பினும் மறுபடியும் பதிகிறேன்.  அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள், யாரையுமே யாரும் இப்படித்தான் வாழ் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் தங்கள் தேவை நிலைமை சார்ந்துதான் முடிவேடுக்க வேண்டும்.

ஆனால் தாயகத்தை மறந்திடாதீங்க 

 

பல காலமாகவே புலம்பெயர் தமிழர்களும், தாயக வரவும் எனும் தலைப்பில் அரசியலை தவிர்த்து பொருளாதார ரீதியிலான அணுகுமுறையில் ஒரு கட்டுரை எழுத  விரும்பினான். இத் திரி அதற்கு ஒரு ஊக்கத்தை தந்துள்ளது - நன்றி 

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

Link to post
Share on other sites
1 minute ago, MEERA said:

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

:grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

2 minutes ago, ஜீவன் சிவா said:

:grin:

 

Link to post
Share on other sites
2 minutes ago, MEERA said:

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

 

முழுமையாக வாசியுங்கள்  புரியும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, உடையார் said:

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

 

அண்ணை வெளிநாட்டில் இருந்துவிட்டுபோய் அங்குள்ள நடைமுறைகளுக்கு எம்மை மாற்றுவது கொஞ்சம் கடினமாய் இருக்கும். கொஞ்சநாள் போக பழகிவிடும். பலர் நாடு திரும்பி தாம் ஒண்டு தன்பாடோண்டு எண்டு இருக்கின்றனர். என்ன போதுவிசையங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைக்காமல் கொஞ்சம் மெதுவாக முன்னேறவேண்டும். 

நீங்கள் கூறும் ரௌடி விசையம் எங்கைதான் இல்லை. UKஇல் நான் வேலை செய்யும் போது எத்தனை கறுப்பினதவர், பாகிஸ்தானி, ஐரிஸ் காரன்(கவுன்சில் குடியிருப்புகளில் இருபவர்கள்), ஏன் ஊத்தை வெள்ளைகள் என பலரின் பிரச்னைகளை பார்த்திருக்கின்றேன். ஏன் எங்கடை தமிழ் பொடி ஒண்டு கள்ளநோட்டை கிழித்து கையில் குடுக்க பெரிய சீன் போட்டது இப்பவும் மனதுக்குள் நிக்குது.

உங்களுக்கு நடந்த விடயம் கவலைக்குரியதுதான்.

கொஞ்சக்காலம் தொடர்ந்து இருந்து முயற்சித்து பாருங்கள்.......பின்னர் வெளிக்கிட மாட்டீங்கள். 

ஜீவன் சிவா அண்ணை இனி வெளிக்கிட மாட்டார். ஆரம்பத்தில் ஒருவருடம் என்று தான் போனார். தொடக்கத்தில் ஊருக்கு சேவைஎன்று அவர் தொடங்கியபோது பல சிரமங்கள் எதிர்நோக்குவதாய் கூறியிருந்தார்.

உரிமையுடன் உங்களுடன் கதைப்பது ஏனெனில்,நான் கல்வி வேலைகளுக்காக 9 வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் புலம்பெயர் தமிழன் கிடையாது. ஆனால் உங்கள் உங்கள் சொந்தப்பிரச்சனைகளை வைத்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம்.   

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தான் அக்கா 

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா எந்நாடு என்றாலும் அது நம் நாட்டிற் ஈடாகுமா

கடும் வெயில்  இப்ப வாய்காலில் குளித்து கொண்டு இருக்கிறன் ஆஹா ஓகோ ??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா... 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Karan T. said:

சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா... 

 உங்கள் தகமைக்கு அரச வேலையோ அல்லது தனியார் இடத்தோ வேலை பார்க்கலாம் ஆனால் முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கியும்  வாழலாம் நானே ராஜா நானே மந்திரி  

ஆனால் அரச தொழில் ஆயீரம் பேருக்கு பயப்பட வேண்டும் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருப்பவன் என்ற அடிப்படையில் நானும் சில விடயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் ......
நீங்கள் எண்பதுகளில் நாட்டை விட்டு சென்றவர்கள் என்றால் ....உங்கள் நினைவில் இருக்கும் நாட்டை மறந்து விடுங்கள் 
நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ....உதாரணமாக 50 சதம் வாங்கிய பிச்சைகாரர்களின் தற்போதைய மிகக்குறைந்த தொகை 10 ரூபாய் 
இல்லாவிட்டால் கொடுக்கும் சில்லறையால் எறி வாங்க வேண்டி வரும் .....வாழ்வாதார செலவு மலைக்குமளவு   
(பணப்பையை விட்டு எடுக்கும் ஒரு மயில் அரை மணி நேரத்தினுள் பறந்துவிடும் ----மயில் -ஆயிரம் ரூபாய் தாள் )....

On 4/10/2016 at 1:43 PM, arjun said:

நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது .

நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை

நிச்சயமாக ஏற்று கொள்ளக்கூடிய கருத்து ...நிம்மதியாக வாழ தடையில்லை ....Round UP, Police பதிவு,checkpoint இப்படி எதுவுமில்லை 
ஆனால் என்னவென்று கூற முடியாத வெறுமை ஒன்றுண்டு ....தகுந்த கல்வித்தகுதி இருப்பின் உரிய தொழில் ஒன்றை அடைவது ஒன்றும் குதிரைக்கொம்பல்ல...மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடைந்துகொண்டு வருவது பல முதலீடுகளையும் ,உட்கட்டுமான அபிவிருத்தியையும் 
நிட்சயப்படுத்துகிறது (தற்போதைய நாட்டின் மொத்ததேசிய உற்பத்தியின் அந்நிய நாட்டு செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் நான்காவது துறை மென்பொருள்)....

மேலும் தொழிநுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு நிகரான வகையில் அபிவிருத்தியடைகிறது ....
32 Mbps 4G LTE -முதன்முதலாக ஆசியாவிலே இலங்கையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது....இங்கே ஒரு I Phone 6 S வாங்குவது பிரித்தானியாவில் வாங்குவதை விட மலிவு. தற்போதைய இளம் சந்ததிகள் அனாயசமாக 6 இலக்க சம்பளங்களை தொடுகிறார்கள்....
கூடுதலாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள்  வன் நாணயங்களில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் (USD,GBP மற்றும் SGD)....

 

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

அக்கோய் 

வெளிநாட்டிலிருந்து வந்தால் அடக்கிகொண்டிருக்கோணும்..வெற்று பந்தா (கூடுதலாக யூகே பாட்டிகளிடம் தான் இதை பாத்திருக்கிறேன்)
நுனி நாக்கு ஆங்கிலம் ....English Accent,பிள்ளைகளின் பிகினி ஆடை  இதெல்லாம் அங்கே வைத்துகொள்ளுங்கள் இங்கே காட்டினால் மலைத்த காலம் போயிட்டு இப்ப சிரிச்சு விட்டுடுவினம்  எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு வெளி  நாட்டையும் பற்றி எங்கடை சனம்  நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்....ஒரு காலத்தில் அமெரிக்காகாரன் ,யூகே காரன் என்று விழி விரிந்து பார்த்தகாலம் எல்லாம் மலையேறி போய்விட்டது ...இப்போது வெளிநாட்டுகாரர்களை இங்கிருப்பவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்....காரணம் எங்கடை சிங்கங்கள் அங்கே செய்த ஒட்டுமொத்த மொள்ளமாரித்தனத்தையும் இங்கே வந்து எதோ சாதனை செய்ததாக அடித்து விட்டது இப்போது ஒழுங்காக வெளி நாட்டில்  சம்பாத்தித்து செட்டிலானவனையும் கள்ள மட்டை என்று பெயர் வாங்கி கொடுத்திருக்கு ,ஸ்டுடென்ட் விசா என்று போய் கள்ளத்தனமாக உழைச்சு பிடிபட்டு Deported, Exit ஆன திருவாளர்களின் வித்தைகள் எல்லாம் ஊரின் அடிமட்டம் வரை ஊடுருவிஇருப்பதால்...வெளிநாட்டுக்காரன் அதிலும் யூகே காரன் என்றால் சனம் அருவருப்புடன் பார்க்கும் காலமாகியிருக்கிறது..உங்களை யூகேயில் இருந்து வந்ததால் மட்டும் மதிக்கவேணும் என்று நினைக்கும் பார்ட்டிகள் வராமலிருப்பதே மேல், வந்தால் உப்பிடித்தான் வெட்கப்படவேண்டிவரும் ....

ஆகமொத்தத்தில் திரும்பி இங்கே செட்டில் ஆக விரும்புபவர்கள் உங்கள் மேலைத்தேய அடையாளங்களை முழுவதுமாக திறக்க தயாராக வேண்டும் 
ஆடை விடயத்திலிருந்து ...சிந்திக்கும் மனப்பாங்கு வரை    


 

 • Like 10
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சொந்தம் விட்டுப் போகக் கூடாது பாருங்க...!

அதுக்காக உங்களுக்கு அடிக்கடி நினைவூட்டிறாங்கள் போல கிடக்கு!

பகிர்வுக்கு நன்றி....அக்கினி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சுவி அண்ணை 
முக்கியமாக இதிலும் சில விடயங்களை குறிப்பிடவேண்டும் ....எங்கடை வெளிநாட்டு தங்கங்கள் குடும்ப பாசம் காரணமாக ..தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் போராடி ...இரண்டு வேலை ...மூன்று வேலை செய்து சம்பாதித்த பணத்தை தண்ணீராய்  இறைப்பது....எங்கடை சனம்  வெளிநாட்டு தியாகிகளை பணமிறைக்கும் மெசினாக மட்டுமே பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ....யார் திருந்த வேண்டும் என்பதை உங்களின் தீர்ப்பிற்கே விடுகிறேன் ....

செல்போன், மடிக்கணணிக்கு பச்சை தண்ணியில் பலகாரம் சுடுவதை விடுத்து  வேறு ஒரு காரணமும் உண்டு  ....இலங்கை சீனாவுடன்  நேரடி தொடர்பில் இருப்பதால் அவங்களின்ட டமால் டுமீல் பொருட்கள் பைப்பிலிருந்து கொட்டும் தண்ணி போல இங்கே நிறைந்து போய் கிடக்கு ...எனக்கே தனிப்பட்ட அனுபவம் அதிகம் (Dell இரண்டு கிழமைகளில் Doll ஆனது )  தற்போது நான் பாவிக்கும் மடிக்கணணி  சிங்கப்பூரில் இருந்து நேரடியாக  கொள்வனவு செய்தது....

பொதுவாக வெளிநாட்டு உறவுகள் பணத்தை அனுப்புங்கோ வாங்கிக்கொண்டு வாறோம் என்று செக் வைக்க வேண்டும் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு,  நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் உப்பிடி சொல்லிக்கொண்டு திரியினம் 

முடிந்தால் அப்படி என்ன பிரச்சனை என்று ஒருக்கா எழுதுங்கோ ?

Edited by arjun
எழுத்து திருத்தம் .
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, arjun said:

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் திரியினமம் 

தகவல் குடுத்தது/குடுக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.
தங்களுக்கு இதை விட்டால் வேறை வசனமே தெரியாதா? சும்மா கீறல் விழுந்த ரெக்கோட் தட்டுமாதிரி ஒரே இடத்திலை   நிண்டு  கீச்சுட்டுக்கொண்டு

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புதுக்கோட்டை:`சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க!’ - மீனவர்கள் இறப்பால் கலங்கும் உறவினர்கள் மணிமாறன்.இராஇரா.மோகன்உ.பாண்டி இறந்த மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி ( 342242449056101 ) `இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத்தான் இருக்கு. இலங்கைக் கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும்’ - உறவினர்கள். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சான்டர்வின் (28), வட்டன்வலசையைச் சேர்ந்த நாகராஜ் (52), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதியதில், கப்பல் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்.   மீன்பிடிப் படகுகள் படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், மாயமான மீனவர்களைத் தேடி கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். அவர்களை இந்திய எல்லையிலேயே இலங்கைக் கடற்படையினர் பல மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். இங்கு 4 மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியதாகக் சொல்லப்படுகிறது. மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பினர். மீனவர்களில் இருவரது உடல்கள் இலங்கையில் 20ம் தேதி கரை ஒதுங்கியதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்தனர். அடுத்த நாள் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில், காயங்கள் இருப்பது போல காணப்பட்டதால், இலங்கைக் கடற்படையினர் தாக்குதலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும். எனவே, இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே 23-ம் தேதி இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.   அஞ்சலி இரண்டு விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்துக்குக் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு சக மீனவர்கள், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் மீனவர்கள் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்து போன சாம்சான்டர்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரின் உடல்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.   Also Read இலங்கைக் கடற்படையால் 4 மீனவர்கள் உயிரிழப்பு; இரு உடல்கள் மீட்பு! - கொதிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் சாலை அருகே திரண்டிருந்தனர். உடல் நேரடியாக அடக்கம் செய்யப்படும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், ஊர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுப் போராட்ட இடத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், ராமேஸ்வரம் சாலையில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   சாலை மறியல் இதுபற்றி செந்தில்குமாரின் சகோதரர் முருகேசன் கூறும் போது, ``நாங்க தேடிப் போகும்போது, அங்க உள்ள நேவிக்காரங்க, உங்க ஆளுங்க பத்திரமா இருக்காங்க. நீங்க கரை திரும்பி போங்கன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல பத்திரமா ஒப்படைச்சிடுவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்போ பிரேதமா கொடுத்திருக்காங்க. இறந்தவங்க முகம் முழுசும் காயமாகத் தான் இருக்கு. இலங்கை கடற்படை கண்டிப்பா சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுருக்காங்க. மத்திய, மாநில அரசு கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்கணும்" என்கிறார் கண்ணீர் மல்க.   https://www.vikatan.com/news/death/governments-should-take-serious-action-in-fishermen-death-issue-urges-relatives
  • நில அபகரிப்பு தொடர்பில் நம்பகத்தன்மையான ஆவணப்படுத்தலும் ஆய்வும் மிக அவசியம் : விக்னேஸ்வரன் வலியுறுத்து நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் கட்சிகளுக்கு இடையிலான காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம் திருநெல்வேலி இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். “சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தனமையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் lobbying நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். ” என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன. 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும். எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும். இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40% நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முளுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள் , கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான lobbying செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தனமையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் lobbying நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு , தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றியா முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான். எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்டமான நிலைமையே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான Oren Yiftachel என்பவர் அவற்றை ethnocratic land practices என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஜனநாயகம் சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை ethnocratic regime என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு ethnocratic நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்.   http://samakalam.com/நில-அபகரிப்பு-தொடர்பில்/  
  • இப்பதான் வாசித்து முடித்தேன்.....அதுக்குள்ளே அவசரம்.....! நன்றாக இருக்கின்றது கதை.....பாகற்கொட்டை போட்டால் சுரைக்கொட்டை முளைக்காது.அப்படித்தான் இதுவும்.அரபி நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்களின் நிலைமையை கொஞ்சம் சொல்லியிருக்கின்றார். மிகவும் கஷ்டம்.......!  😎
  • இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் ......                    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.