Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதை செய்யாவிட்டால் - உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்! -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

   

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=160209&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே - 2  நேசம் உன்னில் நான் காண்பதால்  உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும் 1. உன்னைக் காணாமலே உடன்  பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ...  எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே  நான் கலங்கிடுவேன் ஆ...  நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன் உணர்வோடு போராடுதே - 2  உயிராக வா... உறவாக வா...  அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா 2. என் கோயில் தெய்வம் அது நீயானதால்  உன்னை வணங்கிடுவேன் ஆ...  உயிர் ஆதாரமே என்னில் நீயானதால்  உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ...  நீயில்லாமல் நானில்லையே - உந்தன்  நினைவின்றி வாழ்வில்லையே - 2  நிழலாக வா... நீங்காமல் வா...  அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா  
    • இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கக் கூடாது: மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்    28 Views இந்தியா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள 15 பில்லியன் பண உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அறிவது, அண்மையில் எமது நாட்டின் பிரதமரிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் செயலானது எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளை நீங்கள் நன்கறிவீர்கள் என்று நம்புகின்றேன். அத்துடன் இலங்கை – இந்திய உடன்பாட்டையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தையும் நீங்கள் வெவ்வேறாகப் பகுத்துப் பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன். அண்மையில் மதிப்பிற்குரிய வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய இந்திய ஃபோரத்தால் நடத்தப்பட்ட இணையவழிக் கலந்துரையாடலின் போது 1987ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்பாட்டின் முழுமையான நடைமுறைப்படுத்தலானது எம் இருதரப்பாருக்கும் நன்மை பயக்கும் என்று கூறியிருந்தேன். என்னுடைய தமிழ்ப் பேச்சின் ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்றை இத்துடன் இணைத்து அனுப்புகின்றேன். ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும். அண்மையில் இந்தியாவின் கொடையாகக் கொடுக்க உடன்பட்ட தொகையான 15 மில்லியன் டொலர் தொகையை இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த நட்புறவை மேம்படுத்தவும், பௌத்த சமய வணக்கஸ்தலங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் தொல்பொருளியல் சம்பந்தமான கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முனையும் போது இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசத்தில் அத் தொகையின் நலனைப் பாவிக்கக் கூடாதென்ற ஒரு உத்தரவாதத்தை இலங்கைப் பிரதமர் மதிப்பிற்குரிய மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொள்வது உசிதமானது.   மேலும் இருதரப்பு ஆயுதமேந்திய படைகளின் கூட்டை வலுப்படுத்த வழங்கப்படும் உதவிகள் மற்றும் பயிற்சிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மதிப்பிற்குரிய மகிந்த இராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ilakku.org/இந்தியா-இலங்கைக்கு-வழங்க/
    • முத்தையா முரளிதரனின் விவரண படத்தை ஏன் சிங்களவர்கள் சிறிலங்காவில் எடுக்கவில்லை?  
    • 62 சந்தேக நபர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க நீதி மன்று உத்தரவு    40 Views இலங்கையில் நடைபெற்ற  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 08பேர் இன்று மட்டக்களிப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பாகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவர்கள் மட்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். பொலிஸார் சார்பில் சட்டத்தரணியும் சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரூவான் குணசேகர ஆஜராகியிருந்தார். இந்நிலையில்,குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கினை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் ஒத்திவைத்தார் https://www.ilakku.org/62-சந்தேக-நபர்-தொடர்பான-அறி/  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.