Jump to content

தேடல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

.

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்'

வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழிலாளி,சிகை அலங்காரர் எல்லோரும் சந்தோசப்படுவினம். பரம்பரை பரம்பரையாக சிகை அலங்காரம் செய்பவ‌ர் மாமா வந்தவுடன் வீட்டை வருவார் முடி வெட்ட வேண்டிய‌ தேவையிருக்காது ஆனால் மாமா அவ‌ருக்கு பணம் கொடுப்பார் சிகை அலங்கார் போய் சிறிது நேரத்தில் சலவை தொழிலாளி வருவார் அவருக்கும் காசு கொடுப்பார்.

 வீட்டில் சமையல் விசேடமாக இருக்கும் அத்துடன் எனக்கும் கொஞ்சம் காசும் கையில் புரளும் கடைக்கு போய்வந்தால் மிகுதி சில்லறையை என்னை வைத்திருக்க சொல்லுவார்  .திரும்பி போகும் பொழுதும் காசு கொடுப்பார்.அந்த காலத்தில் 10 ரூபா பெரிய காசு.

வருடத்தில் ஒரு தடவை திருவண்ணாமலைக்கு சென்று வருவார் .கொழும்பில் பணிபுரிந்தாலும் பலாலி விமானநிலையம் மூலம்தான் திருச்சி செல்வார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மாகரிஷியின் பக்தன்.ரமண மகாரிஷியுடன் நேரடியாக உரையாடியுள்ளார் ஆத்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர். இளம் வயதில் இந்தியா சென்று ஆத்மீக தேடலில் ஈடுபட்டவர். முதல்முத‌லாக விமானத்தை கண்டதும் அவரது புண்ணியத்தில் தான். அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று சகமாணவ‌ர்களுக்கு விமானத்தில் ஏறிஉள்ளே  பார்த்தானான் என்று கதை அடிக்க அவ‌ர்களும் நம்பிவிட்டார்கள்.சின்ன வயசில ந‌ல்லாய் கதை விடுவேன் அதுதான் இப்ப கதை கிறுக்க வசதியாக இருக்கிறது . அப்பொழுது என்னுடன் படித்தவ‌ர்கள் எல்லொரும் விமானத்தை வானத்தில் பார்த்திருந்தார்கள் ,நான் மட்டும் விமானநிலையத்தில பார்த்திருந்தேன். அந்த விமானநிலையம் சிவில் விமான நிலையமாகத்தான் இருந்தது.விமானபடையினரை கண்ட ஞாபகாமில்லை.

யாழ்ப்பாணம் வந்தால் செல்வச்சன்ன‌நிதிக்கும் எங்களை அழைத்து செல்வார் .சோமரின்ட சோமசெட்டில் குறைந்தது பத்து பேராவது போவோம்.அநேகமான நேரங்களில் எனது பயணம் அம்மாவின் மடியில்தான். இப்ப இருப்பது போன்று அப்பொழுது வான் வசதிகள் இல்லை தட்டிவானை வாடகைக்கு  பிடித்து கொண்டு போகமுடியாது . தொண்டமனாறு வான் கதவுகளை கண்டவுடன் மனதில் ஒரு சந்தோசம்  கோவில் வரப்போகின்றது கடலை வாங்கி சாப்பிடலாம் . ஆனந்தா ஆச்சிரமத்தில் ருசியான சைவ  உணவை மதியம் உண்ணலாம் என்ற மற்ற மகிழ்ச்சி ஆகும். சின்ன ஆட்கள் நாங்கள் முதலில் காரிலிருந்து இறங்கினால் தான் பெரியவர்களிறங்க முடியும் .நாங்கள் இறங்கி முதலில் குளத்தை நோக்கி ஓடுவோம் கால் கழுவுவதற்கு ,அம்மா பின்னே நின்று கத்துவார்கள் ஓடாயதயப்பு கவனம் கவ‌னமென்று அவர்கள் வந்து கால் கழுவுவதற்கு முன்பே நாங்கள் காலை கழுவிட்டு கோவிலை நோக்கி ஒடுவோம் காலில் மணல்  பதியும் கோவில் வாசலில் போய் இரண்டு கால்களையும் ஒரு தட்டு தட்டி போட்டு உள்ளே செல்வோம்.

கோவிலை சுற்றி கும்பிட்டு முடிய அம்மாவிடம் போய் கடலைக்கு காசு கேற்பேன். இருடா ,சாமி கும்பிட்டு முடிய நான் வந்து வாங்கிதாறன் என்பார். முகத்தை தொங்கப்போட்டபடி நிற்பதை பார்த்த மாமா கூப்பிடு ஒரு ரூபா தருவார் சிறுவர்கள் நாங்கள் கடலைகடைப் பக்கம் ஒடி .பட்டானிக்கடலையும் ,கச்சான் கடலையும் வாங்கி சாப்பிடுவோம்.

மதியம்  அன்னதான‌த்திற்கு காசு கட்டுவதற்கு மாமா ஆனந்தா ஆச்சிர‌மத்திற்கு செல்வார் அவ‌ருடன் நானும் செல்வேன் மற்றவர்கள் சிலசமயம் எங்களுடன் வருவார்கள்.ஆனந்தா ஆச்சிரமத்தை நிர்வகித்து வந்த மயில்வாகனம் சுவாமிகளும் ரமண மரிஷியின் பக்தன் .இருவரும் ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி சுகம் விசாரித்து கொள்வார்கள் என்னை தங்கையின் மகன் என சுவாமிகளுக்கு அறிமுகபடுத்துவார்.இருவரும் ரமணர் மற்றும் யோக சுவாமிகள் பற்றியும் இன்னும் பல சாமிகளை பற்றியும் பேசுவார்கள், நான் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துகொண்டிருப்பேன். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாவை மேசை லாச்சில்  வைப்பார்  பத்து பேர் வந்திருக்கின்றோம் மதியம் வருவோம் என்று மாமா சொல்லுவார் .

புலிக்குட்டி,நரிக்குட்டி ,பூணைக்குட்டி ,ஆணைக்குட்டி,நாய்குட்டி என்று கதைத்தார்கள் என‌க்கு ஒன்றும் புரியவில்லை.கோவிலுக்கு திரும்பும் பொழுது மணல் சுடத்தொடங்கி விட்டது ஒட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி போகும் வழியில் இரு வெள்ளைக்காரர்கள் வேஸ்டியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவர் மாமாவுக்கு அறிமுகமானவர் .மாமாவை தனது கூடிலுக்கு வரும்படி அழைத்தார்.நானும் அவ‌ர்களுக்கு பின்னால் சென்றேன்.

.

கடற்கரையோரம் தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு சிறிய சீமேந்தால் கட்டப்பட்ட அறை ,சற்று உயரத்தில் அமைந்திருந்தது.ஆறு எழு படிகள் ஏறித்தான் உள்ளே செல்லகூடியதாக இருந்தது.உள்ளே பாய் ஒன்றும் சீமந்தால் கட்டப்பட்ட கட்டில் போன்ற ஒரு அமைப்பும் இருந்தது வெள்ளை வேஸ்டிகள் ,சால்வைகள் சிலதும் இருந்தன.மாமாவும் அவர்களும் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.என்னத்தை பேசினார்கள் என்று ஒன்றும் புரியவில்லை ,அப்பதான் புரிந்து கொண்டேன் என்னுடன் வந்த மற்றைய சிறுவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளாமைக்குறிய காரணத்தை.நான் அந்த வளவில் சுற்றிதிரிந்து அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி தென்னை மரங்களை சுற்றி விளையாடிகொண்டிருந்தேன்.

சன்னதியானின் மதிய பூஜைக்குறிய மணியோசை கேட்க மூவரும் தங்களது உரையாடலை முடித்துகொண்டார்கள் நானும் மாமாவும் கோவிலை நோக்கி சென்றோம் . உதுல தாடியுடன் இருப்பவரை  நாய்க்குட்டி சாமி அல்லது ஜெர்மன் சாமி என்று சொல்லுறவையல் ஜேர்மனியிலிருந்து வந்திருக்கிறார், மற்றவர் நரிக்குட்டிசாமி அவுஸ்ரெலியாவிலிருந்து வந்திருக்கின்றார் இப்ப திருவண்ணாமலையில் இருக்கின்றார் என மாமா சொல்லிகொண்டு வந்தார் .  நடக்க முடியாமல் மணல் சுடாக இருந்தது.மாமாவின் கதைகளை கேட்க கூடிய நிலையில் நான் இருக்கவில்லை மாமா கால் ச‌ரியாக சுடுகிறது நான் ஒடப்போறேன் என்று சொல்லி அவரின் பதிலுக்கு பார்த்து கொண்டிருக்காமல்  ஒரே ஒட்டத்தில கோவிலை போய் சேர்ந்தேன்.மாமா ஆறுதலாக நடந்துவந்தார்.

பூஜை முடிந்தவுடன் எல்லோருமாக ஆன‌ந்தா ஆச்சிரமம் நோக்கி நடக்கலானோம்  .மணல் சூடாக இருந்தது ஒட்டமும் நடையுமாக சென்று ஆச்சிரமத்தை அடைந்தோம் உள்ளே செல்ல முடியவில்லை, உண்மையிலயே அன்னதான‌ம் தேவைப்பட்டோர் பலர் அன்னதானத்திற்காக வெளியே காத்திருந்தார்கள் .மாமாவும் மற்ற பெரியவ‌ர்களும் வந்தவுடன் அவர்களுடைய உறவினர்கள் நாங்கள்  என அறிந்த நிர்வாகத்தினர் எங்களை உள்ளே அனுமதித்தனர் .மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை .

 

உள்ளே ஒரு மண்டபத்தில் மயில்வாகணம் சுவாமிகள் ,அங்கிருந்த சாமிபடங்களுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு எங்களை உள்ளே அமரும் படி சொன்னார் .வாழை இலை பாரிமாறப்பட்டது ஐந்தாறு மரக்கறியுடன் உணவு தரப்பட்டது. .வெள்ளைக்கார சாமிமாரும் எங்களுடன் உள்ளிருந்து உணவு உட்கொண்டனர். .சிறிது நேரத்தில் பலத்த கூக்குரலுடன் வெளியே நின்ற  அன்னதானம் தேவைப்பட்டோர் ஒடி வந்தார்கள் .அவ‌ர்களுக்கு வேறு இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.எமக்கு கிடைத்த உணவும் ,உபசரிப்பும் அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்கு இன்றும் சந்தேகமாயிருக்கு.

மீண்டும் கடலைக்கார ஆச்சியிடம் ஒரு ரூபாவுக்கு கடலை வாங்கி கொண்டு வீடு சென்றோம்.

1972 ஆம் ஆண்டுகளுக்கு  முன்பு உள்ளூர் இளைஞர்கள் சில‌ர் ஆத்மீக தேடலில் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்ல பலர் வெளிமாவட்டங்களுக்கு வேலைதேடிச் சென்று தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொண்டனர்.

பிரித்தானியாவிலிருந்து சாந்த சுவாமிகள் என அழைக்கப்பட்ட சோல்பரியின் மகன் 1955 இல் யோக சுவாமிகளின் சிஷ்சராகவும், Gauribala என்ற ஜெர்மன் சுவாமிகள் சன்னதியிலும் ,அவுஸ்ரேலியாவிலிருந்து பூனைக்குட்டி என்று அழைக்கப்பட்ட‌  Adrian Snodgrass (Punaikutti)இன்னும் பலர் யாழை நோக்கி ஆத்மீக தேடலுக்காக வ‌ந்து சிலர் அந்த மண்ணிலயே சமாதியானார்கள்.

நாங்கள் அவ‌ர்களின் நாட்டுக்கு பொருளாதார தேடலுக்காக வந்து எம்மை வளப்படுத்திகொண்டோம். எம்மில் சிலர் நாட்டுக்காக போராடி த‌ம‌து வாழ்க்கையை தொலைத்தனர்.

இதை எழுதகாரணம் அண்மையில் சிட்னிக்கு விஜயம் செய்த ஆறு திருமுருகன் அவர்கள் சாந்த சுவாமிகளை பற்றி கூறினார் ,அந்த சாந்த சுவாமிகள் நான் சிறு வயதில் கண்ட சோல்பரியின் கன் என்பதை கூகுள் மூலம் அறிந்து கொண்டேன் .அவரின் படங்களை பார்க்கும் பொழுது அவருடன் எனைய சாமிகளின் படங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.அவர்களையும் நான் சிறுவயதில் செல்வசன்னிதியில் கண்ட ஞாபகம் வரவே இதை எழுதினேன்....எனது மாமாவும் இப்பொழுது இல்லை அந்த சாமிமார்களும் இல்லை.. அடுத்த முறை மட்டக்களப்பு/ செங்கலடியில்  எனது வீட்டிற்கு அருகாண்மையில் இருந்த சிவதொண்டன் நிலையத்தில் வாழ்ந்த சாந்த சுவாமிகள் பற்றி சிறு கிறுக்கல் .....

யாழ்ப்பாணம் ,இந்த மண் ஒவ்வொரு கால கட்டத்தில ஒவ்வொரு துறையில் பிரபலமடைந்திருக்கின்றது.ஒருகாலகட்டத்தில் ஆத்மீக தேடலுக்கு ,இன்னொரு காலத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் அதிகமாக கொண்டமையால்,பிறகு போராளிகளையும் போராட்ட தலைவர்களையும் உண்டாக்க்கிய மண் என்ற பெருமையும் தற்சமயம் என்னத்திற்க்கு பெயர் போகின்றது என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.

ஆத்மீக தேடலுக்காக மேற்கத்தையினர்,கல்வி தேடலுக்காக சிங்களவர்கள் ,முஸ்லிம்கள்,புலித்தேடலுக்காக இந்தியர்கள்,ஆயுத தேடலுக்காக சர்வதேசத்துடன் சிங்கள இராணுவம்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,நீங்கள் கதையா?,கட்டுரையா எழுதினீர்கள் என எனக்கு சந்தேகமாய் இருக்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புத்தன்....! அன்னதானக் கந்தன் அமுதுடன் ஞானத்தையும் வழங்கும்  வள்ளல் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை....!!

Link to post
Share on other sites
10 hours ago, putthan said:

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை........

தேடல்

ஏதாவது எழுத ஆசை - நித்திரை வருகுது 3:25. நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன் கௌதமரே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

புத்தன்,நீங்கள் கதையா?,கட்டுரையா எழுதினீர்கள் என எனக்கு சந்தேகமாய் இருக்கு

கட்டுரை பாதி,கதை பாதி சேர்ந்த கலவை:rolleyes: .....எனக்கும் அந்த சந்தேகம் வந்தது இருந்தாலும் எண்ணத்தை கிறுக்கிவிடுவோம் என்று கிறுக்கிவிட்டேன்.வ‌ருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கட்டுரை பாதி,கதை பாதி சேர்ந்த கலவை:rolleyes: .....எனக்கும் அந்த சந்தேகம் வந்தது இருந்தாலும் எண்ணத்தை கிறுக்கிவிடுவோம் என்று கிறுக்கிவிட்டேன்.வ‌ருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் 

இதிலென்ன சந்தேகம், கட்டுமில்லை கதையுமில்லை = நிஜம் இட்டுக் கட்டிய கட்டுக்கதை....தட்ஸ் ஆல்....! tw_blush:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் ஆஷ்ரமம் குருகுலம்  என்பன மனிதனை முளு நிறைவாக உண்டாக்கியதில் ஒன்று ?

தேடலில் தொலைந்து போன ஞாபகத்தில் உங்கள் ஆக்கம்??

Link to post
Share on other sites

ஆன்மீகத் தேடலில் புத்தனின் கிறுக்கலால் நானும் தேடிப் பார்த்தேன்
நன்றி புத்தர்

Archival photo of German Swami Gauribala

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia. Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Image result for Gauribala

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் ஒரு மார்க்கமாய்த்தான் இந்த கதையை எழுதியிருக்கிறியள். tw_thumbsup:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 07/06/2016 at 6:32 AM, suvy said:

பகிர்வுக்கு நன்றி புத்தன்....! அன்னதானக் கந்தன் அமுதுடன் ஞானத்தையும் வழங்கும்  வள்ளல் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை....!!

அத்துடன் வறுமையில் உள்ள முதியோரின் "முதியோர் இல்லம் "...பலர் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள்

On 07/06/2016 at 7:59 AM, ஜீவன் சிவா said:

தேடல்

ஏதாவது எழுத ஆசை - நித்திரை வருகுது 3:25. நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன் கௌதமரே

வருகைக்கு நன்றிகள் எங்க ஒன்றையும் எழுத காணவில்லை?

On 08/06/2016 at 1:53 AM, முனிவர் ஜீ said:

அந்தக் காலத்தில் ஆஷ்ரமம் குருகுலம்  என்பன மனிதனை முளு நிறைவாக உண்டாக்கியதில் ஒன்று ?

தேடலில் தொலைந்து போன ஞாபகத்தில் உங்கள் ஆக்கம்??

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு தேடலில் மனித வாழ்க்கை நகர்கின்றது

On 08/06/2016 at 2:31 AM, வாத்தியார் said:

ஆன்மீகத் தேடலில் புத்தனின் கிறுக்கலால் நானும் தேடிப் பார்த்தேன்
நன்றி புத்தர்

Archival photo of German Swami Gauribala

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia. Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Image result for Gauribala

வருகைக்கும் படம் இணைத்தமைக்கு நன்றிகள் .....நான் படம் இணைக்க முயச்சித்தேன் முடியவில்லை மீண்டும் நன்றிகள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்சமயம் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனிலையில் இருந்தது. இந் நிலைியல் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்காக 112 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் பதிலுக்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இந் நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 13 ஓட்டங்களினால் பின்தங்கியிருந்த இந்தியா மொத்தமாக 53.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னங்சின் முடிவில் 33 ஓட்டங்களினால் பின் தங்கியது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியாவின் ‘சுழல்’ சூறாவளியில் சிக்கியது.  அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பெயர்ஸ்டோவ் (0) போல்டாக, ஓட்ட கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது.  அதன் பின்னர் சிப்லேயும் (7), அக்சர் ‘சுழலில்’ சிக்கினார். வழக்கம் போல ஸ்டோக்சை (25) பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். அக்சரிடம் ஜோ ரூட் (19) வீழ்ந்தார்.  ஆர்ச்சரை(0) ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். அந்த ஆட்டமிழப்பினால் டெஸ்ட் அரங்கில் 400 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லையும் அஷ்வின் எட்டினார்.  போக்சை (8) வெளியேற்றிய அக்சர், தனது 5 ஆவது விக்கெட்டை பெற்றார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டது.  இந்திய அணி சார்பில் அக்சர் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். பின்னர் 49 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. ரோகித் சர்மா 25 ஓட்டங்களுடனும், சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயனாக அக்சர் படேல் தெரிவானார்.   https://www.virakesari.lk/article/101211  
  • முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கெடெர்ட்டின் தனது உயிரை மாய்த்துக் கொண்ட பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘ஃபியர்ஸ் ஃபைவ்’ என அழைக்கப்படும் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். கெடெர்ட் 2012 இல் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைவராக இருந்தார் மற்றும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை துஷ்பிரயோகம் செய்த அணி மருத்துவர் லொறி நாசருடன் நெருக்கமாக பணியாற்றினார். 250 க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக நாசருக்கு 2018 இல் 300 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.     https://www.virakesari.lk/article/101221
  • மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னியின் உயிருக்கு ஆபத்துக்கள் இருப்பதைக் காரணம் காட்டி, அவரை விடுவிக்க ரஷ்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. எனினும் அந்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துவிட்டது.  நவல்னிக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தடுப்புக்காவலில் இருக்க நேரிடும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான வாடிம் கோப்ஸேவ் டுவிட்டரில், நவல்னி மொஸ்கோ சிறையிலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறினார், பின்னர் நவல்னியை அடையாளம் தெரியாத சிறை முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார். 44 வயதான நவல்னி, ஜேர்மனியில் இருந்து திரும்பிய பின்னர், மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்,  நவல்னியின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது, ரஷ்யா முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களை வீதிகளில் இறக்கியது. அதிகாரிகள் சுமார் 11,000 பேரை தடுத்து வைத்தனர். அவர்களில் பலருக்கு ஏழு முதல் 15 நாட்கள் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நவல்னியின் தடுப்புக்காவல் ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்கும் மொஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அரசியல் பதட்டங்களை எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/101207
  • அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...! வாழ்வின் விழுமியங்கள் அனைத்தையும்...இதிகாசப் பெட்டிகளுக்குள் பூட்டி வைத்து விட்டுத் திறப்புகளைத் தொலைத்து விட்டார்கள்! இந்த இருவருக்கும் கொடுக்கப் போகும் தண்டனையானது ...எல்லா இந்திய வம்சாவளியினருக்கும் மறக்க இயலாத ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அவா! என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!  
  • எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே  ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப்  பாருங்கள்...! தன்னை  யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...!  ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து  கொண்டேயிருக்கும்...! இறுதி  முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.