Jump to content

எதிர்பாராப் பயணம் எதிர்கொண்டு வந்துவிட்டேன்.


Recommended Posts

 
FB_IMG_1454854552384.jpg


முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க - என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் - தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாறை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த 
வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#ஈழத்துப்பித்தன்
07.02.2016

(படம்: வட்டு வாக்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப்புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம். இறங்கி நின்று பார்க்க மனத்துணிவு இல்லாத்தால் வாகனத்தினுள் இருந்து எடுத்த படம்)

http://inuvaijurmayuran.blogspot.ch/2016/02/blog-post_7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.....ஆழப் பதிந்த ஆயுதவலி  உடலெங்கும்.....ரணகளமாய்.....சொல்ல வார்த்தையில்லை..

Link to comment
Share on other sites

On 18. Mai 2016 at 3:53 AM, alvayan said:

அருமை.....ஆழப் பதிந்த ஆயுதவலி  உடலெங்கும்.....ரணகளமாய்.....சொல்ல வார்த்தையில்லை..

அல்வாயன் வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி. ம் இந்த வலி நாம் மாழும் வரை கூடவே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான் .

 

ம்...ம்... என்னத்தைச் சொல்ல....!  

Link to comment
Share on other sites

On 22. Mai 2016 at 10:41 AM, suvy said:

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான் .

 

ம்...ம்... என்னத்தைச் சொல்ல....!  

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல் நெஞ்சையும் ஈரமாக்கும் கவிதை.

Link to comment
Share on other sites

On 23. Mai 2016 at 1:52 AM, குமாரசாமி said:

கல் நெஞ்சையும் ஈரமாக்கும் கவிதை.

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி குமாரசாமித்தாத்தா. இது அந்த முள்ளிவாய்க்கால் போன போது ஏற்பட்ட என் மன உணர்வை அப்படியே பிரதியெடுத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா ஊர் வரவுக்கும் உன்மையை தெளித்தற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சகோதரா

எம் மனநிலையை அப்படியே  தந்ததற்கு...

இதனால் தான் போகாமல் இருக்கின்றேன்....

அந்த இடங்களில் இதயம் நின்றுவிடலாம்...

Link to comment
Share on other sites

9 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி அண்ணா ஊர் வரவுக்கும் உன்மையை தெளித்தற்கும்

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி முனிவர் ஜீ.

வந்துதான் உண்மையை தெரிய வேண்டியவர்கள் அல்ல நாம். உணர்வாலே உணர்ந்தவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.