-
Tell a friend
-
Topics
-
1
By விவசாயி விக்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By விவசாயி விக் · Posted
1) Conducting provincial council polls – 0.3% 2) Boosting tourism – 1.1% 3) Repatriating migrant workers - 2.8% 4) Obtaining Covid 19 vaccine - 8.2% 5) Resolve dispute over burial and cremations – 87.6% A large majority (87.6%) had voted demanding a resolution to the dispute over burial and cremation எனக்கென்னவோ இது நம்பிற மாதிரி தெரியேல்லை!? 87% உடல் தகனம் செய்ய கேட்கினமாம்! எங்கேயோ வாக்கு ஊழல் நடந்திருக்கு -
By உடையார் · பதியப்பட்டது
இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள். என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள். ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்: அத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார். '6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது. தங்கத்தை போல மின்னும் பெண்கள் : அடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது. எட்டு திசையும் பாராட்டும்: நெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல. https://www.dailythanthi.com/Advertorial/AdvertorialNews/2021/01/23185647/advertorial-Jos-Alukkas-shine.advt -
By கிருபன் · பதியப்பட்டது
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/99055 -
By உடையார் · பதியப்பட்டது
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர். https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/23140551/2288289/tamil-news-palani-thaipusam-devotees-kavadi.vpf -
ஜாதி காதவா. அல்லா திருப்பி குடுப்பான் சொல்ரது இதுதான் வா. கத எழுதுனவருக்கு அரபி மாலும் போல வா. கடம்மா, கபீல், தாள், தய்யூப் வார்த்தைகளை பார்த்தால் தெரிகின்றது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.