-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Maruthankerny · Posted
தெரிந்துகொண்டும் திரிக்கு திரி நீங்கள் வாய்ப்பன் மா மாதிரி ஏன் வைச்சு இழுக்கிறீர்கள்? திரிக்கு மணியோசை வந்தால் மாடு வரும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டாலே உங்களுக்கு எவ்ளவோ நேரம் மிச்சம் சிங்களவன் தமிழர்களை அடித்தான் என்று தமிழில் இன்னொரு தமிழனுக்கு 30 வருடம் கழித்து எழுத்துவதுபோல வேறொரு கேவலம் இல்லை. -
By கிருபன் · பதியப்பட்டது
பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்ற சட்டம் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார். எவ்வாறாயினும் அந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மறுவேலை செய்யப்பட்டது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98662 -
By கிருபன் · பதியப்பட்டது
ஜெனிவா தீர்மானத்தை மறுதலித்தால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பிரத்தியேக செவ்வி (நேர்காணல்: ஆர்.ராம்) அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்விப்பதாக இருந்தால் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு வெளியில் உள்ள கட்டமைப்புக்கள் ஊடாகவே விடயங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வில் நிறைவேற்றப்படும் புதிய தீர்மானத்தினை இலங்கை ஏற்பதற்கு மறுத்தால் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் என்று மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு அமையும், தமிழ்த் தரப்பின் கூட்டுக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படுமா, அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தால் அதுதொடர்பிலான பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருக்கும் உள்ளிட்ட விடயப்பரப்புக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, கேள்வி:- எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதா? பதில்:- கடந்த தடவை இலங்கை விடயத்தில் மனித உரிமைகள் பேரவையில் உள்ள இணை அனுசரணை வழங்கும் நாடுகள் கூட்டிணைவிலேயே இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. தற்போது அந்த தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த அமர்வில் அறிவித்துவிட்டது. ஆகவே ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்த வேண்டும் என்ற வகையில் சிந்தித்து நகர்வது பொருத்தமற்றதாகவே இருக்கும். அந்த அடிப்படையில் புதிய பிரேரணையொன்றே தேவையாகவே உள்ளது. அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. எனினும், அந்த பிரேரணை, பிரித்தானியா தலைமையிலா அல்லது இணை அனுசரணை நாடுகள் கூட்டிணைந்தா சமர்ப்பிக்கப்படப்போகின்றன என்பது தொடர்பில் உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகியிருக்கவில்லை. எனது, கணிப்பின் பிரகாரம், இலங்கை விடயத்தில் நிச்சயமாக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதற்கே அதிகளவான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. கேள்வி:- புதிதாகவொரு தீர்மானம் கொண்டுவரப்படுமிடத்து, அது எவ்வாறான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன? பதில்:- இலங்கை விடயத்தினை தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையிலும் அதாவது, சர்வதேச அரங்கில் இலங்கை விடயம் தொடர்ந்தும் இருக்கும் வகையிலும், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் மனித உரிமை விடயங்களை அமுலாக்குவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். அத்துடன் நிறைவேற்றப்படும் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் முன்னெடுத்துள்ள விடயங்கள் சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு மீளாய்வு அறிக்கை வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் நடைமுறையும் தொடரும். அதற்கு மேல் மனித உரிமைகள் பேரவையில் எதனையும் எதிர்பார்க்க முடியாது. கேள்வி:-அப்படியென்றால் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறலுக்கு என்னவாகும்? பதில்:- இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியிலேயே முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினுள் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களையும் பரிந்துரைகளையும் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு பிறிதொரு நாட்டின் மீது பொறுப்புக்கூறச் செய்வதற்கான காட்டாயப்படுத்தல்களை மேற்கொள்ள முடியாது. ஆகவே, இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது, சர்வதேச விசேட தீர்ப்பாயத்திற்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்வதன் மூலமாகவே பொறுப்புக்கூறச் செய்ய முடியும். கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் கட்டமைப்புக்களுக்கு இலங்கை விடயத்தினை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? பதில்:- நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையிடம் இலங்கை விடயம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்புச் சபை ஊடாக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது பரிந்துரைக்கப்படும் விசேட தீர்ப்பாயத்திற்கோ அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் சர்வதேச நாடுகளின் உதவியுடன் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்காக இலங்கையை முன்னிலைப்படுத்த முடியும். கேள்வி:- பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இருக்கின்ற அதேநேரம், ரோம் சாசனத்திலும் இலங்கை கையொப்பமிடாத நிலையில் பொறுப்புக்கூறச் செய்வதற்காக நீங்கள் கூறும் பொறிமுறைகள் சாத்தியமாகுமா? பதில்:- இது மிகவும் சிரமமான பணியொன்றுதான். சர்வதேச நாடுகளிடத்தில் இந்த விடயங்கள் தொடர்பான முறையான சமர்ப்பணங்களைச் செய்வதன் மூலமாக உரிய புரிதலை ஏற்படுத்துவதன் ஊடாகவே சாத்தியமாகும். இது மிகவும் சவால் நிறைந்த நீண்ட பயணம். உடனடியாகச் சாத்தியமாகாது. ஆகவே தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். கேள்வி:- பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல், சிவில் அமைப்புக்கள் இம்முறை, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை அதாவது, சிரியா மற்றும் மியன்மார் நாடுகளில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பொறிமுறை பற்றி அதிகளவில் கவனம் செலுத்துகின்ற நிலையில் அது இலங்கை விடயத்தில் பொருத்தமானதாக இருக்குமா? பதில்:- அவ்வாறான கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று கூறுவதற்கில்லை. அவ்வாறான கோரிக்கையை சர்வதேச தரப்புக்களிடத்தில் முன்வைக்கும் போது, அவற்றின் ஏகோபித்த ஆதரவினைப் பெறுவதுதான் சவாலான விடயம். விசேடமாக, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதையே தமது கொள்கையாக கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிலையில் இந்த பொறிமுறைகள் பற்றிய பரிந்துரைகளைச் செய்து அவற்றின் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் பெறுவது மிகவும் கடினமானது. அந்த சவாலான பணியையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று கால தாமதமாகலாம். அதற்காக முயற்சிகளை எடுக்காது இருந்துவிட முடியாது. கேள்வி:- பொறுப்புக்கூறலை பெற்றெடுக்க முடியாதுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தினை தொடர்ந்தும் வைத்திருப்பதால் நன்மைகள் உண்டா? பதில்:- நிச்சயமாக, சர்வதேச தளங்களை பார்க்கின்றபோது, இலங்கை விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் மட்டுமே தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. ஆகவே அந்த விடயத்தினை சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் தொடர்ந்தும் வைத்திருப்பது அவசியமானதாகும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் வருடாந்தம் மீளாய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்படும். அதில் மனித உரிமைகள், ஜனநாயக விடயங்கள் பற்றிய ஆழமான கரிசனைகள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்படும். அதேபோன்று மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை விடயம் தொடர்பில் கரிசனை கொள்வார். அதன்மூலம் இலங்கையின் பொறுப்புக்கூறலை தொடர்ச்சியாக சர்வதேச தளத்தில் நினைவுபடுத்தியும், கவனத்தில் கொள்ளவைத்துக் கொண்டும் இருக்க முடியும். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயத்தினை நீடித்திருக்கும் வகையில் வைத்துக் கொண்டே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அடுத்துவரும் ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக காத்திரமான கலந்துரையாடலொன்றை செய்திருப்பதாக அறியமுடிகின்றது அதுபற்றிக் கூற முடியுமா? பதில்:- தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நான் உள்ளிட்டவர்கள் சந்தித்து கலந்துரையாடினோம். இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரின்போது, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பலமான கட்டமைப்பாக செயற்பட வேண்டியதில் உள்ள தடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஏற்கனவே இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஜெனிவாகூட்டத்தொடரில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் விடயங்கள் பகிரப்பட்டன. அதன் பயனாக, அத்தரப்புக்களிடத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டு, எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கான முன்மொழிவு ஆவணத்தினை கூட்டிணைந்து தயாரித்து வழங்குதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இதுவொரு ஆரோக்கியமானதும் நன்மை பயக்கும் விடயமாகவே காணப்படுகின்றது. இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் கொண்டுவரப்படும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மொத்தமுள்ள 47 உறுப்பு நாடுகளில் 24இன் ஆதரவினைப் பெற வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் ஊடாக, அவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணந்து ஒருமித்த குரலில் சர்வதேச நாடுகளின் முன்னால் தமது சமர்ப்பணங்களை செய்து ஆதரவினைப் பெறுவதற்கு ஏதுவான நிலைமைகளை ஏற்படுத்துவதாக இருக்கும். கேள்வி:- பூகோள அரசியல், பொருளாதார, சமூகச் சூழலைப் பார்க்கின்றபோது பாதிக்கப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளை ஏற்று கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதுகின்றீர்களா? பதில்:-ஆம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிகளவில் ஆதரவினை வெளியிடும். அதேபோன்று, ஆபிரிக்க நாடுகளுடனான கலந்துரையாடல்களும் ஆதரவுத்தளத்தினை மேம்படுத்தும். அதுமட்டுமன்றி வழமைக்கு மாறாக இம்முறை முஸ்லிம்களும் உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். ஆகவே அந்த விடயங்களையும் முறையாக எடுத்துரைக்கும் போது, சில முஸ்லிம் நாடுகளின் ஆதரவினையும் பெற முடியும். மேலும் நடுநிலை வகிக்கும் இந்தியா உள்ளிட்ட தரப்புக்களின் மனோநிலையை மாற்றுவதற்கான உரிய சமர்ப்பணங்கள் அவசியமாகின்றன. கேள்வி:-தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம், ஏற்கனவே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்து விட்ட நிலையில் புதிய பிரேரணையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தினையும் மறுதலிக்குமானால் என்னவாகும்? பதில்:- முதலாவது, சர்வதேச நாடுகளின் மத்தியில் அதன் கௌரவத்திற்கு பாதகமான தோற்றப்பாடு வலுவாக எழும். அடுத்ததாக, பிரேரணையை கொண்டு வந்த நாடுகள், அந்தப் பிரேரணை தீர்மானமாக நிறைவேறுவதற்கு ஆதரவளித்த நாடுகள் என்பன ஒன்றிணைந்து சில நடவடிக்கைகளை நிச்சயமாக முன்னெடுக்கும். அது இலங்கைக்கு எதிர்மறையான நிலைமைகளையே சர்வதேச அரங்கில் ஏற்படுத்தும். கேள்வி:- இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், போர்க்குற்ற விடயங்களை மையப்படுத்தி படையினர் தண்டனைக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுகின்றது, நாட்டின் இறைமையில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்யப்படுகின்றன போன்ற காரணங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிலைப்படுத்த பிரயத்தனம் செய்யுமல்லவா? பதில்:- ஆம், தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவ்விதமான கருத்துக்களை அதிகளவில் வெளிப்படுத்தப்படும். அதேநேரம், இறைமை விடயத்தினை மையப்படுத்தி தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் சர்வதேச ரீதியாக தம்மை நியாயப்படுத்தவும் முயற்சிப்பார்கள். ஆனால், நாட்டின் ஜனநாயகம், மனித உரிமைகள் விடயங்களின் உண்மையான நிலைமைகளும் அம்பலமாகும். அதுமட்டுமன்றி உள்நாட்டில் பதற்றமான நிலைமையொன்றும் நீடிப்பதற்கு இடமுண்டு. இலங்கை பற்றிய புரிதல் சர்வதேச நாடுகளுக்கு காணப்பட்டாலும் இந்த விடயத்தினை மிக கவனமாக கையாள வேண்டியது அவசியமாகின்றது. கேள்வி:- தற்போதைய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பினை தயாரிக்கின்றோம் என்பது உள்ளிட்ட விடயங்களை சர்வதேச அரங்கில் முன்வைத்து காலங்கடத்தும் உத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளதல்லவா? பதில்:- அரசாங்கம் பல விடயங்களை வெவ்வேறு முறைமைகளில் கையாள்வதற்கு முயற்சிகளை எடுக்கும். ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் மீளாய்வு அறிக்கை, அவருடைய இலங்கை தொடர்பான பார்வை, பாதிக்கப்பட்ட தரப்பினது சான்றாதாரங்களுடனான சமர்ப்பணங்கள் என்பன பெருமளவில் தாக்கங்களைச் செலுத்தும். அதுமட்டுமன்றி, தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் மனித உரிமைகள் விடயம், ஜனநாயகச் சூழல் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலும் ஏனைய சர்வதேச நாடுகளும் அதிகூடிய கவனம் செலுத்தும். ஆகவே அரசாங்கம் கூறும் விடயங்கள் உள்நாட்டு விடயங்களாகவே அதிகளவில் பார்க்கப்படும். கேள்வி:- சிவில் அமைப்புக்களின் வினைத்திறனான செயற்பாடுகள் அண்மைக்காலமாக குறைவடைந்துள்ளதை உணர்கின்றீர்களா? பதில்:- ஆம், 2019 ஆட்சிமாற்றத்தின் பின்னர் குறைவடைந்துள்ளது. கேள்வி:- அதற்கு என்ன காரணமென்று கருதுகின்றீர்கள்? பதில்:- இந்த அரசாங்கத்தின் கடந்த கால முகத்தினை சிவில் செயற்பாட்டாளர்கள் நன்கறிந்தவர்கள். வெள்ளைவான் கலாசாரம் முதல் பல்வேறு அனுபவங்கள் காணப்படுகின்றன. ஆகவே தான் அச்சமான மனநிலையினால் சிவில் அமைப்புக்களும், பிரதிநிதிகளும் சற்று அமைதியாகி விட்டனர். இதனைவிடவும், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது. நிதி, நிர்வாகம் தொடர்பில் அவை இறுக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இவ்விதமான காரணங்களால் அமைப்புக்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் அமைதிகாக்கின்றனர். அதற்காக பூரணமாக மௌனித்துவிட்டனர் என்று கூற முடியாது. ஏனென்றால் 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது சிவில் அமைப்புக்கள் உயர் நீதிமன்றை நாடியிருந்தன. முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்திற்காக வீதியிலிறங்கி போராடிவருகின்றன. ஆகவே நெருக்கடியான நிலைமை நீடிக்கும் என்று நான் கருதவில்லை. ஒருவேளை அனைத்து தரப்புக்களும் மௌனமாக்கப்படலாம் இல்லையென்றால் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக போராடும் நிலைமை ஏற்படலாம். https://www.virakesari.lk/article/98638 -
By கிருபன் · பதியப்பட்டது
கடந்த காலத்துக்குச் செல்வதா? கற்களைக் கடந்து பயணிப்பதா? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தை பிறந்துவிட்டது; வழி பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. அண்மைய நிகழ்வுகளும் அதற்கான எதிர்வினைகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அசைவியக்கம் குறித்த பல வினாக்களை எழுப்புகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறிய காட்சிகள், உணர்ச்சிப் பிரவாகத்துக்கு அப்பாற்பட்டு, நீண்டகால நோக்கில், பொதுத்தளத்தில் ஒருங்கிணைந்து உரிமைகளுக்குப் போராட, நாம் திராணியற்றவர்கள் என்பதை, இன்னொருமுறை காட்டி நின்றது. நினைவுகள் கற்களில் அல்ல; அவை மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. அகற்றப்பட்ட ஒரு கல்லோ, கட்டடமோ மனங்களில் ஆழப்பதிந்துள்ள நினைவுகளை அகற்றிவிடாது. உணர்ச்சிகர தமிழ்த் தேசிய அரசியல், எமக்கு எதைப் பரிசளித்துள்ளது என்பதை, ஈழத் தமிழரது கடந்த அரைநூற்றாண்டுகால அரசியல், எமக்குக் காட்டி நிற்கிறது. யாழ். பல்கலைக்கழக இடிப்பானது, தமிழ் மக்களின் நேசசக்திகள் யார் என்பதை, இன்னொரு முறை சுட்டிக்காட்டி நின்றது. நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து, வெளியான அறிக்கைகளில் இரண்டு அறிக்கைகள் முக்கியமானவை. முதலாவது, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை; அது மிகுந்த கவனத்துடனும் கரிசனையுடனும் தோழமை நோக்கத்துடனும் எழுதப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கை, இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை, யாரும் பறிக்க முடியாது என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கின்றது. சிங்களத்திலும் தமிழிலும் வெளியான இவ்வறிக்கை, இனத்துவ அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நியாயத்தைத் துணிந்து பேசியுள்ளது. இரண்டாவது அறிக்கை, யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத்தினுடையது. அது, இடித்தழிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஹர்த்தாலுக்குப் பூரண ஆதரவு என்றும் தெரிவித்தது. இந்த அறிக்கை, முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ‘இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில், தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கில் இணைந்து வாழ வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள், ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே, இரு சமூகங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். அந்தவகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக, அனைத்து வழிகளிலும் ஒன்றிணைய முயற்சிப்போம். இப்போதைய தருணத்தில், சிறுபான்மையினர் தொடர்ச்சியான நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையில், இந்த அழைப்பு முக்கியமானது. சிங்கள சமூகத்தில் இருந்தும், முஸ்லிம் சமூகத்தில் இருந்தும், தூபி இடிப்புச் செயலுக்கு எதிரானதும் வலுவானதுமான குரல்கள் பதிவாகியுள்ளன. அவை, திறந்த மனதுடன் இவ்விடயத்தை அணுகுகின்றன. அவை, இனத்துவ அடையாளங்களைக் கடந்து, நியாயம், அநியாயம் குறித்துப் பேசுகின்றன. இந்த நட்புச் சக்திகளை, நாம் அரவணைக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம், ஏனைய சமூகங்களைப் பகைப்பதால் விளையக்கூடியதல்ல. நாட்டின் அரசியலை ஜனநாயகப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் ஒரு புதிய ஜனநாயக இயக்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகாலப் போரினின்றும் அதன் முடிவின் பின்னரான ஒரு தசாப்த காலத்திலிருந்தும், நாம் கற்க வேண்டிய பாடங்களில் முக்கியமானது, ஜனநாயகம் தொடர்பானது ஆகும். அது இல்லாமல், எந்தத் தேசிய இனத்துக்கும் நன்மை இல்லை. அதைத்தக்க வைப்பதற்கான போராட்டம், பரந்த தளத்தில் திறந்த மனதுடன் நடந்தாக வேண்டும். இந்த இணைவும் ஒருங்கிணைந்த போராட்டமும் ஏன் சாத்தியமாகவில்லை என்பதை சுயவிமர்சன நோக்கில் தமிழர்கள் சிந்தித்தாக வேண்டும். தேசியவாதத்தின் குறுகலான பார்வைகள், இந்த இணைவுக்குத் தடையாக இருந்துள்ளன; இன்னமும் இருக்கின்றன. குறுகிய தமிழ்த் தேசியவாதம், தன்னை நிலைநிறுத்துவதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. இன, மொழி உணர்வுகளை வெறித்தனமான உணர்ச்சிகளாக விருத்தி செய்வது, அவற்றுள் அடிப்படையான ஓர் உபாயமாக அமைந்தது எனலாம். இன்னொன்று தனக்கும், தன்னால் எதிரியாகக் கொள்ளப்படும் சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை மிகைப்படுத்துவதுடன், பொதுவான பண்புகளைக் குறைத்துக் கூறுவது அல்லது மறுப்பதாகும். இது நமது தமிழ்த் தேசியவாதத்தின் நடத்தைக் கோளாறு மட்டுமல்ல, ஒவ்வொரு குறுகிய தேசியவாதத்தின் உள்ளும், இவ்வாறான போக்குகளைக் காணலாம். இப் போக்குக்கள் மக்களைத் தனித் தனிச் சமூகங்களாகப் பிரிப்பதுடன், பகைமையை மூட்டிவிடுகிற காரணிகளாகவும் விருத்தி பெறுகின்றன. சமூகங்களிடையே நட்புணர்வு போன்றதே, பகை யுணர்வும் ஆகும். ஒன்றின் நட்புணர்வு, மற்றையதன் நட்புணர்வால் ஊட்டம் பெறுவது போல, ஒன்றின் பகையுணர்வு, மற்றையதன் பகையுணர்வுக்கு ஊட்டமளிக்கிறது. அதன் விளைவாக, ஒன்றுபடக் கூடிய வாய்ப்பை, அதிகளவில் கொண்ட சமூகங்கள், பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கின்றன. ஈற்றில் நன்மை அடைவோர், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அல்லர். தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள், தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது, பொன்னம்பலம், இராமநாதன் காலம் தொட்டு, நாம் கண்ட உண்மை. அதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில், மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, மக்களுடைய பிரச்சினைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம், அரசியல் தலைமைகளுக்கு இருக்காது. அதுவுமல்லாமல், அந்த மேலாதிக்கத்தின் ஒவ்வோர் அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார், எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம். எனவே, அந்த ஆபத்து நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு, உணர்ச்சிகர தமிழ்த் தேசிய முழக்கங்கள் பயனளிக்கின்றன. இந்தத் திசையிலேயே, நினைவிட இடிப்பைத் தொடர்ந்த அரசியல் அரங்கேறியது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை சிங்களவர்-தமிழர் பிரச்சினையாகவே நோக்குகின்ற போக்கு இன்னமும் தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்ஷவுக்கு (அதாவது சிங்களவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும், இந்தியக் குறுக்கீட்டைப் பற்றிய மூட நம்பிக்கைகள் இன்னொரு புறமும் அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன. இந்தத் திசையிலிருந்து தமிழ்த் தேசியத்தை முற்போக்கான திசையை நோக்கி எவ்வாறு நகர்த்துவது என்பதே சவால். அதன் முதற்படியாக அமைவது, இலங்கை அரசு, சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி, இன வேறுபாடின்றி, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பகையான ஒடுக்குமுறை அரசாங்கம் என்பதை உணர்ந்தால், நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை, நாட்டின் ஜனநாயகம், மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகள், வர்க்க ஒடுக்கல் ஆகியவற்றின் தீர்வுகளுடன் இணைத்துக் கருதும் தேவை விளங்கும். தமிழ் மக்கள், தமது தேசிய இன உரிமைகளை வென்றெடுக்கத் தனித்துப் போராடுவதை விட, இனஅடிப்படையில் ஒடுக்கப்படும் முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனமக்களுடனும் ஒடுக்கலுக்கு உட்படும் பெரும்பான்மை இன உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராடும் தேவை விளங்கும். யா. பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு, ஏனைய சமூகங்களின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து, நாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதை இறுகப் பற்றி, முன்செல்லப் போகிறோமா, குறுந்தேசியச் சகதிக்குள் விழுந்துவிடப் போகிறோமா? தமிழ் மக்களின் விடுதலை, தமிழரைப் பிற சமூகங்களில் இருந்தும் விலக்கி வைக்கும் போக்குகளில் இருந்தும் விடுபட வேண்டும். அற்பத்தனமான சிந்தனைகள், ஒரு திசைக்கு மட்டும் வரையறுக்கக் கூடியவையல்ல. அவை வேறு திசைகளிலும் இயங்கி, சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் கூர்மையடையச் செய்ய இயலும்; செய்தும் உள்ளன. தமிழ் மக்கள் எதிர்ப்பது, பேரினவாத ஆதிக்கச் சிந்தனையையும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் புறமொதுக்கலையுமே என்றால், அவர்களது செயற்பாடுகள் அந்த ஆதிக்கச் சிந்தனைகளையும் புறமொதுக்கல்களையும் மறுக்கும் நோக்கைக் கொண்டவையாகவும் இந்த நாட்டில் நமது உரிமைகளை வலியுறுத்துவதுமாகவே அமைய வேண்டும். மக்கள் மீதான ஓடுக்குமுறைகள், பொதுப் பண்புகளை உடையன. அவை, ஒன்றை ஒன்று ஆதரிப்பன. எனவே, விடுதலைக்கான போராட்டங்கள், ஒன்றை ஒன்று ஆதரிப்பது அவசியம். அதற்கு முன், அவை தமது பொதுப் பண்புகளை அடையாளம் காண்பதும், காணத் தடையாக நிற்கும் மயக்கங்களை முறியடிப்பதும் அவசியம். எம்முன்னே இரண்டு தெரிவுகள் உண்டு. ஒன்றில், உடைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் கற்களை வைத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு காலச் சக்கரத்தில் பின்னோக்கி, 1950களின் அரசியலில் இருந்து தொடங்குவதா? அல்லது, கற்களைக் கடந்து எதிர்காலம் குறித்த தூரநோக்கத்தோடும் திறந்த மனதோடும் செயலாற்றுவதா? இலங்கையின் அரசியல் தொடர்ச்சியாக மாறிவருகிறது. அது, பெரும்பான்மையினரின் கவனக் கலைப்பானாக உள்ளது. கடந்த காலங்களில், சடலங்களின் அரசியல் நடந்தேறியது. இப்போது கற்களின் அரசியல் நடக்கிறது http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கடந்த-காலத்துக்குச்-செல்வதா-கற்களைக்-கடந்து-பயணிப்பதா/91-263865 -
By கிருபன் · பதியப்பட்டது
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/158179?ref=imp-news
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.