Sign in to follow this  
நெற்கொழு தாசன்

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

Recommended Posts

  

 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

 

தனித் தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

 

 மரபுரிமை, பண்பாடு, கலாசாரம் என்ற இசங்களை ஒரு சமூகமானது அவ்வப்போது களைந்துகொள்வதும், இயங்கியலின் தன்மைக்கு ஏற்ப அவைகளை மாற்றியமைப்பதுவும் தான் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதன் குறியீடாக இருக்கமுடியும். சமூக எண்ணக்கருக்கள் மூடுண்ட நிலையில் இருக்குமென்றால் சமூக சிந்தனையும், செயலும் மூடுண்ட நிலையிலேயே இருந்துவிடும். தேசவழமைச் சட்டம் எமது மரபுரிமை என்று கூறிக்கொண்டு, அதில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலையிலேயே வைத்திருக்கிறோமா? சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றங்களூடாக இன்று தேச வழமைச்சட்டம் என்பது காணி,சொத்துரிமை தொடர்பிலானதாக மட்டும் காணப்படுகிறது. கலாசாரம் பண்பாடு என்ற இசங்களை கேள்விக்குற்படுத்தும் அதிகாரங்களை இங்கே கோரவில்லை. இப்பத்தி எழுப்புகின்ற கேள்வி  எமது சமூகம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூகமா  இல்லையா என்பதே.

 

தெய்வ வழிபாடுகள் எவ்வகையான  மாற்றங்களை  உள்வாங்கி இருக்கின்றன என்பதை ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சியோடும்  கலாசர பண்பாடு மாற்றங்களோடும் இணைத்தே பார்க்கமுடியும். அதற்காக தெய்வ வழிபாடுகள் சிறப்புற்ற இடங்கள் எல்லாம் வளர்ந்தன என்று வாதிடமுடியாது. சமூக வளர்ச்சி பன்முகமானது. இதுதான் வழிபாடு நிகழ்த்தும் தளங்களுக்கும் கொல்களங்களுக்குமான (இறைச்சிக் கடை ) நுண்மையான வேறுபாடு.

 

தெய்வங்களுக்கான பலியிடல் என்பது என்ன நோக்கத்திற்காக ஆதி மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இது வெறுமனே இந்துசமயத்தினதோ அல்லது எம் சிறுதெய்வ வழிபாட்டினதோ அல்ல. அனைத்து இனக்குழுமங்களுக்குமானதாகவே இருந்திருக்கிறது. தான் சார்ந்த நிலத்தில் வாழ்வியலை எதுவித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு இறைவனை அல்லது தன்னை மீறிய சக்தியினை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது. எமது வாழ்வியலை நாமே திட்டமிடும் பகுத்தறிவு பெற்ற நாம் இன்று என்ன நோக்கத்திற்காக, யாரை திருப்திப்படுத்துவதற்காக, இந்த பலியிடலை தொடரவேண்டும்?

 

ஆதியில் உயிர்ப்பலி என்பது  குறைகளற்ற ஆணை, அல்லது கன்னிப் பெண்ணை பலியிடுவதாகவே இருந்திருக்கிறது. பின் காலநீட்சியில் குழந்தைகள் பலியிடப்பட்டு,   இப்போது மிருகங்களாக வந்தடைந்துள்ளது. இப்போதும் சில இடங்களில் குழந்தைகளை பலிகொடுக்கும் இழிவு நடைபெற்றுவருகிறது என்பதை பதிவு செய்யவேண்டிய அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம். இவையெல்லாம் இன்றைய பலிகொடுத்தலின் தொன்மங்களாக  கண்முன் வந்து நிற்கின்றன. இன்று நேற்றல்ல, பலியிடல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன .திருத்தொண்டர்புராணம் முதல் மறைமலையடிகள் வரை இவற்றை காணலாம். இன்றும், மிருகங்களைதானே பலியிடுகிறோம் என்று நாம் சிந்திக்க தலைப்பட்டால் நாம் நம்மை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதுமில்லை.

 

பெண் தெய்வங்களுக்கு கருத்தரித்த மறி ஆட்டினை பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சடங்காக, மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது. இதனை சூலாடுகுத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைப்பார்கள் (பண்பாட்டு அசைவுகள் தோ. பரமசிவன் )நேர்ந்துவிடப்படும் ஆட்டை இணை சேர விடுவதில்லை. விதிவிலக்காக பலி கொடுக்கப்படும் நாள் அல்லது அதற்கு முதல் நாள் இணைசேர்ப்பவர்களும் உண்டு. இதை நல்லின ஆடுகள் உற்பத்தியினை பெருக்கும் செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா?  நேர்த்தி ஆடுகள் வளர்ப்பு முறையானது பொருளாதார  நோக்கினைக் கொண்டதும் தான். பொதுவாக ஆட்டினை வளர்த்தவர்கள் சாப்பிடமாட்டார்கள். (இதுவும் மரபு, பண்பாடு சார்ந்தது. இன்று எப்படியோ தெரியவில்லை) ஆகவே அவர்கள் நோக்கம் பலியாக வெட்டப்படும் ஆடுகளை உயர்ந்த விலைக்கு விற்றுவிடுதல் தான். பலி கொடுக்கும் நிகழ்வு முடிந்து பேரம் பேசும் நிகழ்வை அவதானிப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

 

யாருடைய உரிமைகளையும் மறுப்பதோ நிராகரிப்பதோ நோக்கமல்ல. யாரையும் காட்டுமிராண்டிகள் என்று வரையறை செய்வதில் சிறிதும் உடன்பாடில்லை, ஒவ்வொரு மனிதரின் உரிமைக்காகவும்  குரல் கொடுப்பதே சிறந்த மனிதப் பண்பும் ஆகும்.

 

நாட்டார்மரபு அல்லது குல ஒழுக்கம் அல்லது இனக்குழும ஒழுக்கம் என்பதனை, வாழும் பருவ சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருட்கள் ,உற்பத்தி பொருளாதார நிலைகள், சமூக உறவுநிலைகள் போன்ற பல சமூக இயங்கியல் காரணிகள் தீர்மானிக்கின்றன. காலநீட்சியில் இவை மாறிவிடும் என்பது யதார்த்தமானது. வெளிப்படையானது. இன்றும் பல ஆலயங்களில் பலி கொடுத்தல் நிகழ்வு ஒரு சடங்காக  நடைபெறுகிறது. அங்கு உயிர் காவு வாங்கப்படுவதில்லை. நீதிமன்ற பரிசோதனைகளும் இல்லை. வெறுமனே மஞ்சள் ண்ணியோ, பூவோ, பொட்டோ இடுவதுடன் அந்த சடங்கு முடிவுறுகிறது. இது மாற்றம்தான். உடன்கட்டை ஏறுதல் இல்லாமல் போய் ஒரு கோழி முட்டையைப் பிணத்துடன் எரிப்பதில் நிற்கிறது. இதுவும் நாளை மாறக்கூடும். அதற்காக இந்தப் பலிகொடுத்தல் நிகழ்வு தன்னியக்கமாக மாறும் என்று காத்திருப்பதும்  தவறானது.  அதேவேளை சட்டம் அல்லது வன்முறை மூலம் இந்த மரபினை நிறுத்தும் அதிகாரம் என்பதுவும் கேள்விகுற்படுத்தப்பட வேண்டியதே.  பன்முகப் பண்பாட்டு படிநிலையில் இதனை நாங்கள் புறநிலையாகத்தான் பார்க்கவேண்டும். மிருகங்கள் உலகத்தில் உள்ளன. மனிதன் உலகத்தில் மட்டுமல், உலகத்தோடும் உள்ளவன். மனிதசமூகம் ஒற்றைப் பரிமாணத்தில் சிக்கிக்கொள்வதிலை. மனிதன் இயற்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான். விலங்குகள் இயற்கைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன.   நாங்கள் மனிதராக இருக்கப்போகிறோமோ என்பதே கேள்வியாகிறது.

 

இந்த இடத்தில், வல்லிபுரக் கோவில், செல்வசந்நிதி , கற்கோவளம் பேச்சியம்மன் ஆலய சூழலையும்  நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பது யாழ்ப்பாண சமூக இயங்கியலில் தெய்வங்களின் அல்லது ஆலயங்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள உதவலாம். இதில் பேச்சியம்மன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் "மச்சப்படையல்" நிகழ்வு முன்னர் நடைபெற்றுவந்திருந்தது. இது மிருகபலி நிறுத்தப்பட்டு வேறு ஒரு இடத்திலிருந்து மாமிசஉணவு வகைகளைக் கொண்டுவந்து சமைத்து உண்பதாக மாறி இருக்கிறது. அம்மன் பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் மாறிவிட,  தற்போது ஆலய வளவில் இருந்து குறிப்பிட தூர இடவித்தியாசத்தில் வேறு ஒரு பேச்சியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செல்வச்சந்நிதி ஆலயம் அது சார்ந்து இயங்கும் பண்பாட்டுத்தளம் இன்னொருவகையில் முக்கியமானது. ஒடுக்கப்பட சாதியினரால் நடத்தப்படும் பூசை நிகழ்வுகளில் எல்லோரும் சமமாகக் கொள்ளப்பட்டு உற்சவம் செய்பவரும் தன்னை ஒரு வணங்கியாகக் கருதிப் பூசை செய்யும் நிகழ்வு நடைபெறும்.(விரிவாக பார்க்க யாழ்ப்பாணம்.சிவத்தம்பி )  இவை இரண்டு எடுத்துக் காட்டுகளே. சமூகபண்பாட்டு நகர்வில் ஆலயங்கள் எவ்வகையில் பங்களிக்கின்றன என்பதனை இவற்றினூடாகவே புரிந்துகொள்ளமுடியும்.

 

வேள்வியை தடை செய்யக்கோருவது  இந்துத்துவவாதிகள் அல்லது உயர்ஆதிக்க சாதியினர் ஆகவே இதனைச் சாதிஅரசியல் சார்ந்தே நாம் அணுகவேண்டும் என்ற கருத்துருவாக்கமும் இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டியதே. முதலில் பொருளாதார நிலைப்பட்ட யாழ்ப்பாண மூகம் இந்துத்துவ சமூகமாக இல்லை என்ற பெரும் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். வெள்ளாள மேலாண்மை கொண்டதாகவே இருக்கிறது. இதில் சம்ந்தப்பட அந்த ஆலயம் சூழ்ந்த அல்லது அந்த ஆலயத்தினை நிர்வகிக்கின்ற சாதியினர் யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறானதொரு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது. வீரசைவர் என்ற அந்தச் சமூகம் ஒரு படிநிலை ஆதிக்க சமூகம் தான்.

 

மிருகபலி என்பதை எதிர்க்கும் அதே மனநிலையில் நின்றுதான் சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்வுகளையும் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அரசினை நிராகரித்தல் என்பதற்காக அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிராகரித்துவிடுதல் ஏற்புடையதல்ல.  இது  பதில்களை வைத்துக்கொண்டு கேள்விகளை வரைவது போன்றதாகும். சட்டவிதிகளை மீறிப் பெரும்பான்மை அல்லது மாதிரி என்ற சொல்லாடல்களைக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது என்று எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

 

இந்த மிருக பலியிடலை வெறுமனே சாதியப் பிரச்சனையாக சுருக்கிவிட முடியாது. இதன் அகக்கூறுகளை நோக்கவேண்டும். அதன் விளைவுகளை இனம் காணவேண்டும். அதன் பன்முகத்தன்மையினை இனம் கண்டு கேள்விக்குற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே மிருகபலியிடல் கொண்டிருக்கும் பண்பாட்டு அரசியலை வெளிக்கொண்டுவர முடியும். இங்கு பண்பாட்டினை மீறக் கோருதல் என்பது பண்பாட்டை முற்றாக மறுப்பதன் மூலம் மீறுதல் அல்ல, பண்பாட்டின் கூறுகளை மறுப்பதால் மீறுதல் என்பதுதான். ஒரு இனக்குழுமத்தின் பண்பாட்டின் சில கூறுகளை நீக்கம் செய்வதினூடாகப் பண்பாடு அழிந்துவிடப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பண்பாட்டிசம் காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருப்பதும் வெளிப்படையானது. நாம் ஈழத்தமிழ் இனத்தின் காலத்திற்கு ஒவ்வாத பண்பாட்டின் கூறுகளைத் தான் நீக்கம் செய்ய வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம்.

 

உயிர்ப்பலி வழிபாட்டுமுறையானது, ஒடுக்கப்பட்ட சாதியினரது உரிமை. இதனை நிறுத்துவது அவர்களை மேலும் ஒடுக்குவதாகவே அமையும்  என்ற கருத்தினை உடைத்தெறியவேண்டியது அவசியமானது. தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மரபுகளைக் கைக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க நிர்ப்பந்திக்கும் ஆதிக்கசக்திகளின் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே இதனைக்கொள்ள முடியும்.

 

 மொழி. கலாசாரம். பண்பாடு  என்ற ஒவ்வொரு சமூகத்தின் கூறுகளிலும் மதம் விரவிக்கிடக்கிறது. அதன் வேர்கள்  மூலம் ஒவ்வொரு தளத்தினையும் பற்றி வைத்திருக்கிறது. இவற்றினை அனுசரித்தே ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நிகழ்த்தமுடியும். அது நவீனத்தின் முழுமையான மத நீக்கமாக இருக்கமுடியாவிட்டாலும், நவீன சமூகமயப்பட்ட, நவீன பண்பாட்டு வயப்பட்ட மாற்றமாக இருக்கவேண்டியது அவசியமாகும். 

 

நன்றி ; பொங்குதமிழ் இணையம் 

 

Share this post


Link to post
Share on other sites

வேள்வி இறைச்சிதான் ரூசி என்று ஆதிக்க சாதியினர் சொல்லினம்...

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, putthan said:

வேள்வி இறைச்சிதான் ரூசி என்று ஆதிக்க சாதியினர் சொல்லினம்...

வேள்வி இறைச்சி ருசியானதுதானே புத்தன்.

உதாரணமாக கோவில் படையல், அன்னதானம், குளிர்த்தி சாப்பாடு எனக்கு இப்பவும் பிடிக்கும். இங்கு அறுசுவை  உணவு பரிமாறப் படாவிட்டாலும் அதன் சுவையும், பலருடன் சேர்ந்து உண்ணும் தன்மையும் தனித்துவமானது. ஏன் வேள்வி இறைச்சி சுவையானது என்று எனக்கு தெரியாது ஆனால் சிறுவயதில் மாதம் ஒருமுறைதான் ஆட்டு இறைச்சி வீட்டில் சமைப்பதுண்டு. அதனால்தான் இது பிடிக்குமோ தெரியாது. கவனாவத்தை வேள்விக்கு  - சீயாக்காய், அரப்பு, அதற்குள்ளே போட்ட தேசிக்காயை அம்மா கண் எரிய எரிய தேச்சுவிட்டு அதற்கு பின் ஒரு முழுக்கு - எதோ ஒருநாளும் தின்னாததை போல  அந்த வேள்வி இறைச்சிக்கு ஒரு எதிர்பார்ப்பு. என்ன காரணமோ எனக்கு தெரியல்ல - ஆனா பிடிக்கும் 

ஆமா தெரியாமத்தான் கேட்கிறன் - உந்த ஆடு, மாடு, பண்டி, கோழி, மான், மரை, மீன், இறால், நண்டு எண்டு எல்லாத்தையும் கொண்டுதானே திங்கிறம், உயிரோடு  ஒருத்தரும் முழுங்கிரதில்லைதானே. அப்புறம் இங்கு மட்டும் என்ன பிரச்சனை. பொதுமக்கள் பார்வையில்/முன்னிலையில்  வைத்து வெட்டுவது கூடாதுதான். அதனை தவிர்த்துவிட்டு இதை கடவுள் பெயரால் செய்தால் என்ன இல்லை பக்கத்து வீட்டுக்காரன் பெயரில வெட்டினால் என்ன. 

சாமியா தின்னுறார், சாமியின்ற பேர்ல நாமதானே வயுத்துக்குள்ள போடப் போறம் - அப்புறம் என்ன கவலை

கொண்டா பாவம் - திண்டா போச்சு.  

Share this post


Link to post
Share on other sites

ஜீவா. வேள்வி இறைச்சி கொஞ்சம் சுவையாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

ஏனெனில்.. நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைக் கொழுக்கப் பண்ண அவற்றிக்குப் போடப்படும் சாப்பாடுகள் கொஞ்சம் விசேசம் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்!

ஆடுகளை வெட்டுங்கள் சாப்பிடுங்கள் ..ஏனெனில் புரதம் உடம்புக்குத் தேவை!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் பாதையில் செல்லும் போது...எங்கே பாகிஸ்தான் எல்லை தொடங்குகின்றது...எங்கே இந்திய எல்லை முடிகின்றது என்று ஆக்களைப் பார்த்தே சொல்லிவிடலாம்!

ஆனால் கொல்லாமையைப் போதிக்கும் மதம் ஒன்றின் சந்நிதானத்தில் எதற்காக இந்தச் சித்திரவதை?

மகாத்மா காந்தி பசுப்பால் குடிப்பதில்லை! அதற்கு அவர் கூறிய காரணம் பசுவின் உரிமையாளன் கன்றுக்கு என்று ஒரு துளியும் விடாமல்..முலைகளில் இருந்து இரத்தம் கசியும் வரை பாலை உறிஞ்சி எடுப்பது தான்!

இந்து மதத்தில் எல்லாவற்றுக்கும் விளக்கம் வைத்திருப்பார்கள்! அதன் பலமும், பலவீனமும் அது தான்!

பாருங்கள் ..கொஞ்ச நேரத்தில் ஓடிவருவார்கள்...கண்ணப்ப நாயனாரைத் தூக்கிக் கொண்டு...!

 

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்....!

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்...

கங்கை வாழ் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்...

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுகளரே!

 

உங்களுக்கு ஒரு வைப்பாட்டி வைத்திருக்க விருப்பமா?

அதற்கும் இந்து மதத்தில் வழியிருக்கின்றது!

 

எமது இளைய தலைமுறையையாவது திருத்தி எடுப்போம்!

சூரனை ஏன் முருகன் வதம் செய்கின்றார் என்று உங்கள் குழந்தை கேட்டால்  என்ன விளக்கமளிப்பீர்கள்!

தொடருவோம்...!

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, புங்கையூரன் said:

ஜீவா. வேள்வி இறைச்சி கொஞ்சம் சுவையாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

ஏனெனில்.. நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைக் கொழுக்கப் பண்ண அவற்றிக்குப் போடப்படும் சாப்பாடுகள் கொஞ்சம் விசேசம் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்!

ஆடுகளை வெட்டுங்கள் சாப்பிடுங்கள் ..ஏனெனில் புரதம் உடம்புக்குத் தேவை!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் பாதையில் செல்லும் போது...எங்கே பாகிஸ்தான் எல்லை தொடங்குகின்றது...எங்கே இந்திய எல்லை முடிகின்றது என்று ஆக்களைப் பார்த்தே சொல்லிவிடலாம்!

ஆனால் கொல்லாமையைப் போதிக்கும் மதம் ஒன்றின் சந்நிதானத்தில் எதற்காக இந்தச் சித்திரவதை?

மகாத்மா காந்தி பசுப்பால் குடிப்பதில்லை! அதற்கு அவர் கூறிய காரணம் பசுவின் உரிமையாளன் கன்றுக்கு என்று ஒரு துளியும் விடாமல்..முலைகளில் இருந்து இரத்தம் கசியும் வரை பாலை உறிஞ்சி எடுப்பது தான்!

இந்து மதத்தில் எல்லாவற்றுக்கும் விளக்கம் வைத்திருப்பார்கள்! அதன் பலமும், பலவீனமும் அது தான்!

பாருங்கள் ..கொஞ்ச நேரத்தில் ஓடிவருவார்கள்...கண்ணப்ப நாயனாரைத் தூக்கிக் கொண்டு...!

யோகசுவாமிகள் சொன்ன நாலு வாக்கியத்தை சொல்லி தப்பிக்க‌லாம் என்று நான் நினைக்கிறேன் 

1. எப்பவோ முடிந்த காரியம் 
2. நாம் அறியோம் 
3. ஒரு பொல்லாப்பும் இல்லை 
4. முழுதும் உண்மை

Quote

 

 

Edited by putthan

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, புங்கையூரன் said:

கொல்லாமையைப் போதிக்கும் மதம் ஒன்றின் சந்நிதானத்தில் எதற்காக இந்தச் சித்திரவதை?

நான் ஒருநாளும் வேள்வியை நேரில் பார்த்ததில்லை. ஆனால் கத்தியால் சதக் எண்டு வெட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் என்ன சித்திரவதை. மீனை பிடித்து உடனேயே யாரும் கொல்வதில்லை. அது தண்ணீர் இல்லாமல்  துடி துடித்துதான் படகுல சாகுது. இந்த ஜீவகாருண்யத்தை அங்கும் காட்டலாமே. பொதுமக்களின் பார்வையில் கொல்வது பிழைதான். கோவிலில் கொல்வது பிழையா இல்லையா என்பது வேறு வாதம். ஆனால் தின்னனுமெண்டா  கொல்லத்தான் வேணும்.

ஆகவே கணம் கோட்டார் அவர்களே கொல்வது பிழை இல்லை, எங்கே எப்படி என்பதுதான் இங்கு பிரச்சனை. கொல்லுறதெண்டு முடிவெடுத்தாச்சு இனி எங்கயாவது எப்படியாவது கொல்லுங்கோ - ஆனா நமக்கு பங்கு வந்தாகணும். ஆமா சொல்லிப்புட்டன். :grin:

12 hours ago, புங்கையூரன் said:

உங்களுக்கு ஒரு வைப்பாட்டி வைத்திருக்க விருப்பமா?

அதற்கும் இந்து மதத்தில் வழியிருக்கின்றது!

அட பாவி இவ்வளவுகாலமா இதை ஒருத்தரும் எனக்கு சொல்லவேயில்லை 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவி இவ்வளவுகாலமா இதை ஒருத்தரும் எனக்கு சொல்லவேயில்லை 

உங்களுக்கு அகப்பைகாம்பு சரிவராது..:grin:

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, புங்கையூரன் said:

சூரனை ஏன் முருகன் வதம் செய்கின்றார் என்று உங்கள் குழந்தை கேட்டால்  என்ன விளக்கமளிப்பீர்கள்!

ஹிட்லரை ஏன் உலகமே அழித்தது எனும் கேள்விக்கு கொடுக்கும்  விடையில் கொஞ்சம் தேன் தடவி,  அப்புறம் மானே, மயிலே எண்டெல்லாம் இடையில போட்டு சொருகி சொல்லுவேன். 

20 minutes ago, நவீனன் said:

உங்களுக்கு அகப்பைகாம்பு சரிவராது..:grin:

 

இது உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு  போல கிடக்கு. இப்பவந்து இதை சொல்லி என்ன சொல்லாட்டி என்ன. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்துசமுத்திர பகுதியில்  சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன. தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன. தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/64909
  • நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு கூடுதல் திரையை எப்படி ஒட்ட வைக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இரு திரைகளைக் கொண்ட லேப்டாப்பை வடிவமைத்தனர். அதற்கு ‘டூயோ’ என்று பெயர். ஆனால், மூன்று திரை இருந்தால் நன்றாக இருக்குமே... என வாடிக்கையாளர்களும், லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களும் விரும்பின. லேப்டாப்பின் திரையின் வலது புறத்தில் ஒன்றும், இடது புறத்தில் ஒன்றும் பொருத்தி சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள். மூன்று திரைக்கும் ஒரேயொரு பிராசஸர், இயங்குதளம்தான். சோதனை வெற்றி பெறவே முத்திரை லேப்டாப்புக்கு ‘ட்ரையோ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.எடிட்டிங் துறையில் இருப்பவர்கள், கேம் பிரியர்கள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் புரொஜெக்‌ஷன் செய்பவர்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு முத்திரை லேப்டாப் பேருதவியாக இருக்கும். இதை மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 1080 ரெசல்யூசனுடன் 14 இன்ச் மற்றும் 12.5 இன்ச் டிஸ்பிளேவில் இது கிடைக்கும். 2020க்குள் முத்திரை லேப்டாப் விற்பனைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை நாற்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526417
  • பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில்  விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை  ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.   ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட   இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில்  சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526449
  • விரும்பியோ விரும்பாமலோ புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தமான அரசியல் காய் நகர்தலை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இருந்தால் ஆரும் உதவி இல்லாத ஈழ தமிழரை யார் காப்பது . ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்.