• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
arjun

வியாளேந்திரன் பக்கம் .

Recommended Posts

13001302_619644741526458_883396440801848

வியாளேந்திரன் கனடா விஜயத்தால் கிடைத்த நன்மைகளில் இதுவும் ஒன்று .

From Canada we have raised $46,521 todate. We will reach our target of $50,000 by April and close our 2015/2016 fund raising campaign. SACHA team like thank you all for your contribution, participation and the generosity. We have already donated $18,000 to Thilakavadiyar Girls Home, Srilanka, $13,000 to Vivekananda Girls Hostel, Kallady, Batticaloa & $5,000 to Vocational Training Project in Batticaloa. At Thilakavadiyar Girls Home, project is on hold due to rain and wet conditions. Balance $14,000 to Thilakavadiyar Girls Home will be sent as soon as they complete the work for $18,000 and ready to continue the work. A SACHA team member will be visiting Batticaloa in March to monitor the progress of all three projects.

 

12986946_562682873902561_811863620773216

12938239_562682940569221_830054705821971

Thank you all for supporting the project. Girls are happy with the renovated facility. New bed, furniture, study room, washrooms & toilets

IMG_0027.JPG

Vivekananda Girls Hostel, Kallady, Batticaloa project is complete now. A big thank you to all the supporters who made this possible in a short period.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் புனரமைக்கப்பட்ட மாணவர்கள் விடுதி இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுஇந்த விடுதியை திறந்துவைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனடா மக்களிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தெற்காசிய கனடா வாழ் மக்களின் மனிதாபிமான அமைப்பின் நிதியுதவியுடன் மனித நேய கரங்கள் அமைப்பினால் இந்த விடுதி புனரமைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் மிகவும் மோசமான நிலையில் மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவற்ற நிலையில் இருந்த குறித்த விடுதியின் நிலமை தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாசினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்க கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி புனரமைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விடுதி திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம்,உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட விடுதிக்கான தளபாடங்களும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. நீண்டகாலமாக காணப்பட்ட விடுதியின் குறைபாட்டினை நீக்கியமையை பாராட்டும் வகையில் பாடசாலை சமூகத்தினால் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 • Like 7

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, arjun said:

வியாளேந்திரன் கனடா விஜயத்தால் கிடைத்த நன்மைகளில் இதுவும் ஒன்று .

பச்சை போட முடியவில்லை - வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றோம். இதை தரக்குறைவாக எழுதுவதென்றால் இவர்கள் உண்மையில் இந்த மாவட்டத்தில் பற்றுள்ளவர்கள் அல்ல. இந்த மாவட்டத்தின் கல்விச்செல்வத்தை இல்லாதொளிக்க பாடுபடுபவர்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முறக்கொட்டாஞ்சேனையில், நீலத்தாரகை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒருசில முகவரி இல்லாத யார் என்று அடையாளப்படுத்த முடியாத ஒரு சில இணையத்தளங்களிலே ஒரு தனியார் கல்வி நிறுவனம் எனது புகைப்படத்தை பிரசுரித்து காட்சிப்படுத்தல் செய்திருக்கின்றார்கள் அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
அந்த விளம்பரங்களை நான் அகற்றச்சொல்லி கேட்டதாக, அதுவும் வீதி அதிகார சபையிடம் கேட்டதாக கூறியிருந்தார்கள் அதற்கும் எனக்கும் கூட எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
தொடர்ச்சியாக பாராளுமன்றம் செல்லாமல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதாக சொல்கின்றார்கள். பாராளுமன்றம் ஆரம்பமாகி இப்போது 7 மாதங்கள் கடந்து செல்கின்றது கிட்டத்தட்ட 11 தடவைகள் நான் பாராளுமன்றத்திலே பேசியிருக்கின்றேன் மற்றும் இந்த முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திலிருக்கும் இராணுவ முகாமை அகற்றக்கோரி பாராளுமன்றத்திலே இரண்டு தடவைகள் பேசியிருக்கின்றேன். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கூட இராணுவ அதிகாரியுடம் காரசாரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுப்டிருக்கின்றேன். அதன்போது எங்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஆகவே எங்களுக்கான சந்தர்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கான தேவைகளை பூரணப்படுத்த நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
இதை எதற்க்கு குறிப்பிடுகின்றேன் என்றால் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கின்ற உண்மையை உண்மையாக எழுதுகின்ற பக்கச்சார்பற்ற சிறந்த கருத்துக்களை பிரசுரிக்கக்கூடிய ஊடகங்களும் இருக்கின்றன. ஆனால் தங்கள் நினைத்ததை மட்டும் எழுதுகின்ற தங்களுக்கு பக்கச்சார்பாக எழுதுகின்ற அனாவசியமான ஊடகங்களும் இருக்கின்றது.
எதையும் நாம் அறிந்ததை எழுதக்கூடாது அறிந்து கொண்டு எழுத வேண்டும். எதையும் நானம் புரிந்ததை எழுதக்கூடாது பரிந்து கொண்டு எழுத வேண்டும்.
இருபக்கமும் கருத்துக்களை கேட்க்க வேண்டும் அப்போதுதான் உண்மைத்தன்மை புரியும் அச்செய்தியின் உண்மையான விளக்கம் தெரியும் இது தான் உண்மையான ஊடக தர்மம். இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் இந்த நாட்டிலே தங்களது வருமானத் தொழிலாக மதுபானசாலைகளை நடத்துகின்றார்கள். இன்னும் சிலர் சட்டவிரோதமான வேறு வேறு தொழில்களை செய்கின்றனர்.
ஆனால் நாங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றோம். இதை தரக்குறைவாக எழுதுவதென்றால் இவர்கள் உண்மையில் இந்த மாவட்டத்தில் பற்றுள்ளவர்கள் அல்ல. இந்த மாவட்டத்தின் கல்விச்செல்வத்தை இல்லாதொளிக்க பாடுபடுபவர்கள். ஆகவே நாங்கள் எதையும் சரியாக புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு எழுதவேண்டும் அதுதான் ஊடக தர்மம்.
ஏன்னைப் பொறுத்தவரை நான் பாராளுமன்ற உறுப்பினர் என்று பெருமைப்படுவதை விட ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகின்றேன். கடந்த கால கற்பித்தலில் நான் 6000 பட்டதாரிகளை உருவாக்கியிருக்கின்றேன். தற்போது நான் கற்பித்துக்கொண்டிருக்கின்ற க.பொ.த உயர்தர மாணவர்களில் 221மாணவர்கள் என்னிடம் இலவசமாக கல்வி கற்கின்றவர்கள். இந்த 221 மாணவர்களுக்கும் ஒரு வருடத்திற்காக பிரத்தியேக வகுப்புக்களுக்காக தேவைப்படுகின்ற பணம் 27,50 000 ரூபாய். இதை இவ்வாறு எழுதுபவர்கள் இதில் ஒரு மாணவனையேனும் பொறுப்பெடுக்கமுடியுமா. இதில் 6,000 அல்ல 6 பேரை பட்டதாரிகளாக்க முடியுமா? எதையும் நாங்கள் புரிந்துகொன்டு எழுத வேண்டும்.
எங்களுடைய எதிர்கால சங்ததிக்காகத்தான் நாங்கள் இந்த இடத்திலே நின்று கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஒரு காலகட்டத்தை எடுத்துப்பார்க்கும் போது உயர் பதவியில் இருந்தவர்கள் தமிழர்கள். பின்பு அந்த நிலை மாறியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் நாங்கள் உரிமைக்காக உடலை இழந்திருக்கின்றோம். உயிரை இழந்திருக்கின்றோம். உடமைகளை இழந்திருக்கின்றோம். நாம் உரிமைக்காக அனைத்தையும் இழந்திருக்கின்றோம்.
இந்த நேரத்தில் நாம் யார் ? தமிழர்களாகிய நாம் யார் ? ஒரு ஓடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதிகள் நாம். மீண்டும் நாம் சிறப்படைய வேண்டுமானால் கல்வி ஊடாகவும், பொருளாதாரத்தின் ஊடாகவும் தான் எமது சமுதாயத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்பு இந்த நாட்டை ஆண்டு வந்த பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட இந்த நாட்டுத் தலைவர்கள் இந்தநாட்டு அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றித்தான் வந்திருக்கின்றது.
குறிப்பாக இன்றைய சூழலில் 2009க்கு பின்பு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு. மகிந்த அரசு 2015ல் தோற்கடிக்கப்பட்ட பின்பு இப்பொழது தோன்றியிருக்கின்ற இந்த நல்ல ஆட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில் ஒரு தீர்வுத்திட்டத்தை எதிர்பாரத்து நாங்கள் முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம். இப்போது, அரசியலமைப்பு மாற்றத்தில் எமது தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுகள் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கின்றது.
at Monday, April 11, 201

13012610_620116094812656_732193920785237

12932924_620116044812661_195579564456956

13012754_620116004812665_170182842117455

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, arjun said:

தற்போது நான் கற்பித்துக்கொண்டிருக்கின்ற க.பொ.த உயர்தர மாணவர்களில் 221மாணவர்கள் என்னிடம் இலவசமாக கல்வி கற்கின்றவர்கள். இந்த 221 மாணவர்களுக்கும் ஒரு வருடத்திற்காக பிரத்தியேக வகுப்புக்களுக்காக தேவைப்படுகின்ற பணம் 27,50 000 ரூபாய். இதை இவ்வாறு எழுதுபவர்கள் இதில் ஒரு மாணவனையேனும் பொறுப்பெடுக்கமுடியுமா.

tw_thumbsup:

2750000/(221*12)=1034 மாதத்திற்கு 

Share this post


Link to post
Share on other sites

கடந்த தேர்தலின் போது வியாழேந்திரன் பற்றிக் கதைக்கும்போது  எனது தம்பி எனக்குக் கூறியது :

நல்ல மாணவன்: நல்ல சமூக சேவையாளன்:
மிகுந்த அரசியல் பண்புடையவர்:
கூட்டமைப்பில் போட்டியிட்டாலும் வியாழேந்திரன் வெல்ல வேண்டும்:
அவரால் மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்:

அது எவ்வளவு உண்மை என்று இப்போது தெரிய வருகின்றது.

Share this post


Link to post
Share on other sites

வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்களுக்கு கிணற்றினை பெற்றுக்கொடுத்தார் பா.உ ச.வியாழேந்திரன் (அமல்)

வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்களுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்வியாழேந்திரன்(அமல்)
கிணறு ஒன்றினை பெற்றுக்கொடுத்தார்.
கடந்த மாதம் இக் கிராமத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மக்களை பார்வையிடுகையில் மக்கள் தமக்கு கிணறு ஒன்றை பெற்றுத்தருமாறு வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதக்கமைய இக் கிணற்றை பெற்றுக்கொடுத்தார். இந் நிதியுதவினை கனடிய தேசத்தில் இருந்து வருகைதந்த கனடாவாழ் தமிழ் உறவாகிய திருமதி. ம.புஸ்பலதா அவர்களின் நிதி உதவியுடன் மனித நேயக்கரங்களின் அமைப்பின் அமுலாக்கத்தின் கீழ் இக் கிராம மக்களுக்கு கிணறு வழங்கப்பட்டது

13124738_123232891414087_454455491933919

13133186_123232914747418_232529273520247

13124909_123232928080750_759609726657720

Share this post


Link to post
Share on other sites

13177331_1717086468530675_88349123307350

13100813_1717087241863931_12748042898735

இன்று 08/05/2016 புலையவெளி கிராமத்தில் நிரந்தர குடிநீரினை பெற்றறுக் கொடுக்கும் முகமாக என் நேரமும் மக்களுக்காக குரல் கொடுப்பவரும் உதவிகள் பல செய்பவருமாகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ச.அமல் ஆசிரியர் அவர்களின் முயற்சியில் 200 அடி ஆழத்தில் குழாய்க் கிணரொன்று அன்னை ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தில் பதிக்கப்பட்ட போது ...
[நிதியுதவி ஈழப்பதீஸ்வரர் ஆலயம் லண்டன்]

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கனடா மக்களினால் முன்னாள் போராளி குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

 
s
 

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை கனடா வாழ் மக்களின் நிதி உதவியை கொண்டு அதற்கான உதவிகள் இன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிப்படைந்து புனர்வாழ்வு பெற்று தங்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் பெரும் கஸ்டத்தின் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல முன்னாள் போராளிகள் தங்களின் வாழ்க்கையை நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் சுமார் 17 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சில்லறைக் கடைக்கான பொருட்கள், குளிர்பானக் கடைக்கான குளிர்சாதனப் பெட்டி, மாடு, ஆடு, தோட்டப் பயிர் செய்கைக்குரிய நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற பெறுமதியான வாழ்வாதார உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

அதனடிப்படையில் இன்றைய தினம் இவ்வாறான உதவிகளை தங்களுக்கு வழங்கி வைத்த கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட கனடா வாழ் மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவற்றுக்கு எல்லாம் முன்னின்று உழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், பயனாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

 

அத்துடன் இவ்வாறான உதவிகள் மென்மேலும் இந்த மாவட்டத்தில் வாசிக்கும் எம்மைப் போன்ற கால், கை, உடலில் பல அபவயங்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட பயனாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

adverti
 
Edited by Gari
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எனது பயணம்
தொடர்:01 திருமதி: ம.புஷ்பலதா

கனடாவில் அதி உச்ச குளிர்காலம் அது.. கிட்டத்தட்ட மறை 45 (-45`C) பாகையிலும் அதிகமான குளிரை அன்று என்னால் உணரமுடிந்தது. அந்த குளிரை சமாளிக்க Malvern விருந்தினர் அகத்துக்குள் உள்நுளைகிறேன். சுற்றிவர மக்கள் கூட்டத்தின் நடுவே ஒரு தமிழ் கம்பீரக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதாவது அரசியல் கூட்டமாக இருக்குமோ என்று அங்கலாய்த்தபடி தேநீரை அருந்த ஆரம்பித்தேன். 
கொஞ்ச நேரம் செல்லச் செல்ல அந்த வார்த்தைகளில் ஏதோ ஒரு ஈரம் இருப்பதும் ஆழ் மனதில் இருந்து ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்காக அழுகிறான் என்ற எண்ணமும் எனக்குக்குள்ளே உதயமாகியது. தாயகத்தில் யுத்தத்தின் பின்னரான மக்களின் வாழ்க்கை முறைகளையும், அன்றாடம் வறுமையால் அவர்கள் படும் இன்னல்களையும், கல்வி, கலாசாரம் சார்ந்த விடயங்கள் எனப் பல ஆதங்கங்களை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 
மனித நேயம் மிக்க ஒருவன். அதுவும் தமிழன், வறுமைப்பட்ட மக்களுக்காக வாதாடுகிறான். யார் இவர்.? என்று அறிய நான் முற்பட்ட போதுதான், அவர் இலங்கையின் மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனத் தெரிய வந்தது. சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கிலங்கையில் ‘அமல் மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் ஒரு கல்விமான் இன்று தன்னைப் பிரதிநிதியாக தெரிவு செய்த மக்களுக்காக இந்த குளிரில் பேசிக்கொன்டிக்கிறார். 
எனது வந்த வேலையும் முடிந்து விட்டதால். எனது வேலைத்தளத்துக்கு செல்ல கார் இல் ஏறி பயனித்துக்கொண்டிருக்கிறேன். சிந்தனைகள் எல்லாம் அவர் பேசிய விடயங்களையே சுற்றி நிற்க நான் வெற்று உடலுடன் மட்டுமே பயணிக்கிறேன். இவ்வாறு ஒரு மணி நேரம் பயணித்திருப்பேன். மனதுக்குள் ஏதோ ஒரு குடைச்சல் அந்த மனிதத்துவம் உள்ள ஜீவனுக்காக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற உறுத்தல் இருந்து கொண்டே வந்தது. இறுதியாக முடிவெடுத்தேன் எங்கே நான் அவரை பார்த்தேனோ, அங்கேயே சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று.

மீண்டும் அதே இடம் அமல் அவர்களது நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்று இருந்தது. ஒரு சிலருடன் வேலைப்பழுக்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக உரையாடிக் கொண்டிருந்தார் நேராக அவரிடமே சென்றேன், என்னை அறிமுகம் செய்து கொண்டு, “நீங்கள் கூறிய எமது மக்கள் சார்பான பிரச்சனைகளுள் ஒரு சிலவற்றையாவது நிவர்த்தி செய்ய நான் முயற்சிக்கிறேன்” என்ற போது. அவர் “நிச்சயமாக உங்களைப் போன்ற நல் உள்ளங்களை நாம் வரவேற்கின்றோம்’ என்று கூறினார். 
“முதல் கட்டமாக வறுமைப்பட்ட பெண்களுக்காக, என்னிடம் ஒரு தடவை கட்டிய பல புடவைகள் உள்ளன அவற்றைத் தருகிறேன் கொடுக்க முடியுமா.?” என்று கேட்டேன். அவர் “ஒரு தடவை அல்ல நான்கு ஐந்து தடவை கட்டி புடவையாக இருந்தாலும் பறவாயில்லை தாருங்கள், நாங்கள் அவற்றை சலவை செய்து கொடுக்கிறோம்” என்று பதில் சொன்னார். இதைச் சற்றும் எதிர் பாராத நான் அவரது பண்பைப் பார்த்து வியந்து போனேன். வறட்டுக் கௌரவத்தால் தலைக்கனம் பிடித்து எமது உறவுகளை பிச்சை எடுக்க வைக்கும் எத்தனையோ தமிழ் தலைவர்கள் முன், தனது மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று செயற்படும் இவரைப் போன்றவருக்குப் பக்க பலமாக நின்று உதவவேண்டும். என்று என் ஆழ் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அந்தக் குறுகிய நேரச் சந்திப்புகள் நிறைவுற்றதும் எனது தொடர்பிலக்கங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவ்விடமிருந்து விடை பெற்றேன்.
நாட்கள் கடந்து ஒரு வாரம் ஓடி இரண்டாவது வாரத்தையும் தொட்டது. அமல் அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் வரவில்லை. சரி அவரும் ஏனையவர்களைப் போல் பேச்சளவிலேயே காரியங்களைக் கை விடுபவர் தான் என மனதை தேற்றி கொண்டேன். சில நாட்கள் கடந்தும் எனது தவறான முடிவினைச் சிதைக்கும் வண்ணம் அமல் அவர்களிடமிருந்து அந்த தொலைபேசி அழைப்பு. Malvern விருந்தினர் அகத்துக்குள் முன்னர் பேசிய எமது உறவுகளின் வறுமை போராட்டங்களையும், மாணவர்களின் கல்விப் பிரச்சனைகளையும். இளைஞர் யுவதிகளின் வேலையில்லாத் திண்டாட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறினார். அத்தோடு நான் கூறுவதை பார்க்கிலும் நேரில் நீங்கள் வந்து பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலவரம் புரியும் என்றும் வலியுறுத்தினார். 
எனது தாய் நாட்டில் உள்ள என் உறவுகளுக்கு நேரடியாகச் சென்று என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், வேலைப்பழு மிக்க எனது தொழில், வயதான பெற்றோர், இதுவரை தனிமை வாழ்வை அறியாத என் பிள்ளைகளை நினைத்து கொஞ்சம் தயக்கம் அடைந்தேன். அத்துடன் சில நிமிடங்களே பார்த்துப் பழகிய ஒருவரை நம்பி எப்படி செல்வது..? எனப் பல வினாக்களைச் சாமாளிக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் யுத்தத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகிப் போயிருக்கும் அந்த மக்களைப் பார்க்க போயே ஆகவேண்டும் என்ற மன நிலையை என்னால் மாற்ற முடியவில்லை.

“எனது உறவுகளைப் பார்க்க உங்களை நம்பி வரத் தயாராகி விட்டேன், அதற்கு முன் அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்..” என்று அமலுக்கு அறிவித்தேன். அத்துடன் எனது அம்மம்மாவின் பெயரில் ஒரு கிணறு ஒன்றையும் கட்ட தீர்மானித்தேன் அதற்கமைய அமல் அவர்களின் வேண்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட வந்தாறுமூலையில் பாலாச்சோலை என்னும் பின்தங்கிய கிராமத்தில் சுமார் 35 குடும்பங்கள் ஒரு கிணறு கூட இல்லாத நிலையில் . நெடுங்காலமாக குடிநீர் வசதிகள் இன்றி பெருஞ்சிரமத்தை எதிர் நோக்கி வருவதாக கூறி இருந்தார். அதுமட்டுமன்றி கிணறுகளை சீமெந்து கொண்டு கட்டுவதற்குக் கூட வசதி அற்ற இக் கிராம மக்கள் தமது அன்றாட நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிணறுகளை தோண்டிவிட்டு அக்கிணறுகள் சரிந்து விடாமல் இருக்க தகரப் பீப்பாய்களை நிலத்தில் புதைத்து வைத்து நீரை பயன்படுத்தி வருவாதாகவும். அத் தகரங்கள் விரைவில் துருப்பிடித்து உக்கிவிடுவதால் தகரத் துகள்கள் கலந்திருக்கும் பாவனைக்கு பொருத்தமற்ற நீரைத்தான் இதுவரை காலமும் குழந்தைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை பருகி வருவதாகவும் ஆதாரங்களுடன் அனுப்பி இருந்தார். ஆகவே அப்பிரதேசத்திலேயே கிணறு ஒன்றை கட்ட முன் எற்பாடுகளைச் செய்யுமாறு கூறி, அதற்குரிய செலவினை அனுப்பியும் வைத்தேன்.
மேலும் அமல் அவர்களின் இன்னொரு வேண்டுகோளான மட்டக்களப்பு கித்துள் கிராமத்தில் 40 மாணவர்கள் வரை கல்வி பயிலும் ‘மலரும் மொட்டுகள்’ பாலர் பாடசாலையைப் புணரமைத்து தரும்படி கோரி இருந்தார். அப்பணியை நிறைவு செய்து தருவதாக எனது நண்பிகளில் ஒருவரான தர்ஷனா அவர்கள் முன் வந்தார். 
எனவே இருந்த சகல ஏற்பாடுகளையும் பூரணப்படுத்திக் கொண்டு ஒரு வார கால இடைவெளியில் இலங்கையை நோக்கிப்புறப்பட தயாரானேன். அதுவும் எனது சொந்த இடமான யாழ்ப்பணத்துக்குக் கூடச் செல்லாமல் முழுமையாக மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு..

தொடரும்....

Pushpalatha Mathan

முகபுத்தகத்தில் இருந்து .

13230113_10156827007805537_1179641478159

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀
  • என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே. அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.
  • படித்ததில்_பிடித்தது ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. 'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை. இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
  • The Airbus Scandal – How the bribe moved around Sri Lankan circles   Written by Zulfick Farzan 20 Feb, 2020 | 4:46 PM  Colombo (News 1st) – The SriLankan Airlines – Airbus re-fleet deal, the 2013 purchase of 10 Airbus aircraft for the national carrier had led to much controversy solely because of the fraud and corruption surrounding it. Airbus aviation group had offered a 16 million US dollar bribe of which 02 Million US Dollars was obtained and then transferred to various parties. After the massive bribes were in obtained in secret, the UNP led-Government decided to terminate the purchasing deal after paying 98 Million US Dollars to Airbus and the loss to the country was approximately 14,000 Million Rupees. The aerospace giant was investigated by French and British authorities over suspected corruption dating back several years and in the States over failure to comply with export rules. The UKs Serious Fraud Office reported Airbus hired the wife of a SriLankan Airlines executive as its intermediary in connection with aircraft negotiations and offered a bribe of 16.84 Million US Dollars , which is approximate north of 3000 Million Rupees. 02 Million US Dollars of the promised amount was deposited to the Singapore Bank Account of a company known as BIZ Solutions, registered in Brunei under the name of Priyanka Wijeynayake, the wife of Ex-SriLankan CEO Airlines Kapila Chandrasena. 02 Million US Dollars is approximately north of 400 Million Rupees. Kapila Chandrasena and his wife are in remand costody for money laundering charges and the case is taken up in the presence of Fort Magistrate Ranga Dissanayake. When the matter was taken up initially, the Criminal Investigations Department informed court, money was transferred from the BIZ SOLUTIONS bank account in Singapore to Kapila Chandrasena’s accounts in Australia on two separate occasions. In court yesterday, detectives revealed, money was transferred to several other parties from the BIZ SOLUTIONS account under the name of Priyanka Neomali Wijeynayake. Accordingly, 800,000 US Dollars was transferred to the Singapore Bank Account of a BVI company known as SABER VISION HOLDINGS in 2014, on two separate occasions. Investigations revealed the company is owned by Sri Lankan Businessman Nimal Hemasiri Perera and the transferred amount is just north of 140 Million Rupees. In 2014 again, another sum of 160,000 EUROS was transferred from BIZ SOLUTIONS to the account of a Sri Lanka based company, by the name of SL AGRO – and this is around 30 Million Rupees. SL AGRO does not have a registered address and it has only two directors – brothers – whose identities were not revealed to court. Yesterday, the CID said a statement was recorded from one of the brothers and the other was expected to provide a statement today. The second brother was a no-show even at 04:30 this evening. https://www.newsfirst.lk/2020/02/20/the-airbus-scandal-how-the-bribe-moved-around-sri-lankan-circles/