Jump to content

இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) எனது "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" கவிதை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள  "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!"  என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி..  யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…!

பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா

இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார்.

மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது

வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர்

“ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும்

தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை

வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார்.

பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில்

டிரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர்

ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில்

எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார்.

ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின்

கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில்

சற்றே பதற்றமடைந்து,

சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி

அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து

அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா

இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்!

-சேயோன் யாழ்வேந்தன்

(நன்றி: ஆனந்த விகடன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது தொடர்ந்து பதிவிடுங்கள் சேயோன்....!

இயற்கையில் விடுதலையான சே குவாரா இன்று உங்களின் நினைவில் தங்கி கையில் வந்து மையில் நனைகிறார்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 318326_275558082456450_100000067813418_1  487601031.jpg?v=1&g=fs2%7C0%7Ceditorial2    296944_119927191441038_100002712746678_8  

நல்ல நடையுடன்...  பலமுறை வாசிக்க வைத்த, கவிதைக்கு.... பாராட்டுக்கள்,  சேயோன் யாழ் வேந்தன்.:)
நீண்ட நாட்களின் பின் வாசித்த, அருமையான கவிதை.
கவிதையை... வாசிக்கும் போது, நாம்.... சுயநலம் கொண்ட, 
அரசியல் வாதிகளால் எவ்வளவு  ஏமாற்றப்பட்டுக்  கொண்டு இருக்கின்றோம், 
என்ற ஏக்கம், உங்களின் எழுத்தில் புரிந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/1/2016 at 11:19 PM, தமிழ் சிறி said:

 318326_275558082456450_100000067813418_1  487601031.jpg?v=1&g=fs2%7C0%7Ceditorial2    296944_119927191441038_100002712746678_8  

நல்ல நடையுடன்...  பலமுறை வாசிக்க வைத்த, கவிதைக்கு.... பாராட்டுக்கள்,  சேயோன் யாழ் வேந்தன்.:)
நீண்ட நாட்களின் பின் வாசித்த, அருமையான கவிதை.
கவிதையை... வாசிக்கும் போது, நாம்.... சுயநலம் கொண்ட, 
அரசியல் வாதிகளால் எவ்வளவு  ஏமாற்றப்பட்டுக்  கொண்டு இருக்கின்றோம், 
என்ற ஏக்கம், உங்களின் எழுத்தில் புரிந்தது.  

தங்களின் அன்பில் நனைந்த பாராட்டுகளுக்கு நன்றி தோழர்!

On 7/1/2016 at 6:44 PM, suvy said:

நன்றாக இருக்கின்றது தொடர்ந்து பதிவிடுங்கள் சேயோன்....!

இயற்கையில் விடுதலையான சே குவாரா இன்று உங்களின் நினைவில் தங்கி கையில் வந்து மையில் நனைகிறார்....!  tw_blush:

தங்களின் பேரன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.