Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நான்கு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நான்கு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது

fpn03xk1.jpg

சென்னை: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட் இன்று காலை 9:24 மணிக்கு விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டது.

பூமிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடிய எஸ்.ஆர்.இ., என்ற செயற்கைக்கோள் உட்பட நான்கு செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டின் மூலமாக ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இதுவரை பல வகையான ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இருப்பினும், சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட்டில் நான்கு வகையான செயற்கைக்கோள்களை முதன் முதலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ணில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையிலான எஸ்.ஆர்.இ., (ஸ்பேஸ் கேப்சூல் ரெகவரி எக்ஸ்பரிமென்ட்) செயற்கைக்கோளும் முதன் முறையாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்பதும் சிறப்பு அம்சம்.

ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9:24 மணிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டின் 52 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் அதிகாலை 5:48 மணிக்கு துவங்கியது. கவுன்டவுன் பணிகளையும், ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்ச்சியையும் கண்காணிக்க ஏராளமான விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் குவிந்திருந்தனர்.

இந்தியாவின் 680 கிலோ எடையுள்ள தொலையுணர்வு செயற்கைக்கோள் கார்ட்டோசாட்2, 550 கிலோ எடையுள்ள எஸ்.ஆர்.இ., செயற்கைக்கோள், இந்தோனேசியாவின் 56 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள், அர்ஜென்டினாவின் ஆறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி இன்சாட் 4சி செயற்கைக்கோளை எடுத்துச் சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப் 02 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் தனது நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையை விட்டு திசை மாறிச் சென்று கடலில் விழுந்தது. இந்த தோல்விக்குப் பிறகு இன்று பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விஞ்ஞானிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல் கல் என மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாசா அல்லது ஐரோப்பிய நாடுகள் இதைச் செய்திருந்தால் அவர்களே தம்பட்டம் அடிப்பார்கள். இந்தியா சீனா செய்தால் அடக்கி வாசிப்பார்கள் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும். ஆனால் கீழத்தேசத்தவரோ யார் செய்தாலும் எல்லாத்தையும் சொல்வார்கள்..!

தகவலுக்கு நன்றி கப்பி. :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாசா அல்லது ஐரோப்பிய நாடுகள் இதைச் செய்திருந்தால் அவர்களே தம்பட்டம் அடிப்பார்கள். இந்தியா சீனா செய்தால் அடக்கி வாசிப்பார்கள் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும். ஆனால் கீழத்தேசத்தவரோ யார் செய்தாலும் எல்லாத்தையும் சொல்வார்கள்..!

தகவலுக்கு நன்றி கப்பி. :lol:

நெடுக்கு சார் அது யாருங்க கப்பி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சார் அது யாருங்க கப்பி

ஜஸ்ட் ஒரு எழுத்து மிஸாகிட்டுது. இதற்கே...கப்பி ஒரு பதிவா..! :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முல்லை மண்ணை ஆளுகின்ற முடிதரித்த மன்னவளாய் நந்திக்கடற்கரை தனிலே நமது அன்னை வீற்றிருப்பாள்      
  • இந்தியாவுடன் பகைத்தாலும்... மக்களை பாதுகாக்கவேண்டும் – டக்ளஸ் இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும்,எங்களது வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி  ,பிரதமர்  ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர். இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன். சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றை பயன்படுத்திக்கொண்டார்.மக்களுக்கு கொஞ்சகொஞ்ச காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜனா காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழுநாட்டுக்குமான பிரச்சினை. தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பானது தற்காலிகமானது.எவ்வாறு இந்த நாட்டில் இருந்த வன்முறைக்கு தீர்வுகண்டாரோ,இந்த நாட்டில் ஏற்பட்ட கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம். இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்தை விவகாரம் தவறுகள் எங்கும் நடக்கின்றது.இதனை எல்லா இயக்களும் எல்லாரும் செய்த செயற்பாடுதான்.அதனை நாங்கள் பெரிதுபடுத்தமுடியாது. இது அரசாங்கத்தின் கொள்கையில்லை.அது தனிமனித விவகாரம். அவர் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா என்பதையறிய விசாரணை நடைபெற்றுவருகின்றது.அதன் பின்னரே அது உண்மையா பொய்யா என்பது தெரியும். 2013ஆம்ஆண்டில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு என்னும் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பெயரைக்கூறி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் அவர் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.அந்த அமைப்பு தற்போது குறித்த பெண் உயிருடன் உள்ளதாக சொல்லப்போகின்றார்கள்.இவ்வாறு பல பொய்பித்தலாட்ட செயற்பாடுகள் உள்ளன. https://athavannews.com/2021/1246958
  • இவ்வளவு நாள்... நான் பார்த்த மானங்கெட்ட வேலையை, இனி இவர் தான் பார்ப்பார். 🤣          
  • மூட்டை பூச்சியை... கொல்லும், நவீன மெஷின்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.