Sign in to follow this  
Athavan CH

நான் ஸ்ரீலங்கன் இல்லை ! தீபச்செல்வன் - தீபச்செல்வன்:

Recommended Posts

நான் ஸ்ரீலங்கன் இல்லை ! தீபச்செல்வன் -  தீபச்செல்வன்:

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல
 
சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல
 
செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல
 
என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல
 
என்னுடைய மண்ணில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக்  கொடி போல
 
என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல


தீபச்செல்வன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131319/language/ta-IN/article.aspx

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான் ஸ்ரீலங்கன் இல்லை.

தீபச் செல்வனின் சிந்தனையில் உதித்த.... அருமையான கவிதை. 
பகிர்வுக்கு நன்றி ஆதவன்.

Share this post


Link to post
Share on other sites

அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி!

இந்த வார ஆனந்தவிகடனில் இந்தக் கவிதை வெளியாகியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and outdoor

நான், ஸ்ரீலங்கன் இல்லை.
-----------------------

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

- தீபச்செல்வன் -

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய மண்ணில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக்  கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

- தீபச்செல்வன்

Share this post


Link to post
Share on other sites

அருமை! அருமை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன் சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம். இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும்  இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார். இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/69317
    • கோத்­தாபயவின் வெற்­றியில் மலை­யக மக்­களை பங்­கா­ளி­யாக்­கி­யது இ.தொ.கா.   கோத்­த­பாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்­சாண்­டி­யாகக் காட்டி அவ­ரது வெற்­றியைத் தடுக்க முனைந்­த­வர் கள் இப்­போது தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.  இந்­நி­லையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­யவின் வெற்­றிக்கு தோள் கொடுத்து மலை­யக மக்­களை வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக்கி இருக்­கின்­றது. இதன் மூலம் எமது மக்கள் பல்­வேறு சாதக விளை­வு­க­ளையும் பெற்றுக் கொள்­வது உறு­தி­யாகும் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக கரு­தப்­பட்­டது. இத்­தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­ய­போதும் கோத்­தா­வுக்கும், சஜித்­துக்கும் இடை­யி­லேயே போட்டி நில­வி­யது. எனினும் இத்­தேர்­தலில் பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகி இருக்­கின்றார்.  இவ­ரது வெற்றி ஒரு மிகப்­பெரும் சாத­னை­யாகும். கோத்­தாவின் வெற்­றிக்கு இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் காத்­தி­ர­மான பங்­காற்றி இருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆறு­முகன் தொண்­ட மான் கள ­நி­ல­வ­ரங்­களை  ஆராய்ந்து எடுத்த முடிவு மலை­யக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்கு உந்­து­சக்­தி­யாகி இருக்­கின்­றது. கோத்­த­பாய ராஜபக் ஷ யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதிப் பூங்­காற்று வீசு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கின்றார். ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின் றார். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் ஊடாக நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும், அபி­வி­ருத்­திக்கும் அவர் வித்­திட்­டி­ருக்­கின்றார். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கு­ரிய சகல தகு­திகளும் அவ­ருக்கு இருக்­கின்­றன. அவர் செயல் வீர­ராக விளங்­கு­கின்றார். அவ­ரது சிந்­தனை மற்றும் செயற்­பாடு தொடர்பில் ஆறு­முகன் தொண்­ட­மானும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் அதி­க­ளவில் நம்­பிக்கை கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அல்­லது ஐ.தே.க.வை ஆத­ரிக்கும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் கோத்­த­பாய ராஜபக் ஷவை பல்­வேறு வித­மாக விமர்­சித்து வந்­தனர். கோத்­த­பா­யவை மிகப்­பெரும் பூச்­சாண்­டி­யாகக் காண்­பித்து அவ­ரது வாக்­கை தடுக்க முயன்­றனர். எனினும் இது சாத்­தி­ய­மா­காத நிலையில் இப்­போது கோத்­தாவை விமர்­சித்­த­வர்கள் தோல்வி கண்­டுள்­ளனர். நல்ல ஒரு பாட­மாக அவர்­க­ளுக்கு அமைந்­தி­ருக்­கின்­றது. தனது அர­சியல் இருப்பை தக்க வைத்துக் கொள்­ளவும், சுய­நலன் கரு­தியும் செயற்­பட்­ட­வர்கள் இப்­போது மண்­ கவ்­வி­யுள்­ளனர். மக்கள் நலன் கருதி செயற்­ப­டா­த­வர்கள் தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஏனை­யோ­ருக்கு இது ஒரு பாட­மாகும். கோத்­த­பா­யவின் தலை­மையில் நாடு பல்­வேறு நன்­மை­க­ளையும் பெற்றுக் கொள்ளும். நாட்டின் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மேலோங்கும். சிறு­பான்மை மக்கள் பல்வேறு வழிகளிலும் நன்மையடைவர். மலையக மக்களின் அபிவிருத்தியும் மேம்படும். இ.தொ.கா. 32 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தபாய ராஜபக் ஷ பூரண ஒத்துழைப்பை வழங்குவார். கோத்தவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இ.தொ.கா. தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.    https://www.virakesari.lk/article/69305
    • நான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன். நீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.
    • புதிய ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களை விடு­விப்பார் - அருட்தந்தை சக்­திவேல் (ஆர்.விதுஷா) தமிழ்,  - முஸ்லிம்  மக்­களை  தம்­முடன்  ஒன்­றி­ணை­யு­மாறு  ஜனா­தி­பதி கோத்தபாய  ராஜ­பக் ஷ அழைப்பு  விடுத்­தமை  வர­வேற்­கத்­தக்­கது  என்று  தெரி­வித்த  அர­சியல்  கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய  இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர்  வண. பிதா  சக்­திவேல்  புதிய  ஜனா­தி­பதி  தமிழ்  அர­சியல் கைதி­களை  விடு­விப்பார்  என  நம்­பு­வ­தா­கவும்   தெரி­வித்தார்.   ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம்  கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்த­பாய ராஜ­ பக்ஷ பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அரசியல்  கைதி­களை  விடு­தலை  செய்­வ­தற்­கான  அமைப்பின்  நிலைப்­பாடு தொடர்பில்  வின­வி­ய­போதே  அவர்  இதனை  தெரி­வித்தார். அவர் இது தொட ர்பில்  மேலும்  தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ தமிழ்  மக்­க­ளையும் தன்­னுடன்  ஒன்­றி­ண­யு­மாறு  அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். இந்­நி­லை யில்  தமிழ் அர­சியல் கைதி­களின்  விடு­தலை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தி க­ளான மஹிந்த ராஜ­பக்  ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் ஆட்­சிக்­ கா­லத்­திலும் வேண்­டு­கோள்­களை முன் ­வைத்­தி­ருந்தோம்.   இருப்­பினும் தகுந்த தீர்வு எமக்கு  கிடைக்­க­வில்லை. இந்­நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்திரிபால  சிறி­சேன ஆட்­சிக்கு  வந்த 2015 ஆம்  ஆண்டின் முற்­ப­குதியில்  அர­சியல் கைதி­யொ­ருவர் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். ஆகவே, ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இத்­த­கைய கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும் என்று தெளி­வாக  தெரி­கின்­றது. அந்தவகையில் புதிய ஜனா­தி­பதி  தமிழ் அர­சியல் கைதி­களின் விடயம்  தொடர்பில்  கவனம் செலுத்தி அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்ளது.  தமிழ்  மக்கள் அவ­ருடன்  ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மாயின் அர­சியல் ரீதி­யான  அவர்­க­ளு­டைய  பிரச்சி னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம் பிக்கை  அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.  அந்தவகையில்   புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின்  நம்பிக்கையை  வென்றெடுப் பார் என நம்புகின்றோம்.   https://www.virakesari.lk/article/69298
    • 29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி (ரொபட் அன்டனி) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்  இந்திய பிரதமர் மோடியின்  அழைப்பு கடிதத்தை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  கையளித்தார்.   ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்   ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது      புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன்    பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும்   கையளித்தார். அதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29  ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக  உறுதியளித்தார். இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் மற்றும்  முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது  தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.     https://www.virakesari.lk/article/69292