Jump to content

ஊருக்கு பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம்.

„அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“
„தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“
„நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“
„இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“
„என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க?
„நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார் ஒரு கிழமை முதல் போனா குறைவு. தம்பி எமிரேட்ஸ் 20 கிலோ நான் கொண்டு போகலாம். ஓமான் 40 கிலோ ஆனா சீட் இல்லை“
„சரி அண்ண யோசிச்சிட்டு சொல்லுறன்.“

மனைவியோட பேசும் போது.
„அப்பா இவங்கள் இந்த விலை சொல்லுறாங்கள் இப்ப என்ன செய்ய?“
„வேற இடத்தில அடிச்சு விசாரிங்கோப்பா.“

„அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?......."

„எல்லாரும் ஒரு விலை தான் சொல்லுறாங்கள் முதல் கேட்ட இடத்தில புக் பண்ணுவம். காசு உடனடியா கட்ட வேணும் கையில இல்ல, யாரிட்டயாவது கைமாறுவம். கிச்சன்ல லீவு கேக்க வேணும். தருவன் எண்டு போன வருசம் சொன்னவன், மறந்திருக்க மாட்டான் எண்டு நினைக்கிறன். நீயும் பக்ரீல லீவு கேள் நாளைக்கு“
„குமார் அண்ணேட்ட காசு கேட்டு பார்க்கிறன். அங்க செலவுக்கு 5000 பிராங் ஆவாது வேணம் அதுக்கும் ஏதாவது பண்ணுவம். ஓம் கேட்கிறன்.“

ஏழாம் மாசம்
„எல்லாம் எடுத்து வச்சாச்சோ? உடுப்பு பிள்ளைகளுக்கு உனக்கு நிறைய எடுத்து வை. அங்க வாங்க ஏலாது. லொக்கரில என்ற செயின் இருக்கு எடுத்திட்டு வாறன் பின்னேரம், உனக்கும் ஏதாவது வேணுமா? கடேல அரை விலைக்கு கண்ணாடி போட்டு இருந்தவன் அதை வாங்கீற்றன், சூரியன் கண்ண குத்தும். எங்கயாவது சொக்லேட் மலிவா கிடந்தா பார்க்கிறன், எல்லாரும் எதிர்பார்ப்பினம். டொயிலேட் பேப்பர் மறந்திடாத. யார் ஏத்தவருவினம் எண்டு சொன்னி?“
„எனக்கு ரெண்டு சோடி காப்பு எடுங்க. மாமா வான் வச்சு இருக்கிறேர் அவர் ஏத்த வருவேர். பெற்றோல் மட்டும் அடிச்சா காணும் கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்துக்கு. அங்கயும் அவர புடிச்சா மலிவா இருக்கும்.“

விமான நிலையத்தில்

„அப்பா எல்லாம் எடுத்திட்டியே, பிள்ளைகளுக்கு எல்லாம் இருக்கா? என்னம் 3 மணித்தியாளம் இருக்கு எல்லா சூட்கேசயும் கொண்டே போடுவம், பேந்து கியூ பெரிசா இருக்கும்.“
„10 கிலோ கூட இருக்கு நாலு சூட்கேஸ் சேர்த்தா.“
„அத கான்ட்லக்கேசுக்க வச்சு இருக்கலாமே?“
„அதுக்க 7 கிலோக்கு பதிலா தலா 10க்கு கிட்ட இருக்கு நாலு சின்ன சூட்கேசுக்க. தன்மையா கேட்டு பார்ப்பம் பிள்ளைகளோட போறம் விட சொல்லி. இல்லாட்டி தம்பி நிக்குறான் அவனிட்ட குடுத்து விடுவம் கொண்டே வீட்ட வைக்கட்டும்.“

„Passport please. How many baggage? You have 90kg, only 80kg possible. Please put the handbaggage on the band, sorry only 7kg per person, you have 12kg more.“
„Please, kids, going Sri Lanka, ஒருக்கா விடுங்கோ, Sorry please just one time leave.
„No sir, I have to follow the rules. Please reduce the weight and come back. Next please!“

„என்னத்தை அப்பா கட்டி வச்சனி? ஆக்கள் பாக்குதுகள்.“
„பார்த்தா பார்க்கட்டும், நீங்கள் தானே அதை இதை கட்டி வை எண்டனிங்கள். சுபா அக்கா ஏதோ பலகாரம் தன்ர ஆக்களுக்கு தந்து விட்டவோ, அதுவே கிட்டத்தட்ட 15 கிலோ. சோல்லேக்க 5 கிலோ எண்டு தான் சொன்னவோ.“
„இதுக்கு தான் ஆக்களுக்கு சொல்லாம போகோணும். சரி கதைக்காம குறையும்.“

விமானத்தில்
„நல்ல சாப்பாடு மாதிரி தெரியிது. பிறகு ஏதாவது வாங்கி அடிச்சிட்டு படுத்தா டுபாய்ல தான் ஒழும்புவன்.“
„அப்பா என்ன சாப்பாடப்பா இது, எப்படி இத சாப்புடுறது? அப்பா இந்த ரீவீல தமிழ் படம் பார்க்கலாமாம் ஒருக்க போட்டுவிட சொல்லுங்க“
„பக்கத்து ஆக்கள் எப்படி சாப்புடுறினம் எண்டு பார்த்திட்டு நீ சாப்புடு. வேலை செய்றவள் வரேக்க கூப்புடுறன்.“

கொழும்பில்
செயினை வேளியே விட்டு, கண்ணாடியை மாட்டிக்கொண்டு, இராஜ நடை நடந்து இந்தா வந்திட்டேன்டா வெளிநாட்டுக்காரன்.

கண்ணன் தர்மலிங்கம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கரன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு கரன். 
சுபா அக்கா... இங்கையிருந்து, 15 கிலோ  பலகாரத்தை.... 5 கிலோ என்று சொல்லிக்  கொடுத்து விட்டதை நினைக்க... சிரிப்பை அடக்க முடியவில்லை.

Link to post
Share on other sites
15 hours ago, Karan T. said:

... சுபா அக்கா ஏதோ பலகாரம் தன்ர ஆக்களுக்கு தந்து விட்டவோ, அதுவே கிட்டத்தட்ட 15 கிலோ. சோல்லேக்க 5 கிலோ எண்டு தான் சொன்னவோ.“

இம்மாதிரி பலமுறை அனுபவித்துள்ளேன்.. சொல்வது ஒன்றும், ஊருக்கு கிளம்பும்போது வேறு விதமாக அதிக அளவில் கொண்டுவது தருவார்கள்.. நட்பிற்காக மறுக்கவும் இயலாது, சிலசமயம் நமது தேவைகளை குறைத்து அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டியும் வரும். பொடி வகைகள், பலகாரங்கள், அரிசி, பருப்பு வகையறாக்கள்..! tw_blush:

வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்லும் அன்பர்கள் மிக முக்கிய விடயத்தில் கவனமாக இருப்பார்கள், தமிழில் பேசுவதை தவிர்த்து அடிக்கடி ஆங்கிலத்தில் பேசுவது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.