Jump to content

நட்புக்கு இலக்கணம்


Recommended Posts

நட்புக்கு இலக்கணம் நான்

கண்டு கொண்டேன்..

பொல்லாதார்..யார்

பொய்யரையார் யார்-இனம்

கண்டு கொண்டேன்..

சிலர் மாசற்ற நட்பென்பார்

காசென்றால் விற்றிடுவார்

சிலர் காசுக்காய் நட்புறுவார்

செல்வம் போக சென்றிடுவார்

உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த

ஊமையாய் இருக்கிறேன்..

பொய் பொய்யாய்

உரைப்பார்..மற்றவரின்

புத்திஎடை குறைப்பார்..

சிரிப்பாய் இருந்தாலும்..

சிந்திக்க வைத்துவிடுவார்..

நட்பாய் பழகு

நம்பிப் பழகாதே..

அன்பாய் பழகு

ஆதரவாய் நினைக்காதே..

தோள் கொடுக்கும்

தோழமை தொலைந்த

தேசத்தில்..முதுகில்

வாள் ஏறும்வரை

கைகட்டி நிற்காதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்பாய் பழகு

நம்பிப் பழகாதே

அழகான வரிகள் விகடகவி சார்

Link to comment
Share on other sites

அருமையான பொருள் கவி..அனைத்தும் நிஜமே..இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்... நல்ல அறிவுரை தான்.. B)

பெயர் தான் விகடகவி ஆனால் வில்லங்கமாக அல்லவா கவி வடித்திருக்கிறீர்கள் :lol:

Link to comment
Share on other sites

"நட்பாய் பழகு

நம்பிப் பழகாதே..

அன்பாய் பழகு

ஆதரவாய் நினைக்காதே"

அழகான வரிகள் நிஜமானவரிகள்

என்வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும் கூட

Link to comment
Share on other sites

"நட்பாய் பழகு

நம்பிப் பழகாதே..

அன்பாய் பழகு

ஆதரவாய் நினைக்காதே"

நம்ப நட நம்பி நடவாதே என்று நெடுகலும் ஆட்கள் செல்வார்கள் ஆனால் நண்பார்களை நம்பாமல் இருக்க முடியா ம்ம் உங்கள் கவியில் நன்றாகவே சொல்லியிருக்கின்றீங்கள். தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை.

Link to comment
Share on other sites

"நட்பாய் பழகு

நம்பிப் பழகாதே"

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

நண்பர்களை நம்பு! அது தான் நட்பு!!

"அன்பாய் பழகு

ஆதரவாய் நினைக்காதே"

இது மிகவும் நல்ல கவி வரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. பராட்டுக்கள்!

நட்புக்கு இலக்கணம் நான்

கண்டு கொண்டேன்..

பொல்லாதார்..யார்

பொய்யரையார் யார்-இனம்

கண்டு கொண்டேன்..

இந்த வரிகளில் ஒன்றில் ஓர் எழுத்துப்பிழை இருப்பதுபோல் தெரிகிறது. தவறாயின் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

நாங்கள் இணைத்த ஆக்கங்களில் உள்ள "Edit" Button ஏன் உடனே மறைகிறது?? மறையாமல் இருந்தால் நல்லது இல்லையா??

Link to comment
Share on other sites

நம்பினால் பழகு, நம்பாமல் பழகாதே

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஜயுரவும்

தீரா இடும்பை தரும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு

Link to comment
Share on other sites

விகடகவி என்ன ரொம்ப நொந்து போய் எழுதின மாதிரி இருக்கு. இருந்தலும் இதுதான் நிஜம் என்பது வேதனைக்குரிய விடயம். அழகான கவிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

கருத்துகளுக்கு நன்றி..

மன்னிக்கவும் செல்வமுத்து அவர்களே..

பொய்யுரையார் என்பது..

பொய்யரையார் என்று அடிக்கப்பட்டுவிட்டது..

edit பண்ண முடியவில்லை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடிதெனவே கண்டுகொண்டேன் கவிதையின் கருத்தன்னை

படித்ததனைப் பார்த்தவுடன் பரவசத்தால்

நெஞ்சுருகிக் கண்ணாலே பனித்தநீரோ

வெஞ்சமரில் வேல் பட்டுவீழ்ந்த வீரன்

கொஞ்சுமன்னை தனை நினைந்து உருகுமாறே

நட்பின் இலக்கணத்தால் நானுங்கலங்கிநின்றேன்.

நன்றிகள் பலவாமே நல்லகவி நாயகனே.

வாதாடுமூரிலே மாவேதமோதவே மாலேரி மூடுதாவா.

Link to comment
Share on other sites

பாராட்டுகளுக்கு தகுதி இருப்பதாக தோணாவிட்டாலும் உங்கள் அழகிய உள்ளத்திற்கு தலைசாய்க்கிறேன்

Link to comment
Share on other sites

நட்புக்கு இலக்கணம் கண்டு கொண்டு, யாழ்களத்தின் விகடகவியாய்

நயமாய் சொற்கள் பல சிறப்பாய் கோர்த்து வடிதத கவிதையில்

தோள் கொடுக்கும்

தோழமை தொலைந்த

தேசத்தில்..முதுகில்

வாள் ஏறும்வரை

கைகட்டி நிற்காதே வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள். . .

மேலும் தொடருங்கள். . .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.