Jump to content

அம்மா..உனக்கென ஒரு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11may2.jpg

 

அன்னையர் தினம்..!

 

அகிலத்தின் அன்னையர்களுக்கு…,

இது ஒரு தினம் !

 

என் தேசத்து அன்னையருக்கு..,

இது ஒரு செய்தி!

 

எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம்,

நினைத்துப் பார்க்கையில்…!

 

இதயத்தின் ஆழத்தில் …,

எங்கோ ஒரு மூலையில்,

இலேசாக வலிக்கின்றது!

 

அப்பா என்னும் ஆண் சிங்கம்,

பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்..,

அடங்கிப் போன அம்மா!

 

பிரசவங்களின் போதெல்லாம்,,

மரணத்தைத் தரிசித்து…,

மீண்டு வருகின்ற அம்மா!

 

ஆண் என்றாலும்.

பெண் என்றாலும்,

ஆண்டவன் தானே தருகின்றான் என்று,

ஆறுதல் கொள்ளும் அம்மா!

 

அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை,

ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்லை!

ஆயுள் காப்புறுதியும் இல்லை!

 

உரிந்த வேப்பம் பட்டைகளும்,

நல்லெண்ணையில் பொரித்த,

வெறும் முட்டைப் பொரியலும்,

கொஞ்சம் வசதியிருந்தால்…,

பச்சைக் காயம் ஆறி ப்போகக்,

கொஞ்சம் நற் சீரகம்!


 

எப்போது தூங்குகிறாள்?

எப்போது விழித்துக் கொள்கிறாள்?

என்பது யாருக்குமே தெரியாது!

ஒரு வேளை…,

எரியாத ஈர விறகுகளுக்கும்,

அரிக்கன் லாம்புகளுக்கும் மட்டுமே,

தெரிந்திருக்கக் கூடும்!

 

அக்காக்களையும், தங்கைகளையும்..,

ஓடி..ஓடிக் கவனிப்பாள்!,

 

ஏனம்மா.

எங்களை மட்டும் கடையிலா வாங்கினாய்?

 

இல்லையப்பு…,

உங்களுக்கு விளங்காது!

இது தான் எப்போதுமே அவளது பதில்!

 

நாளை அவளுக்கு எப்படியோ?

உங்களுக்கென்ன?

ஆம்பிளைச் சிங்கங்கள் நீங்கள் என்பாள்!

 

அம்மா வைத்துக்கொள்ளுங்கள்!

எதைக் கொடுத்தாலும்,

இன்னொரு பிள்ளையிடம் ,

அன்று மாலையே

அது போய் விடும்!

 

ஏனம்மா?

என்று கேட்டால்…,

எனக்கென்னதுக்கப்பு?

அவன் பார்த்துக்கொள்ளுவான்!

 

அவள் மீது கோபம் தான் வரும்!

 

,ஏன் அவ்வாறு செய்தாள்?

அக்காவின் மீது…,

அவளுக்கு விருப்பம் அதிகமா?


தனக்குக் கொள்ளி வைக்கப் போகிறவன்,

கடைக் குட்டி….,

அவன் மீது அவளுக்கென்ன,

தனியான பாசமா?

 

அன்று புரியவில்லை !

 

இன்று….,

எல்லாமே புரிகின்ற போது..,

அருகில் அவள் இல்லை!

 

அம்மா…!

சமன் படுத்த முயன்றிருக்கிறாள்!

மேடு பள்ளங்களை…

நிரவ முயன்றிருக்கிறாள்!

 

சமுத்திரத்தின் அலையாக,

வாழ்ந்து காட்டியிருக்கிறாள்!

 

எவ்வளவு உண்மை?

 

வசதியானதிடமிருந்து…,

வசதி குறைந்தததுகளுக்கு,

வசதிகளைப் பகிர்ந்திருக்கிறாள்!

 

அவளுக்கு எல்லாமே குஞ்சுகள் தானே?

 

இன்று எல்லாமே புரிகின்றது!

 

இறைவன் என்பவன்…,

எதற்காக.. அன்னையைப் படைத்தான் என்று!

 

தான் போகாத இடங்களுக்கெல்லாம்,

தாயைத் தனது பிரதிநிதியாக்கினான்!

 

அன்னையர் தின வாழ்த்துக்கள்!



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ந்து உருவாக்கிய வரிகள் ..பாராட்டுக்கள் புங்கையூரான் . எந்நாளும் அன்னையர் தினம் தான்  எங்களுக்கு .

 மறந்தவர்களுக்கு  நினைவூட்ட ஒரு நாள் அன்னையர் தினம். யாழ் கள அன்னையர்களுக்கு   வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின்.... . கவிதையில், எந்த வரியை மேற்கோள் எடுத்து கருத்து சொல்லலாம் என்று தேடிய போது....
முழுக் கவிதையும், அர்த்தம் நிறைந்த வரிகள்.  வாசிக்கும் போது.... கண் கலங்கியது உண்மை.

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

உணர்ந்து உருவாக்கிய வரிகள் ..பாராட்டுக்கள் புங்கையூரான் . எந்நாளும் அன்னையர் தினம் தான்  எங்களுக்கு .

 மறந்தவர்களுக்கு  நினைவூட்ட ஒரு நாள் அன்னையர் தினம். யாழ் கள அன்னையர்களுக்கு   வாழ்த்துக்கள் 

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள், நிலாமதி அக்கா!

நீங்கள் கூறுவது உண்மை தான்!

எமது கலாச்சாரத்தில் எல்லா நாட்களும் அன்னையர் தினங்களே! 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதையா? இல்லை உணா்வுகளின் வெளிப்பாடா? வாிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, வாசித்து முடிக்கையில் விழிகளில் ஒருதுளி நீர் . நன்றிகள் புங்கை. இமயமாய் அம்மா அதன் சிகரமாய் அப்பா. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான உணர்ச்சிமிகுந்த கவிதை. வணக்கம் புங்கைtw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2016 at 4:21 PM, தமிழ் சிறி said:

புங்கையூரானின்.... . கவிதையில், எந்த வரியை மேற்கோள் எடுத்து கருத்து சொல்லலாம் என்று தேடிய போது....
முழுக் கவிதையும், அர்த்தம் நிறைந்த வரிகள்.  வாசிக்கும் போது.... கண் கலங்கியது உண்மை.

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

வணக்கம்.. தமிழ் சிறி!

இருந்ததை இழந்த பின்னர் தானே...இழப்பின் பரிமாணம் தெரிகின்றது!

அம்மா என்ற வலை அறுந்து போனதும்...வேடங்கள் அவசியமில்லாமல் போக...உண்மை முகங்கள தங்களை அடையாளம் காட்டுகின்றன!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வறுமை' என்னை ஒரு போதும்
அழவைத்ததே இல்லை அன்று....!
''அம்மா உடன் இருந்ததால்!!''

இன்று வறுமையும் இல்லை;
அம்மாவும் இல்லை.

கட்டில் மெத்தை இருக்கு;
ஓட்டை  வீடும் கூட
மாடிக்கட்டிடமாச்சு
தினம் ஒன்று உடுத்தவும் இருக்கு.

ஆனாலும்,
''நீ மட்டும் இல்லையே அம்மா......''

''வாய்க்கு ருசியா ஆக்கி போடணும்,
உன் மடியில்  தலை வைத்துப் பல
கதை பேசி தூங்கணும்!
மறுபடியும் பிறப்பாயா....?

அம்மா....................

 

Link to comment
Share on other sites

அம்மாவை இழந்தேன்

மறுபடியும் வந்தாள் மனைவியாக 
மறுபடியும் பிறந்தாள் மகளாக 

அம்மாக்கள் இறப்பதேயில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கவிதையை படித்தேன் ....பச்சை முடிந்துவிட்டது...அம்மா ....என்னத்தை எழுத...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2016 at 2:36 AM, Kavallur Kanmani said:

இது கவிதையா? இல்லை உணா்வுகளின் வெளிப்பாடா? வாிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, வாசித்து முடிக்கையில் விழிகளில் ஒருதுளி நீர் . நன்றிகள் புங்கை. இமயமாய் அம்மா அதன் சிகரமாய் அப்பா. வாழ்த்துக்கள்

வணக்கம்...காவலூரின் கண்மணி!

அம்மாக்கள், எமது கலாச்சாரத்தின் கதாநாயகிகள்!

நாம் அழுகின்ற போது அழுது....நாம் சிரிக்கின்ற போது சிரிக்க அவர்களால் மட்டுமே முடியும்!

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

உணர்வின். வரிகள் அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.