Jump to content

உயிரணை மனதைத் தொட்ட போராட்ட நாவல்.


Recommended Posts

13041435_1154254181261782_20330201932055

உயிரணை மனதைத்தொட்ட ஒருநாவல். 
(வாசகர் சூரியன் எழுதிய உயிரணை பற்றிய கருத்து)
-------------------------------------------------------------
 உயிரணை நாவல் என் கைகளுக்கு  கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து இடைநிறுத்த மனமில்லாது முழுமையாக படித்துவிட்டே புத்தகத்தை கீழே வைக்க முடிந்தது.

இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பிருந்த எனது போராளிகள் பற்றிய , போராட்டம் பற்றிய எண்ணவோட்டம் வாசித்து முடிந்ததும் முற்றிலுமாய் மாறியிருந்தது. ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வுச் சுழலுக்குள் நான் சிக்குண்டு தவிப்பது போல உணர்கிறேன்.

ஓரு போராளியின் கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது , அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான் , இறுதியில் என்னவானான் என நகர்கிறது நாவல்.

மிகச்சிறப்பாகக் கதை சொல்லும் முறையினால் கதையோட்டத்தின் ஊடே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளும் சில சிறப்புப் பயிற்சி முறைகளும் சில தளபதிகளது செயற்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

தலைவர் பற்றி நேரடியான துதிபாடலாக அல்லாமல் சம்பவங்களின் ஊடாக சித்தரிப்பதன் மூலம் அவர் பற்றிய பெரிய விம்பமொன்றை ஏற்படுத்தி நிற்கிறது.

'உயிரணை' தலையங்கம் கவிதைத்தனமாக இருக்கிறது. ஆனாலும் வாசிப்பவர்களுக்கு இலகுவான புரிதலைக் கொடுப்பதற்காக நூலாசிரியர் அதை பகுதிகளாக பிரித்திருக்கிறார். 

நீண்டகாலப்பதிவொன்றை எழுதும் போது அந்த விடயத்தின் மீதான ஈர்ப்பைத் தொடர்ந்து பேணுவது சிரமாகும். சிலவேளை இலக்கிய ரசனை குறைந்து கட்டுரைத்தனமாகவும் போவதுண்டு. ஆனால் அவ்வாறான தவறு நிகழாமல் மிகக் கவனமாக காலப்பிரிப்புகளோடு சுவாரசியத்தன்மை குறையாமல் எழுதப்படிருக்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது நுனியில் இருந்து கரும்பை கடித்துச் சுவைப்பது போல படிக்கப்படிக்க இனிமையாகவும் என்னையறியாமலே அந்த உலகத்தினுள் இழுத்துச் சென்றுவிட்டது. இறுதி அத்தியாயம் வாசித்த போது கதைநாயகன் பயணித்த முச்சக்கர வண்டியிலும் பேரூந்துப் பயணங்களிலும் நானும் சேர்ந்து பயணித்தது போல உணர்ந்தேன்.

மேவுதல் , கரைதல் , அவாவுதல் போன்ற உபபிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய காலங்களை இந்த மூன்று பிரிவுகளும் குறிக்கின்றன.

எதிரியை ஓடஓட விரட்டியடித்து உலகத்தின் பார்வையை இலங்கைத்தீவின் மீது திருப்பிய ஓயாத அலைகள் காலத்தை மேவுதலாகவும் , பின்னர் உலகமே திரண்டு அழிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் வன்னியில் வந்திறங்கிய சமாதான காலத்தை கரைதலாகவும் , இறுதிப்போரும் பின்னரான நாட்களும் அவாவுதலாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேவுதல் பகுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கில் வண்ணாத்திப் பாலத்தில் நிலைகொண்டிருந்த போது எதிரி மேற்கொண்ட முடிறியடிப்புத் தாக்குதலும் அதை எதிர் கொண்ட விதமும் ஓர் ஆங்கிலப்படத்தை நேரில் பார்த்தது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அந்தச் சண்டையில் கதை நாயகன் ஓர் கவசவாகனத்தை தாக்கியழித்தும் எதிரியின் முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியதும் அந்தக்களத்தையே கண்முன் கொண்டு வந்தது.

பின்னொரு தடவை கதைநாயகன் உட்பட சில போராளிகள் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்டதும் அதனை உடைத்து வெளியேறுவதுமான நிகழ்வை வாசிக்கிற போது காதுகளில் துப்பாக்கி வேட்டோசைகள் கேட்பது போல் உணர்ந்தேன்.

பின்னர் வேவிற்காக எதிரியின் முகாம்களுக்குள் சென்றதும் மூச்சுமுட்டும் தூரங்களுக்குள் எதிரியை எதிர்கொண்டு மீண்டதும் , இன்னொரு வேவின்போது பள்ளிக்காலம் தொடக்கம் உற்ற தோழனாயிருந்த கம்பனை பிரிந்ததும் மனதில் ஏதொவொரு கனதியை ஏற்படுத்துகிறது. மனம் முழவதும் அவர்கள் நடந்த பாதைவழியே பயணப்பட்டது. முன்னணி நிலை கடந்து வேவுக்கு செல்லும் போது அவர்கள் சுமந்து செல்லும் சுமைகளை நானும் சுமப்பது போல உணர்ந்தேன்.

உணவு தண்ணீர் இல்லாமல் தடுமாறுவதும் பாம்பு காட்டெருமை போன்றவற்றின் தாக்குதல்களால் கூட பாதிக்கப்படுவதும் புதியதாரு அனுபவமாயும் அந்தப் போராளிகள் நினைவில் கண்கலங்கவும் வைத்தது.

கடினம் நிறைந்த அவர்களது வாழ்க்கையின் ஊடேயும் மெல்ல அரும்பிய காதலும் மிக துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. ஆவர்களும் சாதாரண மனிதர்களே. தேசத்தின் நிலைதான் அவர்களை போராளிகள் ஆக்கியது என்பதனையும் உணர்த்தி நிற்கிறது.

புத்தகத்தில் எங்கேயும் ஆசிரியர் தனது போதனையையோ அல்லது அரசியல் பரப்புரையையோ செய்யாமல் மிக இயல்பாக சிந்துனைகளைக் கிழறிச் செல்கிறது. கதை சமாதான காலப்பகுதியில் சொல்கின்ற போது 'எங்கடை சனம் சமாதானத்தை நம்புதுகள் ஆனால் சிங்களதேசம் இன்னும் தம்பதீபக் கோட்பாடுகளோடு தான் இருக்குது' எனும் இடமும் மேவுதல் பகுதியில் சண்டையில் மரணமடைந்து போயிருக்கும் படைவீரர்களை பார்த்து கதை நாயகனின் எண்ணத்தில் தோன்றுவதாய் இவர்கள் ஏன் இங்கே வருகிறார்கள் ? என பல கேள்விகளை எழுப்புகிறான். இறுதியில் இவர்களின் வருகைக்கான காரணங்களில் இருக்கின்றன எமது விடுதலைக்கான நியாயங்கள் என்று சொல்லிச் செல்கிறார். இரண்டு இடங்களும் காட்டமான அரசியலை மிக இயல்பாக சொல்லிச் செல்கிறது.

இந்த இடங்களில் எழுத்தாளரது ஆழுமையை தனித்து இனங்காணக்கூடியதாக இருக்கிறது. போர் முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடையும் இந்நாட்களில் இறுதிப்போர் பற்றி பல வெளியீடுகள் வெளிவந்துவிட்டன. போரின் நேரடி பங்காளர்களாக இருந்து கடைசியுத்தகளம் வரை சென்று மீண்ட பலரது படைப்புகளும் வந்திருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை பொறுத்தவரையில் நேரடியாக களத்தை தரிசிக்காமல் விட்டாலும் தான் அறிந்து கொண்ட விடயங்களை மிகச்சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உள்ளக வெளியீடுகளை விடவும் இது மிகவும் உயிரோட்டமாக உள்ளது.

இந்தப்புத்தகத்தில் யரையும் வெளிப்படையாக குற்றம் சாட்டவில்லை. தீர்ப்பிடவும் இல்லை. அனைத்தும் வாசகன் எண்ணத்திற்கே விடப்பட்டிருக்கிறது. சிந்தனையை கிழறுவதாக இருக்கின்றதே தவிர போதனை செய்வதாக இல்லை.

எப்படி ஒரு போராளி ஒப்பனைகள் செய்து கொள்ளாமல் தனது சீருடையில் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியழிப்பானோ அதேபோல் வார்த்தைச் சோடிப்புகள் தேவையற்ற வர்ணனைகள் தத்துவ வியாக்கியானங்கள் எதுவும் இல்லாமல் மிக எளிமையாக ஓர் நதியோட்டம் போல நகர்கிறது.

ஓரு திரைக்கதையை எழுதுவது போல மிகக்கவனமாக ஒவ்வொரு காட்சிகளும் முழமையாக  எழுதப்பட்டிருக்கிறது. இது பேசப்படும் ஒரு நாவலாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பு.  கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் மற்றும் சீனமொழி பெயர்ப்பு நாவலான கூனற்பிறை (எழுதியவர் பெயர் நினைவில் இல்லை) போன்ற நாவல்களை வாசிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தை உயிரணை நாவலும் எனக்குத் தந்தது.

பூவரசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்தப்புத்தகத்தின் பதிப்பும் அட்டைப்படமும் சிறப்பாகவே இருக்கின்றன. உயிரணை உயிர்வரை சென்று தொடும் உணர்வு நிரம்பிய கதை. 

- சூரியன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி...அவுசில் எங்கு வாங்கலாம் என்று அறியத் தாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கிடைக்கும் என்று அறியத் தாருங்கள் சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சாந்தி அக்கா, உங்கள் படைப்பை வாசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

On 15.5.2016 at 1:35 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் சாந்தி...அவுசில் எங்கு வாங்கலாம் என்று அறியத் தாருங்கள்!


உங்கள் நாட்டிலிருந்து புத்தகம் கேட்ட நண்பர்களுக்கு தபாலில் அனுப்பவுள்ளேன். உங்களுக்கும் அப்படி அனுப்பலாம்.

On 16.5.2016 at 9:55 PM, கிருபன் said:

எங்கே கிடைக்கும் என்று அறியத் தாருங்கள் சாந்தி அக்கா.

கிருபன்,
பிரித்தானியாவில் ஆவணிமாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மற்றும் தபால் மூலமும் அனுப்பவுள்ளேன். விபரத்தை தனிமடலிடுங்கோ அனுப்பி வைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சகோதரி, பிரான்சில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் ....!

Link to comment
Share on other sites

On 18.5.2016 at 5:18 PM, Sasi_varnam said:

வாழ்த்துகள் சாந்தி அக்கா, உங்கள் படைப்பை வாசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன்.
 

thank-you_0.jpg

16 minutes ago, suvy said:

 சகோதரி, பிரான்சில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் ....!

பிரான்சிலும் அறிமுகம் செய்யவுள்ளோம். யூலை முதல் வாரம். விபரம் விரைவில் அறியத்தருகிறேன் சுவியண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 months later...

முகடு சஞ்சிகை மேடையில் பிரான்சில் உயிரணை நாவல் அறிமுகம். 

13737494_574987146039473_547657270056765

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.