Jump to content

குட்டிக் கதைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான... கணவனும், மனைவியும்.

May be an image of text that says 'அன்பான கணவனும், மனைவியும்! இரவு நேரத் கணவன் ண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து கணவன னும் வந்து, அவன் பக்கத்திலிருந்து பரிமாறி, பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க, மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம், நீ சாப்பிடவில்லையா? என்று கணவன் கேட்க, எனக்கு பசியாக இருந்தது. அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன் என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன் என்ன செய்வான்? சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே ிளம்பும் கணவனிடம் இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க? என்று கேட்டவளுக்கு, ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு, சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ரூசியான உணவு வாங்கி வந்து. இந்தா சாப்பிடு என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய உண்ணுவாளே அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை!'

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அன்பான... கணவனும், மனைவியும்.

May be an image of text that says 'அன்பான கணவனும், மனைவியும்! இரவு நேரத் கணவன் ண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து கணவன னும் வந்து, அவன் பக்கத்திலிருந்து பரிமாறி, பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க, மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம், நீ சாப்பிடவில்லையா? என்று கணவன் கேட்க, எனக்கு பசியாக இருந்தது. அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன் என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன் என்ன செய்வான்? சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே ிளம்பும் கணவனிடம் இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க? என்று கேட்டவளுக்கு, ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு, சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ரூசியான உணவு வாங்கி வந்து. இந்தா சாப்பிடு என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய உண்ணுவாளே அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை!'

இதுக்குத்தான் பகலில் தூங்கக் கூடாது என்று அன்றே நம் முன்னோர்கள் சொன்னவர்கள்......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
நல்ல மனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிகிறான்...
 
அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை...
ஒருநாள் அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்...
ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்...
அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்து வந்தார்கள்...
அரசன் அவர்களிடம் இவற்றிலிருந்து இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்தது காரணம் என்ன? என்று கேட்டான் அரசன்...
அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன்." அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான். இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால்தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்.
மற்றொரு பிச்சைக்காரன். "அரசே ! இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன். ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே. அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெற முடியும் அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்...
அரசன் இருவரையும் அனுப்பி விட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்...
அமைச்சர் அரசனிடம், "அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி. இறைவன் அருள் இருந்தால்தான் அந்த உதவியை பெற முடியும்" என்றார் அமைச்சர்...
அரசனும், "இறைவன் அருளா ? அல்லது அரசனின் அருளா ? என்று சோதித்துப் பார்க்க தீர்மானித்தான்...
சில நாட்களில் அந்நாட்டிலுள்ள கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப் போவதாக அறிவித்தான்...
பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களும் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.‌‌..
அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க , வைர நகைகளை வைத்து பரிசளித்தான். கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்...
சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான்...
அப்போது அரசன் பெயரைச்சொல்லி பிச்சை எடுப்பவன். சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு வியப்பு தோன்றியது. " தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்க வேண்டிய காரணம் என்ன? ' என்று அரசனுக்கு தோன்றியது.
உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம், "நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டான்...
அந்த பிச்சைக்காரனும் "அரசே ! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தார்கள். அதை நான் ஐந்து வெள்ளிக் காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்து எத்தனை நாட்கள் நான் உண்ண முடியும்? அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்து விட்டேன்" என்றான்...
அதைக் கேட்ட அரசன் கோபமுற்று, "அடேய் மூடனே ! நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள். தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே. நீ அதனை வெட்டி பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!" என்று அவனை திட்டி விட்டு நகர்ந்தான்...
சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பேரைச்சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்து கொண்டான்...
அரசன் அவனிடம் சென்று, " ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா ? இப்போது எப்படி செல்வந்தனாகி விட்டீர்கள்? என்று கேட்டான்...
அதற்கு அவனும் "அரசே ! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக் காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது. அதனுள் தங்க வைர நகைகள் இருப்பதைக் கண்டேன். இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன் என்று கூறினான்...
இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெற முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான். நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அவன் அறிந்து கொண்டான்...
நல்ல மனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிகிறான்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'நான் குழந்தையா இருந்த போது. ..என் அம்மாவோட தோழிகள் வருவாங்க.... என்னை பார்த்து.... ஐயோ!! சமத்து குழந்தை ம்பாங்க..... பதிலுக்கு அம்மா. ரெண்டு நாள் எடுத்துட்டு போய் வேச்சுக்கோயேன் ...அப்றம் தெரியும்" ம்பாங்க...... இன்னிக்கு ...வீட்டுக்கு என் பொண்டாட்டியோட தோழிகள் வராங்க..... ஏய்.. உன் ஹஸ்பண்ட் ரொம்ப அமைதிடி... ங்கறாங்க..... ஆனா என் பொண்டாட்டி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறா... அம்மா ..அம்மாதான்....'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.
வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.
இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.
வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.
ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.
இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.
வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.
விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.
ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.
“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”
“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”
அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.
வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.
குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.
தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.
தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.
ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கையை... தூக்குங்க. :grin:

May be an image of one or more people and text that says '100 திருமணமான ஆண்கள் கூட்டத்தில் "பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்கள் கை தூக்குங்கள்" என்று கேட்கப்பட்டது. ஒருவர் தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். கை தூக்காத அந்த நபரை அழைத்து "பரவாயில்லையே உங்கள் மனைவி அனுசரணையானவர் போலும், நீங்கள் அதிர்ஷ்ட்டசாலி" என புழ்ந்தனர். f siringa.p அதற்கு அவர் சொன்னார்.... "அடப்போங்கப்பா, நீங்கவேற வயித்தெரிச்சல கௌப்பாதீங்க... நேத்து வாங்கின அடியில கையவே தூக்க முடில"'

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, காதல் கதை.

May be an image of text that says 'குட்டி காதல் கதை! ஒரு பெண்ணும் பையனும் லவ் பன்னுனாங்க அந்த பெண்ணுக்கு கண் தெரியாது கொஞ்ச நாள் போன பிறகு அந்த பெண்ணுக்கு ஆப்ரேசன் பன்னி கண் வச்சுடாங்க அந்த பெண்ணுக்கு பார்வை வந்த்தும் அந்த பையன பாத்துறுக்கா அந்த பையனுக்கும் பார்வை இல்லை அந்த பெண் அவன வேனாம்னு சொல்லிடா! அந்த பையன் அங்க இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போய் திரும்பி நின்று சொன்னான் பத்திரமாக பார்த்துக்கொள் என் கண்களை என்று!'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

குட்டி, காதல் கதை.

May be an image of text that says 'குட்டி காதல் கதை! ஒரு பெண்ணும் பையனும் லவ் பன்னுனாங்க அந்த பெண்ணுக்கு கண் தெரியாது கொஞ்ச நாள் போன பிறகு அந்த பெண்ணுக்கு ஆப்ரேசன் பன்னி கண் வச்சுடாங்க அந்த பெண்ணுக்கு பார்வை வந்த்தும் அந்த பையன பாத்துறுக்கா அந்த பையனுக்கும் பார்வை இல்லை அந்த பெண் அவன வேனாம்னு சொல்லிடா! அந்த பையன் அங்க இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போய் திரும்பி நின்று சொன்னான் பத்திரமாக பார்த்துக்கொள் என் கண்களை என்று!'

அவன் ஒரு முட்டாள்......ஒரு கண்ணை மட்டும் குடுத்து "என் கண்ணே"என்று கொஞ்சி இருக்கலாம்......!  😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

அவன் ஒரு முட்டாள்......ஒரு கண்ணை மட்டும் குடுத்து "என் கண்ணே"என்று கொஞ்சி இருக்கலாம்......!  😎 

காதலுக்கு… கண் தேவையில்லை, என்று  அந்த முட்டாள் பெடியன் நினைத்து விட்டான். 😁

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு குட்டிக்கதை
ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.
ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.
குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.
மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.
ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.
சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.
செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.
ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
“”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.
தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.
திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.
சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?”
“”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு.
“”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?”
“”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.
எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.😄
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.
  • Like 5
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்  கெட்ட பழக்கமும், இல்லாத மனிதனின் நிலை.  :)

May be an image of text that says 'ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான் அவர் அவனை விசாரித்தார், "குடிப்பாயா?" 'இல்லை,சார்,' "சிகரெட் பிடிப்பாயா?" 'இல்லை,சார்.' "ரேசுக்கு போவாயா?" 'இல்லை,சார்.' "சூதாட்டம்?" 'கிடையாது,சார்.' "பெண் சிநேகிதம்?" 'சத்தியமா இல்லை,சார்.' "உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த வேண் எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்."'

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில்... திகில் கதை.

May be an image of one or more people and text that says 'முன்று நண்பர்கள் 100 மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர். ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிக் கொண்ட மாடி ஏறி விடலாம் என் பிளான் செய்து கொண்டு ஏறினார்கள். முதல் நபர் 50 ஆவது மாடி வரை ஒரு அடிதடி கதை சொல்லி கொண்டே வந்தார். இரண்டாவது நபர் 99 ஆவது மாடி வரை ஒரு காமெடி கதை சொல்லி கொண்டே வந்தார். முன்றாவது நண்பர் மிகவும் திகிலான கதையை ஒரு வரியில் சொன்னார். ரூம் சாவியை கார்லயே மறந்துவிட்டு வந்துட்டேன்!! Helo:'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

▷ Telephones: Animated Images, Gifs, Pictures & Animations - 100% FREE!

செத்தான்(டா)... சேகர்.

May be an image of one or more people and text that says 'வீட்டுக்கு ஒரு ஆணுக்கு தெரியாத நம்பரில் போன் வருகிறது.. Girl: காதலர்தின வாழ்த்துகள்.. நீங்க சிங்கிளா? Man மா நான் சிங்கிள் தான் ..! நீங்க யாரு? Girl நானா உன் பொண்டாட்டி வா வச்சிருக்கேன்.. (ஒரு 2மணி நேரம் கழித்து மறுபடியும் போன் வேற நம்பர்ல இருந்து) Girl ஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? Man: ஆயிடுச்சி நீங்க யாரு Girl: உன் கேர்ள் ப்ரண்ட் அட பாவி என்னை ஏமாத் ஏமாத்திட்டியே Man sorry டா செல்லம் என் மனைவினு நெனச்சேன் Girl: மறுபடியும் உன் பொண்டாட்டி தான் வீட்டுக்கு வா செத்தடா..'

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

▷ Telephones: Animated Images, Gifs, Pictures & Animations - 100% FREE!

செத்தான்(டா)... சேகர்.

May be an image of one or more people and text that says 'வீட்டுக்கு ஒரு ஆணுக்கு தெரியாத நம்பரில் போன் வருகிறது.. Girl: காதலர்தின வாழ்த்துகள்.. நீங்க சிங்கிளா? Man மா நான் சிங்கிள் தான் ..! நீங்க யாரு? Girl நானா உன் பொண்டாட்டி வா வச்சிருக்கேன்.. (ஒரு 2மணி நேரம் கழித்து மறுபடியும் போன் வேற நம்பர்ல இருந்து) Girl ஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? Man: ஆயிடுச்சி நீங்க யாரு Girl: உன் கேர்ள் ப்ரண்ட் அட பாவி என்னை ஏமாத் ஏமாத்திட்டியே Man sorry டா செல்லம் என் மனைவினு நெனச்சேன் Girl: மறுபடியும் உன் பொண்டாட்டி தான் வீட்டுக்கு வா செத்தடா..'

மனிசி தன்ர போனில் இருந்து எடுத்திருந்தால் மனுசனுக்கு தெரிந்திருக்கும்.....இப்ப அவவின் இரு நண்பிகளின் போன் நம்பர் உங்களிடம் இருக்கு.....அடிவாங்கினதுக்கு அப்புறம் ஒத்தடம் தேவையென்றால் அவை உதவலாம்......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'ஹலோ... சொல்லுங்கணா... (உலகின் மிகச்சிறிய காதல் தோல்வி கதை)'

உலகின்... மிகச்  சிறிய, காதல் தோல்வி கதை. 😂

 

May be an image of 2 people and text that says 'தம்பி நிஜமாவா சொல்ற..?? A தமிழ் COMEDY MEMES ROFLPHOTOS.COM'

tenor.gif?ver=1112&c=VjFfZmFjZWJvb2tfd2ViY29tbWVudHM&itemid=24159653&fbclid=IwAR0yZq5sG8Wi7rquhcIfDOgzfnsmRs0c1jP8zPne_FFV8seVVKnIM5UyUrk   Big Brother Reaction GIF by MOODMAN  

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாவே.... வராத, குப்புசாமி. 😂

May be an image of 1 person and text that says 'ஒருவன் இறைவனிடம் எனக்கு சாவே வரக்கூடாது என்று வரம் கேட்டான் இறைவனும் சரி என்று வரம் கொடுத்தார் ஊருக்குள் வந்த அவனிடம் ஒருவர் உன் பெயர் என்னயா என்று கேட்டார் அதற்கு அவன் "குப்புமி" என்றான் பெயரை கேட்டு சிரித்து விட்டு சென்றான் இது என்னடா பேரு என்று.... குப்புசாமி என்ற அவனது பெயரை சொல்லி சொல்லி பார்த்தான் கடைசி வரை "சா" வே வரல கடவுள் இப்ப சந்தோசமா முத்துகிருஷ்ணன் > <'

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம் : குடிகார கணவன் திருந்தவும் பிரிந்த கணவன்  மனைவி ஒன்று சேரவும் பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் ...
 
இறக்கும் தறுவாயில்... கணவனிடம், மனைவி வாங்கிய சத்தியம். 
 
😯மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?"
 
அதை கேட்ட😭கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...😭
 
மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...
 
தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!
 
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.
 
ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.
 
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...
 
"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு... அண்ணா, தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.😂😂
 
படித்ததில் பிடித்தது. Str Moorthy
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
படித்ததில்... சிரித்தது.😃😃😃
நீங்கள், சிரிக்காம படிக்கணும்.😀😀😀😀😀😀
 
ஜட்ஜ்:
எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???
 
விண்ணப்பதாரர்:-
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .
அதனால் விவாகரத்து தாருங்கள். ...
 
ஜட்ஜ்: -
இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.
நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...
 
விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க.
 
ஜட்ஜ் :
என்ன புரிஞ்சது.?
 
விண்ணப்பதாரர்:
எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க
🤣🤣
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Raven Flight GIF | Gfycat

மனிதன் தலையில்,  ஆய்.... போன, காக்கா. 

 

May be an image of text that says 'ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா?!?" என்றது.'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை..! | பழமொழியின் உண்மை விளக்கம் | Tamil  Proverbs With Meaning - YouTube
 
முழுப் பூசணிக்காயை, சோற்றால்... மறைத்த கதை.
 
‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪ஒரு பணக்காரரும் அவர் பொண்டாட்டியும்...
ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம்.
அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம்.
இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம்.
 
சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர்
பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம்.
 
ஊரில் அரசால் புரசலாக பணக்காரர்...
பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.
 
இதை மறைக்க,  ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து...
வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை
அந்த பணக்காரர் வைத்தாராம்.
 
“இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும், இவரா...
கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார்,
இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம்.
 
இதான் முழுப் பூசணிக்காயை சோற்றில், சோற்றால்... மறைத்த கதை....😂😂
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Parrot Dancing GIF - Parrot Dancing Cage - Discover & Share GIFs

கூண்டுக் கிளி.

May be an image of text that says 'ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி பிழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூன்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் SPOT OUT போல! நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!'

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுத்து கோவிலுக்கு 8 லட்சம் நன்கொடை வழங்கிய முதியவர் - Tamil Thisai

ஒரு கோடி ரூபாயில்... கோயில் கட்டிய, பிச்சைக்காரன்.    😂

May be an image of one or more people and text that says 'ஒரு பிச்சைக்காரனுக்கு லாட்டரில கோடி ரூபா பரிசு விழுந்தது. அத வச்சு அவன் ஒரு கோவிலை கட்டினான். அவன் நண்பன் கேட்டான் ஏண்டா எவ்வளவோ தேவைகள் இருக்குன்னு தானே பிச்சை எடுத்துட்டு இருக்கோம். ஏண்டா கோவில் கட்டி பணத்தை வீணாக்கின? எந்த கோவிலுக்கு போனாலும் நான் தான் உக்காருவேன் நீ உட்காரக் கூடாதுன்னு ஒரே சண்டை. இனி இது என் கோவில். பிச்சை எடுக்கிற முழு உரிமையும் எனக்கு தான். நான் மட்டும் தான் என் கோவில் வாசல்ல உட்கார்ந்து பிச்சை எடுப்பேன். எவன் வந்து இங்க உட்காரக் கூடாதுன்னு சொல்றான்னு பார்க்குறேன்.'

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Perfume GIFs - Get the best GIF on GIPHY

நல்ல வாசமாயிருக்கு... இதை, எங்கு வாங்கினீர்கள். 😂  🤣

May be an image of one or more people and text that says 'மைக்ரோ கதை பேருந்தில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்தி ருந்த இளம்பெண்ணைப் பார்த்து அவன் கேட்டான்: "நீங்கள் பூசிக் கொண்டிருக்கும் சென்ட் மிகவும் அருமை. சிறந்த நறுமணம். எங்கே வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா? என் மனைவிக்கு வாங்கித் வேண்டும்" "தயவு செய்து இந்த சென்ட்டை உங்கள் atha மனைவிக்கு வாங்கித் தராதீர்கள்" ஏன்? ஏன்?" "அதை அவள் பூசிக் கொண்டு வெளியே சென்றால் கண்ட கண்ட எருமைகள் வலிய பசவரும்' என்றாள்அவள்'

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.