Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

சமந்தா புட்டு - செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது.

புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.)

கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும்.

அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும்.

பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும்.

பின் நீத்துப் பெட்டிக்குள்  கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும்.

பின்.. தண்ணீர் கொதிக்கும்.. பானையில் வைத்து.. மூடி.. சமந்தா புட்டை.. நீராவியில் அவித்து எடுக்கவும்...

சமந்தா புட்டு ரெடி... பட் இன்னும் அது முழுமையான சமந்தா புட்டு ஆகல்ல. 

+

சமந்தா புட்டை எப்படிச் சாப்பிடுவது என்று நீங்கள் இப்ப நினைப்பீங்கன்னு தெரியும்..

உங்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சு தந்தால் தான் சாப்பிடுவீங்க என்பது நமக்கும் நல்லாத் தெரியும் என்பதால்...

கடையில் கனிந்த.. புள்ளி விழாத.. வாழைப்பழத்தை  வாங்கி.. உரிச்சு.. புட்டில் சேர்த்து பிசையவும்...

பிசையும் போது கவனிக்க வேண்டியது...........

இதில முக்கியமா சமந்தா புட்டு விசேசம் என்ன என்றால்.. வாழைப்பழம் மட்டும் போட்டு பிசையக் கூடாது.. + தேவையான அளவு சீனி (சீனி சாப்பிட தடை உள்ளவை.. பனங்கட்டி.. அல்லது சக்கரை சாப்பிடலாம்.. அல்லது சுவீட்னர் அட் பண்ணலாம்.).. அட் பண்ணி பிசைந்து உருண்டைகளாக்கி உண்ணவும்.

இதுவே சமந்தா புட்டு ஆகும். tw_blush:

Telugu-Actress-Samantha-Photo-Gallery-57  

பொறுப்புத் துறப்பு: (இதில டபிள்.. ரிபிள்.. மீனிங்ஸ் எதுவும் இல்லை. நேரிடையாக சமையல் குறிப்பு தான் உள்ளது. டபிள்ஸ்.. ரிபிள்ஸ் போறதற்கு நாம் பொறுப்பல்ல. நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால்.. சமந்தா புட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்ல.. இன்சுலினை ஏற்றிட்டு சாப்பிடவும்... எதுக்கும் வைத்திய ஆலோசனை செய்து சாப்பிடவும். எந்த பின்.. பக்க.. விளைவுகளுக்கும் நாம் பொறுப்பல்ல.)tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நயன் தாரா இடியப்பம்.

செய்முறை...

முதலில் வறுத்த சிவப்பு அரிசி மா.. மற்றும் அவித்த கோதுமை மா வாங்குங்கள் அல்லது தாயார் செய்து எடுங்கள்.

பின்.. சிவப்பு அரிசி மாவோடு சுடுதண்ணி.. உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அதன் பின் கோதுமை மாவிற்கும் சுடுதண்ணி உப்புச் சேர்த்து இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அப்புறம்.. இடியப்ப உரலை நன்கு கழுவி சுத்தப்படித்தி எடுக்கவும். சின்ன கண் இடியப்ப உரல் வேண்டாம். பெரிய கண் அவசியம். இடியப்ப மிசின் என்றாலும் ஓகே.

அதன் பின் மாவை திரட்டி எடுக்கவும். ஒரு திரட்டி சிவப்பு மாவில் இருந்தும்... இன்னொரு திரட்டி வெள்ளை மாவில் இருந்தும் நீட்டமாக.. திரட்டி பக்கம் பக்கமாக இருக்க இடியப்ப உரலில் வைச்சு.. கழுவிச் சுத்தம் செய்த இடியப்ப தட்டுக்கள் மீது.. இடியப்ப உரலால் இடிச்சுப் புளியவும்.

இப்போ....  இடியப்பத்தட்டில்... சிவப்பு வெள்ளை கலந்த இடியப்பம் நயந்தாராவின் வாழ்க்கை போல சிக்கலாக வந்திருக்கும்.

அவற்றை.. ஏலவே அடுப்பில்.. தண்ணி விட்டு கொதிக்க வைச்சிருக்கும் இட்லி சட்டியில் வைச்சு.. மூடி.. நீராவியில்.. அவிக்கவும்.

10- 15 நிமிசம் அவிச்ச பின் இறக்கி ஆறவிட்டு..

சம்பலோடு சாப்பிடவும்.

சம்பல் தயாரிக்கும் முறைக்கு யுரிப்பை நாடவும். அரிவரிப் பிள்ளைக்கு சொல்லிக்கிற கணக்கா.. எல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது.

இவ்வளவும் தான் நயன் தாரா இடியப்பம். tw_blush:

nayantara1.jpg

குறிப்பு: கனடாவில் இருந்து 10 டாலருக்கு 100 இடியப்பம் விற்பவர்களும் லண்டனில் 5 பவுன்னு 25 இடியப்பமும் 5 புட்டும் சொதி சம்பல் விற்பவர்களும்.. இந்த புட்டு.. இடியப்பங்களை கொப்பி அடிப்பது சட்டவிரோதமாகும். tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழல் புட்டுகள் நமக்கு சரிவராது வண்டு கட்டி அவித்த புட்டுகள் நல்ல ருசி இந்த குழல் புட்டு சும்மா பார்க்க நல்லாத்தான் இருக்கும் ஆனால் ருசி இல்லை ??

நயன்தாரா இடியப்பத்திற்கு அந்த கால மரத்தால ஆன உரல்தான் நல்லா இருக்கும் போல்  எனக்கு தென்படுகிறது ?

உலோக உரல் எப்படி யெல்லாம் புளியுது என்று தெரியவில்லை 

ஆனாலும்  இப்ப கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை அடிச்சுக்க இயலாது பாருங்க  ??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

 கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை  ??

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்க இந்த புட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒருத்தனை யும் காணவில்லை 

வாங்களண்டா ?☺

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

கலர் கொஞ்சம் பிரச்சனை அடிக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது என்று சொல்லக் கேள்வி. குரக்கன் புட்டு சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறம்.. குரக்கன் மாவில்.. புட்டவிப்பார்கள் என்று. tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

இப்ப ஹன்சிகா... இட்லி தான் இருக்கு. tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உந்த சமந்தா புட்டு,  நல்லாத்தான் இருக்கு. நீங்கள் அவிக்கலாம்..., நாங்கள் அவித்தால் அடுத்தநாளே மனிசி அஜித் போண்டா போடத் தொடங்கிடும்....!  tw_blush:

கிண்ணத்திலோ , கன்னத்திலோ யாருக்குத் தெரியும்...!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

ஆக அடி பத்தியதாவது ஒன்று கிடைக்கும் என்ற திருப்தி கிடைக்கட்டுமே அவருக்கு 

நான் வரட்டியை சொன்னன்??கிருபன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ அண்ணன்களா.. தம்பிகளா..  எங்களுக்கு எது எதுக்கு எப்படி பிசையனுன்னு நல்லாவே தெரியும். முடிஞ்சா நீங்களும் பிசைஞ்சு பாருங்க. புட்டா வந்தா.. புட்டு.. இடியப்பமா வந்தா இடியப்பம்.. ரொட்டியா வந்தா ரொட்டி.. ஓகே. அதை விட்டிட்டு... வந்திட்டாங்கய்யா.. கலாய்க்கினமாமில்ல கலாய்ப்பு. tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரோஜாதேவி பழஞ்சோறு..

hqdefault.jpg

கோடை வெயிலுக்கு இதமான எளிய உணவு இது. செய்வது சுலபம். ஒரு முறை உண்டால் நாள் முழுக்க சூட்டைத் தணிக்கும் அருமையான அமிர்தம் எனலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – தேவைக்கேற்ப
அடை ஊறுகாய் – பாதி
புளிப்பில்லாத இளந்தயிர் – 1 கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
சிறு வெங்காயம் – 4
சுட்ட வத்தல் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
இரவில் மீதமுள்ள சோற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அத்துடன் தயிர் சேர்த்து, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சுட்ட வத்தல், தேங்காய் துருவலை சேர்த்து உப்பிட்டு கொட்டை எடுத்த அடை ஊறுகாயை இட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

உண்பதற்கு ஏதுவாக பாத்திரத்தில் மாற்றி அதன் தண்ணீரோடு சேர்த்து சுவைத்தால் பசியும், தாகமும் தணியும். இது, அலாதியான ருசியைத் தரும் அற்புதமான உணவாகும். கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க அருமருந்தாக செயல்படும் காயல் பழஞ்சோறு காலை உணவாக பயன்படுத்துதல் சிறந்தது. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெல்லாம் பாறின் யூத்தா இருக்கு..ஆனா உள்ளுடன் எல்லாம் நம்ம உள்ளூர் கிழவியாயெல்லோ இருக்கு..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ganthimathi-s-ramarao-lorry-driver-rajak

காந்திமதி  கத்தரிகாய்  குழம்பு.

தேவையான பொருட்கள்.....
முத்தின கத்தரிகாய் - 3
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய் அளவு
மிளகாய் தூள் - 1தே.க
தனியாதூள் - 1/2 தே.க

அரைக்க...
தேங்காய் துருவல் - 2 தே.க
முந்திரி பருப்பு - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
பூண்டு - 1 பல்

தாளிக்க....
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - 2
 
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை
சேர்த்து தாளித்து பின் வெங்காயம்,பூண்டு சேர்த்து
வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும்
சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன்..... ஒரு கோப்பையில்.... சமந்தா புட்டு,  நயன்தாரா இடியப்பம், சரோஜாதேவி பழஞ்சோறு... 
போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சாப்பிடவும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புட்டு.. இடியப்பம்.. இட்லி எல்லாம் நீராவி காலத்துச் சாப்பாடுகள். இன்னும் நீராவிலான் அவிக்கிறாய்ங்களாக்கும். நம்ம அப்பத்தாட அப்பத்தா காலக்  கண்டுபிடிப்பு.. இவ்வளவு காலமும் நீடிக்குது. இன்னும் நீடிக்கும். tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

kajal-agarwal-162-h.jpg

 

காஜல் அகர்வால் மரவள்ளி கிழங்கு வடை :- 

 

organic_tapioca_starch1.jpg
கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

இந்த வடைக்கு.... ஓட்டை போட்டு சுடுவதா, ஓட்டை போடாமல் சுட வேணுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்கு கிழம்பினா நாங்களும் சும்மா இருக்கேலா..

இப்ப நான் சொல்ல போறது.

மம்முட்டி ப்ளேன்டீ...

தேவையான பொருட்கள்.

தேயிலை-தேவையான அளவு

சீனி-தேவையான அளவு

கேத்தில்

(கரன்ட் அல்லது விறகு-கேத்திலுக்கு ஏற்ப)

தண்ணி.

கப் 2

செய்முறை..

 

கேத்திலில் தண்ணியை விட்டு அடுப்பில் ஆவிவர நன் கு கொதிக்கவைக்கவும்.

கொதிச்ச தண்ணிய கப்பில் விட்டு தேயிலை சீனி போடவும்.

நன்றாக நுரை தள்ள இழுத்து ஆத்தவும்.

 

சுவையான மம்முட்டி பிளேன்டீ ரெடி...

Link to post
Share on other sites

 

 

"விஜயசிறீ" நீராகாரக் கஞ்சி


தேவையானவை:

பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

சென்னையில் அன்றாடங்காய்ச்சிகளும், தொழிலாளர்களும் உணவுக் கூடையை ஏந்திவரும் வஞ்சியை காண ஏங்கி, "வரதப்பா.. வரதப்பா.. கஞ்சி வருதப்பா..!" என ஆடிப்பாடி விரும்பி உண்ணும் உணவு இது..! tw_blush:

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

நமீதா அப்பளம்..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்கள் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆதி சங்கரர் நம்பூதிரி பிராமணர். பிராமணரைக் கண்டால் மற்றக் கீழ்ச் சாதியார் பத்து முழம் விலகி அவர்களுக்கு வழிவிட வேண்டும். சூத்திரர் நிழல் பட்டாலே தீட்டு என்பது மனு தர்மம்! அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் சங்கரர் சென்று கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார்கள். புலையனும் புலைச்சியும் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வழிவிடுவபவர்கள் போலவும் தெரியவில்லை. சங்கரர் அவர்களை விலகிப் போகுமாறு கைகளால் சைகை செய்தார். 'நம்முடய ஆச்சாரியார் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாக் குறைக்கு கையில் நான்கு நாய்களை புலையன் பிடித்திருக்கிறான்! போ! போ! விலகிப் போ! எட்டிப் போ" என்று சங்கரரின் சீடர்கள் கூவினார்கள். புலையன் சிரித்தான்! "அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப் போக சொல்கிறீர்கள்? இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாம் ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அந்த சத்தியத்தின் தோற்றம்தான.; உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள் இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார். அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தவறு. நாமே நம்மை அடித்துக் கொள்கிறோம் என்பதுதான் சத்தியம். தன்னை விட்டு தான் எப்படி விலக முடியும்?' இப்படி ஆணித்தரமாகக் கேட்டான் அந்தப் புலையன். உடனே சங்கரர் இப்பேர்ப்பட்ட ஞான நிலயை அடைந்தவன் புலையனாக இருக்கமுடியாது! காசிவிஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையாரும் தம்மைப் சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்' என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமான் நின்றார். புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால் வேதமாயின! 'என் மறு உருவம் ஆன சங்கரா! வாய்ப் பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல் வாழ்வியலிலும் நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவைக்க இந்த நாடகம் ஆடினேன்' என்று ஆசி வழங்கி காசி விசுவநாதரும் விசாலாட்சியும் மறைந்தனர் என்று கதை முடிகிறது. (தெய்வத்தின் குரல்) இந்தக் கதையில் கூட சிவனாரின் மறு அவதாரமான சங்கரர் ஞான நிலை அடைந்தவன் புலையனாக இருக்க முடியாது என்ற முடிவோடு இருந்தார் என்ற உண்மையே சொல்லப்பட்டுள்ளது. வேதம் இன்றி வர்ண தர்மம் இல்லை. வர்ண தர்மம் இன்றி வேதம் இல்லை. வேதத்திற்கும் வர்ண தர்மத்திற்கும் உட்பட்டதே சங்கரரின் அத்வைதம். 'ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார்' என்று காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்வது முக்காலும் உண்மை. அந்த கிருஷ்ண பரமாத்மா வர்ண தர்மம் பற்றி என்ன சொன்னார்? "சதுர்வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச: தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்" ( கீதை அத். 4- சுலோகம் 13) 'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய (கர்த்தா) என்னால் கூட முடியாது' (Though I am the creator of the four fold caste, know Me to be incapable of action or change). கீதை சாமானிய நூல் அல்ல. அது நால் வேதங்களையும் பிழிந்து வடிகட்டிய சாறு. தொட்டதற்கு எல்லாம் இந்து மதவாதிகள் கையில் எடுக்கும் போர்வாள். இந்து மதத்தையும் அதன் அடிநாதமான சாதி அமைப்பையும் வரலாற்றுப் பின்னணியில் சரிவரப் புரிந்து கொண்டாலே அதற்கெதிரான தமிழ்ச் சித்தர்களது போராட்டத்தின் வலிமை தெரியும்.
    • எங்களுக்கு... விளம்பரம் பண்ண தெரியாது.             இப்படித்தான்.... ஆக்ஸிஜன் கொடுப்பது.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.