-
Tell a friend
-
Topics
-
0
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
உண்மையான முகமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் இதுவரை மறைத்த முகம் எது? எனது பெயரையே வெளிப்படையாகத்தானே எழுதுவருகிறேன்? இதில் மறைப்பதற்கு என்னவிருக்கிறது? ஏன், நான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதால் என்னைத் தூற்றலாம் என்று நினைக்கிறீர்களா? தராளமாக. நான் கவலைப்படவில்லை. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பும், சிங்கள ஆக்கிரமிப்பும் ஒன்றுதான். எனக்கு இருமுகம் கிடையாது.
-
By சுவைப்பிரியன் · Posted
உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது. -
சென்னையை இறுதி வரை திணற வைத்த குஜராத் பேட்டர்கள்: அசால்டாக வெற்றி பெற்ற டைட்டன்ஸ் பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER 31 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விஜய் சங்கர், ரஷீத் கான், ராகுல் தெவாதியா என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் சென்னை வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளாசத் தொடங்கியது. சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசனில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியபோது முகமது ஷமியின் 100வது விக்கெட் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரில் விக்கெட் எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார். முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது. டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது விக்கெட்டை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆறாவது ஓவர் முடிவில் ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசினார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது ஓவரில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார். நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 கேன் வில்லியம்சன் காயம் பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான். ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார். 13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ரன்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள். அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது ஓவரில் 92 ரன்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே ஓவரில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார். கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ரன் கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பேட்டிங்கை நிறைவு செய்தது. பட மூலாதாரம்,ANI இம்பாக்ட் ப்ளேயர்கள் இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கினர். 179 ரன்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார். மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது ஓவரில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது ஓவரில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது. பத்தாவது ஓவரில் குஜராத் அணிக்கான அடுத்த விக்கெட் விழுந்தது. நான்காவது ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது விக்கெட்டை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான விக்கெட்டாகவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER ஷுப்மன் கில் அதிரடி அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஷுப்மன் கில் 11வது ஓவரில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தொடங்கினார். தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது ஓவரில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். “சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் குறித்துக் குறிப்பிட்டனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது. தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது ஓவரில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது. தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்தார். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான் அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் பேட்டிங் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது. 15 ஓவர் இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. தீபக் சாஹர் 17வது ஓவரில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது. இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது ஓவரில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER மூன்றாவது பந்தில் ஒரேயொரு ரன்னை கொடுத்து ரன் ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக வி்ஜய் சங்கர் குறைத்தார். ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா. இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது ஓவரில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் விக்கெட்டை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பெரியளவு ரன் எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது ஓவரில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c3g5998v5g1o
-
வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு Published By: T. SARANYA 01 APR, 2023 | 09:55 AM வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள் வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/151878
-
"இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர். ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார். விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'31 மார்ச் 2023 விடுதலை படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் - தமிழகத்தில் நடந்த உண்மைக் கதையா?31 மார்ச் 2023 சென்னை அணிக்கு தண்ணி காட்டிய சுப்மன் கில் - சொதப்பிய சிஎஸ்கே இம்பாக்ட் ப்ளேயர்2 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் கதை என்ன? அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது. அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி. உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை. அரசியல் தலைவர்கள் பாராட்டு பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார். அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,ALPHONSE PUTHREN/TWITTER "இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார். குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார். “நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,BARADWAJ RANGAN/TWITTER விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். “நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c7290955njlo
-
Recommended Posts