Jump to content

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !


Recommended Posts

19 hours ago, nedukkalapoovan said:

அதேன் சாலாவையில் இராணுவம் சீரழிச்சதை இராணுவம் புனருத்தாரனம் செய்யனுன்னு துடிச்ச மைத்திரி அரசு.. தமிழர் நிலத்தில் தமிழர்களின் உடமைகளை.. காணிகளை சீரழிச்சதை புனருத்தாரனம் செய்து வழங்கனுன்னு நினைக்கல்ல... மக்கள் தான் அதைச் செய்யனுமாம்.. துண்டு துண்டா காணிகளை இராணுவ- அரசியல் தேவைகளுக்கு ஏற்ப விடிவிப்பினமாம்.. மக்கள் அதில் தாங்கள் தங்களின் முதுகை தட்டி சந்தோசிக்கனுமாம்.. அப்படியே வீட்டையும் கட்டிக்கனுமாம். 

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது இழுத்தடிக்கப்படப் பட.. நாயாறு போல் தமிழர் நிலம் சிங்கள மயமாவது கண்டுக்கப்படாத நிலை தான் நிலவுகிறது. சிங்கள இராணுவ இருப்பின் கீழ் தமிழ் மக்கள் சுதந்திர புருசர்களாக வாழ முடியுமா என்ற கேள்விக்குறிக்கு மத்தியில்.. தமிழர் நிலத்தை தமிழரே புனருத்தாரனமும் செய்யனும்.. அழிவை மட்டும் சிங்கள அரசும் படைகளும் செய்யும் என்று சிலர் இங்கும் விதி சமைக்க முயல்கிறார்கள்.

இத்தனைக்கும் வெளிநாடுகளில் போரின் அழிவைக் காட்டித்தான் சிங்கள அரசின் பிச்சை எடுப்பு நடக்குது. அதெல்லாம் எங்க போகுதோ...?! அதைக் கேட்க ஒரு மனுசரில்ல.. வறுமையில் உள்ள மக்களை இன்னும் இன்னும் வதைப்பதில்.. காணி  விடிவிப்பு நடக்காம் என்று படம் காட்டினம் சிலர். 

கேள்வி கேட்க ஆட்களே இல்லை என்ற துணிவு எல்லாருக்கும் சிங்களவனுக்கும் எம்மவர் போலி மனிதாபிமானிகளுக்கும். :rolleyes:

இதே ஒரு புத்தகோவிலாக இருந்திருந்தால்..

இப்போ சர்வதேச ஊடகங்களை எல்லாம் கூட்டி புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட சிங்கள மக்களின் அடையாளங்கள்.. இனச்சுத்திகரிப்பு என்று சிங்களம்  ஒரு பெரிய படமே காட்டி இருக்கும்.

ஆனால்.. பக்கத்தில்.. ஒரு இந்து அரசு இருக்குது.. அதுக்குக் கூட இந்த அழிவுகளை இனங்காட்ட எம்மவரால் முடியவில்லை. அதன் மனச்சாட்சியை வேண்டாம்.. இத்தனை கோடி இந்துக்களின் மனச்சாட்சியை.. இந்துக் கோவில்கள் மீது சிங்கள பெளத்த இராணுவம் காட்டிய வெறுப்பு வெறித்தனத்தைக் கூட இனங்காட்டாமல் தான்.. எம்மவர்கள்.. தம்மையே தாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விளைவு.. சிங்களவனும் அவனின் கொடுமைகளும்.. பயங்கரவாத அழிப்பாக.. தமிழரின் உரிமையும் நிலமும் அதற்கான போராட்டமும் அடாத்தும் பயங்கரவாதமும் ஆகிறது.

புத்தர் இந்தியாவில் இந்துக்களின் வீடுகளில் சயனம் செய்ய.. இங்கு இந்துக் கடவுள்களும் கோவில்களும் சிங்கள பெளத்த இராணுவத்தால் அழிக்கப்படுவது அடையாளம் இன்றி மறைக்கப்படுகுது. வெளிநாடுகளில் இந்திய இந்துக்கள் எம்மவர் கோவிலுக்கு வருவதை வரவேற்கினமாம். :rolleyes:

கேட்டால்.. புனருத்தாரனம்..! புனருத்தாரனம் செய்வதும்.. மக்கள் குடியேறுவதும் எவ்வளவு அவசியமோ.. அதே அளவுக்கு இவற்றை புனருத்தாரனம் செய்ய வேண்டிய நிலைக்கு அழித்தவனை அவனின் கொடுஞ்செயல்களை உலகின் மனச்சாட்சி முன் நிறுத்துவதும் அவசியம். யார் செய்வது...??!

இவற்றை செய்தால்.. புலிகள் பயங்கரவாதி ஆக முடியாதே என்ற வருத்தத்தில் எம்மவரிலும் ஆக்கள் இருக்கினம். :rolleyes:tw_angry:

நெடுக்கு,  இதனை நீங்களே செய்யலாமே!  ஏன் மற்றவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.  அங்கு விடுதலைப் புலிகள் போராடியபோதும் நீங்கள் அவர்களோ சேர்ந்து போராடவில்லை.  மாறாகப் புலம்பெயர்ந்து உங்கள் வாழ்க்கைக்கும் படிப்பிற்கும்தான் முக்கியத்துவம் கொடுத்தீர்கள்.  இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  இப்போது யார் நினைத்தாலும் இதனை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.  முன்னைப்போல், எங்களை வழிநடத்த எந்தத் தலைவர்களும் இல்லை.  ஆகவே, யார் வேண்டுமானாலும் போராடலாம்.   16 வயது நிரம்பிய ஒரு இளைஞனால் போராட்டத்தைத் தொடங்கமுடியும் என்றால் இத்தனை படிப்பறிவு கொண்ட உங்களாலும் முடியும்.  ஆகவே, நீங்களே நீங்கள் முன்வைக்கும் விடயங்களைத் தொடங்குங்கள்.  உங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் பின்தொடர்வார்கள்.  மற்றவனைக் கைகாட்டுவதற்கு முன்னர் நீங்கள் அதனைச் செய்யுங்கள்.  

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 10/07/2016 at 2:13 PM, தமிழச்சி said:

நெடுக்கு,  இதனை நீங்களே செய்யலாமே!  ஏன் மற்றவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.  அங்கு விடுதலைப் புலிகள் போராடியபோதும் நீங்கள் அவர்களோ சேர்ந்து போராடவில்லை.  மாறாகப் புலம்பெயர்ந்து உங்கள் வாழ்க்கைக்கும் படிப்பிற்கும்தான் முக்கியத்துவம் கொடுத்தீர்கள்.  இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  இப்போது யார் நினைத்தாலும் இதனை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.  முன்னைப்போல், எங்களை வழிநடத்த எந்தத் தலைவர்களும் இல்லை.  ஆகவே, யார் வேண்டுமானாலும் போராடலாம்.   16 வயது நிரம்பிய ஒரு இளைஞனால் போராட்டத்தைத் தொடங்கமுடியும் என்றால் இத்தனை படிப்பறிவு கொண்ட உங்களாலும் முடியும்.  ஆகவே, நீங்களே நீங்கள் முன்வைக்கும் விடயங்களைத் தொடங்குங்கள்.  உங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் பின்தொடர்வார்கள்.  மற்றவனைக் கைகாட்டுவதற்கு முன்னர் நீங்கள் அதனைச் செய்யுங்கள்.  

நாங்க ஒன்னுமே பண்ணல்ல என்று எந்தக் குடுகுடுப்பைக்காரன் வந்து சொன்ன துணிவில் இதை எழுதிறீங்கன்னு தெரியல்ல.

சொறீலங்கா அரசும் அரச படைகளும் செய்த அழிவுகளை அவர்கள் தாம் செம்மைப்படுத்த வேண்டும். அதற்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதைச் செய்பவர்களில் புலம்பெயர் இளையோர் எவ்வளவோ செய்யினம். ************* . எங்களுக்கு ஏழை மக்களின் துயரில் படம் போட்டு.. ஏழை மக்களை இன்னும் கஸ்டப்படுத்திப் பார்த்து.. விளம்பரம் தேடனுன்ன அரசியல் இல்லை. நாங்கள் இயன்றதை செய்யுறம். அது ஊரில் இருந்த போதும் சரி இப்பவும் சரி.. தொடர்ந்து..செய்வம். எங்களைப் போல ஒத்த சிந்தனை உள்ளவர்கள் செய்வார்கள்.

*************

*************

 

Link to comment
Share on other sites

8 hours ago, nedukkalapoovan said:

You know, where there are human beings naturally there will be problems. Our viewpoints are different. My upbringing and my perspectives are different, and your perspectives are different. So definitely there would be conflicts and difference of opinions. This is the reality. The issue is not about the existence of conflicts but how do we deal with these conflicts? How do we respect each other's opinions? Whatever your understanding, whatever your perspectives all of them are based on your experience and I should understand and respect that. We need not fight over that. May be we can agree on certain things, but we can also honourably disagree on other things.

இதைச் சொன்னது நாங்களில்ல. பேராசிரியர் ஐயாத்துரை. இளவயதில் இலங்கையில் பல்கலை ஒன்றுக்கு துணை வேந்தராக உள்ளவர்.

சிந்திக்கப்பட வேண்டிய கூற்றுக்கள்!

இவர் பேராசிரியர் ஐயாத்துரை இல்லை, பேராசிரியர் அரியதுரை (சாமுவேல் அன்பகன் அரியதுரை).

இவர் சில வருடங்களின் முன்னர் அரசுக்கு எதிராக நடந்த நீண்ட பல்கலைக்கழகப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அதனால் சிங்கள இனவெறியர்களின் தூண்டுதலில் போர்க்குற்றவாளி கோத்தபாயவால் பயங்கரவாதியாக கருதி மறைமுகமாக மிரட்டப்பட்டவர். சுமந்திரனின் நண்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

சிந்திக்கப்பட வேண்டிய கூற்றுக்கள்!

இவர் பேராசிரியர் ஐயாத்துரை இல்லை, பேராசிரியர் அரியதுரை (சாமுவேல் அன்பகன் அரியதுரை).

இவர் சில வருடங்களின் முன்னர் அரசுக்கு எதிராக நடந்த நீண்ட பல்கலைக்கழகப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அதனால் சிங்கள இனவெறியர்களின் தூண்டுதலில் போர்க்குற்றவாளி கோத்தபாயவால் பயங்கரவாதியாக கருதி மறைமுகமாக மிரட்டப்பட்டவர். சுமந்திரனின் நண்பர்.

பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டு விட்டது. நன்றி போல் அண்ணா இனங்காட்டியமைக்கு. தவறு திருத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவலுக்கும் நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளுக்கு நன்றி ஜீவன் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

என்ன நொச்சி அண்ணே சொல்லவாறீங்க.. ஒரு கமராவோடு போய் படம் எடுத்து யாழில போட்டால்.. சிங்களவன் பிடிச்ச ஊர்களை விட்டிட்டுவான் என்றா...??! இப்படியான அபரிமிதமான தோற்றப்பாடுகள் தான் எம் மக்களை சொந்த நிலத்தில் ஒரு துண்டுக் காணிக்கு கெஞ்சும்.. ஏதிலிகளாக்கி உள்ளது. 

விடுவிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் சிங்களவனின்.. சிங்கள இராணுவத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் தேவைக்கு சர்வதேசத்தில் சொறீலங்காவின் தேவை திருப்திப்படுத்தல் கருதித்தான் நடக்கே தவிர... தமிழ் மக்கள் மீதான கருசணையில் அல்ல. இதனை மக்கள் உணர்கிறார்கள். வெளிநாடுகளில் சொகுசா வாழ்ந்திட்டு இப்ப ஊருக்குப் போனவை தான் அதிகம் படம் காட்டினம். tw_blush:

கொஞ்ச நாள் சம்பூரை வைச்சு படம் காட்டிச்சினம்.. இப்ப அந்த மக்களின் கதி என்னென்னு யாரும் கணக்கிலும் எடுப்பதில்லை. இதே நாளை இங்கு.... இதில் எல்லாம் அதிகம் இருப்பது அரசியலும்.. விளம்பரமும் தான். மக்கள் நலன் என்ற போர்வை மட்டும் தான். :rolleyes:

ஒரு நிழற்படமே வியட்நாம் அழிவைத் தடுக்க உதவியது வரலாறு. 


நெடுக்காலபோவான் அவர்களே,

உங்களின் அரசியல் நிலைப்பாடுகள் நியாயப்பாடுகள் விமர்சனங்கள் ஆதங்கங்கள் சரியானதேயாயினும், தாயகத்திலே நின்று தமது சக்திக்கேற்ப நல்ல விடயங்களை முன்னெடுப்போரை நாம் ஊக்கப்படுத்துவதும் அவசியமானதே. விடுவிக்கப்படும் நிலங்களில் மக்கள் குடியேறுவது மிகமுக்கியமானது என்பதை நாம் மறுக்கமுடியாது. எனவே நாங்கள் யாராயினும் கருத்தியல் ரீதியாக பல்வேறு சிந்தனைகள் தோன்றுவது இயல்பானது. ஆனால் தேசியம் சார்ந்த விடயங்கள் விட்டுக்கொடுப்பற்றது. அதற்காக எமதினம் செலுத்திய விலை, செலுத்திக்கொண்டிருக்கம் விலை எமது இனத்துவ சக்திக்கு அதிகமானது. இவையாவற்றுக்கும் அனைவரும் ஒரு பொதுத்தளத்துக்கு வராதததும் சுயநலன் சார்ந்த சிந்தனையினதும் விளைவே இன்றைய அவலங்களுக்குக் கரணியமாக இருக்கிறது. எனவே சரியான விவாதங்களை முன்வைத்தவாறு, தவறானவற்றைச் சுட்டுவதோடு, சரியானவற்றைத் தட்டிக்கொடுத்தவாறு ஒன்றிணைத்து செயற்பவேண்டியது எமது தேவையாக உள்ளது என்பதை நாமனைவரும் மனம்கொள்ள வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nochchi said:

ஒரு நிழற்படமே வியட்நாம் அழிவைத் தடுக்க உதவியது வரலாறு. 


நெடுக்காலபோவான் அவர்களே,

உங்களின் அரசியல் நிலைப்பாடுகள் நியாயப்பாடுகள் விமர்சனங்கள் ஆதங்கங்கள் சரியானதேயாயினும், தாயகத்திலே நின்று தமது சக்திக்கேற்ப நல்ல விடயங்களை முன்னெடுப்போரை நாம் ஊக்கப்படுத்துவதும் அவசியமானதே. விடுவிக்கப்படும் நிலங்களில் மக்கள் குடியேறுவது மிகமுக்கியமானது என்பதை நாம் மறுக்கமுடியாது. எனவே நாங்கள் யாராயினும் கருத்தியல் ரீதியாக பல்வேறு சிந்தனைகள் தோன்றுவது இயல்பானது. ஆனால் தேசியம் சார்ந்த விடயங்கள் விட்டுக்கொடுப்பற்றது. அதற்காக எமதினம் செலுத்திய விலை, செலுத்திக்கொண்டிருக்கம் விலை எமது இனத்துவ சக்திக்கு அதிகமானது. இவையாவற்றுக்கும் அனைவரும் ஒரு பொதுத்தளத்துக்கு வராதததும் சுயநலன் சார்ந்த சிந்தனையினதும் விளைவே இன்றைய அவலங்களுக்குக் கரணியமாக இருக்கிறது. எனவே சரியான விவாதங்களை முன்வைத்தவாறு, தவறானவற்றைச் சுட்டுவதோடு, சரியானவற்றைத் தட்டிக்கொடுத்தவாறு ஒன்றிணைத்து செயற்பவேண்டியது எமது தேவையாக உள்ளது என்பதை நாமனைவரும் மனம்கொள்ள வேண்டும்.  

நியாயமான கருத்து நொச்சி. இதனோடு 100% உடன்படுகிறோம்.

இப்படி ஒரு கருத்தை ஜீவன் சிவா பதிவிட்டிருந்தால்.. நாங்களும் சில முக்கிய கருத்துக்களை மக்களை நோக்கி இனங்காட்டி விட்டு ஓய்ந்திருப்போம். குப்பை.. கூழம் என்ற இகழ்தலுளுக்குரிய கருத்துக்கள் தான் வளமான திரிகளையும் பாழாக்குவதோடு சமூகத்தை நோக்கி நல்லது செய்ய முனைந்தாலும் சந்தேகிக்க வைக்கிறது சிலரை. tw_blush:

ஜீவன் சிவா இதனை உணர்ந்து இத்திரியில் அவர் பதிந்த சில கருத்துக்களின் கண்ணியக் குறைவை..  திருத்திக் கொண்டு இந்தத் திரியை தொடர்வார் என்று எதிர்பார்க்கிறோம். 

நிழற் படங்கள் எமக்குள் சுத்துவதிலும் இவ்வாறான அரச பயங்கரவாதச் செயல்களின் சான்றுகள்.. சர்வதேச ஊடகங்களை எட்டி.. சர்வதேசத்தின் மனசாட்சியை உலுப்ப வேண்டும். அப்போதுதான்.. அதன் தாக்கம் எம் மக்கள் விரும்பிவதை அடைய துணை நிற்கும். 

Link to comment
Share on other sites

நன்றி உறவுகளே 

எமது மக்களுக்கு பொருத்து வீடாவது கிடைக்கட்டும் என்ற ஆதங்கத்தில்  நான் கருத்திட்ட போது, இது நமது கலாச்சாரத்துக்கு பொருந்தாது வேண்டாம்  என்ற கிடையாலபோனவர்கள் அந்த திட்டம் நிறுத்தப்பட்டவுடன். சந்தோசமாய் தூக்கத்தில் போய் விட்டார்கள். மக்களா அது என்ன என்று விசைப்பலகையில் கூத்தடிப்பவர்கள் அப்படித்தான். 

இங்கு யாராவது அந்த மக்களின் கஷடங்களில் பங்கு கொள்பவராயின், அதற்கு ஒரு மாற்று திட்டம் என்ன என்று கேட்டு இருக்க வேண்டும் - திட்டம் நிறுத்தப்படமுதலே. திட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் எந்த பதிவுமே இங்கு இல்லை -

*************

.

*******************. நான் நிறைய அன்பான உறவுகளை இந்த களத்தில் சந்தித்துள்ளேன். அவர்களுடனான தொடர்பு தொடரும்.

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு அரசியல் கருத்து இருக்கு. அதனை நான் எங்குவேணுமெண்டாலும் எழுதலாம் என்றில்லை. நான்தொடங்கிய திரிக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லாதபடியால்தான் எங்கள் மண் எனும் பிரிவில் தொடங்கினேன். காங்கேசன்துறையிலிருந்து இடம்பெயர்ந்தவர்களது முகாமிற்கு நான் எத்தனையோ தடவை சென்றுள்ளேன். ஒரு முறைதானும் படம் எடுத்ததில்லை. மற்றவர்களது கஷ்டத்தை காட்சியாக்க நான் விரும்புவதில்லை. எனது நோக்கம் எமது மக்கள் மறுபடியும் தலை நிமிர்ந்து வாழனும் என்பதே.

நான் காங்கேசன்துறையை சேர்ந்தவன் என்பதால் எனக்கு அவ்விடம் மிகவும் பரீட்ச்சயமானது. அத்துடன் மற்ற இடங்களை போலல்லாது இது முற்றுமுழுதாக வேண்டுமென்று வெறுமையாக்கப்படட இடம். எதுவுமே இல்லாத இந்த நகரம் மறுபடியும் எப்படி உயிர் பெற்று எழும் என்பதுதான் விடயம். இதற்குள்ளேயும் வந்து அரசியல் கதைப்பதென்றால், அதையும் நிர்வாகமும் அனுமதிக்குமாயின் - நான் வாசகனாகவே இருக்கலாம்.

நீங்களே போய் இந்த திரியை பாருங்கள். இதற்குள் எதை எழுதுவது என்ற விவஸ்தையே இல்லாத நெடுக்சின் குணம் இந்த "எங்கள் மண்" திரியிலும். இது அரசியல் களம் இல்லை. இது எமது மண்ணின் மணங்கள் பற்றிய ஒரு தலைப்பில் சிறிது சிறிதாக விடப்பட்டுக் கொண்டிருக்கும் காங்கேசன்துறை நகரம் எப்படி மறுபடியும் தனது கம்பீரத்துடன் எழுகிறது என்பது சம்பந்தமான ஒரு பதிவு. இதற்குள் அரசியல் வேண்டாம், நிர்வாகத்திற்கும் ரிப்போர்ட் செய்துபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. நெடுக்ஸ் போன்று இங்கு பல விடயங்களில் யாருமே கேவலமாக எழுதுவதில்லை.  ஏன் இவர் மீது எந்த விதமான நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்க மறுக்கின்றது என்பது புரியாத புதிர். இத் திரியில் உள்ள நெடுக்சின் பதிவுகள் அகற்றப் படாதவரை, இதை தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை. இவர்கள் கனவிலேயே வாழட்டும். எனக்கு, எனது மனது நிறைவாக செய்ய இங்கு நிறைய விடயங்கள் உண்டு. எனது கருத்துக்களை பகிரவும் வேறு பல இடங்கள் உண்டு. 

Link to comment
Share on other sites

வணக்கம் ஜீவன்,

யாழ் கருத்துக்களம் கருத்தாடலை ஊக்குவிக்கும் களம். எனவே விதிமுறைகளுக்குட்பட்ட மாறுபட்ட கருத்துக்கள் வருவது தவிர்க்கமுடியாதது. களவிதிகளை மீறும்போதும் திரியின் திசையைத் திருப்பும்போதும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். எனினும் இத்திரியில் அரசியல் தவிர்க்கப்படவேண்டும் என்றில்லை. இத்தலைப்பின் கேள்வியே அரசியலில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பதைத் தாங்கள் உணர்வீர்கள்.

எனவே இத்திரியில் ஆக்கபூர்வமான பதிவுகளையும், கருத்து விமர்சனங்களையும் வைத்து தொடருமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

நியானி

 

Link to comment
Share on other sites

நடேஸ்வரா கல்லூரியின் மைதானம் சில நாட்கள் தடைப்பட்டாலும் இன்று காடு அற்ற நிலமாக மாறியுள்ளது. இது மைதானமாக இன்னமும் பல விடயங்கள் நடக்க வேண்டும் - நடக்கும், நடந்தே தீரணும்.

மக்களின் நலம் விரும்புபவர்களுக்கு  இது ஒரு சந்தோசமான பதிவு.  *************

IMG_9736.jpg

IMG_9738.jpg

IMG_9739.jpg

IMG_9740.jpg

IMG_9742.jpg

IMG_9746.jpg

IMG_9748.jpg

 


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் குத்தம் கதைப்பவர்கள் எப்பவும் மாறி,மாறி எதாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.அவர்களை கணக்கில் எடுக்காமல் உங்கள் பாதையில் போங்கள்..புலம் பெயந்து இருப்பவர்களே தங்களது காணிகள் விடுபடுது என்றவுடன் எவ்வளவு சந்தோசப்படினம் அப்படி இருக்கும் போது,ஊரில் இருப்பவர்களது சந்தோசத்திற்கு அளவே இருக்காது...போராடித் தான் பெற்றுக் கொள்ள முடியவில்லை.கொஞ்சம்,கொஞ்சமாகவது கிடைக்குதே என்று சந்தோசப்படாமல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஜீவன் குத்தம் கதைப்பவர்கள் எப்பவும் மாறி,மாறி எதாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.அவர்களை கணக்கில் எடுக்காமல் உங்கள் பாதையில் போங்கள்..புலம் பெயந்து இருப்பவர்களே தங்களது காணிகள் விடுபடுது என்றவுடன் எவ்வளவு சந்தோசப்படினம் அப்படி இருக்கும் போது,ஊரில் இருப்பவர்களது சந்தோசத்திற்கு அளவே இருக்காது...போராடித் தான் பெற்றுக் கொள்ள முடியவில்லை.கொஞ்சம்,கொஞ்சமாகவது கிடைக்குதே என்று சந்தோசப்படாமல்!

ரதிக்கு ஒரு புள்ளி  ??

இதையே தான் நாங்கள் ஊரில் இருந்து கொண்டு சொல்ல விரும்புகிறோம்  மக்களின் நலனுக்காக நீங்கள் கூட பல அபிவிருத்தி பணிகளைத் தொடரலாம் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

புலம் பெயந்து இருப்பவர்களே தங்களது காணிகள் விடுபடுது என்றவுடன் எவ்வளவு சந்தோசப்படினம்

எதுக்கு ஆமிக்காரனுக்கும் நேவிக்காரனுக்கும் முஸ்லீம்களுக்கும் அறா விலைக்கு விற்றிட்டு வரவா. கிழக்கில் எமது நிலம் அடாத்தாகப் பறிக்கப்பட்டது போக.. வெளிநாட்டுக்கு ஓடியாந்த தமிழர்கள்.. தாங்கள் ஏதோ வெளிநாட்டுப் பூர்வ குடிகள் என்ற கணக்கில் பரம்பரையாகக் கிடந்த காணிகளை முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்றதும் அடங்கும்.

இதில.. தமிழர்கள்.. யூதர்கள் போல இருக்கனுன்னு கனவுக் கட்டுரைகள் வேற.. காணியை வித்திட்டு வந்து புலம்பெயர் நாடுகளில் இருந்து... கொண்டு.

தமிழனிடம் அடிமைப்புத்தியில் பிறந்த.. சுயநலம்.. மண்டிப்போய் கிடக்குது. அது நீங்காதவரை தமிழன் அடிமை தான். யார் விடுவித்தாலும் அவன் விடுதலை அடையவே மாட்டான். அதனை இத்திரியில் அப்பட்டமாகக் காண முடிகிறது. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

என்னை மறுபடியும் பச்சை போட்டும், தனிமடல்களிலும், பதிவுகளிட்ட, தொலைபேசிகளினூடாகவும் ஊக்குவித்த உறவுகளுக்கு நன்றிகள். நான் இங்கு இருக்கும் வரை இப்பதிவை தொடர்வேன்.

காட்டுக்குள் ஒளிந்திருந்த சில விடயங்கள்.. 
 

இராணுவம் இந்த மைதானத்தில் கிரிக்கெட்டும் விளையாடியிருக்குது. பத்தைக்குள்  இருந்து வெளியே வந்த ஸ்கோர் போர்டு. நடேஸ்வராவில் கிரிக்கெட் டீம் இருந்ததில்லை.

IMG_9749.jpg

ஒருகாலத்தில இந்த புளிக்கு கீழ குந்தியிருந்துதான் கிரிக்கெட் (கள்ள)ஸ்கோர் எழுதினாங்கள். 

IMG_9796.jpg

உடைத்து கற்குவியல்களாக்கப்பட்ட தெரிந்தவர்களின் சில வீடுகள். இவை 2013/2014 யிலேயே இடிக்கப்பட்டது - ஏன் யாமறியோம் பராபரமே.

 

IMG_9781.jpg

IMG_9785.jpg

IMG_9835.jpg

IMG_9844.jpg


காட்டுக்குள் இருந்து வெளிவந்த மைதான கிணறு. அருகில் இருந்த பெரிய ஆலமரத்தை காணவில்லை. புதிதாக பெரிய அரசமரம், மகிழமரம் முளைத்திருக்கு - ஆனால் நல்ல காலம் அரசமரத்துக்கு கீழ புத்தரை காணவில்லை.

IMG_9759.jpg

IMG_9760.jpg

IMG_9778.jpg

IMG_9755.jpg

நடேஸ்வரா கல்லூரி மைதானமும் அதன் இரு பக்கமும் உள்ள வீதிகளும்.

IMG_9803.jpg

IMG_9798.jpg

IMG_9802.jpg

IMG_9799.jpg

Link to comment
Share on other sites

இடந்தரை ஒழுங்கையின் ஒருபகுதி இன்று துப்பரவாக்கப்பட்டுள்ளது. மிகுதி நாளை தொடரும். இதனை தொடர்ந்து மாம்பிராய் ஒழுங்கையும் துப்பரவு செய்யப்படும். இவ்வளவு இடர்களின் நடுவேயும் இவற்றை செய்துதரும் அரசாங்க அதிபர், மற்றய உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள் பல. அத்துடன் நடேஸ்வரா கல்லூரியின் அதிபருக்கும் நன்றிகள் பல.

 

Link to comment
Share on other sites

வெளிவீதி துப்பரவு செய்யப்பட்ட செல்லப்பிள்ளையார் கோவில்.
ஒரு தொலைபேசி உரையாடலுடன் ஒரு தண்ணீர் தாங்கியையும் கொண்டு வந்து வைப்பித்த அரசாங்க ஊழியர்கள்.

நன்றி வேதநாயகம் (அரசாங்க அதிபர்)

13719574_1346506412029365_39363863881310

13700123_1346507225362617_16684285518739

13690682_1346509448695728_89491355050535

13615385_1346509432029063_73723346299873

13697158_1346509742029032_50038205909096

13692455_1346512245362115_86812178988491

13710010_1346512868695386_24940626088089

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  ஜீவன் சிவா

உங்களது நோக்கம் என்ன?

ஒரு தனி மனிதரை மனதில் வைத்து தாக்குவதா?

காங்கேசன்துறையின் விடுதலையும் அபிவிருத்தியும் பற்றி பேசுவதா?

அவர்களின் துன்பங்களை விற்பது சரியில்லை அதனால் ஒரு படம் கூட எடுக்கவில்லை என்று எழுதியபடி

படங்களையும் போடுகிறீர்கள்

புரிந்து கொள்ளமுடியவில்லை...

உங்களது நோக்கத்தில் தெளிவிருந்தால்

அதை தெளிவாகவும் விபரமாகவும் செய்யுங்கள்

கருத்துக்களத்தில் கேள்விகள் வரும்

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பார்வை ஈடுபாடு இருக்கும்

அது தானே ஐனநாயகம்???

Link to comment
Share on other sites

56 minutes ago, விசுகு said:

உங்களது நோக்கம் என்ன?

உங்கள் ஊரில் உங்களுக்குள்ள பாசம்தான் எனக்கும் எனது  ஊரில், மக்களில். 
 

*************

நான் இஞ்ச ஒண்டும் வெட்டி புடுங்கல்ல. மற்றவர்கள் வெட்டி புடுங்குவதை பதிகின்றேன் - அம்புட்டுதான்.

*************

Link to comment
Share on other sites

நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள், சீண்டும் வசனங்கள் மட்டுறுத்துப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

சக கள உறுப்பினர்களை சீண்டும் வகையில் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்து ஆரோக்கியமான முறையில் திரியில் கருத்தாடுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

18 minutes ago, நியானி said:

நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள், சீண்டும் வசனங்கள் மட்டுறுத்துப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

சக கள உறுப்பினர்களை சீண்டும் வகையில் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்து ஆரோக்கியமான முறையில் திரியில் கருத்தாடுங்கள்.

நன்றி

நன்றி நியானி

உண்மைகளை பகிர்வது அவ்வளவு சுலபமில்லை என்று புரிகின்றது. நான் எக்கேடாவது கேட்டு போகலாம், எனது ஊர், எனது நாடு எனது மக்கள் நல்லா இருக்கணும்.

லேட்டானாலும் நியாயம் கொஞ்சம் இருக்குது உங்களிடம். 

மறுபடியும் நன்றி நியானிக்கு.

 

Link to comment
Share on other sites

மக்கள் ஒன்றுகூடல் .

தற்போதைய நிலைமையில் எமது மண்ணில் மீள்குடியேறுவது சம்பந்தமான ஒரு பொது கலந்துரையாடல் எதிர்வரும் திங்கள்கிழமை 18 ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோவில் முற்றலில் நடைபெறவுள்ளது , இதை வாசிக்கும் நண்பர்கள் தங்கள் உறவுகளுக்கும் அறியத்தரும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம். எந்த மாற்றமும் உடன் அறிவிக்கப்படும் .

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SL military deployed to rob material remains of houses in Valikaamam North ‘HSZ’ 

[TamilNet, Wednesday, 13 July 2016, 23:31 GMT]
The occupying Sri Lanka Army has been systematically deployed in recent days to dismantle and rob roof tiles, wooden window and door frames off of the remaining houses that are situated inside the areas, which the uprooted people have been demanding the SL authorities to release for their resettlement in Valilkaamam North in Jaffna district. Journalists in Jaffna have managed this week to photograph stolen material temporarily stored within the military fenced-off area in Kurumpasiddi along Eezhakeasari Ponniah Road. In the meantime, Tamil journalists have also photographed some of the private properties situated within the military-seized deployed for military use to be in good condition. The President of Valikaamam North Rehabilitation Society Mr A Gunabalasingam, said he has received several complaints from the people who have seen the organised robbery by the SL military. 

 

சிங்களவன் பலே கெட்டிக்காரன். தமிழனட்டச் சுட்டே.. தமிழனுக்கு கட்டாந்தரையில் வீடும் கட்டிக் கொடுக்கிறான் போல. எங்கடையள்.. சிலது.. இந்தா பார்.. ஆமிக்காரனின்.. மனிதாபிமானம்.. என்று.. கொண்டு.. திரியுதுங்க. tw_blush:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38324

Link to comment
Share on other sites

நான் நேர்மையா இதில் நான் ஒன்றுமே செய்யவில்லை, மற்றவர்கள் செய்வதை பகிர்கின்றேன் என்று சொல்கின்றேன். அதுதான் நான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.