Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

சிறித்தம்பி!  பல ஆபிரிக்கனும்,அரேபிக்காரனும்  இந்தியரும் தங்கள் பாரம்பரிய உடையோ அல்லது தாங்கள் வழக்கமாக அணிந்த உடைகளுடனேயே வெளியில் திரிகின்றார்கள். அதை எப்படி பார்க்கின்றீர்கள்?
நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் சிலோனிலை இருந்து தானே வந்தனீங்கள்?  நகரங்களில் சரம் கட்டாத ஆக்களை காட்டுங்கோ பாப்பம்?

எனக்கொரு சந்தேகம் நீங்களும் கோட்டு சூட்டு கனவானோ எண்டு 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் வேட்டியுடன் உலாத்தலாம்.தவறே இல்லை.

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

வெய்யில் காலங்களில்  பல தடவைகள் ஜேர்மன் நண்பர்களுடன் திரிந்திருக்கின்றேன். சிலர் விநோதமாக பார்ப்பர். பலருக்கு அது சர்வ சாதாரணம்.
உலகம் குறுகி விட்டது. ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அத்துடன் சாரம் இரவு உடை அல்ல.

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

அவர்... அப்படி போயிருந்தால்,
கொ*டை... இரண்டையும், பொலிஸ்  நாய், கவ்விக் கொண்டு போயிருக்கும்.  🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

இது... பொய்யான, தகவல்.
வசந்தியை.... பரப்புவோர் மீது, 
கடுமையான... கண்டனங்கள். 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(

இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஐயோ... கொல்றாய்ங்களே....   😎 😎 😎
பட்டு வேட்டிக்கும், கோடு  போட்ட சாரத்துக்கும்... 
பத்து வித்தியாசம் இருக்கு, குமாரசாமி அண்ணே...    🤣

சட்டைக்கு... மேல், சாரம் கட்டினால்... 
நழுவி... விழாமல், இருக்கும், "ரெக்னிக்கை"   
நம்ம நாட்டில், அறிமுகப் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம், நானே வடிவாக படம் எடுத்து போட்டு விடுகின்றேன்......!  😂

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

நானும் அப்படியே.வேலைக்கு அல்லது வெளியே போனால் வீடு வந்தவுடன் முதல்வேலை சரத்துக்குள் புகுந்து கொள்வதே.
ஊரில் சரத்துடன் எல்லா தேசமும் திரிந்திருக்கிறேன்.

வெளிநாட்டில் இன்னமும் வீட்டுக்குள்ளே தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 
  • ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. மின்னணு கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே மறு சுழற்சி செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. "இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சுற்றுச் சூழல் சவால்களில் ஒன்றின் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ராயல் மின்டின் தலைமைச் செயல் அதிகாரி ஆன்னி ஜெசோப் கூறினார். ரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு? மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில் (circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட ஒப்பந்தம் செய்திருக்கிறது தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களை மின்சுற்று அட்டைகளில் இருந்து வேதியியல் தொழில்நுட்பம் நொடிகளில் பிரித்தெடுக்கிறது என்று ராயல் மின்ட் கூறுகிறது 2021 ஆம் ஆண்டில் தூக்கி எறியப்பட்ட மின்னணு மற்றும் மின் சாதனங்கள் 5.7 கோடி டன்களுக்கு மேல் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY   படக்குறிப்பு, ஸ்மார்ட்போன்களில் சுமார் 30 வெவ்வேறு தனிமங்கள் உள்ளன, அவற்றில் சில பூமியில் காலியாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலை எதிர்கொள்ள எதுவும் செய்யவில்லை என்றால், 2030 க்குள் மின்னணு கழிவுகள் 7.4 கோடி டன்களை எட்டும். அதாவது ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று ராயல் மின்ட் கூறுகிறது. உயர் வெப்பநிலையில் உருக்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தின்படி ரொண்டா சினான் டாப்பில் உள்ள ராயல் மின்ட் ஆலையில் அறை வெப்பநிலையிலேயே விலைமதிப்பற்ற உலோகங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. ராயல் மின்ட் நாணய ஆலையில் இந்தத் தொடழில்நுட்பத்தின் தொடக்கநிலைப் பயன்பாடு மூலமாக ஏற்கெனவே 999.9 தூய்மையான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், பல்லேடியம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களையும் பிரித்தெடுக்க முடியும். மின்னணு கழிவுகளைக் குறைப்பதிலும், மதிப்புமிக்க உலோகங்களைக் மீட்பதிலும், புதிய திறன்களை வளர்ப்பதிலும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய சாத்தியமான ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று மின்டின் ஜெசோப் கூறினார். இந்த வேதியல் தொழில்நுட்பம் "புரட்சிகரமானது" என்று நாணய ஆலையின் தலைமைய வளர்ச்சி அதிகாரி ஷான் மில்லார்ட் கூறிகிறார். "இது ராயல் மின்ட் மற்றும் கழிவுகளே இல்லாத சுற்றுப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆற்றலை வழங்குகிறது. பூமியின் மதிப்புமிக்க வளங்களை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. பிரிட்டனில் புதிய திறன்களை உருவாக்குகிறது" https://www.bbc.com/tamil/science-58982005
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.