Jump to content

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.


Recommended Posts

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.

எதனையும் சந்திக்க நாங்கள் தயார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், எந்தச் சவாலையும் எவ்வளவு காலத்துக்குள்ளும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வன்முறைகளில் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் நாள் 10 கொலைகள் பதிவாகின. நேற்று 15-க்கும் அதிகமானோர் மன்னாரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புத்தாண்டுக்கு முதல் நாள், சிறிலங்கா அரசாங்கம் எங்களை போருக்குத் தள்ளுகின்றது என்று எச்சரிக்கை விடுத்த விடுதலைப் புலிகள், எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழ் மக்கள் மீது போரைத் திணித்து, தமிழர்களது சொந்த இடத்தில் இருந்து அவர்களை முற்றாக ஒழித்துவிட நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாட்டில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்துலக சமூகத்தின் நடுநிலையான அறிக்கைகள் எதுவும் எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்தாது என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

போர் அபாயத்துக்கு இடையிலும் புதிய ஆண்டில் நல்லதையே எதிர்பார்க்கிறோம் என்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

-puthinam-

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இப்படி அறிக்கை விட்டு விட்டே 3000 பேருக்கும் மேல பலியிட்டாச்சு..! எனியும் காவலிருக்கவோ வேணும்..தமிழ் மக்களைப் பாதுகாக்க எடுத்த ஆயுதம் இப்ப பாதுகாக்கிறதாத் தெரியல்ல...கிழக்கு குரங்கு கையில அப்பம் போல பிச்சுப் புடுங்கி..சின்னாபின்னமாகிட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இப்படி அறிக்கை விட்டு விட்டே 3000 பேருக்கும் மேல பலியிட்டாச்சு..! எனியும் காவலிருக்கவோ வேணும்..தமிழ் மக்களைப் பாதுகாக்க எடுத்த ஆயுதம் இப்ப பாதுகாக்கிறதாத் தெரியல்ல...கிழக்கு குரங்கு கையில அப்பம் போல பிச்சுப் புடுங்கி..சின்னாபின்னமாகிட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல கருத்துக்களால் வாய்சவடால் விடும் வேலையை நெடுங்கால போவான் ஆரம்பித்து விட்டார். ஏதோ தமிழ்மக்களைக் காக்குகின்ற பொறுப்பு புலிகளை மட்டும் தான் சார்ந்தது என்றும் அவ்விடயத்தில் மற்றவர்கள் மூன்றாம் மனிதர்கள் என்ற கணக்கில் கதை எழுதுவதை முதலில் நிற்பாட்டுவது நல்லது.

தமிழ்மக்களைக் காக்க எடுத்த ஆயுதம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அந்த ஆயுதங்களை மற்றவர்ள் வைத்திருக்கின்றபோது தான் இத்தனை இனப்படுகொலைகள் நடப்பதை மறந்து விட்டார் போலும். மற்றது சரத் பொன்சேகா விடும் கதையைப் போல புலிகள் கிழக்கில் பலமிளந்தது என்பது போல கதை எழுதுகின்றார். அப்படியானால் சிங்கள தேசம் அதன் இறையாண்மையை நிலைநாட்டுவது தானே.

எப்ப விடுதலைப்புலிகளால் மக்களைப் பாதுகாக்க முடியல்லையோ அப்பவே அது கைமாறிப் போயிட்டுது என்றதுதான் நிலை. அப்ப யாழ்ப்பாணம் இன்னும் புலிகளின் கையில் என்று சொல்லுறீங்களோ...?! அப்ப ஏன் தினம் தினம் படுகொலைகளை நிறுத்த முடியல்ல. வன்னில அப்படி நடக்காமல் மக்கள் பாதுகாக்கப்படுவது போல் நிலை கிழக்கில்..யாழில் இல்லையே...??!

மற்றவர்கள் மக்களைக் காக்க ஆயுதம் எடுத்ததாகச் சொல்லிக் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் மட்டுமே மக்கள் இயக்கமாக உள்ளதால் அவர்களின் கொள்கை அதுவானதால் மக்கள் அவர்களை நோக்கித்தான் வினாத் தொடுப்பர்..??!

நெடுக்காலபோவன் எதுவும் புதிசாச் சொல்லவில்லை. நடப்பவை சொல்லப்பட்டிருக்கிறது..! தீர்வுகள் வேண்டும் என்பது அவசரமாகி உள்ளது உணர்த்தப்பட வேண்டும்..உணரப்பட வேண்டும்..!

இக் கருத்து மூலம் ஏதோ புலிகள் தான் தமிழீழம் கேட்டது போலவும், மக்கள் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழவும் ஆசைப்படுகின்றார்கள் என்ற தொனியில் எழுதும் கபடத்தை உணர முடிகின்றது. அப்படிப் பார்த்தால் இன்றைக்கு இவ்வளவு போராளிகளும் மக்களில் இருந்து தான் வந்தவர்கள் என்ற நியாயத்தை உணர வேண்டும்.

ஏதோ சிங்கள மக்களோடு வாழவில்லையா இன்று. கொழுப்பில் இருக்கும் தமிழர்கள் என்ன தமிழீழத்திலா வாழ்கின்றனர். கபடத்தனமாக யதார்த்ததுக்கு அப்பால் எழுதிக் கொண்டு உலகை ஏமாளியாக நீங்கள் பார்கிறீர்கள். நாம் அல்ல. உலகம் நங்கு அறியும். அது பிரச்சனைகளைத் தெளிவாகப் பார்க்கிறது. போராளிகள் மக்களின் இருந்து வந்தவர்கள் என்பதை எவரும் மறுக்கவில்லையே. அதேபோல் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழும் தமிழர்களும் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அது கட்டாயத்தின் பேரில் இருக்கலாம்..அல்லது தேவையின் பெயரில் இருக்கலாம். ஆனால் அதுவே தமிழர்களின் விருப்பம் அல்லது உரிமை என்பது அல்ல இங்கு சொல்லப்படுவது. தமிழர்கள் தங்கள் உரிமைகளை கேட்டுப் பெற முடியாது எனும் நிலை உள்ள போது போராடிப் பெற வேண்டும். அன்றில் தினம் தினம் அழிவடைந்து பலவீனப்படுவதால் கிழக்கை பலவீனப்படுத்தி அந்நியருக்கும் குடியேற்றத்துக்கும் விற்கப் பயன்படுத்துவதைக் கண்முன்னால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலையிலும்..சிங்களவனோடு அடிமையாக வாழ்வதால் கொஞ்சம் நெஞ்சமாவது மிஞ்சும்..என்ற நிலையே மக்கள் மத்தியில் எழும். நிலத்தை விட்டு ஓடியவர்களுக்கும் நிலத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களுக்கும் இடையில் நிறையவே இடைவெளி உண்டு. தமிழர்களில் பலர் துரத்தப்படாமலே போர்ச் சூழலை நம்பி பொருளாதாரம் சேர்க்க அந்நியரிடமும் சிங்களவரிடமும் சரணடைய நிலத்தை விட்டு ஓடியவர்கள் என்ற உண்மையையும் நாம் பார்க்க மறுக்கவில்லை..!

உமக்கத் தனியே பல தடவை பாடம் எடுத்தாச்சு. அதன் பிறகு உம் புத்தியை மாத்துவதாகத் தெரியவில்லை.

எமக்கு பாடமெடுக்கும் நிலையில் நாம் இல்லைப் பாருங்கோ. பிள்ளைகளை இழந்து ஒப்பாரி வைக்கும் பெற்றோருக்குப் போய் பாடம் எடுங்கோ. விளக்குமாத்தால நல்ல விளக்கம் தருவினம்..!

இன்றைக்கு அப்பாவி இளைஞர்களை யார் கொல்லுகின்றார்கள். கருணா என்ற கைக்கூலியும், இராணுவப் புலனாய்வுக்காரர்களும் தானே! இவ்வளவு பேர் கொல்லப்படும்போது தமிழ்மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்துக்க வலு சேர்க்க வேண்டும். அதை விட்டுப் போட்டு எதிரி தங்கள் வீட்டுப்படலைத் தட்டும் வரைக்கும் என்று காத்திருந்தால் இப்படியான படுகொலைகளை எவ்வாறு நிறுத்த முடியும்? ஒவ்வொரு வீட்டிற்கும் புலிகள் பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்ன?

எனவே இந்த நேரத்தில் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து செயலாற்ற வேண்டியதே முக்கிய தேவையாகும். புலிகள் காப்பாற்றுவார்கள் என்று தங்களின் தனிப்பட்ட சொந்த தாபங்களில் மூழ்கியிருந்தால் அது எதிரிக்கு கொல்லுவதற்கு நல்ல வசதியாகப் போகும். எப்பொதுமே தனித்து வைத்து கொல்வது தான் அவனுக்கு இலகு.

வன்னியில் பாதுகாக்க முடிகிறதல்லவா..?! ஏன் அதே நிலையை அங்கும் விரைந்து தோற்றுவிக்கக் கூடாது. அந்த மக்களுக்கும் இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம். இப்ப அதுவேதான் கருணாவுக்கு ஆதரவாகவும் மாறலாம். இப்படி மக்கள் பலியிட சந்தர்ப்பம் அளிக்கப்படுவதால்..மக்கள் தாங்களாகவே அவர்களுக்கு ஒத்துழைப்பு என்று தங்களைப் பாதுகாக்க முனைவர். அப்போ புலிகளுக்கு அவர்கள் துரோகிகள் ஆகிவிடுவர். ஆக..புலிகள் தான் மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள். மக்கள் தங்களைப் பாதுகாக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதைப் புலிகள் செய்ய வேண்டும். தவறின் மக்கள் அடுத்தவரை நம்பி ஓடுவர். வாகரையில் நடந்தது என்ன..?! புலிகளை நம்பி சம்பூரை விட்டு வந்த மக்கள் வாகரையில் காட்டுக்குள்ளால் இராணுவத்தை நோக்கி வர இராணுவம் வழி செய்தது. இதைத் தடுத்திருக்க வேண்டியது புலிகள். அவர்கள் செய்யாத போது மக்கள் அவர்களை எப்படி நம்புவார்கள்..??! மக்களை புலிகள் யுத்தக் கேடயம் ஆக்குகிறார்கள் என்ற பிரச்சாரம் தானே எழுகிறது. அதற்கு காரணம் வைத்தது யார்...??!

ஏற்கனவே பொங்கல்விழாவைச் சமாதானகாலத்தில் குழப்பினீர். இப்போது யுத்த நிலையை வைத்துக் குழப்பப் பார்க்கின்றீர் என்பது மட்டும் வேடிக்கை. நீர் தாயகத்தில் மக்கள் சாப்பிட வழியின்றி இருந்தது என்பதற்காக உண்ணாமல் உடுக்காமல் திரிந்தீரா? அல்லது தரமான உணவுவகைகளை உண்ணாமல் இருந்தீரா? அல்லது காதலியோடு களியாட்டங்களில் ஈடுபடாமல் இருந்தீரா? மத்தியலண்டனில் உம் வண்டவாளம் தெரியும். ஏன் என்னவோ நீர் மட்டும் தான் தாயக மக்களுக்கு கஸ்டப்பட்டு அறிக்கை எழுதுவது போலப் படம் காட்டுகின்றீர்.

மக்கிள்ன துன்பங்களைத்துடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதே கடப்பாடு. அதற்கு பொங்கல் விழா கூட செய்தி சொல்லும் இடமாக மாறலாம். எமக்கான ஒற்றுமைகளைப் பலப்படுத்த எந்த முயற்சியும் செய்வதில் தப்பில்லை. எனவே இவ்வாறன ஒன்றுகூடல்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

(தனிப்பட்டரீதியில் சிலர் மீது உள்ள வெறுப்பைக் கக்க, அரசியலைப் பாவிப்பது வேதனைக்குரியது)

உங்களின் கற்பனையில் நீங்கள் போடும் முடிச்சுகளுக்கு நாம் பொறுப்பல்ல. அதற்கு நீங்களே பொறுப்பாகிக் கொள்ளுங்கள்.

தமிழர்களின் கலாசார அடையாளம்..அல்லது பண்பாடு என்று பொங்கலைப் பொங்க முனைபவர்களே இன்னொரு பகுதியால் தமிழர்களின் கலாசாரம் பண்பாடு காலத்தோடு மாறுபடுவது எங்கின்றனர். போர் நிகழ்கிறது. குருதி பாய்கிறது. மக்களின் உடலங்களோடு பனர்கள் காவுபவர்களே நாளை பொங்கல் என்று கலாசாரமும் கொண்டாடப் போகின்றனர். இந்த நிலையில் இவர்கள் தாயகத்தில் போர் என்ற ஒன்றும் போராட்டம் என்ற ஒன்றும் தோன்றி இராவிட்டால் எட்டி இருப்பரா..??! ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் தாண்டி இருப்பரா...??! இன்று அகதிகளாக அகதி முகாம்களிலும்..பிள்ளைகளின் கதி என்னாகுமோ என்று பதறிய நிலையிலும் எதிர்காலமே என்னாகுமோ என்று இளைஞர்களும் யுவதிகளும்..போருக்கான தயார்ப்படுத்தலில் போராளிகளும்.. மக்களும்.. உறவுகளை இழந்து கண்ணீரில் உறவுகளும்..ஆக்கிரமிப்புக்கும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை நம்பி சம்பூரை விட்டு வந்த மக்கள் வாகரையில் காட்டுக்குள்ளால் இராணுவத்தை நோக்கி வர இராணுவம் வழி செய்தது. இதைத் தடுத்திருக்க வேண்டியது புலிகள்.

நெடுக்கின் கருத்தோடு உடன்படுகிறேன். அந்த நேரமே தமிழர் தாயகங்களில இருந்து கொழும்பு நோக்கியும் ஐரோப்பா நோக்கியும் மத்திய லண்டன் நோக்கியும் வந்து கொண்டிருந்த தமிழர்களை தடுத்திருக்க வேண்டியவர்கள் புலிகள். அண்டைக்கு தடுத்து நிறுத்தியிருந்தால் இண்டைக்கு இந்த மாதிரி அட்வைசுகளை கேட்க வேண்டி வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக வந்த நிலவரத்தைக் கேட்காமல் கூப்பாடு போடுகின்ற மாதிரித் தெரிகின்றது. புலிகள் மக்களின் அழிவுக்குக் காரணம், புலிகள் மேல் நம்பிக்கை இல்லையென்றால் நேரடியாகச் சொல்லுவதுதானே.

குறுகிய, தெளிவற்ற சிந்தனைகளுடன் குருவி இருக்கின்றார் (சொறி நெடுக்ஸ்) என்று எல்லோருக்கும் தெரியும்தானே..

http://www.tamilnaatham.com/audio/2006/dec...m/20061231.smil

Link to comment
Share on other sites

யோவ் காவடி, அரசியல் பறைஞ்சது காணும் அங்காலை வரும் நாங்கள் பாலியல் பணியாளர்கள் பற்றிய ஆய்வைத் தொடருவம். புலிகள் அது செய்து இருக்க வேணும் இது செய்து இருக்கவேணும் எண்டு புலம்பினது காணும்.

சபேசனை வேற காணேல்லை. பகுத்தறிவாளர்களையும் போட்டுத்தள்ள வேணும் என்று சொன்னதோடை தலைமறைவானவர் இன்னும் வந்த பாடில்லை. :icon_idea:

Link to comment
Share on other sites

புலிகளின் உத்தியோக பூர்வ புது வருட செய்தியில் '' 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் ......... இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கோரி வந்தனர்.'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ''சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், எந்தச் சவாலையும் எவ்வளவு காலத்துக்குள்ளும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் . ...தமிழ் மக்கள் மீது போரைத் திணித்து, தமிழர்களது சொந்த இடத்தில் இருந்து அவர்களை முற்றாக ஒழித்துவிட நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாட்டில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்துலக சமூகத்தின் நடுநிலையான அறிக்கைகள் எதுவும் எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்தாது '' என்று இளந்திரயன் கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் பிரத்தியேக அழுத்தங்கள் இல்லாத நிலையில் யுத்த சுமையையும் அன்றாட அழிவுகளையும் தொகை வகையற்ற உயிர் இழப்புகளையும் தமிழ் மக்களால் தனித்து தாங்கிக்கொள்ள முடியாது. இது எமது போராட்டத்தின் இன்றைய நிலையில் புதிய அரசியல் அணுகு முறை குறித்தே எம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க அழுத்துகிறது. ஒரு (இடைக்கால ...?)அரசியல் தீர்வு தற்போது தவிர்க்க முடியாது உள்ளதாகவே தமிழீழ கள நிலவரம் மற்றும் தமிழ் கூட்டமைப்பினர் கொண்டுவந்த செய்திகள் அதாவது பிராந்திய அரசியல் சூழல் எமக்கு சமிக்கை காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

tamil makkal poromaiji ilanthu irukkirarkal summai summai arikkaikalaividdukkundu irukkamal sejalmurajilai kaddavenum :angry: :angry: allthu vajai summai vaththukkondu iruththal pothum :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக வந்த நிலவரத்தைக் கேட்காமல் கூப்பாடு போடுகின்ற மாதிரித் தெரிகின்றது. புலிகள் மக்களின் அழிவுக்குக் காரணம், புலிகள் மேல் நம்பிக்கை இல்லையென்றால் நேரடியாகச் சொல்லுவதுதானே.

குறுகிய, தெளிவற்ற சிந்தனைகளுடன் குருவி இருக்கின்றார் (சொறி நெடுக்ஸ்) என்று எல்லோருக்கும் தெரியும்தானே..

http://www.tamilnaatham.com/audio/2006/dec...m/20061231.smil

இப்படிக் குருவி அருவி என்று கருத்தைத் திசை திருப்பாமல்..தமிழர்களின் சனத்தொகையும் பூர்வீக நிலமும் குறுகி வருவதற்கான நெடுகிய சிந்தனையை சர்வதேசம் கண்டும்காணாமலும் இருப்பதை நெடுக்கிய கண்ணோட்டத்தில் கொஞ்சம் மக்களுக்கு தெளிவுபடுத்தலாமே..! தினம் தினம் பிள்ளைகளையும் வாழ்விடங்களையும் இழக்கும் மக்களை இந்த நெடுக்கிய விளக்கங்கோடு ஏன் புலிகள் இன்னும் சந்திக்கவில்லை. பதிலாக எதிர்கொள்வோம்..விடுதலையை வென்றெடுப்போம்..விரட்டுவோம்...

Link to comment
Share on other sites

அன்றாடம் நிகழும் துயரச் சம்பவங்களுக்கு ஏற்றவாறு கவலையாக, மக்களின் குரலைப் போல விசைப்பலகையால் எழுதுவதைப் போல் சுகமான விடயம் ஒன்றும் இருக்க முடியாது.மக்களின் துயரைத் துடைக்க களத்தில் நின்று போராடுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.போராட்டம் இழப்புக்கள் இன்றி நிகழப் போவதில்லை.ஒவ்வொரு இழப்பிலும் மக்களோடு நின்று போராடும் சக்திகளைப் பார்த்து கேள்வி கேட்கும் இவர்களால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியுமா? இடைக்காலத் தீர்வு சமாதானம் புதிய அணுகுமுறை என்னும் அர்த்தமற்ற சொற்களை உதிர்வதால் எதாவது ஆகிவிடுமா?

காற்றுக்கு அல்லாடும் சருகுகளைப் போன்ற இவர்களின் கருத்துக்கள், நாளை அடிக்கும் சூறவழியில் எங்கோ பறந்து விடும்.சில சருகுகிகள் நாங்கள் இதை அப்பவே சொன்னோம் இல்ல, நாங்கள் சொன்னதைத் தான் புலிகள் இபோது செய்கிறார்கள் என்று அந்த வெற்றியிலும் தம் பெருமை தேடும் என்பதில் எவரும் ஐய்யம் கொள்ளத் தேவையில்லை.

இங்கே இவ்வாறு விசைப்பலகையில் வேடம் இடும் இவர்கள் எவ்வளவு அயோக்கியத் தனமானவர்கள்?.

போராடுவது என்பது எவ்வளவு கடினமானது? போராட்டத்தின் ஒவ்வொரு உயிப்பலியும் மிகவும் வேதனையானது.கணனித் திரையில் படம் பார்ப்பதுவும், விசைப்பலகையில் பிளந்து கட்டுவதும் எவ்வளவு இலகுவானது. நாளும் மக்களுடன் தமது நேரத்தைக் கழிக்கும் அந்தப் போராளிகள் இவற்றைப்பார்த்தால் என்ன நினைப்பார்கள்.உலகின் எங்கோ ஒரு மூலையில் வடிவாக உண்டு குடித்து புணர்ந்து கழிப்புறுபவர் தமது விசைப்பலகை வீச்சால் இவர்களின் குருதியையும் வியர்வையையும் பார்த்துக் கேட்கிறார் கேள்வி.உங்களுக்கு மக்கள் மேல் கரிசனை இருக்க என்று.மக்கள்மேல் கரிசனை இல்லாமல் எதற்கு இந்தப்போராட்டம்? எதற்கு இந்த உயிர்த்தியாகங்கள்? எதற்கு இந்த தற்கொடைகள்?

போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.போரடுபவன் தனது தலைவனிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை.தலைவன் போராடுபவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை.போராட்டத்திற்கு பக்கபலமான மக்களின் தலைவன் மீதான நம்பிக்கை.சரியான முடிவை சரியான தருணத்தில் சரியான வழியில் சரியான தருணத்தில் அவன் எடுப்பான் என்கிற நம்பிக்கை.இது தான் எமது போராட்டத்தின் அடி நாதம்.இந்தப் போராட்ட அடி நாதத்தை உணராத சடங்களின் கேள்விகள் தான் இவை.

சருகுகளின் சலசலப்புக்கள் அடங்கும் , விருட்சமாக எம் விடுதலைப்போர் எழுந்து நிற்கும்.ஈற்றில் சருகுகள் மண்ணோடு மன்ணாகி நாதியற்று உருக்குலைந்து இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.ஆனால் விருட்சம் கிளை பரப்பி உறுதியாக பல்னூற்றாண்டுகள் வாழும்.

சமுத்திரம் அலைகளை உள் இழுப்பது பேரலையாக ஒரு சுனாமியாக வெளிக் கிளம்ப.மூடர்கள் பேச்சைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்து விட்டுப் போங்கள்.எந்த அருகதையும் அற்ற அற்ப சருகுகள் இவர்கள்.

Link to comment
Share on other sites

குவாண்டனமோ தடுப்புகாவல் கைதிகள் விசாரணைக்கு உள்ளான போது நிகழ்ந்த F B I இன் துஸ்பிரயோகங்கள் குறித்து அமெரிக்கன் சிவில் உரிமை யூனியன் வெளியிட்ட அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ் களத்தில் கருத்து எழுதும் சிலருக்கு இது பயன் உள்ளதாக இருக்கும் என்றதால் இணைத்துள்ளேன்.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் எமக்கு சாதாகமான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்க புதிய வழிகளை கண்டு பிடிக்காமல் எம்மால் இனி ஒரு அடி கூட முன் எடுத்து வைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றாடம் நிகழும் துயரச் சம்பவங்களுக்கு ஏற்றவாறு கவலையாக, மக்களின் குரலைப் போல விசைப்பலகையால் எழுதுவதைப் போல் சுகமான விடயம் ஒன்றும் இருக்க முடியாது.மக்களின் துயரைத் துடைக்க களத்தில் நின்று போராடுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.போராட்டம் இழப்புக்கள் இன்றி நிகழப் போவதில்லை.ஒவ்வொரு இழப்பிலும் மக்களோடு நின்று போராடும் சக்திகளைப் பார்த்து கேள்வி கேட்கும் இவர்களால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியுமா? இடைக்காலத் தீர்வு சமாதானம் புதிய அணுகுமுறை என்னும் அர்த்தமற்ற சொற்களை உதிர்வதால் எதாவது ஆகிவிடுமா?

1. இது ஒன்றும் சுகமான விடயமல்ல. பிஞ்சுகள் செத்துக்கிடப்பதை கண்கொண்டு பார்க்க முடியாத வேதனையின் கதறல் தான் அது.

2. நிச்சயமாக அந்த மக்களுக்கான பாதுகாப்பை புலம்பெயர் உறவுகளால் வழங்க முடியாது. அதனால் அந்தப்பொறுப்பை "ஏகபோக பிரதிநிதி"களிடம் முற்றுமுழுதாக ஒப்படைத்துள்ளோம். அந்தப் பொறுப்பு சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று, பொறுப்பை ஒப்படைத்தவர்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில், அவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை நிச்சயம் உண்டு. அதற்கு முடிந்தளவு சரியான விளக்கத்தை (தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத விதத்தில்) தரவேண்டியது பொறுப்பை கையில் வைத்திருப்போரின் கடமை. அதைவிடுத்து கேள்வி கேட்பது தவறு என்று சொல்லமுடியாது.

3. இழப்பு இல்லாமல் விடுதலை இல்லையென்பது உண்மை. ஆனால் இழப்பு கட்டாயம் ஏற்பட்டால் தான் விடுதலை கிட்டும் என்பது சரியான வாதம் இல்லை. மக்கள் அன்றாடம் செத்துமடிந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே செய்யாமல் வெறுமனே இருப்பானேன் என்பதே இங்கு ஆதங்கம்.

சுருங்கச்சொன்னால் புலி பதுங்குவது எதற்கு என்பதற்கான விளக்கம் யாருக்குமே சரிவரத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்த தமிழர் இந்தப்போரட்டத்தை குத்தகைக்கு எடுக்கவில்லை.இந்தப் போராடத்திற்கு தமது உயிராலும் குருதியாலும் அவயவங்களாலும் வியர்வையாலும் காணிக்கை செலுத்திக் கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு ஏன் பதுங்கிறோம் என்று கூற வேண்டும்? தெளிவாகத் தெரிவது அவர்கள் பதுங்குவது பாய்வதற்காக. எப்போது எங்கே எப்படி என்று தீர்மனிப்பது போராட்டத்தின் தலமை. உங்கெளுக்குத் திகில் படங்காட்டவோ, குத்தகைக்காரனுக்கு விளைச்சலைக் கொடுக்கவோ போராட்டம் இல்லை. போராட்டாம் போரிடும் மக்களுக்கானது. ஆயிரம் உயிர்களைக்காவு கொள்ளக் கூடிய ஒரு போராட்டத்திற்கு தலமை தாங்குபவர்கள் மீது பாரிய பொறுப்பு இருக்கிறது. போரியல் வலு,கள நிலவரம் அக புற நிலைகள் எல்லாமுமே இவற்றில் தாக்கம் செலுத்தும்.இவைபற்றி உங்களுக்கு விரிவாக விளக்கவோ படம் காட்டவோ இது சண்டைப்படம் இல்லை. ஆயிரம் ஆயிரம் உயிர்களைக் காவுகொள்ளும் சதையும் குருதியிலுமான நிஜமான போராட்டம்.

போராட்டத்தில் உண்மையான விசுவாசம் வைத்திருப்பவனுக்கு இப்படியான கேள்விகள் அவசியம் அற்றது.உண்மையாக பங்களைப்பை நல்கும் புலம் பெயர்ந்தவர்கள் இவ்வாறு கேட்க மாட்டர்கள்.ஏனேனில் அவர்கள் போராட்டத்தில் இருந்தோ போராட்டச்சக்தியில் இருந்தோ அன்னியப்படவர்கள் கிடையாது.அவர்கள் விடுதலைப் புலிகள் வேறு தாங்கள் வேறு என்று கருதுவது கிடையாது.மேலும் புலிகள் ஏகப்பிரதினிதிகளானது போராட்டத்தின் இலக்கின் மீதான அவர்களின் அசையா நம்பிக்கையால். அந்த இலக்கை அடைய அவர்கள் நடாத்திய சமரசமற்ற போராட்டத்தினால்.இதனை தமிழ் மக்களே அவர்களுக்கு வழங்கினார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் என்றும் தக்கவைதுள்ளார்கள். உம்மைப் போன்ற சில சருகுகள் அவ்வபோது எழுப்பும் ஊசலாட்டங்களுக்கு அவர்கள் தக்க பதில்களை முடிந்த அளவு வழங்கி உள்ளார்கள். பதிவு இணயத்தில் இருக்கும் இந்த வார நிலவரம் நிகழ்ச்சியைப்போய்ப் பாரும். ஒரு சமாதனமும் ஒரு நெடுக்கும் ஒரு மகானும் ஒரு சானாக்கியனும் ஒட்டு மொத்த புலத் தமிழரின் சார்பில் கேள்வி கேட்க முடியாது. உங்களுக்கு இருக்கும் ஊசலாட்டங்கள் எல்லோருக்கும் இருக்கும் என்று பொதுமைப்படுதாதீர்கள்.

Link to comment
Share on other sites

உலகத்தில் 4காவது பெரிய இராவணுவம் வரும்போது புலிகள் அழிந்து போய்விடும் என்று தானே எல்லோரும் நினைச்சினம். இவ் இராணுவத்தினாலை கூட புலிகளினை அழிக்க முடிந்ததா?. ஜெயசுக்குரு படை வன்னிமண்ணில் பல இடங்களினைப் பிடிக்கும்போது சிலர் (யாழில் வருகிற சிலரைப் போல) இராணுவம் முழுவதையும் பிடித்துவிடும் என்று சொன்னார்கள். இராணுவம் முல்லை மாவட்டத்தில் நெடுங்கேணி வரையும், மன்னார் மாவட்டத்தில் சில இடங்களையும் பிடிக்க, புலிகள் அடிச்ச அடியில் 3 நாளில் ஒமந்தைக்கு பலத்த இழப்புகளுடன் இராணுவம் ஒடினது தெரியும் தானே. கிளினொச்சி, அனையிரவு என இடங்கள் புலிகளின் கையில் விழ, யாழ்ப்பாணத்தினை புலிகள் பிடித்து விடுவார்கள் என்று சந்திரிகா அம்மையார் பயப்பட்டு இந்தியாவிடம் உதவி கேட்டது தெரியும் தானே.

தலைவருக்குத் தெரியும், எப்ப எந்த நேரத்தில் சரியாக முடிவெடுப்பார். நிங்கள் எல்லோரும் உங்களால் முடிந்த பங்களிப்பினைச் செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

இக் களததில் ஒரு சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கின்றனர். இது தமிழர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதோரு இன்னல். அது ஈழத்திலிருப்பவரோ புலம் பெயர் தமிழரோ அனைவருக்கும் பொது. உங்கள் சிலரின் எழுத்துக்களினால் தடுமாறிக் கொண்டிருக்கும் சிலரின் மனதில் அவநம்பிக்கையை ஊட்ட நினைக்கின்றீர்கள். இருபது வருட கால போராட்டத்தில் இழப்புகளும் தோல்விகளும் புதிதானதல்ல. எனினும் இவைகளின் மத்தியில் துணிவுடன் எழுந்து நின்ற வரலாறும் உண்டு. இன்று பேரினத்திற்குத் தேவையானதை அதாவது புலிகளைப் பற்றிய அவநம்பிக்கையை ஈழத்தமிழரின் மனதினில் ஏற்படுத்தும் நோக்கு அந்தச் செயலை இங்கும் ஒரு சில புல்லுருவிகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனினும் தலைமையின் பால் போராட்டத்தின் பால் மக்கள் அவம்பிக்கை கொள்ள வில்லை என்பது தெளிவு. எதை எப்போது எங்கே எப்படிச் செய்ய வேண்டும் என்பது தலைமைக்குத் தெரியும். அவநம்பிக்கைக் கண்கொண்டு போராட்டத்தை போராளிகளைப் பார்ப்பதை விட்டு விடுங்கள்.

தலைவருக்குத் தெரியும், எப்ப எந்த நேரத்தில் சரியாக முடிவெடுப்பார். நிங்கள் எல்லோரும் உங்களால் முடிந்த பங்களிப்பினைச் செய்யுங்கோ.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

இக் களததில் ஒரு சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கின்றனர். இது தமிழர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதோரு இன்னல். அது ஈழத்திலிருப்பவரோ புலம் பெயர் தமிழரோ அனைவருக்கும் பொது. உங்கள் சிலரின் எழுத்துக்களினால் தடுமாறிக் கொண்டிருக்கும் சிலரின் மனதில் அவநம்பிக்கையை ஊட்ட நினைக்கின்றீர்கள். இருபது வருட கால போராட்டத்தில் இழப்புகளும் தோல்விகளும் புதிதானதல்ல. எனினும் இவைகளின் மத்தியில் துணிவுடன் எழுந்து நின்ற வரலாறும் உண்டு. இன்று பேரினத்திற்குத் தேவையானதை அதாவது புலிகளைப் பற்றிய அவநம்பிக்கையை ஈழத்தமிழரின் மனதினில் ஏற்படுத்தும் நோக்கு அந்தச் செயலை இங்கும் ஒரு சில புல்லுருவிகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனினும் தலைமையின் பால் போராட்டத்தின் பால் மக்கள் அவம்பிக்கை கொள்ள வில்லை என்பது தெளிவு. எதை எப்போது எங்கே எப்படிச் செய்ய வேண்டும் என்பது தலைமைக்குத் தெரியும். அவநம்பிக்கைக் கண்கொண்டு போராட்டத்தை போராளிகளைப் பார்ப்பதை விட்டு விடுங்கள்.

தலைவருக்குத் தெரியும், எப்ப எந்த நேரத்தில் சரியாக முடிவெடுப்பார். நிங்கள் எல்லோரும் உங்களால் முடிந்த பங்களிப்பினைச் செய்யுங்கோ.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அதனால் அந்தப்பொறுப்பை "ஏகபோக பிரதிநிதி"களிடம் முற்றுமுழுதாக ஒப்படைத்துள்ளோம். அந்தப் பொறுப்பு சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று, பொறுப்பை ஒப்படைத்தவர்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில், அவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை நிச்சயம் உண்டு.//

அடடே.. அப்ப நாங்கள் போராடுற பொறுப்பை தலைவருக்கு கொன்ற்ராக்ட் குடுத்திருக்கிறமே..? இத்தினை வருசத்துக்குள்ளை பொறுப்பை முடிக்க வேணும் எண்டு ஏதாவது அக்றிமென்ட்டும் போட்டிருக்கே.. நெடுக்கால போவானோடை சேந்து நானும் போராடுற பொறுப்பை புலிகளிடம் இன்று முதல் ஒப்படைக்கிறன்.

இஞ்சை பாரும் தலைவர். .. நான் நெடுக்காலபோவான் மற்றது வெளிநாட்டில இருக்கிற எங்களுக்கு இஞ்சை பல சோலியள்.. அதனால போராடுற பொறுப்பையும் தமிழீழம் எடுக்கிற வேலையையும் உம்மட்டை ஒப்படைச்சிருக்கிறம். அதுவும் முற்று முழுதா ஒப்படைச்சிருக்கிறம். ஆனா நீர் நாங்கள் தந்த பொறுப்பை சரியா செய்ய வில்லை போல கிடக்கு. அதனாலை கேள்வி கேட்கிற உரிமை எங்களுக்கு கிடக்கு. நான் கேட்கிற கேள்வியளுக்கு ஒழுங்கா பதில் சொல்ல வேணும். ஏனென்டால் நாங்கள் உம்மட்டை ஒரு வேலையை முழுதா ஒப்படைச்சிருக்கிறம். தந்த வேலையை ஒழுங்கா செய்யாட்டி பொறுப்பை வேற ஆரிடமும் குடுத்திடுவம். சரியோ..

இந்தப் பொறுப்பினை ஒப்படைத்தல் என்ற நிகழ்வின் பின்புலத்தில் எழும் கோட்பாட்டு ரீதியான தத்துவ விளக்கங்களில் இன்றையை நவீன உலகியலின் சிந்தனை ஒழுங்கில்.. அதன் விஞ்ஞான வளர்ச்சியில் ... முன்னெறும் நாகரீகம் அடைந்த சமூகமான நாம் விபசாரிகளை அழித்தல் என்ற சமூக முன்னுதாரணங்களோடும் அதற்கான வேட்கையுடனும் ஒரு புதிய சமுதாய விழுமியங்களை கூகுளில் தேடி கொப்பி பேஸ்ற் செய்யும் எமது கொள்கை ரீதியிலான கோட்பாடுகளும் அது சார்ந்த கும்மியடிப்புக்களும்.. காப்பிரிகளின்............

என்ன சொல்ல வந்தன் எண்டதை இந்த முறையும் மறந்து போனன். நெடுக்கால போனாலே உப்பிடித்தான் நடக்குது எனக்கு..

பொறுப்பை ஒப்படைத்தவர்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில்,

வாயில வருகுது நல்லா..

இவர் பொறுப்பை ஒப்படைச்சிட்டு வெளிநாடு வருவாராம். அவை அதை நிறைவேற்ற வேணுமாம். பதிலுக்கு இவர் கேள்வியும் கேட்பாராம்.

அ.....

Link to comment
Share on other sites

இது விளக்கம் குறைந்த ஆட்கள் சிலர் லண்டனுக்கு வந்து பெரிய அநியாயமாய் கிடக்கு.போராட்டம் பற்றி கதை அளக்க முதல் என்ன நீங்கள் பிறந்த நாட்டுக்கு செய்தீர்கள் என ஒரு கணம் சிந்தியுங்கள்.உங்களுக்கு பியர் அடித்து நாலு புளுகு புளுகுவதற்காக புலிகள் தாக்குதல் நடாத்த முடியாது.உங்களை போல ஆட்களை புலிகளும் மக்களும் காலம் காலமாக இனம் கண்டுள்ளார்கள்.ஏதாவது உருப்படியாக எமது மக்களுக்கு செய்யுங்கள்.இல்லாவிடின் உபத்திரமாவது தராமல் இருங்கள்.

Link to comment
Share on other sites

என்னப்பா யார் யாருக்கு பொறுப்புகுடுத்தீங்கள் லண்டனில திண்டு திண்டு வயிருவளர்க்கும் நெடுகால போவான் என்ன போராட்டத்தை ஆரம்பித்துவிட்டு அதை புலிகளிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்திடோ வந்தவர் சும்மா கருத்து எழுதவேணும் என்பதற்காக ப்ந்தி பந்தியாக கருத்து எழுதும் அரைவேக்காடு யார் என எல்லோருக்கும் தெரியும் அது குருவி நெடுக்கால போவானில்லை அப்படித்தானே நெடுக்ஸ்

போராட்டம் என்பது நீர் நினைகிறமாதிரி திண்டு குடித்து பொங்கல்விழா கொண்டாடுறதில்லை கந்தகதக துகளுக்குள் நெருப்புக்குழிக்கும் வாழ்கை அது அதை பெப்சியும் kfc சிக்கிகும் சப்பிட்டுக்கொண்டு அதைச்செய்யவிலை இதை செய்யவில்லை என கோவணத்தை தூக்கி தலையில் கட்டுறார் நெடுக்ஸ்.ஜயா நெடுக்ஸ் போராட்டத்துக்கு நாம் என்ன செய்யவேண்டும் என யதார்த்ததை எழுதியுள்ளார் குறுக்ஸ் அதை வாசியும் நீர் இவ்வலவு காலமுன் என்னத்தையப்பு செய்தனீர் கடைசி ஒரு பென்ஸாவது அன்பளிப்பு செய்தனீரோ நான் நினைக்கவில்லை நீர் அந்தரகம் என

சும்மா வாய்சவாடலை விட்டுட்டு அடங்கிகிடவும் உமது வங்குரோத்து கருத்துகளால் அரைவேக்காடன நீர் முழுவேக்காடாகதயும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப விடுதலைப்புலிகளால் மக்களைப் பாதுகாக்க முடியல்லையோ அப்பவே அது கைமாறிப் போயிட்டுது என்றதுதான் நிலை. அப்ப யாழ்ப்பாணம் இன்னும் புலிகளின் கையில் என்று சொல்லுறீங்களோ...?! அப்ப ஏன் தினம் தினம் படுகொலைகளை நிறுத்த முடியல்ல. வன்னில அப்படி நடக்காமல் மக்கள் பாதுகாக்கப்படுவது போல் நிலை கிழக்கில்..யாழில் இல்லையே...??!

மற்றவர்கள் மக்களைக் காக்க ஆயுதம் எடுத்ததாகச் சொல்லிக் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் மட்டுமே மக்கள் இயக்கமாக உள்ளதால் அவர்களின் கொள்கை அதுவானதால் மக்கள் அவர்களை நோக்கித்தான் வினாத் தொடுப்பர்..??!

புலிகள் என்ன விண்ணில் இருந்தா வந்தவர்கள். இம் மக்களிடம் இருந்து தானே பிறந்தவர்கள்.

உலகத்தில் எந்த அரசாங்கங்களாலும் தம் மக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் சக்தி கிடையாது. இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போதோ, அல்லது லண்டன் குண்டு வெடிப்பிலும் சரி அந்ததந்த நாடுகளால் தம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் அவர்களிடம் இருந்து அமெரிக்காவோ, இங்கிலாந்தோ கைமாறிப் போய்விட்டது என்று சொல்லலாமா? இது எவ்வளவு முட்டாள்தனமானது.

ஆனால் தமிழீழம் என்பதோ, அல்லது அதன் போராட்டங்களோ, எதிரியிடம் இருந்து பாதுகாப்பதற்காகத் தான் உருவானதே தவிர, அது எழும்போதே பிரமாண்டமாக எழவில்லை. 80களில் ஒரு துப்பாக்கியைப் பாதுகாப்பதற்காக எதத்னையோ போராளிகளை இழந்த அடிமட்ட நிலையில் இருந்து தான் உருவானது. எனவே முட்டாள்தனமாக கைமாறிப் போய் விட்டது கால்மாறிப் போய் விட்டது என புலம்பாதீர்.

இன்றைக்கு யாழ்பாணத்தில் நடக்கின்ற கொலைகளுக்கு யார் பொறுப்பு? எம் மக்களும் ஒரு வகையில் காரணமானவர்கள் தாம். சிங்களம் தீர்வு தராது என்று உணரப்பட்ட ஆரம்பகாலத்திலேயே, வன்னிக்கு வந்து தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அப்படியிருந்தும் வன்னி போனால் "செல்வி", பார்க்க இயலாது. "கணவருக்காக" பார்க்க இயலாது என்று வரமறுத்தது யார் தப்பு. உண்மையில் இப்போது சொல் கேட்காததன் பலனை எம் மக்கள் அனுபவிக்கின்றார்கள். முந்தி யாழ் இடப்பெயர்வின் போது சாவச்சேரியில் தங்கியிருந்த மக்களுக்கு புலிகள் அறிவுறுத்தல் செய்தார்கள். வன்னிக்குப் போங்கள் என்று. ஆனால் எம் சனம் போகவில்லை. கடைசியில் சிங்கள அரசு செம்மணியில் மட்டும் 600 பேரைக் கொன்று புதைத்தது.எம் மக்கள் இதை உணரவேண்டும். இனிவரும் காலத்தில் மக்கிளின் ஒத்துழைப்புக்கள் அவசியமாகும்.

இளந்திரையனுக்கு அறிவுரை கூற உமக்கு என்ன தகுதியிருக்கின்றது? அவர் என்ன உயிர்பயத்துக்கு அஞ்சி புலத்துக்கு ஓடிப் போனவரா? அல்லது கொழும்பிற்கு வந்து தங்கினவரா? ஏதோ போராட்டம் நடக்கட்டும். நாங்கள் நடத்துவபவர்களைத் திட்டித் தீர்ப்பம் என்ற பாணியில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.

மற்றவர்கள் ஆயுதம் காக்க ஆயுதம் எடுப்பதாகச் சொல்லிக் கொள்ள இப்போது துரோகக் வெக்கப்படுகின்றாரகள் போலும். ஏன் என்றால் சிங்கள அரசிடம் இப்போது காலை நக்குவதற்கும், அதற்கும் பொருத்தமில்லாமல் போய்விடும். இருக்க இப்பவும் கருணாக் கும்பல் புலம்புவதைக் கேக்கவில்லையா? "கிழக்கில் விடியலுக்காக ஆயுதம் பாவிக்கின்றோம்" என்று. புலிகள் மக்களைக் காக்க ஆயுதம் எடுத்தார்கள். ஆனால் அதற்காக மக்கள் போகின்ற இடம் எல்லாம் மெய்ப்பாதுகாவர் போலவா செல்ல முடியும்? எதிரியின் சதியை உணர்ந்து சிந்திக்க வேண்டியதே ஒவ்வொரு தமிழனின் கடமை. எனவே மக்களைக் காக்கவில்லை எண்டு கத்துவது பொருத்தமற்றது.

ஏதோ சிங்கள மக்களோடு வாழவில்லையா இன்று. கொழுப்பில் இருக்கும் தமிழர்கள் என்ன தமிழீழத்திலா வாழ்கின்றனர். கபடத்தனமாக யதார்த்ததுக்கு அப்பால் எழுதிக் கொண்டு உலகை ஏமாளியாக நீங்கள் பார்கிறீர்கள். நாம் அல்ல. உலகம் நங்கு அறியும். அது பிரச்சனைகளைத் தெளிவாகப் பார்க்கிறது. போராளிகள் மக்களின் இருந்து வந்தவர்கள் என்பதை எவரும் மறுக்கவில்லையே. அதேபோல் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழும் தமிழர்களும் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அது கட்டாயத்தின் பேரில் இருக்கலாம்..அல்லது தேவையின் பெயரில் இருக்கலாம். ஆனால் அதுவே தமிழர்களின் விருப்பம் அல்லது உரிமை என்பது அல்ல இங்கு சொல்லப்படுவது. தமிழர்கள் தங்கள் உரிமைகளை கேட்டுப் பெற முடியாது எனும் நிலை உள்ள போது போராடிப் பெற வேண்டும். அன்றில் தினம் தினம் அழிவடைந்து பலவீனப்படுவதால் கிழக்கை பலவீனப்படுத்தி அந்நியருக்கும் குடியேற்றத்துக்கும் விற்கப் பயன்படுத்துவதைக் கண்முன்னால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலையிலும்..சிங்களவனோடு அடிமையாக வாழ்வதால் கொஞ்சம் நெஞ்சமாவது மிஞ்சும்..என்ற நிலையே மக்கள் மத்தியில் எழும். நிலத்தை விட்டு ஓடியவர்களுக்கும் நிலத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களுக்கும் இடையில் நிறையவே இடைவெளி உண்டு. தமிழர்களில் பலர் துரத்தப்படாமலே போர்ச் சூழலை நம்பி பொருளாதாரம் சேர்க்க அந்நியரிடமும் சிங்களவரிடமும் சரணடைய நிலத்தை விட்டு ஓடியவர்கள் என்ற உண்மையையும் நாம் பார்க்க மறுக்கவில்லை..!

கொழும்பில் வாழ்பவர்கள் எல்லாம் சிங்களவர்களோடு கொஞ்சிக் கொண்ட வாழ்கின்றனர். நிலமையை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் சூழல் நிலையை அறிவேன். யுத்தகாலத்திலும் சரி, பிறகும் சரி, சிங்கள மக்களோடு நெருக்கமாக கொழும்பில் வாழ்ந்ததில்லை(அடிவருடிகள் தவிர) பொலிஸ் பாஸ் எடுக்க வேண்டுமானால் லஞ்சம், ஆமி பிடித்தால் லஞ்சம். ஆட்டோக் காரன் சொன்ன பணத்திற்கு ஏறிப் போவது. சொன்ன விலைக்கு பொருளை வாங்குவது என்ற நிலமையில் தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள். யாழ்பாணத்தில் சின்ன ஊசி வாஙகவே பேரம் பேசிய சனம் கொழும்பில் ஊசிக்கு யானை விலை கொடுத்து வாங்குகின்றார்கள். சொல்லப் போனால் திருப்பிக் கேட்டு ஏன் வம்பு என்ற பயமான நிலை. வெள்ளவத்தைச் சந்தையில் ஒரு புடலங்காய் விற்கின்ற விலைக்கும் பக்கத்தில் உள்ள சந்தைக்கும் உள்ள விலையைப் பார்த்தாலே தெரியும். வெள்ளவத்தையில் எம் மக்கள் எவ்வளவு தூரம் பணத்தை இறைக்கின்றார்கள் என்று. ஏனென்றால் இப்போதைக்கு செல்லடி, விமானக் குண்டு வீச்சில் இருந்து ஓரளவு தப்பும் இடமாகக் கொழும்பு தான் இருக்கின்றது.

யாழ்பாணத்தில் ஆறு லட்சம் பேருக்கு 60 000 இராணுவம் உள்ளது. அதற்காக அங்கே இராணுவமும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்களா? ஆமி கேட்கின்ற போது சிக்கிரட் பெட்டியும், சாராயப் போத்தலும் வாங்கிக் இலவசமாக வாங்கிக் கொடுத்து உயிரைக் காப்பாற்றும் நிலமையில் வாழ்கின்றார்கள். கொழும்பில் ஒரே பொருளுக்கு அதிக வலை கொடுக்க வேண்டிய நிலமையில் இருக்கின்றார்கள். அது மட்டும் தான் வித்தியாசம். மற்றும்படி பயம்பயம் தான்.

உலகம் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என்று சிறிலங்காவைப் புறக்கணியில் எழுதுகின்றீர்கள். இதில் உலகம் நன்று அறியும் என்று எழுதுகின்றீர்கள். இதற்குப் போய் எங்கே தலையை முட்டுவது? கடைசிப் பந்தியில் மக்களின் உள்ள குறைபாட்டை எழுதுகின்றீர்கள். அவ்வாறன நிலமையை உணரும் நீர் மேலே இழந்திரையனைத் திட்டித் தீர்ப்பது பொருதத்மாகத் தெரிகின்றதா?

வன்னியில் பாதுகாக்க முடிகிறதல்லவா..?! ஏன் அதே நிலையை அங்கும் விரைந்து தோற்றுவிக்கக் கூடாது. அந்த மக்களுக்கும் இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம். இப்ப அதுவேதான் கருணாவுக்கு ஆதரவாகவும் மாறலாம். இப்படி மக்கள் பலியிட சந்தர்ப்பம் அளிக்கப்படுவதால்..மக்கள் தாங்களாகவே அவர்களுக்கு ஒத்துழைப்பு என்று தங்களைப் பாதுகாக்க முனைவர். அப்போ புலிகளுக்கு அவர்கள் துரோகிகள் ஆகிவிடுவர். ஆக..புலிகள் தான் மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள். மக்கள் தங்களைப் பாதுகாக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதைப் புலிகள் செய்ய வேண்டும். தவறின் மக்கள் அடுத்தவரை நம்பி ஓடுவர். வாகரையில் நடந்தது என்ன..?! புலிகளை நம்பி சம்பூரை விட்டு வந்த மக்கள் வாகரையில் காட்டுக்குள்ளால் இராணுவத்தை நோக்கி வர இராணுவம் வழி செய்தது. இதைத் தடுத்திருக்க வேண்டியது புலிகள். அவர்கள் செய்யாத போது மக்கள் அவர்களை எப்படி நம்புவார்கள்..??! மக்களை புலிகள் யுத்தக் கேடயம் ஆக்குகிறார்கள் என்ற பிரச்சாரம் தானே எழுகிறது. அதற்கு காரணம் வைத்தது யார்...??!

நிலமையைத் தோற்றுவிப்பது என்றால் என்ன? என்ன விசர்தனமான கதை.. வன்னியில் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு மேற்கொள்ளவில்லை. அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்கள். அதை விட வன்னி பரப்பளவில் பெரிய இடம். ஆனால் வாகரை ஒரு சிறிய பகுதி. பாதுகாக்கின்றது என்று செலகளையும் குண்டுகளையும் புலிகள் ஏந்தவா முடியும். மற்றும்படி கருணாக் கும்பலுக்கு ஆதரவாக மாறலாம் என்று எவ்வாறு தெரியும். எவ்வளவு தூரம் சாத்தியம்? சில தினங்களுக்கு முன்னர் கூட இராணுவகட்டுப்பாட்டுப் பகுதியில் வாகரை மக்கள், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் " மகிந்த ஹட்லரின் மறுபிறவி"," ஒன்றும் வேண்டாம்.வாகரைக்கு திரும்பிப் போக வழி செய்து தாரவும்: என்ற வாசகங்கள் கூடக் கிடந்தன. மக்கள் தெளிவாகத் தான இருக்கின்றார்கள். உமக்கு வேண்டுமானால் கருணாவிற்கு ஆதரவாக மாறமாட்டார்களா என்ற நப்பாசை இருக்கலாம். குண்டு வீசிக் கொல்வது சிங்களத் தரப்பு, அதன் கூட இருப்பது இந்தக் கும்பல். அப்படியிருக்க குண்டு வீச்சை செய்வனை மறந்து விட்டு, குண்டை ஏந்திப் பிடிக்காததற்கு புலிகளை மக்கள் பகைப்பார்கள் என்பது அறிவீனம்.

சிறிலங்கா அரசு வாகரை மீது குண்டுத் தாக்குதல் செய்த அழுத்ததால் தான் மக்கள் வெளியேறினார்களே தவிர, சிறிலங்கா அரசின் மீதோ, அவர்களோடு இயங்கும் கருணாக் கும்பலின் மீதான பற்றிலோ அல்ல. ஏனேன்றால் எவனால் சொந்தங்களை இழந்தார்களோ, அவனை அரவணைக்கும் ஏமாளிகள் அல்லவே எம் மக்கள். சில புலம்பெயர், கொழும்பு வாழ்களின் கனவுகள், கணக்குகள் விளக்கம் குறைவால் பிழைத்துப் போகின்றன.

வாகரையில் சிங்கள இராணுவம் குண்டு வீசிக் கொல்ல முனையும்போது அதற்குப் பாதுகாப்பான வழி எம் மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்காலிகமாகத் தஞ்சமடைதல் என்று முடிவெடுத்தது சரியான வழியே. ஏனென்றால் புலிகள் ஒரு காலமும் மக்கள் மீது குண்டு வீசமாட்டார்கள். சர்வதேசம் ஓரளவாவது அவதானிக்கும் நிலமையில் நேரடியாக பெருந்தொகை மக்களைப் படுகொலை செய்யச் சிங்கள இராணுவத்தால் முடியாது.

நீர் சொல்வதைப் போல, தொடர்ந்தும் மக்களை வாகரையில் வைத்திருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் மகக்ளைக் காப்பாற்றாத தன்மை.

இலங்கையரசு மக்களைக் கொல்வதற்காககச் சொல்லுகின்ற நொண்டிச் சாட்டுத் தான் மக்கள் கேடயமாக்கின்றார்கள் என்று. இது வரை நடந்த எந்தத் தாக்குதலையும் சிங்கள அரசு பொதுமக்கள் மீதான படுகொலையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு சிங்கள அரசுக்கு வாயால் பதில் தேவையற்றது. அது உலகத்திற்கே சொல்ல வேண்டியது. அதனால் தான் ஜநா, செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மட்டும் ஆதாரங்கள் சொல்லப்படுகின்றன. எதிரியின் தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆட வேண்டியது இல்லை.

நாளைக்கு சிங்கள இராணுவத்தளம் மீது தாக்குகின்றேன் என்று சிங்களை மக்களைக் கொன்றால் சிங்கள அரசால் என்ன செய்ய முடியும். இவர்கள் பாவித்த அதே சொல்லையே திரும்பவும் பாவிக்கலாம். இராணுவம் மக்களை கேடயமாகப் பாவிக்கின்றது என்று.

ஒரு காலத்தில் மக்கள் கொல்லப்பட்டனர். யாருமே கண்டு கொள்ளவில்லை. .இந்தியப் படுகாலைகள், குமுதினிப்படுகொலை, நவாலிப் படுகொலை, செம்மணிப்படுகாலை, கொக்கட்டிசசோலைப்படுகொலை, புதுக்குடியிருப்புப் படுகொலை, என்று எந்தப் படுகொலைகளுக்கோ, அல்லது யாழ்பாண இடப்பெயர்வைக் கூட யாரும் கண்டிக்கவில்லை. யாழ் இடப்பெயர்வில் பூட்ரஸ் காலி விட்ட அறிக்கை ஒன்றைக் கூட சிறிலங்கா அரசு அடக்கியது. அவ்வளவு தான்.

ஆனால் இன்றைக்கு நிலமை வேறு. மக்களின் படுகொலைகள் கண்டிக்கப்படுகின்றன. சிங்கள தேசத்தின் மீது பொருளாத அழுத்தங்கள் குவிக்கப்படுகின்றன. வெளிநாட்டு இறக்குமதியைக் குறைக்க சிங்கள தேசம் முயன்று கொண்டு இருக்கின்றது.

சிங்கள தேசம் செய்கின்ற இந்தப் படுகொலைக்கு கொழும்பிலோ, அல்லது சிங்களப் பிரதேசங்களிலோ பதிலடி கொடுப்பது கஸ்டமான காரியமல்ல. ஆனால் 25 வருடங்கள் வலிகளைப் பொறுத்து வாழ்ந்து விட்டோம். நாளைக்கு இலக்கு யாருமாகக் கூட இருக்கலாம். ஆனால் உலகம் ஒருவகையில் புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையிருக்கின்றது. அல்லது அவ்வாறு செயற்பட வேண்டிய அழுத்தத்தை பிரயோகிக்க வழி செய்யப்படுகின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சனை என்று புரிந்து கொண்டுள்ள நிலமையை இவ் சமாதான காலமும் அதன் பின்னர் வந்த காலமும் தோற்றுவித்திருக்கின்றது. நேரடியாக அக்கறை செலுத்தும் நிலமைக்கும் தள்ளியிருக்கின்றது. நாளைக்கு சிங்கள அடக்குமுறைக்கெதிராக போராடும்போது உலகம் அதை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்கான அரசியல் நகர்வாகவே புலிகள் இடத்தை இழந்தபோதும் சரி, விமானத தாக்குதலின் போதும் சரி பொறுமை காப்பது.

கிழக்கை இழப்புக்கள் இன்றித் தான் கைப்பற்றப்பட்டது. யாழ்பாணத்தைப் பிடிக்க கிழக்கை புலிகளிடம் விட்டுக் கொடுத்தது சிங்கள அரசு. ஆனால் எதிரி பல இழப்புக்களைச் சந்தித்து தான் முன்னேற முயல்கின்றான்.

Link to comment
Share on other sites

அறிக்கை விடும் நேரம் இல்லை செயலில் காட்டும் நேரம் அறிக்கை விட்டது காணும் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உளறிற உலக்கைகளும் விளங்கிக் கொள்ள வேணும். :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உத்தியோக பூர்வ புது வருட செய்தியில் '' 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் ......... இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கோரி வந்தனர்.'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ''சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், எந்தச் சவாலையும் எவ்வளவு காலத்துக்குள்ளும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் . ...தமிழ் மக்கள் மீது போரைத் திணித்து, தமிழர்களது சொந்த இடத்தில் இருந்து அவர்களை முற்றாக ஒழித்துவிட நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாட்டில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்துலக சமூகத்தின் நடுநிலையான அறிக்கைகள் எதுவும் எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்தாது '' என்று இளந்திரயன் கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் பிரத்தியேக அழுத்தங்கள் இல்லாத நிலையில் யுத்த சுமையையும் அன்றாட அழிவுகளையும் தொகை வகையற்ற உயிர் இழப்புகளையும் தமிழ் மக்களால் தனித்து தாங்கிக்கொள்ள முடியாது. இது எமது போராட்டத்தின் இன்றைய நிலையில் புதிய அரசியல் அணுகு முறை குறித்தே எம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க அழுத்துகிறது. ஒரு (இடைக்கால ...?)அரசியல் தீர்வு தற்போது தவிர்க்க முடியாது உள்ளதாகவே தமிழீழ கள நிலவரம் மற்றும் தமிழ் கூட்டமைப்பினர் கொண்டுவந்த செய்திகள் அதாவது பிராந்திய அரசியல் சூழல் எமக்கு சமிக்கை காட்டுகின்றன.

சும்மா வாய்கிழிய இடைக்காலத் தீர்வு தான் சரி என்று புலம்புவதை நிப்பாட்டும். இடைக்கால தீர்வுக்கு புலிகள் மாட்டேன் என்றா சொன்னார்கள். ஆனால் அதைக் கொண்டு வந்தபோது யார் அதைக் குழப்பியது? சிங்கள அரசு தானே!

எனவே தமிழனுக்கு எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை என்ற பாடத்தை மக்கள் பெற்றுக் கொண்டார்கள். இன்றைக்கு இந்திய அரசு கொண்டுவந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் குழப்பும் சிங்கள அரசு ஏதும் தீர்வு தரும் என்று படமா காட்டுகின்றீர்?

ஒரு தலைப்பில் வந்து இடைக்கால சபை தேவை என்று அலட்டுவீர். அது எவ்வளவு சாத்தியம் என்றால் அமுக்கிக் கொண்டு வேற தலைப்பில் வந்து அதே வண்டவாளத்தை அளப்பீர். இதுவே உம் பிழைப்பாகப் போச்சு.

புலிகள் சமாதானம் வேண்டாம் என்றா சொன்னார்கள். அதற்குத் தயாராகத் தானே பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஆனால் எதிராளி நியாயமாக நடக்கவில்லையே. அடிப்படைத் தீர்வைத் தராத அவனோடு எவ்வாறு தொடர்ந்து பேமுடியும். இன்று கூட புலிகள் அமைதியாக இருக்கின்றார்கள். ஆனால் சிங்கள தேசம் குண்டு போட்டுக் கொல்வதைத் தட்டிக் கேட்க உமக்குத் துப்பிருக்கின்றதா?

புலிகள் சமாதானத்திற்கு தயாரா இருந்த போதும் அதை தங்களின் கொலையாட்டத்தி;ற்கு பயன்படுத்த சிங்கள தேசம் முயலுமானால் சமாதானம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. குழந்தைகளை ஈவிரக்கமின்றி விட்டு வைக்காத சிங்கள தரப்போடு எவ்வாறு பேசமுடியும்.

தமிழன் என்றைக்கும் யுத்தத்தை விரும்பவில்லை. விரும்பவும் மாட்டான். சமாதானத்திற்காக எத்தனை தலைவர்களை இழந்தும், போராளிகளை இழந்தும் அமைதியாக இருந்தான் என்றால் அவன் கொண்ட அதன் மீதான மதிப்பு. அதைச் சிங்கள தேசம் புரிந்து கொள்ளாதபோது அவனுக்கு தெரிகின்ற ஒளி தமிழீழ தேசம் தான். அது இலகுவல்ல. ஆனால் அதன் வழியைத் தவிர சிங்கள தேசம் எமக்கு விட்டுவைக்கவில்லை.

இன்றைக்கு மக்கள் சாகின்றார்கள், என்று அறிக்கை விடுகின்றீர்கள். இவ்வாறு முன்பு பல மக்களைக் கொன்றும், வெட்டியும் சிங்கள தேசம் போட்டதால் தானே தனிநாடு பற்றிய சிந்தனையை உருவானாது. ஆனால் இன்று வரைக்கும் சிங்கள தேசம் திருந்தவில்லை. ஆனால் அவனோடு ஒற்றுமையாக வாழலாம் எனக் கனவு காணுகின்றீர்கள்.

அவன் சிந்திக்கின்றான். இவ்வாறு மக்களைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று. வலிகள் தொடர்ந்தால் தமிழன் சரணகதி அடைவான் என்ற ஜேஆரின் கனவை, மகிந்த பிரதிபலிக்கின்றார். அவன் தமிழனுக்கு தீர்வு தருவதில் இருந்து விலத்தி, அடிமையாக்கி தன் சொல்லைச் செயற்படுத்தலாம் என்று சிந்திக்கின்றான்.

படுகொலைகள் என்று கத்துகின்ற உம்மால் சிங்கள தேசத்தைக் கண்டித்து, ஒரு வார்த்தை எழுத முடிந்ததா? ஆனால் சிங்கள தேசம் படுகொலைகள் மூலம் அடிபணிய வைக்கலாம் என்பதை நீர் பிரதிபலிக்கின்றீர்.

இன்று எம் சொந்தச் சகோதரங்கள் தாயகத்தில் தான் வாழ்கின்றனர். நாளைக்கு அவர்களையும் சிங்கள தேசம் கொன்று போடலாம். எனவே நாங்கள் ஏதோ யுத்தத்தை விரும்புபவர்கள் என்ற தொனியில் எழுதுவது போலவும், ஏதோ நீங்கள் மட்டும் சமாதனத்தின் அடையாளங்கள் போலவும் காட்ட வேண்டாம்.

இத் தலைப்பிலும் கேட்கின்றேன். நீர் சொல்லுகின்ற இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை எவ்வளவு தூரம் சாத்தியமானது. பதிலளிக்கத் தெரியாது விட்டால் அடுத்த தலைப்பில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகரையில் இருந்து சிங்கள அரசின் குண்டுவீச்சால் துரத்தப்பட்ட மக்கள் கருணா கும்பலுக்கு ஆதரவாக மாறலாம் என்று சில பேர் கனவு காண்கின்றார்கள். அவ்வாறு நினைத்து தான் சிங்கள தேசம் அம் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியது. ஆனால் மக்கள் வேறுவழியின்றித் தான் சிங்கள அரச ஆக்கிரமிப்புப் பகுதிpயல் நுழைய வேண்டி ஏற்பட்டது. அது சிங்கள தேசத்தை நம்பியல்ல. எதிரியின் பரப்பில் பகிரங்கமாகக் கொல்ல சிங்கள தேசத்தால் முடியாது என்பதால் தான்.

இத்தனை கொலை வெறியின் போதும் சிங்கள தேசத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கும் மக்கள். ஆனால் புலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபடி, சிங்கள தேசம் குண்டு போட்டுக் கொல்வதைக் கேட்க துப்பில்லாத, ஆனால் புலிகள் ஏன் சிங்கள தேசத்தின் குண்டுகளை ஏந்திப் பிடிக்கவில்லை என்று கேள்வி கேட்கும் போக்கிரிகள் என்ன சொல்லப் போகின்றனர்.

29_12_06_vaharai_protest_04.JPG

29_12_06_vaharai_protest_01.jpg

29_12_06_vaharai_protest_03.jpg

29_12_06_vaharai_protest_02.jpg

கணியொளி, மற்றும் செய்திகளுக்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20760

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.