Jump to content

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை * சம்பூர் விடயத்தில் இலங்கை, இந்திய அரசுடன் பேச்சு * விக்கியுடன் முரண்பாடு இல்லை 


Recommended Posts

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை * சம்பூர் விடயத்தில் இலங்கை, இந்திய அரசுடன் பேச்சு * விக்கியுடன் முரண்பாடு இல்லை 
நேர்காணல் : ஆர். யசி படப்பிடிப்பு : உதேஷ் இந்திக 
* நிராகரிக்கப்பட்ட கூட்டணியைக் கண்டு அஞ்சவில்லை * சமஷ்டியை சிங்களவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் * அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை
showImageInStory?imageid=272084:tn
 

போர்க்­குற்றம் தொடர்பில் அர­சாங்கம் மேற்­கொள்ளும் உள்­ள­கப்­பொ­றி­மு­றையில் அர­சாங்­கத்தின் பக்கம் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் உள்­ள­தென்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் முயற்­சி­யிலும் வடக்கின் சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­திலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்­களை அர­சாங்கம் கையாண்­டாலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணிகள் விடு­விப்பும், காணாமல் போனோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் தாமதம் உள்­ளது என தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­திரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி வருமாறு :

கேள்வி:- ஐக்­கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் இலங்­கைக்­கான விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவர்­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொள்­ளா­தது ஏன்?

பதில்:- ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வரும் சந்­தர்ப்­பங்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சந்­திப்­பு­களை மேற்­கொள்­வது வழ­மை­யா­னது. ஆனால் இவர்கள் எம்­முடன் சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வில்லை. காரணம் என்­ன­வென்­பதையும் தெரி­விக்­க­வில்லை.

கேள்வி:- கடந்த காலங்­களில் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்­து­வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது ஏன் பின்­னிற்­கின்­றது?

பதில் :- நாம் பின்­னிற்க­வில்லை. தொடர்ந்தும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

கேள்வி:- எனினும் கடந்த கால விரை­வுத்­தன்மை இப்­போது இல்­லா­மைக்கு அர­சாங்­கதின் மீதுள்ள நம்­பிக்­கையா காரணம்?

பதில்:- இல்லை, எமக்கு அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இல்லை. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்தின் பூரண ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்ட ஒன்­றாகும். அந்த தீர்­மானம் வலு­வான ஒன்­றாக அமை­வ­தற்கு நாம் அங்­கி­ருந்து செயற்­பட்டோம். அதனால் தான் இலங்கை அர­சாங்­கமும் இணங்­க­வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது. அதன் பின்னர் தீர்­மா­னத்தை எவ்­வாறு நிறை­வேற்­று­வது என்­பது தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி தலை­மையில் இரு­த­ட­வைகள் சர்­வ­கட்சி கூட்டம் கூடி­யது. நாமும் அதில் கலந்­து­கொண்­டி­ருந்தோம். எனினும் எவ்­வாறு இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது என்று கேட்டல் நாம் ஆலோ­ச­னை­களை முன்­வைப்போம். ஆனால் எதை தவிர்ப்­பது எதை நிறை­வேற்­று­வது என்ற கேள்­விகளுக்கு இட­மில்லை. இந்த தீர்­மானம் வேறு ஒரு நிறு­வ­னத்தின் தீர்­மானம் அல்ல. இது இலங்­கையில் சொந்தத் தீர்­மா­னமும் கூட. பாரா­ளு­மன்­றத்­திலும் எமது நிலைப்­பாட்டை தெளி­வாக கூறி­யி­ருந்தோம். சர்­வ­தேச நீதி­ப­திகள், விசா­ர­ணை­யாளர், வழக்­க­றிஞர் பங்­கு­பற்றும் விசா­ரணை என கூறப்­பட்­டுள்ள போதும் அது சர்­வ­தேச ஆலோ­ச­கர்­களை வைத்து செய்யும் ஒன்­றல்ல. உள்­ளக பொறி­மு­றை­யாக இருக்­கலாம். ஆனால் அவ்­வாறு உள்­ளக பொறி­மு­றை­யா­ளர்கள் தமக்­கான வேலையை சரி­யாக செய்ய வேண்டும். இதில் நாம் தெளி­வாக உள்ளோம்.

இலங்கை அர­சாங்கம் அடுத்த கூட்டத் தொடரில் தமது வாய்­மூல அறிக்­கையை சமர்­ப்பிக்க முன்னர் சில பொறி­மு­றை­களை கையாள்­கின்­றது. அதை நாம் அவ­தா­னித்து வரு­கின்றோம். சில விட­யங்­களில் எமது ஆலோ­ச­னை­களை வின­வி­யுள்­ளனர். அதேபோல் எமது நிலைப்­பாட்டை தெளி­வாக தெரி­வித்­துள்ளோம். வரும் இரு­மாத காலத்­தினுள் அர­சாங்கம் இந்த விட­யங்­களில் பல­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும். குறிப்­பாக காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் பொறி­முறை, உண்­மை­களை கண்­ட­றியும் செயற்­பா­டுகள் விட­யத்தில் உறு­தி­யான நிலைப்­பாட்டை எட்ட வேண்டும். இந்த விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறி­மு­றையை முன்­வைக்கும் போது அது நாம் ஏற்­று­கொள்ள கூடிய வகையில் உள்­ளதா இல்­லையா என்­பது தொடர்பில் எமது நிலை­ப்பாட்டை முன்­வைப்போம். இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அனு­ச­ரணை அவ­சியம். அவர்­களின் பிர­தி­நி­திகள் நாம். ஆகவே நாம் அதை ஏற்­று­கொள்ள வேண்டும்.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் உள்­ளகப் பொறி­முறை தொடர்பில் அர­சாங்கம் உங்­களை ஆலோ­சித்து தீர்­மானம் எடுக்­கின்­றதா?

பதில்:- முற்­று­மு­ழு­தாக எம்­முடன் அவர்கள் ஆலோ­சிக்­க­வில்லை. ஒரு­சில முக்­கிய விட­யங்­களில் எம்­முடன் ஆலோ­சிக்­கின்­றனர். ஆனால் அவர்­கள் தமது பொறி­மு­றையை முன்­வைக்கும் போதும் நாம் எமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­துவோம்.

கேள்வி:- இறு­தி­யாக இடம்­பெற்ற மனித உரி­மை­கள் பேர­வையின் கூட்­டத்­திலும் அர­சாங்க பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர், உங்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­ள­வில்­லையே ஏன்?

பதில்:- மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பில் எந்த விவ­கா­ரங்­களும் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த ஒக்­டோபர் முதலாம் திகதி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போதும் ஜூன் மாதத்தில் தான் இலங்கை தொடர்பில் வாய்­மூல அறிக்­கையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூரண அறிக்­கையும் கொண்­டு­வ­ரப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது. அர­சாங்க தரப்பு கட்­டாயம் போக­வேண்டும். ஆகவே மார்ச் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர். ஆனால் எமக்கு அந்தத் தேவை இருக்­க­வில்லை.

கேள்வி:- நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் செயற்­பா­டுகள் சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து தப்­பித்­துக்­கொள்ள சாத­க­மாக அமை­யுமே?

பதில்:- இல்லை, வடக்கில் காணிகள் விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம் போன்ற விட­யங்­களை காட்டி அர­சாங்­கத்­தினால் தப்­பித்­துக்­கொள்ள முடி­யாது.என்ன நடந்­தாலும் ஜூன் மாதத்­துக்கு முன்னர் அவர்கள் அறிக்கை முன்­வைத்தே ஆக­வேண்டும். அர­சாங்­கத்தின் பக்கம் முன்­னேற்­ற­மான சில விட­யங்கள் உள்­ளன. அவற்­றையும் நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். குறிப்­பாக புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சாங்கம் விரை­வாக நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. வழி­காட்டல் குழு­விலும், அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யிலும் இது­வ­ரையில் எடுத்­துள்ள தீர்­மா­னங்கள் அனைத்தும் ஏக­ம­ன­தான தீர்­மா­னங்­க­ளா­கவே அமைந்­துள்­ளன. அதேபோல் காணிகள் விடு­விப்பு, கைதிகள் விடு­விப்பு, காணா­மல்­போனோர் தொடர்பில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் தாமதம் உள்­ளது. ஆனால் அதையும் தாண்டி பொறுப்­புக்­கூறல் என்ற விட­யத்தில் அர­சாங்கம் கவ­ன­மாக செயற்­பட வேண்டும். இந்த கார­ணங்­களை முன்­வைத்து தப்­பிக்க முடி­யாது.

கேள்வி:-வட­மா­காண சபையின் பிரே­ரணை மற்றும் வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தெற்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது இன­வாத செய­லாக அமைந்­துள்­ளதா?

பதில்:- எமது அர­சியல் நிலை­ப்பாட்­டையே வட­மா­காண தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யுள்­ளனர். இணைந்த வட­கி­ழக்கு முறை­யி­லான ஆட்­சி­முறை வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு. அதைத்தான் வட­மா­காண சபையின் பிரே­ர­ணை­யிலும் நிறை­வேற்­றி­யுள்­ளனர். எனினும் தெற்கின் இன­வா­தி­க­ளுக்கு எம்மை எதிர்க்க ஏதேனும் ஒரு காரணம் தேவைப்­ப­டு­கின்­றது. ஆகவே எமது பிரே­ர­ணையை கார­ண­மாக வைத்­துக்­கொண்டு சமஷ்டி என்­பது நாட்டை பிரிப்­பது என்ற ஒரு பொய்­யான கருத்தை பரப்பி வரு­கின்­றனர். எனினும் இவர்­களின் செயற்­பா­டு­க­ளையே நாம் கரு­வி­யாக பயன்­ப­டுத்தி சமஷ்டி என்றால் என்ன என்­பதை சிங்­கள மக்­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்த வேண்டும். நாங்கள் சமஷ்­டியை முன்­வைத்தால் அதை ஏற்­று­கொள்ளும் நிலையில் சிங்­கள மக்கள் இல்லை. ஆகவே அவர்­களே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் நாங்கள் அவர்­க­ளுக்கு கூறும் மறு­மொழி பல­த­ட­வை­களில் அவர்­களை சென்­ற­டை­கின்­றது. ஆகவே தெற்கின் இன­வா­திகள் இன­வாத புர­ளியை கிளப்­பி­யுள்­ளமை எமக்கு மிகவும் பிர­யோ­ச­ன­மான ஒன்று என நான் கரு­து­கின்றேன். இது எமக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கண்­டிய தலை­வர்­களே முதலில் நாட்டில் சமஷ்­டியை கோரி­னார்கள். ஆகவே இது சிங்­கள மக்­க­ளுக்கு மாறாக அமைய வாய்ப்­பில்லை. தமிழ் பிர­தி­நி­திகள் அன்று சமஷ்டி கோரிய போதும் எமது மக்கள் ஏற்­றுக்­கொள்ளவில்லை. 1956ஆம் ஆண்டு தனி சிங்­கள கொள்கை கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் தான் தமிழ் மக்கள் சமஷ்­டியை விரும்­பி­னார்கள். இந்த உண்­மை­களை சிங்­கள மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

கேள்வி:- இன­வாத கருத்­துகள் ஒரு­புறம் இருக்­கட்டும், அர­சாங்­கத்தில் உள்ள பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே வடக்கின் செயற்­பா­டு­களை எதிர்த்து நிற்­கின்­ற­னவே?

பதில்:- பிர­தான கட்­சிகள் எதிர்க்­க­வில்லை. ஏனெனில் பிர­தான கட்­சி­களின் இரண்டு தலை­வர்­களும் எமது கருத்தை எதிர்க்­க­வில்லை. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தொடர்ந்து அதி­கார கோரிக்கை நியாயம் என்ற வகையில் தான் கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்பு சட்டம் ஒன்றும் அஞ்­சக்­கூ­டிய விடயம் இல்லை என தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அந்த கட்­சி­களை சேர்ந்த சிலர் முரண்­பட்டு தெரி­விப்­பது கருத்­தில்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை.அவர்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் வாக்­கு­களை பெறவும் தம்மை சிங்­க­ள­வர்கள் என காட்­டிக்­கொள்­ளவும் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர். எமது மத்­தி­யிலும் இவ்­வாறு நடக்­கின்­றது. எம்­முடன் இருக்கும் சிலர் கூட தமி­ழீழம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி மக்கள் மத்­தியில் கதைக்­கின்­றனர். ஆனால் இவைகள் எல்லாம் சுய­ந­லம் மற்றும் அர­சியல் சூழ்ச்­சி மட்­டு­மே­யாகும். இவை வடக்­கிலும் உள்­ளன. தெற்­கிலும் உள்­ளன.

கேள்வி:- சமஷ்டி தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர் மீது நம்­பிக்கை வைத்­துள்ளோம் என்­பதா உங்­களின் கருத்து?

பதில் :- ஒருவர் மீதும் நம்­பிக்கை இல்லை, ஏற்­பட்­டுள்ள இந்த சந்­தர்ப்­பத்தின் மீது மட்­டுமே எமக்கு நம்­பிக்கை உள்­ளது. ஏனெனில் எமது நீண்­ட­கால பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி ஆர்­வ­மாக உள்ளார். பிர­த­ம­ருக்கும் அந்த எண்ணம் உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் ஆத­ரவு வழங்­கு­கின்றார். அவ­ரு­டைய காலத்தில் முன்­வைக்­கப்­பட்ட தீர்வில் ஒற்­றை­யாட்சி என்ற பதம் நீக்­கப்­பட்டு இருந்­தது. அது அப்­போது நிறை­வேற்றப் பட்­டி­ருந்தால் இன்று நாம் வித்­தி­யா­ச­மான அர­சியல் அமைப்பின் கீழ் இருந்­தி­ருப்போம். அடிப்­படையில் சமஷ்­டியை உள்­ள­டக்­கிய வகையில் இன்­றைக்கும் அவ்­வா­றான ஒரு தீர்வு வரு­மாக இருந்தால் அதை நாம் ஏற்­றுக்­கொள்வோம். சர்­வ­தேச அழுத்­தமும், ஆட்­சி­மாற்­றமும் எமக்கு நல்­ல­தொரு சந்­தர்­ப்பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த சந்­தர்ப்­பத்தை நாம் சரி­யாக உப­யோ­கித்தால் எம்மால் நிச்­ச­ய­மாக எமது இலக்கை அடைய முடியும்.

கேள்வி:- சந்­தர்ப்பம் உள்­ளது, ஆனால் தமிழ் அர­சியல் தலை­மைகள் ஒற்­று­மை­யில்­லாத நிலையில் உள்­ளன. தனித்தனி அமைப்­புகள் உரு­வாக்கம் என்­பன இலக்கை அடை­வதில் தடை­யாக அமை­யுமே?

பதில்:- இது தான் ஜன­நா­யகம். அந்த ஜன­நா­யகம் உள்­ளதன் கார­ணத்­தினால் தான் தேர்­தலில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட நபர்­களும் முத­ல­மைச்­சரின் பெயரை வைத்து கூட்­டணி அமைப்­பதும், நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்­களும் கொழும்பில் கூட்­டணி அமைப்­பதும் என பல வேலை­களை செய்து பார்க்­கின்­றனர். இவர்கள் முயற்சி எடுக்­கலாம். ஆனால் மக்கள் விழிப்­புடன் உள்­ளனர். தமக்­கான சரி­யான இலக்கை எந்த தலை­மைத்­துவம் கொண்டு செல்­கின்­றது என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். வடக்கு, கிழக்கு மக்கள் எம்­முடன் உள்­ளனர். நாம் தேசிய ரீதியில் செயற்­பட்டு இலக்கை நோக்கி பய­ணிக்­கின்றோம் என மக்கள் கூறு­கின்­றனர். ஆகவே இந்த அணி­களை கண்டு நாம் அஞ்­ச­வில்லை. எமக்கு மக்கள் கொடுத்­துள்ள ஆணை­களை சரி­யாக நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமது கூட்­ட­மைப்பின் மீதுள்ள மக்­களின் நம்­பிக்­கையும் பிழைக்­காது.

கேள்வி:-வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடையில் இப்­போதும் முரண்­ப­டுகள் தொடர்­கின்­றதா?

பதில்:- இப்­போது முரண்­பா­டுகள் தொட­ர­வில்லை. எதிர்க்­கட்சி தலை­வரும், வட­மா­காண முத­மைச்­சரும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். அதற்­குப்­பி­றகு ஒரு சுமுக நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என நம்­பு­கின்றேன்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் இரு வேறு­பட்ட கருத்­துகள் நிலவும் நிலையில் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த முடி­யுமா ?

பதில்:- முரண்­பட்ட கொள்கை இல்லை. தாங்கள் தான் வீரர்கள் என கூறும் நபர்கள் எல்லா கட்­சி­க­ளிலும் உள்­ளனர். மக்கள் மத்­தியில் தம்மை வேறு­ப­டுத்த இந்த நிலைமை உள்­ளது. நிரா­க­ரிக்­கப்­பட்ட இந்த நபர்­களின் செயற்­பா­டு­களை மக்கள் கவ­னத்தில் கொள்ள மாட்­டார்கள். அது கட்­சி­யையும் பல­வீ­னப்­ப­டுத்­தாது.

கேள்வி:- வடக்கில் தொடர்ச்­சி­யாக முன்னாள் போரா­ளிகள் கைது­செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். எது தொடர்பில் உங்­களின் செயற்­பா­டுகள் எவ்­வா­றாக அமைந்­துள்­ளன?

பதில்:- இதில் கைது­செய்­யப்­ப­டு­கின்ற அநே­க­மா­ன­வர்கள் இரா­ணுவப் புல­னாய்வு பிரி­வுடன் வேலை­செய்­த­வர்கள். இது எல்­ேலா­ருக்கும் தெரியும். எனினும் இந்த கைது­களின் பின்­னணி எமக்கு தெரி­ய­வில்லை. முன்னர் இரா­ணு­வத்­துடன் நெருங்கி வேலை­செய்த இவர்­களை இப்­போது ஏன் கைது­செய்­கின்­றனர் என புரி­ய­வில்லை. எனினும் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வரும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கக்­கூட இது அமை­யலாம். எனினும் பொது­வாக இது மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது தொடர்பில் நாம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளோம். எனினும் விசா­ர­ணைகள் நடை­பெறும் நிலையில் இந்த விவ­கா­ரங்­களை அர­சாங்கம் வெளி­யி­டாமல் இருக்­கலாம். எனினும் மக்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை.

கேள்வி:- சம்பூர் விவ­காரம் தொடர்பில் என்ன புதிய நகர்­வுகளை மேற்கொண்டு வருகிறீர்கள்?

பதில்:- சம்பூர் பிரச்­சினை மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். ஆரம்­பத்தில் இருந்தே நாம் சம்பூர் விவ­கா­ரத்தில் மக்கள் பக்கம் செயற்­பட்டு வரு­கின்றோம். அப்­ப­கு­தி­யிகுள் மக்கள் வெளி­யேற்­ற­பட்ட போதே நாம் அவர்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­து­விட்டோம். அதற்­க­மைய அனல்மின் நிலையம் தவிர்ந்த ஏனைய பகு­தி­களின் மக்­களை குடி­ய­மர்த்த முன்­னைய அர­சாங்­கமும் இணக்கம் தெரி­வித்­தது. அனல்மின் நிலையம் தொடர்பில் இது­வ­ரையில் நாம் வாய் திறக்­காது இருக்க ஒரு காரணம் உண்டு. நாம் அப்­போது அனல்மின் நிலையம் தொடர்பில் கதைத்­தி­ருந்தால் இன்­று­வ­ரையில் எமது மக்கள் அந்த பகு­தி­க­ளுக்கு திரும்­பிச்­சென்­றி­ருக்க முடி­யாது. மக்கள் மீள்­கு­டி­யேற வேண்டும் அவர்­களின் சொந்த நிலங்­க­ளுக்கு போக­வேண்டும் என்பதே எமது பிர­தான நோக்­கமாக இருந்­தது. ஆனால் இன்று வாய் திறக்கும் எவரும் அன்று மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் வாய்­தி­றக்­க­வில்லை. மக்கள் முழு­மை­யாக அங்கு குடி­ய­மர நாம் மட்­டுமே கார­ணம். வழக்கில் கூட நாம் கஷ்­டப்­பட்டே வெற்­றி­பெற்றோம். அந்த கடின முயற்சி இன்று நிறை­வே­றி­யுள்­ளது. இப்­போது எழும் பிரச்­சினை என்­ன­வென்றால் அனல்மின் நிலையம் அமைத்தால் மக்­க­ளுக்கு என்ன கதி­யென கேட்­கின்­றனர். இதை அப்­போது எம்மால் கேட்­டி­ருக்க முடியும். ஆனால் அது மக்­களின் நிலங்­களை அப­க­ரிக்கும் செய­லாக அமைந்­து­விடும். இப்­போது மக்கள் குடி­யே­றி­யுள்­ளனர். எனவே இப்­போது அர­சாங்கம் அந்த பகு­தியில் அனல்மின் நிலையம் அமைப்­பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மக்­களை வெளி­யேற்ற முடி­யாது. இந்த வேலைத்­திட்டம் மக்­க­ளுக்கு சிக்கல் இல்­லை­யென்றால் விஞ்­ஞான முறைப்­படி ஆராய்ந்து உறு­திப்­ப­டுத்த முடி­யு­மானால் அதை ஏற்­றுக்­கொள்ள முடியும். அவ்­வாறு இல்­லாது மக்­களை பாதிக்கும் வகையில் அமை­யு­மாயின் அதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இந்த விடயம் தொடர்பில் நாம் அர­சாங்­கத்­து­டனும் இந்­திய அர­சு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். ஆராய்ந்து தீர்­மானம் எடுக்க முடியும்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் எந்­த­ளவில் மக்­களின் பிரச்­சி­னைகளை தீர்க்கும் என கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வது அர­சாங்­கத்­துக்கே மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. கடந்த மனித உரி­மைகள் பேர­வையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­துக்கு ஒரு காரணத்தை மட்­டுமே அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகளைத் தீர்க்­கவே அர­சியல் அமைப்பு உருவாக்கம் என தெரிவித்தனர். ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தரும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அமையும் என நம்புகின்றோம். மக்களின் பிரச்சினைகள் தீரும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உள்ளதா என நாம் கூறும் கருத்திலேயே இதற்கான தீர்வும் கிடைக்கும். வரைபு வரும் நிலையில் அதில் தீர்வு திட்டம் கூறப்பட்டிருக்குமாயின் அதை நாம் ஆதரிப்போம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக மக்களின் ஆலோசனைக்கு அதை வைப்போம். மக்களின் பூரண ஒத்துழைப்பின் பெயரிலும் ஆலோசனையின் மூலமுமே நாம் இணக்கம் தெரிவிப்போம்.

கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மஹிந்த அணியினர் போட்டிபோட்டுக்கொண்டு உள்ளனர். சிக்கல் வரும் நிலையில் விட்டுக்கொடுப்பீர்களா?

பதில்:- பாராளுமன்ற சம்பிரதாயத்தின் படி நாங்கள் தான் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளோம். எதிர்க்கட்சி எமக்கு வேண்டும் என நாம் வற்புறுத்தவும் இல்லை, எவரும் விரும்பி எமக்குக் கொடுக்கவும் இல்லை. பாராளுமன்ற விதிமுறைக்கு அமைய எமக்கே அது வரவேண்டும். அவ்வாறு இருக்கையில் ஆளும் தரப்பில் இருந்து ஒருசிலர் தனித்து செயற்பட விரும்புவதால் அவர்களுக்கு நாம் விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் தனித்த கட்சியாக உருவாக்கி பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரையில் விதிமுறைகளின் படி நிலைமை மாறும் வரையில் எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொண்டுக்க நாம் தயாரில்லை.

 

http://epaper.virakesari.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் குஞ்சுகள் இனி முகத்தை எங்கே வைப்பது? விக்கி சரியான பாதையிலேயே போகிறார்.

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

சம் சும் குஞ்சுகள் இனி முகத்தை எங்கே வைப்பது? விக்கி சரியான பாதையிலேயே போகிறார்.

இப் பேட்டியை கொடுத்ததே சுமந்திரன் தானே...? இங்கு எங்கே விக்கி வந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

இப் பேட்டியை கொடுத்ததே சுமந்திரன் தானே...? இங்கு எங்கே விக்கி வந்தார்?

 

2 hours ago, Gari said:
 

கேள்வி:-வட­மா­காண சபையின் பிரே­ரணை மற்றும் வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தெற்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது இன­வாத செய­லாக அமைந்­துள்­ளதா?

பதில்:- எமது அர­சியல் நிலை­ப்பாட்­டையே வட­மா­காண தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யுள்­ளனர். இணைந்த வட­கி­ழக்கு முறை­யி­லான ஆட்­சி­முறை வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு. அதைத்தான் வட­மா­காண சபையின் பிரே­ர­ணை­யிலும் நிறை­வேற்­றி­யுள்­ளனர். எனினும் தெற்கின் இன­வா­தி­க­ளுக்கு எம்மை எதிர்க்க ஏதேனும் ஒரு காரணம் தேவைப்­ப­டு­கின்­றது. ஆகவே எமது பிரே­ர­ணையை கார­ண­மாக வைத்­துக்­கொண்டு சமஷ்டி என்­பது நாட்டை பிரிப்­பது என்ற ஒரு பொய்­யான கருத்தை பரப்பி வரு­கின்­றனர். எனினும் இவர்­களின் செயற்­பா­டு­க­ளையே நாம் கரு­வி­யாக பயன்­ப­டுத்தி சமஷ்டி என்றால் என்ன என்­பதை சிங்­கள மக்­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்த வேண்டும். நாங்கள் சமஷ்­டியை முன்­வைத்தால் அதை ஏற்­று­கொள்ளும் நிலையில் சிங்­கள மக்கள் இல்லை. ஆகவே அவர்­களே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் நாங்கள் அவர்­க­ளுக்கு கூறும் மறு­மொழி பல­த­ட­வை­களில் அவர்­களை சென்­ற­டை­கின்­றது. ஆகவே தெற்கின் இன­வா­திகள் இன­வாத புர­ளியை கிளப்­பி­யுள்­ளமை எமக்கு மிகவும் பிர­யோ­ச­ன­மான ஒன்று என நான் கரு­து­கின்றேன். இது எமக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கண்­டிய தலை­வர்­களே முதலில் நாட்டில் சமஷ்­டியை கோரி­னார்கள். ஆகவே இது சிங்­கள மக்­க­ளுக்கு மாறாக அமைய வாய்ப்­பில்லை. தமிழ் பிர­தி­நி­திகள் அன்று சமஷ்டி கோரிய போதும் எமது மக்கள் ஏற்­றுக்­கொள்ளவில்லை. 1956ஆம் ஆண்டு தனி சிங்­கள கொள்கை கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் தான் தமிழ் மக்கள் சமஷ்­டியை விரும்­பி­னார்கள். இந்த உண்­மை­களை சிங்­கள மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

 

http://epaper.virakesari.lk/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அரசியல் வாதியே... அல்ல, 
ஒரு இனத்தின், வியாபாரி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கும் ஆப்பு வைக்கப்போகின்றது சிங்களம்
அதுதான் கூட்டமைப்பு அந்தரத்தில் நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் உந்த அதிஸ்டலாபச் சீட்டுக்காக எத்தனை ஆண்டுகள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்திருக்கிறார். இப்ப கிடைச்ச அதிஸ்டத்தை அதுவும் சாவுக்கு முன்னர் கிடைச்சதை விடுவாரா பின்ன. :rolleyes:

இவை எல்லாக் காலமும் பேசிக்கிட்டே இருக்கினம். பேசிப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்ததாச் சரித்திரமில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

22 hours ago, MEERA said:

சம் சும் குஞ்சுகள் இனி முகத்தை எங்கே வைப்பது? விக்கி சரியான பாதையிலேயே போகிறார்.

என்ன சரியான பாதையில் போகின்றாரா ?இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்த தெரியவில்லை ,மேலும் அதிகாரம் கேட்கின்றோம் ,வந்த நிதியை சரியான திட்டங்களுக்கு செலவழிக்க நேரமில்லை /வழிதெரியவில்லை -நிதியை திருப்பி அனுப்புகின்றோம் ,நிதியில்லை போதாது என்று புலம்பல் .மாகாண சபையில் நாளுக்கு நாள் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம் ,நிறைவேற்றிய தீர்மானங்களை செயற்படுத்த முயற்சியில்லை 

கிழக்கு மாகாண சபையில் 2015இல் TNA ஆட்சிப்பொறுப்பு எடுத்த போது வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டுவிட்டது ,அப்படி இருந்தும் சம்பூர் மீள்குடியேறிய முதல் 234குடிம்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கமுடியுமாயின் ,100%தமிழர்களை கொண்டுள்ள வடமாகாண சபை வலிகாமத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு ஏன் செய்யமுடியவில்லை ?அல்லது இதுவரை என்ன செய்துள்ளார்கள் ?

சுன்னாகம் குடிநீர் பிரச்னைக்கு ஐங்கரநேசனால் விசாரணைக்குழு அமைக்க சட்டத்தில் இடமிருக்கு மானால் அதை தீர்த்துவைக்க இவர்களிடத்தில் அதிகாரமில்லையா ?

 ஆடத்தெரியாதவர்கள் மேடை சரியில்லையாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.5.2016 at 2:20 PM, Gari said:

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை *

இவ்வளவுகாலமும் தவமாய் தவமிருந்து எடுத்த பொக்கிஷத்தை விட்டுக்குடுக்க அவைக்கு என்ன விசரே? எங்களுக்கு அழிவைப்பற்றி அக்கறையில்லை அழகுதான் முக்கியம். tw_grin:

Link to comment
Share on other sites

முப்பது வருடங்களாக அழிக்கும் போது விசில் அடித்துவிட்டு இப்ப கொஞ்சம் ஆக்கபூர்வமாக நடப்பது பிடிக்காமல்  நக்கல் வேறு .

நாட்டில் இருக்கும் மக்களுக்கு போர் முடிந்ததே பெரிய விடயம் தான் .

பலருக்கு வேலையால் வந்து பியரை அடித்துக்கொண்டு  எத்தனை ஆமி எத்தனை புலிகள் என்று ஸ்கோர் கேட்க வழியிலாமல் போனது கஷ்டமாக கிடக்கு . 

Link to comment
Share on other sites

3 hours ago, Gari said:

என்ன சரியான பாதையில் போகின்றாரா ?இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்த தெரியவில்லை ,மேலும் அதிகாரம் கேட்கின்றோம் ,வந்த நிதியை சரியான திட்டங்களுக்கு செலவழிக்க நேரமில்லை /வழிதெரியவில்லை -நிதியை திருப்பி அனுப்புகின்றோம் ,நிதியில்லை போதாது என்று புலம்பல் .மாகாண சபையில் நாளுக்கு நாள் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம் ,நிறைவேற்றிய தீர்மானங்களை செயற்படுத்த முயற்சியில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Gari said:

என்ன சரியான பாதையில் போகின்றாரா ?இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்த தெரியவில்லை ,மேலும் அதிகாரம் கேட்கின்றோம் ,வந்த நிதியை சரியான திட்டங்களுக்கு செலவழிக்க நேரமில்லை /வழிதெரியவில்லை -நிதியை திருப்பி அனுப்புகின்றோம் ,நிதியில்லை போதாது என்று புலம்பல் .மாகாண சபையில் நாளுக்கு நாள் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம் ,நிறைவேற்றிய தீர்மானங்களை செயற்படுத்த முயற்சியில்லை 

கிழக்கு மாகாண சபையில் 2015இல் TNA ஆட்சிப்பொறுப்பு எடுத்த போது வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டுவிட்டது ,அப்படி இருந்தும் சம்பூர் மீள்குடியேறிய முதல் 234குடிம்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கமுடியுமாயின் ,100%தமிழர்களை கொண்டுள்ள வடமாகாண சபை வலிகாமத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு ஏன் செய்யமுடியவில்லை ?அல்லது இதுவரை என்ன செய்துள்ளார்கள் ?

சுன்னாகம் குடிநீர் பிரச்னைக்கு ஐங்கரநேசனால் விசாரணைக்குழு அமைக்க சட்டத்தில் இடமிருக்கு மானால் அதை தீர்த்துவைக்க இவர்களிடத்தில் அதிகாரமில்லையா ?

 ஆடத்தெரியாதவர்கள் மேடை சரியில்லையாம் ?

வடமாகாண சபையில் இரண்டு அமைச்சுக்கள் தமிழரசுக்கட்சியிடம் அவைத்தலைவர் தமிழரசுக்கட்சி இங்கு வினைத்திறன் இன்றி வடமாகாண சபை இருப்பதற்கு காரணம் தமிழரசுக்கட்சி. 

மேலும் சிவஞானம் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்ன என்று கூறிய காணொளி யாழில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லாத்திற்கும் முதலமைச்சர் தான் காரணம் என்று சாட்டு சொல்ல முடியாது.

சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண சபையில் சபை உறுப்பானர்களான இளைஞர்களால் அமளி ஏற்பட்டது அதன் பின்னணி யார்? அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் இடம் தருவதாக சம் சும் கூட்டணி இந்த இளைஞர்களுக்கு கூறி இவர்களை உசுப்பேத்துதல் எதற்காக? 

ஐங்கரநேசன் அமைத்த விசாரணைக் குழு பிரச்சனையை தீர்க்கவில்லை எனில் தமிழரசுக்கட்சி வசமுள்ள சுகாதார அமைச்சு என்ன செய்கிறது? 

மீள் குடியேறிய மக்களுக்கு தமிழரசுக்கட்சி வசம் உள்ள அமைச்சு என்ன செய்கிறது? 

 வடமாகாண சபை அமைச்சர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை விட முதலமைச்சருக்கு நற்பெயர் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 5/15/2016 at 1:16 PM, MEERA said:

 

வடமாகாண சபையில் இரண்டு அமைச்சுக்கள் தமிழரசுக்கட்சியிடம் அவைத்தலைவர் தமிழரசுக்கட்சி இங்கு வினைத்திறன் இன்றி வடமாகாண சபை இருப்பதற்கு காரணம் தமிழரசுக்கட்சி. 

மேலும் சிவஞானம் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்ன என்று கூறிய காணொளி யாழில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லாத்திற்கும் முதலமைச்சர் தான் காரணம் என்று சாட்டு சொல்ல முடியாது.

சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண சபையில் சபை உறுப்பானர்களான இளைஞர்களால் அமளி ஏற்பட்டது அதன் பின்னணி யார்? அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் இடம் தருவதாக சம் சும் கூட்டணி இந்த இளைஞர்களுக்கு கூறி இவர்களை உசுப்பேத்துதல் எதற்காக? 

ஐங்கரநேசன் அமைத்த விசாரணைக் குழு பிரச்சனையை தீர்க்கவில்லை எனில் தமிழரசுக்கட்சி வசமுள்ள சுகாதார அமைச்சு என்ன செய்கிறது? 

மீள் குடியேறிய மக்களுக்கு தமிழரசுக்கட்சி வசம் உள்ள அமைச்சு என்ன செய்கிறது? 

 வடமாகாண சபை அமைச்சர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை விட முதலமைச்சருக்கு நற்பெயர் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

 

மனம்திறக்கிறார் சீ.வி.கே.சிவஞானம்

By Deepam Desk -
 
May 19, 2016
68
deepam24-6-696x464.jpg

வடமாகாணசபை அமைந்து இரண்டு வருடம் கடந்துவிட்டது. இதுவரையான பயணத்தை திரும்பிப்பார்க்க எப்படி உணர்கிறீர்கள் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கேட்டோம். பல்வெறு விடயங்களையும் அவர் மனம்திறந்து பேசிய நேர்காணல் இது.

தீபம்: வடமாகாணசபை பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. என்ன நடக்கிறது மாகாணசபையில்?
சீ.வி.கே.சிவஞானம்: சாதாரண நிர்வாகம்தான் செய்கிறோம். பெரியஅளவில் மாற்றியதாக சொல்லமுடியாது. சாதித்ததாகவும் சொல்ல முடியாது. சில நிர்வாக நடவடிக்கைகள் நாங்கள் இல்லாதபோதும் நடைபெற்றுள்ளது. அதில பெரிய மாற்றங்களை செய்யதாக பொய் கூற முடியாது. அதிகாரம் இல்லை என்பதுஉண்மை. ஆனால் இருக்கிற அதிகாரங்களை வைத்து நாங்கள் நிறையச் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து. அதிகாரத்தை உருவாக்கிக் கொள்வது அதனை நடைமுறைப்படுத்துவது எமது திறமை. நான் மாநகரஆணையாளராக இருந்த போது அதிகாரம் இல்லை என்று நான் இருக்கவில்லை. நிறையச் செய்திருக்கின்றேன். அதற்கு எனக்குள்ளே வீதரியம் வேண்டும். துணிச்சல் வேண்டும். இந்த ஆற்றல் இருந்தால் நாங்கள் செய்யலாம்.

தீபம்: எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் 2016 தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதில் நாங்கள் ஒருஒற்றுமை என்பதில் என்னபங்களிப்பு இருக்கிறது ?
சீ.வி.கே.சிவஞானம்: ஒற்றுமை என்பது இரண்டு விதமாக இருக்க வேண்டும். ஒன்று முஸ்லிம் மக்களை நாங்கள் இணைக்க வேண்டும். முஸ்லிம்களும் தமிழ்மக்கள் என்ற வகையில் தீர்வை பெறுவதற்கு அவர் களுடனான ஒற்றுமை அவசியம். மற்றது தமிழ் மக்களிற்கிடையிலான ஒற்றுமை. நாம் போட்டிபோட்டுக் கொண்டிருந்தால் தெற்கு அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிடும். தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று உருவாகியிருக்கிறது. யாராவது பேசுகிறார்களா? விமர்ச்சிக்கிறார்களோ?. அல்லது அவரைப்பிடி இவரைப்பிடி என்று வழக்கு வைக்கினமோ. இல்லை. அவர்கள் என்னவும் செய்யலாம் என்னவும் சொல்லலாம். ஆனால் நாங்கள் யதார்த்தத்தை உணர்ந்துதான் செயற்படலாம். இலக்கை பற்றிய தெளிவு தேவை. எமது பயணத்தில் எல்லா தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம்.

deepam24interview.jpg

தீபம்: மாகாணசபை உறுப்பினர்களுக்குள்ளேயே பல பிரச்சினைகள் இருக்கிறது. இந்த குத்துவெட்டில் வாக்களித்த மக்களை யாரும் கவனிப்பதாக தெரியவில்லையே?
சீ.வி.கே.சிவஞானம்: எனக்கும் உந்தக் கருத்து உள்ளது. நாங்கள் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் அல்ல. நாங்கள் புதுச்சபை. மற்றது நான்கு கட்சிகளின் கூட்டு. ஜந்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேசங்களின் பிரதிபலிப்பு உண்டு. இதனால் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் சபையில் ஒரு முரண்பாடு வந்தாலும் அதை வாக்கெடுப்பிற்கு கொண்டு செல்ல நான் அனுமதிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் பின்னடைவு இருக்கிறது என்று நான் நினைக்கிறன்.

தீபம்: வடமாகாணசபையில் அமோகமாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறதே. இவற்றில் எத்தனைக்கு தீர்வு கிட்டியுள்ளது?
சீ.வி.கே.சிவஞானம்: தீர்மானங்களில் மூன்றுவகை உண்டு. பல தீர்மானங்கள் மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் தீர்மானங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் தீர்மானங்களை அனுப்பும்போது அதற்கு பதில் வரவில்லை என்பதற்காக தீர்மானங்களை அனுப்பாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு தீர்மானத்திற்கும் நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது. அதில் 25 தீர்மானங்களை தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மக்களுடைய அன்றாடதேவை, அரசியல்தேவை இவைகளைதானே நாங்கள் தீர்மானமாக்குகிறோம். தீர்மானங்களில் எவர் சம்பந்தப்படுகிறார்களோ அவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். சில தீர்மானங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாது.

தீபம்: வடக்கிலுள்ள வேலைவாய்ப்பின்மைக்கு வடமாகாணசபையினால் தீர்வுகாண முடியவில்லையே?
சீ.வி.கே.சிவஞானம்: இருக்கின்ற வெற்றிடங்களை நிரப்பச் சொல்லித்தான் நாங்கள் கூறிவருகின்றோம். ஆனால் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய அளவிற்கான வாய்ப்புகள் எங்களுக்கு என்னும் சரியாகக் கிடைக்கவில்லை. எங்களுடைய நிதியைப் பொறுத்தவரையில் மத்திய அரசாங்கத்தினுடைய நிதி உதவியை நம்பித்தான் இந்த மாகாணசபை இருக்கிறது. மாகாணம் சார்ந்த நிதிவளம் எங்களிடம் இல்லை. நாங்கள் ஒரு கைத்தொழிலை உருவாக்கும் வளமும் எங்களிடம் இல்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினைதான்.

– செல்வம்

http://deepam.news/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.