யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Surveyor

இணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி?

Recommended Posts

சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு).ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் வசதி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை
 
netflix.JPG
Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில,இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB
 
எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்லை. சென்னை தவிர எந்த ஊரிலும் "பர்மா பஜார்" இல்லை. ஆக, தமிழ் அல்லாத திரைப்படங்களைக் காணும் உலக சினிமா தாகத்திற்கு நானும் என்னைப் போலப் பலரும் சார்ந்திருப்பது இணையத்தையே. இந்தத் தளத்தில் நான் எழுதும் தமிழ் அல்லாத படங்களைப் பெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தே பார்த்திருக்கிறேன்.பார்த்துவருகிறேன். இணையத்தில் இல்லாத படங்களே இல்லை.கொட்டிக்கிடக்கிறது. சுலபமாக அடுத்தவரிடம் 'லின்க்' கேட்பதற்கு பதில், சிறிது முயற்சி செய்தால் ஐந்தே நிமிடத்தில் எந்த நாட்டுத் திரைப்படத்தையும் கண்டுபிடித்துப் பார்த்துவிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.  இருந்தாலும், நண்பர்கள் சிலர் கேட்டுவிட்டார்கள் என்பதால் இந்தப் பதிவு அவசியமாகிறது.
 
இது தப்பான பதிவு என்று நன்றாகத் தெரிகிறது. என்றாலும், அவசியமான பதிவு என்பதால் பொதுநலன் கருதி எனக்குத் தெரிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன்.

 
So, இணையத்தில் ஒரு படத்தைத் தேடுவது எப்படி?

 
இல்லீகலாக பைரேட்டட் படங்களைத் தேடுவது எப்படி என்று பார்க்கும் முன்,இணையத்திலேயே லீகலாகப் படம் பார்க்க சில வசதிகள் உண்டு. அவற்றை முதலில் சொல்லிவிடுகிறேன்.

 
youtube.JPG
www.youtube.com - YouTube தளத்திலேயே பெரும்பாலும் நமக்குத் தேவையான படம் கிடைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிப் படங்களின் (கொஞ்சம் பழைய படங்கள்), ஒரிஜினல் வெர்ஷனே YouTube இல் இலவசமாகக் காணக் கிடைக்கிறது.சம்பந்தப்பட்ட கம்பெனியே லீகலாக, இலவசமாக நாம் அவர்களது படத்தைக் காண வழிசெய்திருக்கிறார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் முதலில் நான் தேடுவதுYoutube இல் தான்.

 
YouTube தவிர இந்திய மொழிப்படங்கள் லீகலாகக் காணக் கிடைக்கும் பிற தளங்கள் கீழ் கண்டவாறு. இவை அனைத்துமே Netflix போலப் பணம் கட்டிப் படம் பார்க்கும் தளங்கள்.

 
hungama.JPG
www.hungama.com - 12 இந்திய மொழிகளில் சுமார் 7000 படங்கள் இங்கு இருக்கிறது.மாதம் ரூ.249 கட்டினால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

 
erosnow.JPG
www.erosnow.com - EROS தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்துமே இங்கு காணக் கிடைக்கிறது. படங்கள் தவிர இந்திய (ஹிந்தி) டி.வி சீரியல்களையும் இலவசமாக இங்கு பார்க்கலாம்

 
hotstar.JPG
www.hotstar.com - இதுவும் youTube போலத் தான். படங்கள், டிவி சீரியல்களை இலவசமாகப் பார்க்கலாம்

 
 
herotalkies.JPG
இந்தத் தளங்களைத் தவிர அமெரிக்கக் கம்பெனியான www.herotakies.com என்ற இணையதளம் விரைவில் இந்தியாவிற்கும் வரவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. HeroTalkies இந்தியாவிற்கு வந்தால் மாதத்தவணை கட்டித் தரமான குவாலிட்டியில், டவுண்லோட் செய்யும் அதே நெட் யூஸேஜில் ஆன்லைனில் லீகலாகப் படம் பார்க்கலாம். திருட்டு வி.சி.டி, திருட்டு டவுண்லோட் பிரச்சனைகளை இது பெருமளவில் குறைக்கும்.

 
Youtube என்பது பெரும்பான்மை இணையவாசிகள் பயன்படுத்தும் Video Archive / Video Streaming இணையதளம். இன்னும் சில தளங்களும் உண்டு.

 
vimeo.JPG
www.vimeo.com - குறும்படங்கள் கொட்டிக்கிடக்கிறது இந்தத் தளத்தில். Private Sharingசெய்ய சிறந்த தளம். HD தரத்தில் படங்களைத் தருவதில் இந்தத் தளத்தை அடித்துக்கொள்ள முடியாது.

 
dailymotion.JPG
www.dailymotion.com , www.metacafe.com - இந்த இரண்டு தளங்களுக்கும் YouTube ற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் YouTube இல் இல்லாத பல படங்கள் எனக்கு இந்தத் தளங்களில் கிடைத்திருக்கிறது.

 
veehd.JPG
www.veehd.com - இந்தத் தளம் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், பழைய படங்கள் குவிந்து கிடக்கிறது இங்கு. நீங்கள் தேடும் ஒரு குறிப்பிட்ட படம் இந்தத் தளத்தில் இல்லை என்றால், இணையத்தில் வேறு எங்கும் அந்தப் படம் கிடைப்பது கடினமே

 
youku.JPG
www.youku.com - இது சீன YouTube தளம். சீன / ஹாங்காங் படங்கள், டி.வி சீரீஸ்களைக் காண சிறந்த தளம். ஆனால் மருந்திற்குக் கூட எங்கும் ஆங்கிலம் இருக்காது.டிரான்ஸ்லேட்டர் வசதியுடன் பட லின்க் களைத் தேடிப் பிடிக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் தேடிப் பிடிக்கும் படம் பெருமாலும் ஆங்கில சப்டைட்டில் கொண்டதாகவே இருக்கும். இங்கிருக்கும் படங்கள் பெருமாலும் YouTube லேயே கிடைத்துவிடும் என்பதால் பாதகமில்லை.

 
goasiatv.JPG
www.goasiantv.com - நான் கண்டுபிடித்த அருமையான வெப்சைட்களில் முக்கியமானது இந்தத் தளம். ஆசியப்படங்கள் விரும்பிப்பார்ப்பவர்களுக்கு இந்தத் தளம் ஒரு அட்சயப்பாத்திரம். அருமையான குவாலிட்டியில், ஏற்றுக்கொள்ளும்படியான ஆங்கில சப்டைட்டில்களுடன் கொரிய, சீன, ஜப்பானியப் படங்கள், டிவிசீரீஸ்களை முந்தித் தரும் ஸ்ட்ரீமிங் தளம். Google Chrome இல் Add-On ஆக வரும் FlashVideo Downloaderஅல்லது IDM (Internet Download Manager) போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தத் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் வீடியோவைச் சுலபமாக டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.

 
இவை தவிர இன்னும் நிறைய நிறைய தளங்கள் உண்டு. நான் பயன்படுத்துவது பெரும்பாலும் இந்தத் தளங்களையே.

 
அடுத்து வருவது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டாரெண்ட் தளங்கள். டாரெண்ட்கள் எப்படி இயங்குகின்றன, அதன் வரலாறு என்ன,டாரெண்ட்களில் திருட்டுத் தனமாகப் படங்களை அப்லோட் செய்வதால் நமக்கு அல்லது இந்த வேலையைச் செய்பவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்டத் தளங்களுக்கு என்ன லாபம் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள். எங்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் சொல்கிறேன்.

 
KAT.JPG
Kickass Torrents (www.kat.cr) - இன்றைய தேதிக்கு இந்தத் தளத்தை அடித்துக்கொள்ள வேறு டாரெண்ட் தளம் (Torrent Search Engine) இல்லை. பல முறை பிளாக் செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்த கொண்டிருக்கிறது இந்தத் தளம். இந்தத் தளத்தின் முன்னோடிகாளானwww.thepiratebay.com , www.isohunt.com போன்ற ராட்சஸர்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ட, அழிக்கவே முடியாத சிட்டி ரோபோ இந்தத் தளம்

 
extratorrent.JPG
ExtraTorrent (www.extratorrents.cc) - Kickass தடைகாலத்தில் இயங்காமல் இருக்கும் போது நான் அதிகம் நம்புவது இந்தத் தளத்தைத் தான். Kickass ற்கு சிறிதும் குறைச்சல் இல்லாத தளம்.

 
torrentz.JPG
Kickass, Extratorrent ற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் தளம் www.torrentz.com.இணையத்தில் நீங்கள் தேடும் படத்தின் டாரெண்ட் லின்க் எங்கிருந்தாலும்,தேடிக்கண்டுபிடித்து லிஸ்ட் கொடுத்துவிடும் இந்தத் தளம். Search Engineகளுக்கெல்லாம் ஒரு Search Engine.

 
ஒரு படத்திற்கான டவுண்லோட் லின்க்' Kickass, Torrentz, Piratebay போன்ற Torrent Search Engine தளங்கள், தனியாக இயங்கும் (சொந்தமாக படங்களை Rip செய்யும் தளங்கள்) பிற டாரெண்ட் தளங்களில் இருந்து தேடி நமக்குக் கொடுக்கும். நமக்கு வேண்டிய தரத்தில், வேண்டிய சைஸில் இருக்கும் ஃபைல்களை, வேண்டிய ரிப்பரது லிங்கிலிருந்து Mu Torrent (http://ll.www.utorrent.com/intl/en/) அல்லது BitTorrent (http://www.bittorrent.com/) போன்ற சாப்ட்வேர் மூலம் நாம் டவுண்லோட் செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாக இந்த ரிப்பர்களது (Rippers / Encoders / Uploaders)தளங்களுக்கே போய் டவுண்லோட் செய்யலாம். நான் கண்டவரை தற்போதுள்ள அருமையான ரிப்பர்ஸ் இவை.
 
mkvcage.JPG
www.mkvcage.com - மிகக் குறைந்த சைஸில், அதிகப்படியான தரத்தில், மற்ற தளங்களில் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னமே படங்களை முந்தித் தரும் தளம் இது. படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களுடன் சாம்பிள் ஸ்கிரீன்ஷாட் உம் இந்தத் தளத்தில் இருப்பது இந்தத் தளத்தின் பலம். கூடவே எந்தப் படமாக இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இல்லாமல் இவர்கள் வெளியிட மாட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

 
shaanig.JPG
www.shaanig.com - MKVCage ற்கு அடுத்தபடியாக தரத்திலும், சைஸிலும் பிரம்மிக்கவைக்கும் தளம் Shaanig. Highest Quality at Smallest Size என்பது தான் இவர்களது டேக் லைன். மிகப்பிரபலமான இந்தத் தளம் இணையவாசிகளின் பேவரிட். ஆனால் என்ன ஒரு குறை அநியாயத்திற்கு கம்ப்ரஸ் செய்யப்படுவதால் வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ நன்றாக இருக்காது. சில சமயம் வீடியோவும் மக்கர் பண்ணும்.லேப்டாப் இல் படம் பார்ப்பவர்களுக்கு Shaanig சிறந்த இடம். ஆங்கில சப்டைட்டில் கண்டிப்பாக இருக்கும்

 
yts.JPG
www.yts.ag - டாரெண்ட் உபயோகித்து ஆங்கிலப்படம் டவுண்லோடுபவர்களுக்கு Yifyஎன்ற சொல் புதிதல்ல. திடீரென்று ஒரு நாள் Yify அபீஸியலாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாக, நானெல்லாம் மனதுடைந்து போனேன். ஆனால் மறுநாளே புதுபெயரில், புது சர்வரில், புதிதாகப் பிறந்து வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது Yify.   www.ganool.ag சிறந்த உலகமொழித் திரைப்படங்கள்முக்கியமாக கொரியப் படங்கள் இவர்களது ஸ்பெஷாலிட்டி.
 
தனியாக வெப்சைட் இல்லாத, ஆனால் மேல்சொன்ன ரிப்பர்களுக்கு சற்றும் குறையாத குவாலிட்டியில் படங்களைக் கொடுக்கும் சில ரிப்பர்கள் உண்டு. Kickassதளத்தின் Search பாக்ஸில் இந்தப் பெயர்களை தட்டி என்னென்ன படங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

 
sujaidr.JPG
Sujaidr - ஆங்கிலப்படங்களை மிகக்குறைந்த சைஸில், மிக அருமையான குவாலிட்டியில் சிறந்த படங்களை ரிப் செய்யும் குழு இவர்கள். தற்போது தமிழ் படங்களையும் அப்லோட் செய்கிறார்கள்.

 
Hon3y - ஹிந்தி படங்களை செம்ம குவாலிட்டியில் ஆங்கில சப்டைட்டிலுடன் கொடுப்பவர்கள்.

 
AnoXmous - இவர்களும் தற்போது ஆட்டத்தில் இல்லை என்றாலும் (அவ்வபோது ஒன்றிரண்டு நல்ல படங்களை அப்லோடுகிறார்கள்), இவர்களது பழைய டேட்டாபேஸ் அப்படியே தான் உள்ளது. சிறந்த உலகப் படங்களை பல கொட்டிக்கிடக்கிறது இவர்கள் வசம். தரத்தில் சிறிதும் காம்ப்ரமைஸ் ஆகாமல் நல்ல பெயர் எடுத்திருந்த வெகுசில ரிப்பர்ஸ் குழுவில் ஒன்று
 
aXXo - டாரெண்ட் ரசிகர்களால் மறக்க முடியாத லெஹண்ட். வெறும் 700 MBக்கு தரம் குறையாமல் படங்களை ரிப் செய்து கொடுத்த முதல் ஆள். இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

 
மேல்சொன்னவை அனைத்தும் பெரும்பாலும் திரைப்படங்களுக்கான தளங்கள்.ஆங்கில டி.வி சீரீஸ்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் ரிப்பர்ஸ் இருவரே. RARBG and EZTV
 
PublicHD - கம்மென்று இருக்கும் மற்றுமொரு பிரபல ரிப்பர். BluRay வை சைஸ் குறைக்காமல் அப்படியே அப்லோட் செய்பவர்கள். ஒரு படத்தின் குறைந்தபட்ச சைஸ்15 GB ஆகவும் அதிகமாக 45 GB வரையும் இருக்கும். ஒரு வருடமாக இவர்கள் செயல்படவில்லை.

 
tamilrockers.JPG
www.tamilrockers.cc - தமிழ் படங்களுக்கென்று பிரத்யேகமாக, வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இல்லீகல் டாரெண்ட் தளம் இந்த TamilRockers தான்.யார் இவர்கள், எந்த நாட்டிலிருந்து இந்தத் தளம் இயங்குகிறது என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத சிதம்பர ரகசியம். கடந்த ஒரு வாரமாக இந்தத் தளத்தை 'இந்திய அரசாங்கம்' தடை செய்திருக்கிறது. ஆனால் வெகு சீக்கிரம் வேறு ஒரு சர்வரில் இருந்து இந்தத் தளம் இயங்கத் தொடங்கிவிடும். தடை இந்தியாவிற்கு மட்டும் தான் என்பதையும் அறிக.

 
இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. Seeds கம்மியாக உள்ளது, வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை, நான் தேடும் படம் எங்குமே கிடைக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. மேல் சொன்ன படங்களில் நீங்கள் தேடும் படம் இல்லை என்றால், அந்தப் படம் இணையத்தில் இல்லை என்பதை மனதில் ஃபிக்ஸ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும் அந்தப் படம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது :)

 

 

பி.கு: இந்த பதிவு சரியா தவறா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை. நீங்க கேட்டீங்க, நான் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்

 

http://babyanandan.blogspot.qa/2016/04/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

பயனுள்ள தகவல்கள்..!

பகிர்விற்கு நன்றி.

இந்த 'டொரெண்ட்' தளங்களில் படங்கள் தரவிறக்கம் செய்யும்பொழுது கவனம் மிக மிக அவசியம்.. ஏகப்பட்ட மால்வேர்கள், ஒட்டுண்ணிகள், வைரஸ்கள்களும் இலவசமாக உங்கள் கணணிக்குள் வந்துவிடும்..

அப்புறம் குத்துதே குடையுதே என அடித்துக்கொள்ளக் கூடாது.

HeroTalkies-ல் சில தமிழ் படங்கள் நல்ல தரத்தில் கிடைக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

www tamilgun.com  என்ற தளத்தில் நிறையப் பழைய மற்றும் புதிய படங்களைப் பார்க்கமுடியும். மேலும் சில படங்களை டவுன்லோட் பண்ணவும் முடியும். 

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு தமிழ்நாட்டிலை படம் ரிலீசாகிற நேரம்....... வீட்டுக்கை இருந்து கொண்டு ஹை குவாலிட்டியிலை படம் பார்க்கிறமாதிரி ஒரு லிங்கை தாங்கப்பா :cool:

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, குமாரசாமி said:

எங்களுக்கு தமிழ்நாட்டிலை படம் ரிலீசாகிற நேரம்....... வீட்டுக்கை இருந்து கொண்டு ஹை குவாலிட்டியிலை படம் பார்க்கிறமாதிரி ஒரு லிங்கை தாங்கப்பா :cool:

ரொம்பவும் ஆசைப்படுகிறீர்கள் சார்..!

படத்தை களவாக தரவேற்றம் செய்கிறவர்களுக்கும் போதிய அவகாசம் கொடுக்கவேணுமில்லையா?

எந்த தயாரிப்பாளரும் இணையவழியில் தரவேற்றம் செய்ய காப்புரிமையை அன்றே அளிப்பதில்லையே?

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்பவும் ஆசைப்படுகிறீர்கள் சார்..!

படத்தை களவாக தரவேற்றம் செய்கிறவர்களுக்கும் போதிய அவகாசம் கொடுக்கவேணுமில்லையா?

எந்த தயாரிப்பாளரும் இணையவழியில் தரவேற்றம் செய்ய காப்புரிமையை அன்றே அளிப்பதில்லையே?

விஸ்வரூபம் படம் பார்த்தார்களே! :unsure:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

விஸ்வரூபம் படம் பார்த்தார்களே! :unsure:

அதில் கையை சுட்டுக்கொண்டதால், திரையரங்குகளை தவிர எந்தவகையிலும் படத்தை வெளியிடக்கூடாதென திரப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் அழுத்தத்திற்குப் பின், எந்த தயாரிப்பாளரும் படங்கள் பார்ப்பதற்கு இணையப் பொறிமுறையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

உண்மையைச்சொன்னால் இது பற்றி  எனது ஆத்துக்காறிக்குத்தான் அதிகம் தெரியும்..

Share this post


Link to post
Share on other sites

அன்பான நண்பர்களுக்கு வணக்கம்,

 

எனக்கு நடந்த ஒரு துயரத்தை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் ...

 

ஆங்கில மொழி டப்பிங் படம் பல படங்களை டொராண்ட வழி மூலம் பல வருடங்களாக டவுன்லோட் செய்து பார்த்து வந்தேன்

(ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த கதை ),படத்தின் பெயர் சட்டென்று ஞாபகம் வருதில்லை  ,,,

கூகுள் மூலம் தேடினேன்

சட்டென்று கிடைத்தது அதுவும் டொராண்ட வழி மூலமே ,,,

படத்தை டவுன் லோடு பண்ணி ,எடுத்து விட்டு பிட் டொராண்டடில் அப்படியே விட்டு விட்டேன் அந்த படத்தை

எனது வளிமூலமும் (பிட் டொராண்டடில்) எடுத்துக் கொண்டிரிந்திருப்பார்கள்

மூண்டு மாதங்களின் பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது ,கடிதம் என்று சொல்வதை விட ஒரு புத்தகமென்றே சொல்லலாம்....tw_dissapointed:

முழுமையையும் வாசித்து அறிந்து கொள்ளும் அளவுக்கு ,,,,,,, (ஜெர்மன் மொழி)

பின் ஒரு ஜெர்மன் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க்க சென்றேன் அவர் கேட்ட முதல் கேள்வி

இதில் குறிப்பிட பட்டிருக்கும் திரைப்படத்தை நீங்கள் டவுன்லோட் செய்திர்களா என்று

நானும் ஓம் என்றேன் அப்படியானால் அவர்கள் கேட்டுக் கொண்ட 1800,€   நீங்கள் கட்டியே ஆக வேண்டும்

என்று அதன் பின்னர் 100€ படி கட்டுவதாக உறுதி அளித்து விட்டு ,வழக்கறிஞருக்கு 50€ ,,,கொடுத்து விட்டு வந்தேன் ,,

 

பின்னர் ,,பலவருட மா எடுக்கின்றேனே மாட்டவில்லை ,ஒருதடவை பிழைச்சு போச்சு ,,

ஆனால் டப்பிங் பட ஆசை மீண்டும் என் மண்டையை குடைய வேதாளம் முருங்கையில்  ஏறியது போல்

மீண்டும் ஒருக்கால் முயர்ச்சிப்பம் என்று முயற்சி எடுத்தேன் ,,

 

மீண்டும் அதே பிரச்சனை இம்முறை வந்த கடிதம் முன்ன கொம்பனி இல்லாமல்

வேறொரு கொம்பனிக்காரன் ,ஒரு புத்தகம் போன்ற கடிதத்தை அனுப்பினான்

அதே போன்று பல சட்ட பிரிவுகளை போட்டு 1600€   tw_cry:

இம்முறை வழக்கரிஞருக்கான    50€ ,,, வை மிச்சப்படுத்திக்கொண்டு என் நண்பர் மூலமாக

மாதம் 50€ கட்டிக் கொண்டு இருக்கின்றேன் ............

 

 

...ஆகவே நண்பர்களே  எதற்கும் ஆங்கில மொழி டப்பிங் படங்களை எடுக்கும் நண்பர்கள்

மிக கவனமாக இருங்கள்

 

 

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, அன்புத்தம்பி said:

....ஆகவே நண்பர்களே  எதற்கும் ஆங்கில மொழி டப்பிங் படங்களை எடுக்கும் நண்பர்கள்

மிக கவனமாக இருங்கள்

ஒ.... இரண்டு படம் பார்த்ததற்கு 3400 € தண்டமா?
தவலுக்கு நன்றி, அன்புத்தம்பி.

Share this post


Link to post
Share on other sites

நான் தமிழ் படங்கள் மட்டும்தான் டவுன்லோட் பண்ணுறனான். இதுவரை பிரச்சினை ஒண்டும் இல்லை. 

இங்கிலீஷ் படம் பார்ப்பது குறைவு. ஆனால் டாகுமெண்டரி பிலிம்ஸ் (பெரும்பாலும் எனது தொழில் சார்ந்த) விரும்பிப் பார்கிறனான்.

 

Share this post


Link to post
Share on other sites

நான் தமிழ்ப்படம்/தமிழ்பாடுக்களோடை சரி......அங்காலை எட்டியும் பார்க்கிறேல்லை.....அதோடை டவுன்லோட் மட்டும்தான்....அப்லோட் கட்.

Share this post


Link to post
Share on other sites

முன்னர் ஒரு காலத்தில் ரொரன்ற் டவுன்லோட் வழியைப் பாவித்து ஆங்கிலப் படங்களைப் பார்த்தேன். ஆனால் இணைய வழங்குனர்கள் எல்லாவற்றையும் அறியக்கூடியவர்கள் என்பதால் தமிழ்ப் படங்களோடு மட்டுப்படுத்தி பின்னர் Pirates bay தொடங்கியவரைக் கைது செய்த பின்னர் முழுமையாக விட்டுவிட்டேன். இப்போது ஓரளவு செலவுடன் streaming இல் எல்லாவற்றையும் பார்க்க முடியும். Netflix, Amazon streaming, Spotify போன்றனவே போதும்.

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner  • Topics

  • Posts

    • Over the phone referrals.!! தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள். ********************************** ..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்). போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ" "ஹலோ, சஜீதன் டொக்டரா" "ஓம், சொல்லுங்க, நீங்க?" " நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப" சத்தியமாக ஞாபகம் இல்லை. " ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்" " இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.." எதிர்பார்த்தது தான்..! " என்ன பிரச்சனை" " கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்காம், இரவுல நித்திரையும் வரல்லியாம், டொட் டொட் டொட்ட்ட்ட்...." அவர் முடிக்கும் வரை கேட்டு விட்டு, " எவ்வளவு காலமா? எந்தப் பக்கம்".. என்று வழமையாக கேட்கும் ஓரிரு கேள்விகளை கேட்டேன். " அக்கா இப்ப நித்திர கொள்ளுவா, எழும்புன உடனே கேட்டு சொல்லட்டா"? நேரம் அப்போது காலை 10 மணி. " என்ன இந்த நேரத்துல நித்திரை கொள்ளுறா" என்று கேட்டேன். " என்ன இப்பிடி கேக்கீங்க, இந்த நேரத்துல தானே நித்திரை கொள்ளணும்" என்றார். ஒருவேளை நைட் டியூட்டி செய்பவராக இருக்குமோ என்று நினைத்து, "ஒருவேளை இரவு கண்முழிச்சி வேலை செய்றதாலயும் தலையிடி வரலாம் " என்றேன். " என்ன டொக்டர் சொல்றீங்க? என்ன இரவு கண்முழிக்கிறது?அவ இரவுலதானே நித்திரை கொள்றா.." எனது கடிகாரம் இப்போது காலை 10.06 என்றது. " இப்ப இரவா காலையா" என்றேன். " நமக்குத்தான் காலை, அவக்கு இரவு தானே" என்றவர், " என்ன டொக்டர், எங்கட அக்காவ தெரியாதா உங்களுக்கு.. நீங்க சின்னப்புள்ளையா இருக்கக்குள எத்தின தரம் தூக்கியிருக்கா.. ஒருக்கா அவட சட்டையில சூ போய்.. ஞாபகம் இல்லியா.. அவ யூ.எஸ் போனது கூட தெரியாதா உங்களுக்கு " என்றார். இப்போது எனக்கு தலையிடித்தது. *********************** தலைப்புள் நுழையுமுன் சிறு சம்பவத்துடன் வருவோமென்று தொடங்கினால், அது அனுமார் வால் போல நீண்டு விட்டது. தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.. இதுதான் தலையங்கம்! மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இதை எதிர்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் தங்கள் மருத்துவ நண்பர்களுக்கோ, உறவினருக்கோ, தெரிந்தோருக்கோ இல்லை தெரிந்தவரின் தெரிந்தவருக்கோ இது தொடர்பாக போன் போட்டிருப்பீர்கள். முதலில் ஒரு நோய் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம் ( மருத்துவ துறைசார்ந்தோர் இப்பகுதியை ஸ்கிப் செய்து உங்கள் வாழ்நாளின் இரண்டு நிமிடங்களை சேமித்துக்கொள்ளுங்கள்) 😊 நோயாளி நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியரை சந்திப்பார். இங்கு அவரின் நோய்க்குணங்குறிகள் கேட்டறியப்படும். இதை history என்போம். இதிலிருந்து நமக்கு ஒரு "வடிவம்" கிடைக்கும். ஆனால் உள்ளடக்கம் இன்னும் தெரியாது. 😊😊 அதன் பின் நோயாளி வைத்தியரால் பரிசோதிக்கப்படுவார். Examination எனப்படும் இது மிகவும் முக்கியமான கட்டம். நோய் தொடர்பான பல முடிவுகள் இங்கு எடுக்கப்படும். ஒரு வைத்தியரின் அனுபவம் வெளிப்படுத்தப்படும் படிமுறை இது. இங்கு நோயாளியின் பொதுவான உடல்நிலை, நாடித்துடிப்பு, குருதியமுக்கம், இதயத்துடிப்பு, நுரையீரல்கள் என்று நிறைய விடயங்கள் பரிசோதிக்கப்படும். 😊😊😊 அதன்பின் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும். குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், ஈசீஜீ, எக்ஸ்ரே எல்லாம் இதில் அடங்கும். இவை அனைத்தையும் வைத்தே நோய் நிர்ணயிக்கப்பட்டு, மருந்து முடிவு செய்யப்படும். *************** இப்போது நமது " தொலைபேசி மருத்துவத்துக்கு" வந்தால், இங்கு மேற்கூறிய இரண்டாவது படியான examination ( நேரடியான உடல் பரிசோதனை) நடைபெற சாத்தியமேயில்லை. உதாரணமாக, " நான்கு நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, பசியில்லை, தலைசுற்றுகிறது" என்ற முறைப்பாட்டின் காரணம் - சாதாரண சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றாகவும் இருக்கலாம், அல்லது டெங்கு குருதிப்பெருக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை நேரில் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது. இன்னும் சிலர் நாலைந்து இரத்த மற்றும் சிறுநீர் ரிப்போர்ட்டுகளை வட்சப்பில் அனுப்பி, மருந்து கேட்பார்கள். ஒருவேளை மருத்துவ பாடத்திட்டத்தில் சாத்திரம், மந்திர தந்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்திருப்பார்களோ தெரியாது. இதில் மிக அபாயமான விடயம் சிறுவர்களின் நோய் தொடர்பானது. " டொக்டர், பிள்ளைக்கு ஆறுமாசம் இப்ப. ரெண்டு நாளாக தொடர்ந்து அழுது கொண்டே இருக்கு. பால் குடிக்கிறதும் குறைய.." " மகன் நாலைஞ்சி நாளா ஒரே சோர்வா இருக்கான். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கான்..." இப்படி சில முறைப்பாடுகள் வரும். இவை சில பாரதூரமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவர்களுக்கு நான் சொல்லும் பதில், " உடனே அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பிள்ளையை கொண்டு செல்லுங்கள்" என்பதே! *************** யோசித்துப் பாருங்கள்..! அமரிக்காவில் இருக்கும் அக்காவின் தலையிடியை மட்டக்களப்பில் இருந்து கொண்டு சுகமாக்க வேண்டுமானால் , நான் வைத்தியராக இருக்க வேண்டுமா இல்லை மந்திரவாதியாக இருக்கவேண்டுமா? மருத்துவம் என்பது ஒரு கலை. அனுபவித்துச் செய்ய வேண்டியது. ஒரு ஓவியனிடம் ஒரு காட்சியை விவரித்து அதை படமாக வரையச் சொல்வதற்கும், காட்சியை நேரில் பார்த்து , அனுபவித்து வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரண்டாவதில் தான் உயிரோட்டமான ஓவியம் உருவாகும். மருத்துவமும் அதே போலதான். நோயாளி நம்மை நோக்கி வருகையில், அவரின் நடையை அவதானிப்பதிலிருந்து மருத்துவம் தொடங்குகிறது. அவரது பேச்சு, தொனி, உடல்மொழி எல்லாவற்றிலும் மருத்துவம் கலந்திருக்கிறது. ஒருவரின் நாடித்துடிப்பு நிறைய விடயங்களை நமக்கு சொல்லும். இவையொன்றுமில்லாமல் வெறுமனே ரிப்போர்ட்டுகளை மட்டும் வைத்து மருத்துவம் பார்க்கவேண்டுமானால் அதை ஒரு கம்பியூட்டர் செய்துவிடுமே..! விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியிருந்தும் ஏன் ஒரு " ரோபோ மருத்துவரை" உருவாக்க முடியவில்லை? ஏனெனில் ஒரு குறித்த நோய் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தப்படும் விதம் ஆளுக்காள் வேறுபடும். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய அல்கோரிதம் இன்னும் உருவாக்கப்படவில்லை. ************ சாதாரண மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசியில் கேட்பது பிரச்சனையில்லை. உதாரணமாக " எனக்கு சீனிவருத்தம் இருக்கிறது, மெட்போர்மின் குளிசை பத்துவருடங்களாக பாவிக்கிறேன், மெட்போர்மின் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்கள், அதனால் குளிசை போடப் பயமாக இருக்கு.. என்ன செய்யலாம்" என்று ஒருவர் கேட்டார். அவருக்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள் மெட்போர்மினும், கிட்னியும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன் - தொலைபேசியூடாகத் தான்..!😆 இவ்வாறான ஆலோசனை கேட்கும் அழைப்புகள் ஆபத்தற்றவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை. ***************** எனவே, இயலுமான வரை தொலைபேசியூடான நோய்நிர்ணய முயற்சிகளை தவிர்க்கப்பாருங்கள். நோயாளியை வைத்தியரிடம் நேரடியாக காட்டுங்கள். முக்கியமாக நெஞ்சுவலி, மூச்சு கஷ்டம், திடீர் மயக்கம், காய்ச்சல் போன்ற ஆபத்தான அறிகுறிகளுக்கு ஒருநாளும் தொலைபேசி ஆலோசனைகளை நாட முயற்சிக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு!     DR சஜிதனின் முகப்புத்தகத்தில் இருந்து சுட்டேன்      206     Show More React   Comments       Hide or repor              
    • 1] இங்கிலாந்து  2] பாக்கிஸ்தான்  3] இலங்கை  4] அவுஸ்  5] தெ.ஆபிரிக்கா  6] இங்கிலாந்து  7] இலங்கை  8] இந்தியா  9] நியூசிலாந்து  10] அவுஸ்  11] இலங்கை  12] இங்கிலாந்து  13] நியூசிலாந்து  14] இந்தியா  15]மே.இந்தியா  16] இலங்கை  17] அவுஸ்  18] இந்தியா  19]இங்கிலாந்து  20] இலங்கை  21] தெ.ஆபிரிக்கா  22] இந்தியா  23] பங்காளதேஸ்  24] இங்கிலாந்து  25] சமநிலை  26] அவுஸ்  27] இலங்கை  28] இந்தியா  29] நியூசிலாந்து  30] தெ. ஆபிரிக்கா  31] பங்காளதேஸ்  32] இங்கிலாந்து  33] நியூசிலாந்து  34] இந்தியா  35] இலங்கை  36] சமநிலை  37] அவுஸ்  38] இந்தியா  39] இலங்கை  40] இந்தியா  41] நியூசிலாந்து  42] மே. இந்தியா  43] பாக்கிஸ்தான்  44] இலங்கை  45] அவுஸ்  46] இலங்கை,இந்தியா,அவுஸ்,இங்கிலாந்து  47] ஆப்கானிஸ்தான்  48] இலங்கை  49] இந்தியா  50] இலங்கை  51] இலங்கை  52] இந்தியா  53] மே. இந்தியா  54] இலங்கை  55] இந்தியா  56] இலங்கை   
    • மிகவும் நல்ல தகவல்கள். இந்த யாழ்ப்பாண பழைய வழக்கு சொற்கள் எமது குடும்பத்தில் நிறய பாவிக்கிறோம்.மெய்யே, உன்னாணை, கிழிஞ்சுது போ, நாச்சியார், ரொக்கம், பேச்சு மூச்சு , வீட்டறை என்னும்   நிறைய ....
    • புத்தர் இப்படி சிரித்திருக்க மாட்டார்   37/5000       புத்தர் இப்படி சிரித்திருக்க மாட்டார்