Jump to content

கிறிபத்


putthan

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும்,  இணைய நண்பர்களுக்கு இணையத்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம் பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டு இல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்து அவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான் கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும்  சித்திரை புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு,சிங்கள புத்தாண்டு ,தமிழ்சிங்கள புத்தாண்டு எனஒவ்வோரு விதமாகசொல்லி பார்ப்பேன் ஆனால் மனுசன் அசையாது இது எங்கன்ட புத்தாண்டில்லை என அடம்பிடிப்பார்.அதுதான் இந்த முறை ஆரிய புத்தாண்டு என சும்மா சொல்லிப்பார்த்தேன்.அதுக்கும் மனுசன் அசையவில்லை.அவருக்கும் வயசு போய்கொண்டிருப்பதால் தொடர்ந்து அவருக்கு  தொல்லை கொடுப்பதில்லை என முடிவெடுத்தேன்.

வேலையால் வந்து மனிசி கோவிலில் எடுத்து வைத்திருந்த மருத்துநீரை சம்பூ போல தலையில் வைத்து தடவி ஒரு ல்ல முழுக்கு முழுகி போட்டு புது வேஸ்டியை அணிந்து எம் பெருமான் சிட்னிமுருகனிட்ட ஒரு விசிட் அடிக்க போனேன்,கோவிலுக்கு கிட்ட ஒரே போக்குவரத்து நெரிசலாக இருந்தது ,எனது கார் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது.போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எம்பெருமானை புத்தாண்டு தினத்திற்கு தரிசிக்க வந்த பக்தர்களின் வாகனங்களால் தான் ஏற்பட்டது என்பது பின்புதான் புரிந்தது.கோவில் வாசலில் "கார் பார்க் வுள்" என ஆங்கிலத்தில் எழுதி போர்ட் வைத்திருந்தார்கள்..

இன்று நடைதான் முடிந்த முடிவு என நினைத்தபடி குடும்பத்தினரை கோவில் வாசலில் இறக்கிவிட்டு காரை மீண்டும் கோவிலுக்கு வெளியே கொண்டு வந்து, அருகில் உள்ள பாதையில் நிறுத்திவிட்டு   முருகனை தரிசிக்க ஒடிவந்தேன் .கோவிலில் அறிந்தோர் எல்லாம் புதுவருட வாழ்த்து சொல்ல பதிலுக்கு நானும் "தங்க்யூ செம் டு யூ" என்று தேவாரம் போல எல்லொருக்கும் சொல்லிபடியே  முருகனை  பார்த்து  கைகூப்பி  அரோகரா சொல்லுவதற்கு பதிலாக புத்தாண்டு வாழ்த்துகள் என வாய்தடுமாறி சொல்ல சுதாகரித்து  மீண்டும் "அரோகா சிட்னி முருகனுக்கு அரோகரா" சொல்லியபடியே சுற்றிவந்து ,பிரசாதம் வாங்குமிடத்துக்கு சென்றேன்.

அங்கு நீண்ட வரிசை இருந்தது.அதில் நின்றால் முழு பிரசாதமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கால போக முடிவேடுத்து ,வரிசையில் தெரிந்தவர்கள் யாராவது நிற்கிறார்களா என பார்த்தேன் .வரிசையின் நடுவில் கந்தர் நின்றார் ,அவருக்கு அருகில் சென்று "அண்ணே புது வருசம் எப்படி போகுது" என்று கேட்டபடியே உள்நுழைந்து கொண்டேன்.

"ல்லாய் போகுது நீ சூழியன் மெல்லமாய்வந்து உள்ளே புதுந்திட்டாய்"

"ஒம்மண்ணெ ஒரு அலுவலாய் அவசரம் போக வேணும் அதுதான்"

பிரசாதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியால் மெல்ல மெல்ல வரிசை ஊர்ந்து சென்றது. ஒரு மாதிரி பிரசாத மேசையருகே வந்து கையில் இருந்த கோப்பையை நீட்டினேன் பூரி,பொங்கல்,லட்டு,சதுரமாக வெட்டிய சோத்துக்கட்டி,இன்னும் பெயர் தெரியாத பல பொருட்களும் தந்தார்கள்.

"அண்ணே என்ன இது "கிறிபத்" மாதிரிகிடக்கு" என்று சதுர சோத்து கட் "என்ன அண்ணே இன்றைக்கு பிரசாதம் கொஞ்சம் தூக்கலா இருக்கு"

"வருசப்பிறப்பு என்று போட்டு சனம் அள்ளி கொண்டு வந்திருக்கு "

"உனக்கு தெரியுமே சிங்களவ‌ரும்  இப்ப சிட்னி முருகனை கும்பிட வருயினமல்லோ,அவையள் கொண்டுவந்ததுதான் உது அவையளின்ட புதுவருடமும் இன்றைக்கு தானே"

"அண்ணே உந்த வருசப்பிறப்பை தவிர எங்களுக்கும் அவங்களுக்கும் வேறு ஒன்றில்லையும் ஒற்றுமையில்லையே...அது எப்படி வருசப்பிறப்பு மட்டும் பொதுவா கிடக்கு?"

" நான் எத்தனை வருசமா சொல்லுறன் அது ஆரிய புத்தாண்டு என்று நீ தான் கேட்கிறாயில்லை"

"ஆரிய புத்தாண்டு என்றியள்,வட இந்தியன் ஒருத்தனும் கொண்டாடுறாங்களில்லை"

"ஏன் இல்லை ,ஞாயிற்றுக்கிழமை பங்காளி காரங்கள் ஒலிம்பிக் பார்க்கில கொண்டாடுகிறாங்கள் ,"

" என்ன அண்ணே பாங்காளி எல்லாம் முஸ்லிம்கள் அவங்கள் எப்படி இந்துக்களின் கொண்டாடுவினம்"

"இந்தியாவில மேற்கு வங்காளத்தில் இருக்கிறவையள்  இந்துக்கள் அவையள் தான் விமரிசையாக கொண்டாடினம், பங்காளிகளின்ட பாஷைக்கும்,சிங்களத்திற்கும் தொடர்பு இருக்கு,அதோட அவங்களும் காளியை கும்பிடுறவங்கள்,சிங்களவங்களும் காளியை கும்பிடுறாங்கள் நாங்களும் கும்பிடுறம்,உவன் விஜயனும் அந்த பக்கதிலைலிருந்துதான் அகதியாக கள்ளத்தோணியில் சிறிலங்காவுக்கு வந்திருக்க வேணும்,பாளி ,சிங்கம் ,காளி ,சித்திரை புதுவருடம் எல்லாம் பங்காளிகாரங்களுடன் தொடர்புடையைவை"

என்று ஒரு விரிவுரை நடத்திய கந்தர்  உவங்கள் கிறிபத் கொடுத்தவங்கள் கட்ட சம்பொல்லையும் கொடுத்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என கிறிபத்தை சாப்பிட்ட படியே சொன்னார்.

" அண்ணே கோவிலில் வைத்து உப்படி கதைக்க கூடாது ,அதுக்கு மாசி போடுறவையள் அல்லோ"

"மாசியை போடாமல் சம்பலை கொடுக்கலாம் தானே,பூரி,லட்டு இப்படி எத்தனையோ கொடுக்கினம் சம்பல் கொடுத்தா என்ன?"

" கோவில்காரர் விட மாட்டினம்"

"அவங்களை பற்றி கதைக்காதே ,எனக்கு கோபம் வரும்"என்றவர் மிகபெரிய ஏப்பம் ஒன்றை விட்டபடியே ,இரவு சாப்பாட்டு இன்றைக்கு தேவையில்லை வா போய் கையை கழுவுவோம் என என்னை அழைத்தார்

இருவரும் கையை கழுவி விட்டு வீடு செல்லத்தாயாரானோம்.

"நாளைக்கு சிட்னி கிறிஸ்தவ தேவாலயத்தில தமிழ் சிங்கள புதுவருடம் கொண்டாடினம் வாறீயோ போவம்"

"என்ன அண்ணே தேவாலத்திலயோ,சேர்ச்சுக்கும் சித்திரை வருசப்பிறப்புக்கு என்ன சம்பந்தம்?"

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும் இப்ப நல்லிணக்கத்துக்கு ஓடி திரியினம் அந்த முயற்சியின் ஒரு செயல் வடிவம் தான் இது"

"சேர்ச் என்ற படியால் கேக் தான் கொடுப்பினம்"

"சீ சீ அங்க கிறிபத்தும் கட்ட சம்பலும் கொடுப்பினம் ,உனக்கு ஒருவிசயம் தெரியுமே அதிக எண்ணிக்கையிலான  தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று கூடுமிடம் சேர்ச்சு தான் அவர்களை பெளத்த அடையாளமான கிறிபத் மூலம் ஒன்றி ணைக்கலாம்"

"உதுல உவ்வளவு விசயமிருக்கோ,நான் நல்லிணக்க விளையாட்டுக்கு வரவில்லை நீங்கள் போறதென்றால் போய்யிட்டுவாங்கோ" என சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

காரில் வீடு செல்லும் பொழுது சம்சாரம் கேட்டார் ஞாயிற்றுக்கிழமை சாய் பஜனையில் தமிழ்சிங்கள புத்தாண்டு கொண்டாடினம் வார முடியுமோ என்று ,மூன்று மாதத்திற்கு முதல் தானே  கிறிமஸ்ஸும் ஆங்கில் புத்தாண்டும் கொண்டாடினீங்கள் பிறகென்ன இப்ப தமிழ் சிங்கள புத்தாண்டு என கேட்க,உங்களுக்கு விருப்பம்மென்றால் வாங்கோ சும்மா விசர் கதைகளை கதையாதையுங்கோ என்ற வர்

.நான் வரவில்லை என்று சொல்ல மெளனமாக வீடு வரை வந்தார்.

.ஞாயிற்றுகிழமை பத்து மணியளவில் முகம் கழுவிய பின்பு கோப்பியை குடிக்க குசினிக்குள் போனேன் .

"மில்க் ரைஸும் சம்பலுமிருக்கு  சாப்பிடுங்கோ"

"மில்க் ரைசோ"

"அது தான் சிங்கள ஆட்களின் பிரசாதம்,என்ன என்று சொல்லுறது"

" கிறிபத்தோ"

"எப்ப தொடக்கம் கிறிபத்தை பிரசாத லிஸ்ட்டில் சேர்த்தனீங்கள்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடங்கீட்டிங்களா உங்கன்ட அறுவையை,தயிர் ரைஸ் ,புளிரைஸ்,லெமன் ரைஸ் எல்லாம் பிரசாதமாக இருக்கும் பொழுது ஏன் மில்க் ரைஸ் இருக்கமுடியாது???,உங்களுக்கு சிங்களிஸ் மீது ஒரு கறள் அதுதான் உப்படி"

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

கோவிலில் அறிந்தோர் எல்லாம் புதுவருட வாழ்த்து சொல்ல பதிலுக்கு நானும் "தங்க்யூ செம் டு யூ" என்று தேவாரம் போல எல்லொருக்கும் சொல்லிபடியே  முருகனை  பார்த்து  கைகூப்பி  அரோகரா சொல்லுவதற்கு பதிலாக புத்தாண்டு வாழ்த்துகள் என வாய்தடுமாறி சொல்ல சுதாகரித்து  மீண்டும் "அரோகா சிட்னி முருகனுக்கு அரோகரா" சொல்லியபடியே சுற்றிவந்து ,பிரசாதம் வாங்குமிடத்துக்கு சென்றேன்.

 

அங்கு நீண்ட வரிசை இருந்தது.அதில் நின்றால் முழு பிரசாதமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கால போக முடிவேடுத்து ,வரிசையில் தெரிந்தவர்கள் யாராவது நிற்கிறார்களா என பார்த்தேன் .வரிசையின் நடுவில் கந்தர் நின்றார் ,அவருக்கு அருகில் சென்று "அண்ணே புது வருசம் எப்படி போகுது" என்று கேட்டபடியே உள்நுழைந்து கொண்டேன்.

 

"ல்லாய் போகுது நீ சூழியன் மெல்லமாய்வந்து உள்ளே புதுந்திட்டாய்"

அருமை புத்தன், நன்றாக உள்ளது.tw_blush:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரி புத்தன்....! ஏனோ தெரியாது மனிசிமாரிட்ட மட்டும் ஜம்பம் பலிப்பதில்லை....!  tw_blush:

Link to post
Share on other sites
On 4/24/2016 at 10:16 AM, ஜீவன் சிவா said:

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குது 

வாழ்த்துக்கள்

உண்மைதான். சிட்னி கோசிப்பில் கிறுக்கத்தொடங்கிய புத்தனின் கதைசொல்லும் ஆர்வம் (அதற்கு முன்னே ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் சிட்னி கோசிப்தான் ஆரம்பபுள்ளியாக இலகுவில் இனங்காண உதவுகின்றது) இப்போது பல படிமுறைகளில் வளர்ச்சியடைந்து திறமையான சிறுகதையாசிரியரின் நிலைக்கு வந்துள்ளது. நான் ஆரம்பத்திலிருந்து புத்தனின் எழுத்துக்களை வாசித்து வந்துள்ளேன் என்றவகையில் இந்த வளர்ச்சி எனக்கு கண்கூடாக தெரிகின்றது. நிறுத்தற்குறிகள் தட்டச்சு செய்யும்போது முன்பின் நகர்வது தவிர வேறு குறைகளை நான் இப்போது காணவில்லை. 

புத்தன் கதைகள் எழுதும்போது ஐபாட் பயன்படுத்துகின்றீர்களா? அல்லது மேசைக்கணணியா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காய் புத்தன்! கிரிபத் அந்தமாதிரி tw_thumbsup: ....ஐ லைக் யூ :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஆரிய புத்தாண்டு வாழ்த்துகள் புத்தன் அண்ணா 

கதையும் கிரிபத்தும் ஆஹா ஓகோ??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2016 at 2:33 PM, putthan said:

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடங்கீட்டிங்களா உங்கன்ட அறுவையை,தயிர் ரைஸ் ,புளிரைஸ்,லெமன் ரைஸ் எல்லாம் பிரசாதமாக இருக்கும் பொழுது ஏன் மில்க் ரைஸ் இருக்கமுடியாது???,உங்களுக்கு சிங்களிஸ் மீது ஒரு கறள் அதுதான் உப்படி"

ஒரு கறள் இல்லை

ஒட்டமுடியாத 

மனதுக்கு புலப்படாத பல கறள்கள் கிடக்கு...

இங்கயும் கடைக்கு வந்தா

அவையும் ஒரு மாதிரி பார்ப்பினம்

நானும் தான்...

நன்றி  கிறுக்கலுக்கு சீ

கிரிபத்துக்கு புத்தர்

தொடர்ந்து தாங்கோ...

சிலவேளை ருசி பட்டு நாங்களும் மாறலாம்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும்":unsure: 

இப்படி அவுசிஸிலும் உள்ளதா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை வழக்கம் போல,,,,அந்த மாதிரி!

ஆனால் இந்தக் கதையில் வரும் 'கந்தரை' ஒருக்காச் சந்திக்க வேண்டும் போல உள்ளது!

நம்ம 'கந்தப்பு' இல்லைத் தானே?

தொடர்ந்து எழுதுங்கள் புத்தன்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/04/2016 at 10:45 PM, தமிழ் சிறி said:

அருமை புத்தன், நன்றாக உள்ளது.tw_blush:

நன்றிகள் சிறி 

On 24/04/2016 at 11:52 PM, suvy said:

கதை அந்தமாதிரி புத்தன்....! ஏனோ தெரியாது மனிசிமாரிட்ட மட்டும் ஜம்பம் பலிப்பதில்லை....!  tw_blush:

நன்றிகள் suvy...24/7 அவையளோட தான் இருப்பு .....அதுதான்tw_tounge_wink:

On 24/04/2016 at 0:16 AM, ஜீவன் சிவா said:

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குது 

வாழ்த்துக்கள்

நன்றிகள் ஜீவன்

On 25/04/2016 at 7:14 AM, கலைஞன் said:

உண்மைதான். சிட்னி கோசிப்பில் கிறுக்கத்தொடங்கிய புத்தனின் கதைசொல்லும் ஆர்வம் (அதற்கு முன்னே ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் சிட்னி கோசிப்தான் ஆரம்பபுள்ளியாக இலகுவில் இனங்காண உதவுகின்றது) இப்போது பல படிமுறைகளில் வளர்ச்சியடைந்து திறமையான சிறுகதையாசிரியரின் நிலைக்கு வந்துள்ளது. நான் ஆரம்பத்திலிருந்து புத்தனின் எழுத்துக்களை வாசித்து வந்துள்ளேன் என்றவகையில் இந்த வளர்ச்சி எனக்கு கண்கூடாக தெரிகின்றது. நிறுத்தற்குறிகள் தட்டச்சு செய்யும்போது முன்பின் நகர்வது தவிர வேறு குறைகளை நான் இப்போது காணவில்லை. 

புத்தன் கதைகள் எழுதும்போது ஐபாட் பயன்படுத்துகின்றீர்களா? அல்லது மேசைக்கணணியா?

நன்றிகள் கலைஞன் ..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிப்போட்டியள் ...இனி எழுத்தாளர் விழாக்களில் துணிந்து பங்குபற்றலாம்....மடிக்கணனியைதான் பாவிக்கிறேன்.....:rolleyes:

On 26/04/2016 at 11:21 AM, குமாரசாமி said:

காய் புத்தன்! கிரிபத் அந்தமாதிரி tw_thumbsup: ....ஐ லைக் யூ :cool:

நன்றிகள் குமாரசாமி .....வ‌ருகைக்கும் விருப்பத்திற்க்கும்

On 26/04/2016 at 0:16 PM, முனிவர் ஜீ said:

உங்களுக்கு ஆரிய புத்தாண்டு வாழ்த்துகள் புத்தன் அண்ணா 

கதையும் கிரிபத்தும் ஆஹா ஓகோ??

நன்றிகள் முனீவர் ஜீ....உங்களுக்கும் எனது ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 26/04/2016 at 8:13 PM, விசுகு said:

ஒரு கறள் இல்லை

ஒட்டமுடியாத 

மனதுக்கு புலப்படாத பல கறள்கள் கிடக்கு...

இங்கயும் கடைக்கு வந்தா

அவையும் ஒரு மாதிரி பார்ப்பினம்

நானும் தான்...

நன்றி  கிறுக்கலுக்கு சீ

கிரிபத்துக்கு புத்தர்

தொடர்ந்து தாங்கோ...

சிலவேளை ருசி பட்டு நாங்களும் மாறலாம்..

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.....கிறிபத்தை ருசிக்க‌லாம் தப்பில்லை அதற்காக எங்கன்ட புக்கையை கை விடமுடியாது:rolleyes:

On 26/04/2016 at 8:23 PM, colomban said:

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும்":unsure: 

இப்படி அவுசிஸிலும் உள்ளதா?

நன்றிகள் கொழும்பான்....ஏன் இல்லை.....இருக்கு

3 hours ago, சுவைப்பிரியன் said:

கதை அந்தமாதிரி :)

நன்றிகள் சுவைப்பிரியன்

2 hours ago, புங்கையூரன் said:

கதை வழக்கம் போல,,,,அந்த மாதிரி!

ஆனால் இந்தக் கதையில் வரும் 'கந்தரை' ஒருக்காச் சந்திக்க வேண்டும் போல உள்ளது!

நம்ம 'கந்தப்பு' இல்லைத் தானே?

தொடர்ந்து எழுதுங்கள் புத்தன்!

நன்றிகள் புங்கையுரன்.....கந்தப்பு சின்ன பெடியன்....கந்தரை நீங்கள் அதிகம் கண்டிருக்கமாட்டியள்... 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்து கிரிபத்தை விட 25 வருடத்திற்கு மேல் தேடிக் கொண்டிருக்கும்

மருத்து நீர் ரொம்பவும் பிடித்திருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

புத்து கிரிபத்தை விட 25 வருடத்திற்கு மேல் தேடிக் கொண்டிருக்கும்

மருத்து நீர் ரொம்பவும் பிடித்திருக்கு.

நன்றிகள் ஈழப்பிரியன்,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....சிட்னி முருகன் புண்ணியத்தில் மருத்து நீர் எங்களுக்கு ஓவ்வோரு வருட‌மும் கிடைக்குது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்தா கதை நன்று, தொடருங்கள், உங்களுக்கு துரும்பு கிடைச்சா காணும், கதையாக்கிவிடுகின்றீர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரித்தான் இருக்கின்றது. சிங்களவர்களுடன் நல்லிணக்கமாகப் போவது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் நடக்கின்றது. மேற்குலகோடு நல்லுறவைப் பேணும் ஐதேக இப்படியான விடயங்களை ஊக்குவிக்கின்றது போலுள்ளது. சிட்னி முருகனும் சிங்களவர்களின் தெய்யோவாக வந்துவிட்டாராக்கும். இனி புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர்களும் கறுவாக்காட்டுப் பக்கம் போய் நல்லிணகத்தைக் உறுதியாக்கி 1955 க்கு முந்தைய இலங்கையை உருவாக்கவேண்டியதுதான் மிச்சமாய் உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கதை அந்தமாதிரித்தான் இருக்கின்றது. சிங்களவர்களுடன் நல்லிணக்கமாகப் போவது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் நடக்கின்றது. மேற்குலகோடு நல்லுறவைப் பேணும் ஐதேக இப்படியான விடயங்களை ஊக்குவிக்கின்றது போலுள்ளது. சிட்னி முருகனும் சிங்களவர்களின் தெய்யோவாக வந்துவிட்டாராக்கும். இனி புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர்களும் கறுவாக்காட்டுப் பக்கம் போய் நல்லிணகத்தைக் உறுதியாக்கி 1955 க்கு முந்தைய இலங்கையை உருவாக்கவேண்டியதுதான் மிச்சமாய் உள்ளது.

நல்லிண‌க்கமோ சொல்லி வேலையில்லை...மேட்டுக்குடிகளும் இனிமேல் மேட்டுக்குடியாக வருவதற்கு முயற்சி செய்வோரும் நல்லிண‌க்கத்திற்காக "தீயா" வேலை செய்கின்றார்கள்... 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு! வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தவறான கருத்தாகும். அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது தேசிய தேவையாகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டது. இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும். காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது. எனவே, இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலைமனுக்கோரல் விடப்பட்ட வேளையில், அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர். எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர். இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்தனர். இந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது. இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது. எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார். இந்த விடயத்தில் இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது, இராஜதந்திர நகர்வுகளோ இல்லை. இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை. எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/வடக்கின்-தீவுகளை-வெளிநாட/
  • ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்காவும் மற்றொரு புறம் டிஜிற்றல் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் ஒலி வடிவப் பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் என்பன அமைக்கப்பட்டு வந்தன. இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-சிலையுடன்-அ/
  • அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உடனடியாக 40 இலட்சம் டோஸ்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/அமெரிக்காவில்-3ஆவது-கொரோ/
  • அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்! ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணுசக்தி-மையங்களில்-ஐ-நா/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.