Jump to content

மான் இறைச்சி கறி

Recommended Posts

இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு  வாங்கி வந்தேன்.

வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான்  இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார்,

கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக பின்பற்றி சமைச்சுப் பார்த்தம்...........சுவை சொல்லி மாளாது. ரசம், பருப்பு ஆகியவற்றுடன் மான் இறைச்சியை சாப்பிட்டம். மற்ற பல இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது மான் இறைச்சி கொழுப்பு குறைந்தது என்று சொல்கின்றார்கள். இனி அடிக்கடி சமைப்பம்

மேலே உள்ள முறை தென்னிலங்கை சமையல் முறை என்று நினைக்கின்றேன். வன்னியிலும் கிழக்கின் காடு சார்ந்த பகுதிகளிலும் மான் இறைச்சியை எம் தமிழர்களும் சுவையாக சமைப்பார்களாம். அச் செய்முறை உங்களுக்கு தெரிந்தால் இங்கு எழுதவும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, நிழலி said:

. கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு,

நிழலி  இதுவும் கனடாவில் இருக்காம்....:grin: ஒரு கை பாருங்கோ.. ஏதோ என்னால் இயன்ற உதவி..:)

கனடாவில் நீல நிற லாப்ஸ்டர்
=============================
கனடாவில் உள்ள மீனவரால் பிடிக்கப்பட்ட இந்த அரிய வகை லாப்ஸ்டர், இதை பிடித்தவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவருமாம்.

ஆனால் இதை யாரும் சாப்பிடப்போவதில்லை.// ஆஆ அப்படி சொல்லகூடாது  நிழலிக்கு இது தெரிந்தால்...:grin:

பிடிக்கப்பட்ட இரண்டு நீல நிற லாப்ஸ்டர்களில் ஒன்று கடலுக்குள்ளேயே விடப்பட்டுள்ளது. மற்றொன்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

Link to comment
Share on other sites

4 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

8 minutes ago, நிழலி said:

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

கொன்னால் பாவம் தின்னால் போச்சு... அது தான் நம் கட்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

Link to comment
Share on other sites

கனடாவில் சட்டப்படி மானை வேட்டையாட முடியாது. விபத்தில் சிக்கி இறந்த மானை உடனே வாகனத்தில் ஏற்றி இறைச்சிக்காக கொன்டு சென்றாலும் தாம் கொல்லவில்லை என்று நிரூபிக்க கஷ்டம். ஆனாலும் எப்படித்தான் தமிழ் கடைகள் மானையும் மரையையும் கொண்டு வந்து விற்கின்றார்களோ தெரியாது

அத்துடன் இது லைசென்ஸ் பெற்ற (நீல நிற சீல் அடித்த) இறைச்சி அல்ல என்பதால் சில Risks சும் உண்டு. காலாவதியான இறைச்சியை விற்கும் சந்தர்ப்பம் அதிகம். ஓரளவுக்கேனும் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட கடை என்றால் ஓரளவு நம்பலாம். குழந்தைகளுக்கு கொடுக்க முன்னர் நாம் சாப்பிட்டு பார்ப்பது நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனில் உள்ள தமிழ் கடையில் ஒருமுறை பங்கு மான் இறைச்சி என்று வாங்கி வந்து பார்த்தால் நிறைய ரோமம் இறைச்சி சாப்பிடும் ஆசையே போச்சு.

ஊரில் இருக்கும் போது பல தடவை சாப்பிட்டு இருக்கின்றேன் அந்தமாதிரி இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி நிழலி 

Link to comment
Share on other sites

மான் இறைச்சி சமையலுக்கு வன்னிதான் திறம். சிறு வயதில் அம்மா  மான், மரை என்று செய்து தந்திருக்கிறா சுவை மறந்து போய்விட்டது. குத்து மதிப்பா ஒரு 40 வருடங்களின் பின்னர் வன்னியில் சந்தர்ப்பம் மறுபடியும் கிடைத்தது. ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இங்கு வாங்க முடியாது. 1 கிலோ வைத்திருந்தாலே 1 லட்சம் ரூபாய் தண்டனை.

கொடுத்து வைத்த நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

image.pngv_hirsch.jpg

நானும் இதனைச் தான் எழுத வந்தேன், ரதி எழுதி விட்டார்.
இங்கும் குறிப்பிட்ட சில இறைச்சிக் கடைகளில் மான், மரை போன்ற இறைச்சிகளை விற்பார்கள்.
மான் இறைச்சியை விட... மரை இறைச்சி சுவையாக இருக்கும்.
அடுத்த முறை... நிழலி, மரை இறைச்சியை அந்தக் கடையில் வாங்கி, தண்ணீர் குறைவாக விட்டு.... பிரட்டல் கறியாக சமைத்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நவம்பர் டிசம்பர் மாதங்களில்   மான் மரை முயல் பன்றி எல்லாம் வேட்டையாட அனுமதிப்பார்கள்... சம்பந்தப் பட்டவர்கள் அதற்குரிய அனுமதி பெற்று நாய்களுடன் சென்று வேட்டையாடுவார்கள்...! வளர்ப்பு விலங்குகளைவிட காட்டு விலங்குகளின் சுவை அதிகம்....! அதிகாலையில் வேலைக்குப் போகும்போது பலவகையான மிருகங்கள் அடிபட்டு வீதியில் கிடக்கும்....!

Link to comment
Share on other sites

35 minutes ago, Nathamuni said:

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

ஆனாலும் நம்ம நாட்டு புள்ளி மானின் ருசி வருமா? :grin:

இங்கு மான் இறைச்சி வைத்திருந்தாலோ, கொண்டு சென்றாலோ அம்பிட்டா அம்புட்டுதான். அந்த காலத்தில் செட்டிகுளத்திலிருந்து வந்த மான் வத்தல் புகரணையில் சிமெந்து பையால சுத்தப்பட்டு, பாறைக் கருவாட்டுக்கு மற்றப்பக்கம் தொங்கும். இதை அம்மா சமைத்ததாகவே ஞாபகத்தில் இல்லை. போகவும் வரவும் வத்தலாகவே திண்டு முடித்து விடுவோம்.  

"இலங்கையில் மானை வீட்டில் வளர்க்கலாம் வெட்ட முடியாது". ஏன் இங்கு ஒரு மான் பண்ணை உருவாக்கி மான்களை வளர்த்து உணவுக்காக வெட்டலாம்தானே  என்ற எனது கேள்விக்கு எனக்கு ஒரு சுகாதார  உத்தியோகத்தரின் விடை இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைச் சமநிலையை, ஆயுதங்களைப் பயன்படுத்தும் மனிதன் அநியாயத்துக்கு குழப்புவதால்தான் தான் அந்த தடை.

அவற்றை உணவுக்காக வளர்ப்பது, இயற்கையான வளர்ச்சிக்கு வெளியானது என்பதால், கண்காணிப்புடன் அனுமதி.

மீன் பிடிக்கலாம், டைனமற் பயன்படுத்தி பிடிப்பது தடை.

இந்தியாவில், புலி வேட்டையை வீரம், கம்பீரத்துடன் முடிச்சுப் போட்டு, புலி இனமே அழியும் தருணத்தில் இந்திய அரசு முழித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

உங்களுக்காக ஒரு பாட்டு. ஆனா இந்த மானை எல்லாம்  கறி வைக்க முடியாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

பெயர் தான் நண்பா முனிவர் ஆனால் ஒன்றும் விட்டு வைப்பது கிடையாது 

பாதயாத்திரையின் போது மட்டும் தவிர்த்து. 

6 hours ago, ரதி said:

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

நம்மலாமா

ஏனென்றால் களுவாஞ்சிக்குடியில் தான் இறைச்சி வகைகள் அதிகம் கிடைக்கும் காட்டு விலங்குகள் ஒரு காலத்தில். ?

இப்ப விறகு என்ன சுள்ளி எடுக்க கூட விடுவதில்லை காட்டு பகுதியில் 

மரத்தில் ஒரு நாரைக் உரித்தால் கூட விசாரணையப்பா இப்ப 

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஆமைக்கறிதேட கன நாளைக்கு முன்னம் நிழலி சமைச்ச மான் கறி வந்து நிற்கிறது  இந்த இறைச்சி கிடைப்பதென்பது தற்போது குதிரை கொம்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.