Jump to content

தமிழ்நதியின் பார்த்தீனியம் : பேரழிவின் மானுட சாட்சியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம்

யமுனா ராஜேந்திரன்

 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை  ஈழத்தமிர்கள் வாழும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்கொண்ட நாட்களின் கொஞ்சம் முன்னாகத் துவங்கி, இலங்கையிலிருந்து அதனது கடைசி அணி வெளியேறும் காலத்தோடு முடிகிறது. ஈழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும்; அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து ஈழத்தவரால் எழுதப்பட்ட முதல் நாவலும்; ஒரேயொரு நாவலும் ஆனது சாந்தனின் ‘விர்ல் வின்ட்’ எனும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல். நூறு பக்கங்கள் கொண்ட அந்தக் குறுநாவலோடு ஒப்பிட 500 பக்கங்களுக்கும் மேலாக விரியும் தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ ஒரு விரிந்த மானுடச் சட்டகத்தையும் காலச்சட்டகத்தையம் கொண்டிருக்கிறது.

இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளைத் தேடுவதற்காக ஒரு கிராமத்தின் மக்கள் அவர்களது வீடுகளைத் துறந்து, அமைதிப்படை முகாமிட்டிருக்கிற கைவிடப்பட்ட வீடொன்றின் எதிரில் இன்னொரு கைவிடப்பட்ட அகண்ட வீட்டில் குடியேறப் பணிக்கப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளைத்தேடி அழிக்கும் வரை அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாது. விடுதலைப் புலிகளைத்தேடி அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது சோர்ந்துபோகும் அமைதிப்படை அதிகாரி அகண்ட வீட்டில் முகாமிட்டிருக்கும் மக்களைப் புலிகளை அடையாளம் கண்டு சொல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார். அதற்கென அவர்களுக்கு அவகாசம் தருகிறார். அந்தக் கெடு காலம் முடிந்தவுடன் அந்த வீட்டிலுள்ள இருநூறுக்கும் அருகிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மீது இந்திய ராணுவம் சுடத் துவங்குகிறது. கொடும் துப்பாக்கிச் சூட்டில் அகதிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் சுவரிலிருந்த மகாத்மா காந்தியின் படம் சிதறுகிறது.

கிராமத்து வீடுகளை காலி செய்து அகண்ட அந்நிய வீட்டில் தங்கும் மக்களின் அன்றாட உணவுத் தேவைகள் கழிப்பிடத்தேவைகள் உள்ளிட்ட இருத்தலியல் அவலங்களைப் பேசும் சாந்தனிpன் ‘விர்ல் வின்ட்’ நாவல், சமகாலத்தில் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கிடையிலான உரையாடல்களின் போக்கில் இலங்கை அரசியலையும் அலசுகிறது.

தமிழ்-சிங்கள இனங்களின் வரலாற்று நெருக்கடியில் இந்தியாவின் வரலாற்றுரிதீயான பங்கு ஆகியவை குறித்த பன்முக விவாதங்கள் பதிவு செய்யப்படுகிறது. தமது இலக்குகள் அறியாது இலங்கைத் தீவுக்குள் வந்த இந்திய ராணுவ இயந்திரம் விரக்தியுற்ற நிலையில் ஈழமக்களின் மீது தாக்குதலைத் துவங்குகிறது. இவ்வாறாக இந்திய அமைதிப்படைக் காலத்தின் ஈழமக்களின் இருத்தலியல் பதட்டங்களைப் பேசும் நாவலாக ‘விர்ல் வின்ட்’ இருக்கிறது.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டை இந்தியக் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய புனைவகள் இரண்டு.

வாசந்தியின் நாவலான ‘நிற்க நிழல் வேண்டும்’ கால கதியில் முதலாவது எனில், இந்தி மொழிப்படமான ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் இரண்டாவதாக வருகிறது. 1987 ஜூலைக்கும் 1989 நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தின் 28 வாரங்களில் கல்கி வாரப்பத்திரிக்கையில் வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’ தொடராக வெளிவருகிறது. இந்த நாவலுக்கென இந்தியப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் வாசந்தி வடகிழக்கிற்கும் கொழும்பிற்கும் சென்று வருகிறார். ராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமுக்கும் சென்று வருகிறார். நாவல் எழுதுவதற்கான வரலாற்றுப் பின்னணியின் பொருட்டு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களை வாசந்தி திரட்டுகிறார். சிங்கள தமிழ் வெகுமக்களையும் அறிவுஜீவிகளையும் போராளிகளையும் அவர் சந்திக்கிறார். பஞ்சாப் காலிஸ்தான் பிரச்சிiனை குறித்த அவரது ‘மௌனப் புயல்’ நாவலை அடுத்து ஈழப் பிரச்சினை குறித்த ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவலை வாசந்தி எழுதுகிறார். நாவல் எழுத நேர்ந்த ஆதிகாரணமாக தன்னை வந்து சந்தித்த ஒரு விடுதலைப் புலி அல்லாத ஒரு போராளியுடனான சந்திப்பு பற்றி, ‘போராளிக்கும்பலை’ச் சேர்ந்த லிபியாவில் ‘பயங்கவாதப் பயிற்சி’ பெற்ற ஒருவரைத் தான் சந்தித்ததாக வாசந்தி எழுதிச் செல்கிறார்.

கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் வெளியாகி இரண்டு ஆண்டுகளின் பின் வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவல் (நவம்பர் : 1999) வெளியாகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி கொழும்பில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்பின் போது சிங்கள ராணுவத்தின் ஒருவன் இந்தியப் பிரதமர்  ராஜீவ்காந்தியின் பின்மண்டையில் துப்பாக்கிக் கட்டையால் அடிக்க யத்தனிக்கும் சம்பவத்துடனும், திலீபனின்; மரணம் மற்றும் புலேந்திரன்,குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் தற்கொலையின் பின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் துவங்கும்; மோதல்களுடனும் ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவல் முடிவடைகிறது. இந்திய அமைதிப்படையின் திட்டங்களைக் குழப்புவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது என்பதைச் சுட்டும் வாசந்தியின் நாவல் ஜெயவர்த்தன அரசு இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டையும் சுயாதீனச் செயல்பாடுகளையும் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தவறுகிறது.

‘மெட்ராஸ் கபே’ திரைப்பட இயக்குனர் சுஜித் சர்க்காரிடம் அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில்’ 2013 ஆகஸ்ட் 23 ஆம் திகதியிட்ட இதழ் நேர்முகத்தில் ‘இது தமிழருக்கு எதிரான படம் எனப் பலர் சொல்கிறரார்கள். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள் நிருபர்கள். இதற்கான அவரது பதில் பின்வருமாறு : ‘நிச்சயமாக இல்லை. நான் சிந்தித்துப் படமெடுக்கிற இயக்குனர். முக்கியமாக நான் இந்தியன் என்பதில் கர்வப்படுகிறவன். எனது நாட்டை நான் ஏன் மோசமாகக் காட்;ட வேண்டும்? எனது நோக்கு முரண்பாடுகளைத் தூண்டுவதோ அல்லது யுத்தம் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுவதோ அல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு எவ்வாறு இப்படி மாற்றமடைந்தது என்பது குறித்த ஒரு உள்ளார்ந்த பார்வையை பர்வையாளனுக்கு வழங்க விரும்பினேன்’. உலக அரசியலை இந்திய ‘தேசபக்தப் கர்வத்துடன்’ அணுக நினைக்கிற ஒருவரின் முன்கூட்டிய சாய்வு மனத்துக்கும் அவரது இந்த நேர்முகமே சான்றாகிறது.

‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முழுமையாக வடஇந்தியர்களால், வட இந்திய மனோபாவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பாலிவுட் ஜனரஞ்ஜக அரசியல் திரில்லர் படம். சாராம்சமாக விடுதலைப் புலிகள் அமைப்பை உடைக்கும் காரியத்திற்காக அனுப்பப்படுகிறார் இந்திய உளவு அமைப்பான ராவின் அதிகாரி விக்ரம்சிங். படத்தின் பிரதான பாத்திரங்களாக வரும் வட இந்தியர்கள், பிற இந்திய மாநிலத்தவர் என அனைவரும் ‘நம்மவர்’ எனவும், ‘வித்தியாசம்’ காட்டப்படாத தமிழக, ஈழத் தமிழர் அனைவரும் ‘மற்றவர்’ எனவும்தான் படமெங்கிலும் கட்டமைக்கப்படுகிறார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற உணர்வு கூட இந்தத் திரைப்படத்தில் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத் தமிழர்களின் உணர்வுகளுடன் இணைந்தது என்கிற அடிப்படையான பொதுப்புத்தி கூட பட இயக்குனருக்கும் இல்லை, தயாரிப்பாளரான ஜான் ஆப்ரஹாமுக்கும் இல்லை. முழுத் தமிழரையும் ‘மற்றவர்’ எனும் நோக்கில் அணுகியிருக்கும் இப்படம், இலங்கை, இந்திய ராணுவத்தினரால் ஈழத் தமிழருக்கு நேர்ந்த துயர்களை முற்றிலும் நிராகரித்திருக்கிறது.

‘மெட்ராஸ் கபே’ திரைப்பட இயக்குனருக்கு ஒரு குழப்பம் இருந்தது எனும் ராஜீவ் சர்மா, இனப் பிரச்சினையைச் சொல்வதா, ராஜீவ் காந்தி படுகொலையைச் சொல்வதா என்பதுதான் படத்தின் அந்தக் குழப்பம் எனவும் அவர் சொல்கிறார். ராஜீவ் சர்மா சொல்கிற இந்தக் குழப்பம் ராஜீவ் சர்மாவுக்கும், ரகோத்தமனுக்கும், மெட்ராஸ் கஃபே இயக்குனர் சுஜித் சர்க்காருக்கும் என ‘அனைத்து இந்திய தேசபக்தர்களின் கர்வம்’ சம்பந்தமான அடிப்படைக் குழப்பம்தான். விடுதலைப் புலிகளும் ராஜீவ் காந்தியும் படுகொலையும் தொடர்பான பிரச்சினை அடிப்படையில் வெறுமனே ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை எனும் தனித்த நிகழ்வு தொடர்பான பிரச்சினை இல்லை. ராஜீவ் காந்தி படுகொலை என்பதும் அதனோடு தொடர்புடைய ஈழ மக்கள் மீதான இந்திய அமைதிப் படையின் கொடுமைகள் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட அரை நூற்றாண்டு அரசியல் நிகழ்வுகளின் விளைவு.

1983 ஜீலை இனப்படுகொலை, இந்திய அமைதிப்படை ஆட்சியின் கீழ் பனிரெண்டு விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டமை, புலிகளின் தலைவரைக் கொலை செய்ய இந்திய அரசு திட்டமிட்ட செயல், இந்திய ராணுவத்தின் பாலியல் வல்லுறவு, முப்பதாண்டு கால இலங்கை ராணுவ அடக்குமுறை, உலக வல்லரசுகள் அனைத்தும் இணைந்து நடத்திய முள்ளிவாய்க்கால் பேரழிவு என அனைத்தும் இணைந்த ஒரு வரலாற்றுச் செயல்போக்கின் அங்கம்தான் ராஜீவ் காந்தி படுகொலை. இதனை ‘இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத்தில் நுழைந்த காலத்தில் துவங்கி, ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நாள் வரையிலான’ சம்பவங்களாகக் குறுக்கி, அவருக்கான இரங்கலைத் துயருடன் சொல்வதாக முடிகிறது மெட்ராஸ் கபே திரைப்படம்.

ஈழமக்களின் நண்பர்களாகப் போன இந்திய அமைதிப் படை ஈழமக்களின் எதிரிகளாகி அவர்களுக்கு எதிராகவே தாக்குதல் தொடுக்க நேர்ந்தது ஏன்? களமுனையில் இருந்த இந்திய அமைதிப் படைத்தளபதி ஹர்கிரத் சிங் தடுக்க முயன்றும் 12 போராளிகள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்த சூழல் எத்தகையது? இந்திய உளவமைப்பைச் சேர்ந்த அதிகாரி சமநேரத்தில் அமெரிக்க உளவாளியாகவும் இலங்கை அரச உளவாளியாகவும் இருக்க நேர்ந்;ததன் விளைவுகள் யாது? இந்திய அமைதிப்படை எதிர்கொண்ட சிக்கல் என்பது அவர்களிடம் திட்டவட்டமான இலக்கோ குறிக்கோளோ இல்லாதுதான் என்கிறார் ஹர்கிரத் சிங். இலங்கை அரசு இந்திய அமைதிப்படையின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. எதற்காக இலங்கைக்குப் போனோம், எவர் எமது எதிரி, யாரோடு போரிடுகிறோம், ஏன் என்பது குறித்த எந்த அரசியல் தெளிவும் ராணுவ வழிகாட்டலும் அற்ற, மனநிலை திரிந்த, தம்மைக் காத்துக்கொள்ளப் போராடி,   ஆயிரக் கணக்கில் தமது ராணுவத்தினரைப் பலியிட்டு, ஈழமக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகி, அன்றைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவினால் அவமானகரமாக வெளியேற்றப்பட்டது இந்திய அமைதிப்படை. இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலைகொண்ட நாட்களின் இவ்வாறான அரசியல் முரண்கள் குறித்த ஒரு உள்ளார்ந்த சித்திரத்தைத் தரும் நூல் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் எழுதிய தன்னனுபவ நூலான ‘இலங்கையில் இந்திய அமைதிப் படையின் தலையீடு’. ஆனந்தராஜ் மொழிபெயர்ப்பில் இந்நூல் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழமக்களின் மீது ஏவிய படுகொலைகளையும் பாலியல் வல்லுவுகளையும் முதன்முதலாகப் புனைவுவெளியில் முன்வைத்த திரைப்படம் ராஜேஷ் டச்ரிவர் இயக்கிய ஆங்கிலப் படமான ‘இன் த நேம் புத்தா’. இதனையடுத்து இப்பிரச்சினையை மிகவிரிவாக தனது ‘பார்த்தீனியம்’ நாவலில் இலக்கிய வடிவில் முன்;வைத்திருக்கிறார் தமிழ்நதி.

தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ 1982 துவங்;கி 1990 காலகட்டம் வரையிலான 9 ஆண்டுகளில் தனது வாழ்ந்துபட்ட அனுபவங்களின் அடிப்படையிலான புனைவாக விரிகிறது. 1983 ஜூலைக் கலவரத்தைத் துவக்கமாகக் கொள்ளும் நாவல் 1990 இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறுவதுடன் முடிகிறது.

ஈழ விடுதலை இயக்கங்கள் இந்திய அரசின் அணுசரனையிலான ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா வருவது, இயக்கங்கள் பிளவடைகிற செயல்போக்கு, ஈழத்தினுள் இயக்கங்களுக்கு இடையிலான மோதல், விடுதலைப் புலிகள் தமது சக இயக்;கங்களைத் தடைசெய்தலும் தேடி அழித்தலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இந்தியப் படை இலங்கைக்கு வருதல், திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும், இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கிலிருந்து புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கைப் படையினரால் கையகப்படுத்தப்படுவதை அடுத்து சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்தல், இதனையடுத்து இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெடிக்கும் மோதல், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளை வேட்டையாடுதல், இந்திய அமைதிப்படை புலிப்போராளிகளையும் வெகுமக்களையும் வித்தியாசப்படுத்தலில் அடையும் தோல்வி, புலிகளைக் காட்டித் தரச்சொல்லி வெகுமக்களின் மீது அமைதிப்படை தொடுக்கும் முழுமையாக யுத்தம், பாரிய பாலியல் வல்லுறவுகள், உயிருக்குத் தப்பிய மக்களின் இடப்பெயர்வு, இந்த எல்லா நிகழ்வுகளிலும் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் பங்கேற்பும் அரசியல் மயமாக்கலும் அலைக்கழிவும், ஜெயவர்த்தனா தோல்வியுற்று பிரேமதாசா தலைமையேற்றதையடுத்து இந்திய அமைதிப்படை வெளியேறும் நிகழ்வு, அதுவரை இந்திய அமைதிப்படையோடு செயல்பட்ட புலி அல்லாத ஈபிஆர்எல்எப் இயக்கம் பலவந்தமாகச் சிறுவர்களைப் பிடித்து உருவாக்கும் தமிழ் தேசிய ராணுவம், அதனது படுகொலைகள், அதற்கு எதிரான விடுதலைப் புலிகளின் பழிவாங்கும் படுகொலைகள் என இந்திய அமைதிப்படை வெளியேறும் நாட்களின் பேரவலத்துடனும் பெரும் குழப்பத்துடனும் நாவல் முடிகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் வரையிலான போராட்டத்தின் அடுத்தகட்டம் அப்போது துவங்குகிறது.

ஈழ விடுதலை இயக்கங்களில் உள்கட்சிப் போராட்டங்களும் இயக்கப் பிளவுகளும் தோன்றிய காலகட்டத்தின் சித்திரம் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனில், பின்முள்ளிவாய்க்கால் காலத்தின் அரசியல் மறுபரிசீலனையும் கடந்தகாலச் சாகசமும் குணா கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’;, ‘விடமேறிய கனவு’ மற்றும் ‘அப்பால் ஒரு நிலம்’ எனும் முப்பெரும் நாவல்கள் எனில், தமிழ் நதியின் ‘பார்த்தீனியம்’ நாவலின் தனித்தன்மை என்பதுதான் என்ன?

புதியதோர் உலகிலும் குணா கவியழகனின் நாவல்களிலும் போராளிகளின் காதலியர் துணைப்பாத்திரங்காக வருகிறார்கள். அன்னையரும் சகோதரியரும் சிற்சில தருணங்களில் வந்து போகிறார்கள். தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ முழுமையாகப் போராளியொருவனின் காதலியின் பார்வையில் சொல்லப்பட்ட நாவல். இதுவரைத்திய போர்வாழ்வு பற்;றிய ஈழநாவல்கள் ஆண்மையக் கதைசொல்லல்களாக இருக்க தமிழ்நதியின் நாவல் முழுமையாப் பெண்வழிக்; கதைசொல்லும் பெண்மைய நாவலாக இருக்கிறது. வானதியினதும் அவளது தாய் தனபாக்கியத்தினதும் இவர்கள் தமது தனிவாழ்விலும் சமூகவாழ்விலும் கொள்ளும் உறவுகளதும் வாழ்வுச் சித்திரம்தான் ‘பார்த்தீனியம்’ நாவல்.

‘பார்த்தீனியம்’ நாவலின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் உயரூக்கமுள்ள உரையாடலைத் தொடரந்து முன்வைத்துச் செல்லும் பாத்திரங்கள் நான்கு. பிரதான பாத்திரமான வானதி. அடுத்து அவரது தாய் தனபாக்கியம். மூன்றாவதாகப் விடுதலைப் புலிப் போராளி பரணி. நான்காவதாக தனது சகோதரனான ரெலோ போராளி விடுதலைப் புலிகளால் தன் கண்முன்பாகவே கொல்லப்படுதலைக் கண்ணுறும் தனஞ்செயன்.

வானதிக்கும் பரணிக்குமான உரையாடல்களில் இயக்க வாழ்வு, இயக்கத்தின் இலட்சிய வாழ்வுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான முரண், போராளி வாழ்வில் காதலின் காத்திருப்பும் பொறுப்பேற்றலும் எனும் தீர்க்கவியலா முரண் அனைத்தும் மேலெழுந்து வருகிறது. தாய்க்கும் மகளுக்குமான உரையாடலில் தனது குஞ்சைப் பாதுகாக்கும் தாய்க் கோழியின் பரிதவிப்பும், குடும்பத் தலைமையேற்பும், முழு ஈழத்தாய்மாரினது துயரும் ஆன உரையாடல்கள் வருகிறது. விடுதலைப் புலிப்போராளி பரணியின் காதலியான வானதிக்கும், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட போராளியினது சகோதரனும் அவளது கல்லூரித் தோழனான தனஞ்செயனுக்கும் ஆன உரையாடல், போராளிகளுக்கு இடையிலான படுகொலைகளின் துயரை மீள மீள நாவல் முழுதும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. உயிரழிவின் வாதைக்கு எதிரான உரையாடல் இது. அன்பு வெறுப்பு எனும் இருமை இதனால் நாவல் முழுதும் விரவியிருக்கிறது. கறாரான வெறுப்பு-அழிவு-அழிப்பு, கறாரான நேசம்-காதல்-பொறப்பு என்பதற்கு மாறாக இரண்டுக்கும் இடையில் சதா அல்லாடிக் கொண்டிருக்கிறது பெண்மனம்.

நாவலின் ஆரம்ப நூறு பக்கங்கள் பள்ளி-கல்லூரி வாழ்வின் இயுல்பான குறுகுறுப்பும் மனதை வெளிப்படுத்துவதிலுள்ள தயக்கத்திற்கு ஒப்ப மிகமெதுவாக மனோரதியமான மொழியில் நகர்கிறது. பரணி போராளி வாழ்வை மேற்கொள்ளத் தொடங்குதல், இயக்கங்களுக்கு இடையிலான மோதல், மாத்தய்யாவின் தன்னுணர்வு, செல்வந்தர்கள் பாலான அவரது சலுகையுணர்வு, இது குறித்த மோதல் வரும்போது போராளிகளைத் திட்;டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் அவர் அவர்களை மரணமுனைக்கு அனுப்புவது, இதனால் போராளிகள் துண்டுகொடுத்துவிட்டு இயக்கத்தைவிட்டு வெளியேறுவது, வெளியேற்றத்தின் பின் எந்தப் பாதுகாப்பும் அற்று மரணபயத்துடன் நாட்டைவிட்டு வெளியேற முனைவது என உக்கிரமான சம்பங்களுடன் நானூறாவது பக்கத்துடன் வாசகனைப் பதட்டத்தினுள் கேவலுள் தள்ளிவிடுகிறது.

நாவலின் இருநூறு பக்கங்கள் அளவிலானவை இந்திய அமைதிப் படைக்காலப் படுகொலைகளும் வல்லுறவுகளும் குறித்தவை. 12 வயதுப் பெண்குழந்தை முதல் வயது வித்தியாசமற்று இளம்பெண்கள்-முதிய மனுஷிகள் என இந்திய அமைதிப்படையினர் புரிந்து வல்லுறவுகள் பூடகமான ஆயின் உக்கிரமான சம்பவவிவரிப்பு மொழியில் படைப்பாற்றலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. தனது கல்லூரி நண்பன் தனஞ்செயனின் வேண்டுகோளை ஏற்று நான்கு இந்திய அமைதிப்படைச் சிப்பாய்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பவித்ரா எனும் இளம் பெண்ணின் அனுபவத்தை இருளினூடே தகிக்கும் மொழியில் நமது செவியில் தனிந்த குரலில் சொல்கிறாள் வானதி. கைவிடப்பட்ட பாழடைந்த வீட்;டில் 13 வயதுச் சிறுமியின் கதறல் அலைந்துகொண்டேயிருக்கிறது. வெடிகுண்டை மார்புகளில் மறைத்து வைத்திருக்கிறார்களாக என உடலெங்கும் ஊர்கின்றன படையினரின் விரல்கள்.

நாவலின் கடைசி 125 பக்கங்கள் தசாப்தகால அனுபவங்கள் குறித்த ஆத்மவேதனையாக, பரிசீலனையாக. வலிமீட்சியாக உக்கிரமான படைப்பு மொழியில் உருவாகியிருக்கிறது. தமிழ் தேசிய இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தலித் சிறுவன் ஒருவனது குழந்;தமையும் ஆயுதம் அவனுக்குத் தரும் அதீதஅதிகாரமும் அவன் அறுதியில் படுகொலைக்கு ஆளாவதுமான 53 ஆம் அத்தியாயம் தனியொரு நாவலுக்கான நெஞ்சை உலுக்கும் களம்.

தனபாக்கியம் தனது மகள் வானதியை இந்திய அமைதிப்படையின் கொடுங்கரங்களில் இருந்து காப்பாற்றிவிட்டாள். தனஞ்செயன் அமைதிப்படையால் வல்;லுறவுக்கு உள்ளான பவித்ராவை மணந்து கொள்ளப் போகிறான். பரணி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் துண்டுகொடுத்துவிட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி இந்தியா சென்று மேற்கு நாடு ஒன்றிற்குப் போக முடிவு செய்கிறான். வானதியைத் தன்னோடு வருமாறு அழைக்கிறான். வானதி மறுத்துவிடுகிறாள். முழு விடுதலைப் போராட்டமும் தொடர்பான பெண்ணிலை நோக்கு விமர்சனம் என வானதியின் இந்த நிலைபாட்டைக் கருதுகிறேன்.

இலங்கை ராணுவம், இந்திய அமைதிப்படைப் படுகொலைகள், வல்லுறவுகள் வடக்கு நிலமெங்கிலும் மண்டியிருந்த காலத்தில் தனது காதலனான பரணியைத் தேடி ஓடிச் சென்று பார்த்தவள் வானதி. தான் இயக்கத்திற்கு போவதை முடிவு செய்துவிட்டு அவளிடம் அறிவிக்கிறான் பரணி. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவரான மாத்தய்யாவுடன்  முரண்பட்ட நிலையில் தனது வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லை எனும் நிலையில், அவனது எதிர்காலம் குறித்த நிச்சயமில்லாத நிலையில், இனிமேல் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என வானதியிடம் சொல்கிறான். இயக்கத்திலிருந்து வெளியேறும் முடிவையும் நாட்டை விட்டு வெளியேறும் முடிவையும் அவனே எடுக்கிறான்.

அவள் அவனிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் ஒரேயொரு உறுதி மொழியைத்தான். அதைப் பற்றிக் கொண்டு எந்த ஆபத்தினுள்ளும் நடக்க அவள் தயாராக இருந்தாள்.

‘நான் எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். என்னோடு நீ வரமாட்டாயா?’ (பக்கம் 510).

இதுதான் அவள் அவனிடம் எதிர்பார்த்த உறுதிமொழி. அவனால் அந்த உறுதிமொழியை அவளுக்குத் தரமுடியவில்லை. போர்ச்சூழலில் தனது சொந்த வாழ்வு குறித்த நிச்சயமின்மைகள் அப்படித்தான் அவனை வைத்திருந்தன. அப்படியான மரபான சூழலில்தான் அவன் இருந்தான். நாடுவிட்டுச் செல்லும் நிலையிலும் அவன் அப்படித்தான் இருக்கிறான்; அதற்கு எதிரான குரல்தான் வானதியின் மறுப்பு. இந்த எதிர்ப்பு உயிரழிவுக்கு எதிரான விடாப்பிடியான பெண்மையின்-உயிர்தரும் தாய்மையின் குரலன்றி வேறென்ன? ‘பார்த்தீனியம்’ இப்படித்தான் போர் விளைவிக்கும் மானுடப் பிரிவுக்கு, ஆண் பெண் இடையிலான நிரந்தரத் துயருக்கு எதிரான இலக்கியமாக ஆகியிருக்கிறது..

 

*

நன்றி : விகடன் தடம்  / June 2016

 

http://yamunarajendran.com/?p=2446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பும், யோசிப்பும் 182: தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

Sunday, 10 July 2016 01:11 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்

 

நாவல்: பார்த்தீனியம்

 

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே? 

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது. 

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார். 

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

அரசியல் ஆய்வாளரும், செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் தனது உரையில் தான் முதன் முதலாக வந்திருக்கும் இலக்கியக் கூட்டம் இதுவே என்றார். அத்துடன் நாவல் இந்திய அமைதி காக்கும் படையினரின் அட்டூழியங்களை விபரிப்பதால் , அவ்விதம் படையினர் அத்துமீறி நடக்கவில்லையென்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை கூறியதை நினைவுபடுத்தி, இங்குள்ள இலக்கியவாதிகள் பலர் அது பற்றிய எந்தவிதச்சிந்தனையுமற்று, அவருடன் கூடிக்குலாவுவதைச்சுட்டிக் காட்டினார். மேலும் அவர் தனதுரையில் நாவலின் பாத்திரச்சிறப்புகளை, குறைபாடுகளை எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்றார். ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடுமே என்னும் ஆதங்கத்தினை அவரது உரை வெளிப்படுத்தியது. 

நிகழ்வில் உரையாற்றிய முனைவர் இ.பாலசுந்தரம் தன் மாணவியாகக் கலைவாணி இருந்த காலத்திலிருந்து அவரது பல்கலைக்கழக அனுபவங்களை நாவலில் கூறப்படும் சம்பவங்களினூடு விபரித்துத் தனது உரையினை ஆற்றினார். தமிழ்நதி நடுநிலையுடன் அக்காலகட்டத்து அரசியல் நிலையினை விபரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நூலிலிருந்து பந்தியொன்றினையும் எடுத்து வாசித்தார்.

தமிழகத்திலிருந்து கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பேராசிரியர் அ.ராமசாமி தான் இன்னும் தமிழ்நதியின் நூலினை முழுமையாக வாசிக்கவில்லையென்றும், முதல் மற்றும் இறுதிப்பக்கங்களையே வாசித்ததாகவும், ஆனாலும் இணையத்தில் நூல் பற்றி வெளிவந்த விமர்சனங்களைத்தொடர்ந்து படித்ததனால் நூல் பற்றித்தான் அறிந்த புரிதல்களினூடு தன் உரையினை ஆற்றுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அண்மையில்டொராண்டோவிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் புகலிடத்தமிழர்களின் பன்னிரண்டு அரசியல் நாவல்களைப்பற்றிய தனது திறனாய்வினை நடாத்தியதாகவும், அதில் இந்த நூல் கிடைக்காதபடியால் உள்ளடக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்ட அவர், இந்த நூலினை எந்தவகையில் அவ்வாய்வினுள் உள்ளடக்கலாம் என்பது பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் நிகழ்வில் ஏனைய பேச்சாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட  இந்திய அமைதி காக்கும் படையினரின் பாலியல் வன்முறைகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளைப்பற்றிக்குறிப்பிடும்போது ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை ஒரு மாதிரியாகவும், இந்தியப் பிரசை என்ற வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் இன்னுமொரு கோணத்தில் நின்று பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே, அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதபோதும் கூட என்னும் கருத்துப்படத் தனது கருத்தினை எடுத்துரைத்தார். இதற்கு இறுதியில் தனது ஏற்புரை/நன்றியுரையில் பதிலளித்த தமிழ்நதி நாவலினை வாசித்து விட்டுப்பேராசிரியர் தனது கருத்துகளைக் கூற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஜெயமோகன் இந்தியப்பிரசையாகவிருந்து கருத்துக் கூறுவது சரி, ஆனால் உண்மையை உண்மை என்று கூற வேண்டுமென்ற கருத்துப்படக் கூறினார்.


நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனக்கு வழங்கப்பட்ட நேரம் காரணமாகத் தான் தயாரித்திருந்த உரையின் சிறு பகுதியினையே ஆற்றவிருப்பதாகவும், ஏனையவற்றைப்பின்னர் கட்டுரை வடிவில் தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் நாவலின் குறைகளைச் சுட்டிக்காட்டிய பாங்கு என்னைக் கவர்ந்தது. முனைவர் இ.பாலசுந்தரம் தனது உரையில் நாவலைத் தமிழ்நதி நடுநிலையுடன் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டதற்கு மாறாக அருண்மொழிவர்மன் நாவல் பேசாத விடயங்களைப்பற்றிக் குறிப்பிட்டார். குறிப்பாக நாவல் விபரிக்கும் காலகட்டத்தில் நடைபெற்ற முனைவர் ராஜனி திரணகமவின் படுகொலையினை நாவல் தவிர்த்து விட்டதை அவர் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிடலாம். இதற்கு இறுதியில் பதிலளித்த தமிழ்நதி தான் அப்படுகொலை பற்றிய சரியான விபரங்கள் தெரியாததால் (யார் கொன்றது என்பது பற்றிய) வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாகக் குறிப்பிட்டார். ராஜனி திரணகமவைக் கொன்றவர்கள் பற்றிச் சரியான விபரங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவ்விதம் அவர் கொல்லப்பட்டது மிகவும் தவறான ஒன்று அல்லவா. அதனை நாவல் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா. அருண்மொழிவர்மனின் கேள்வி நியாயமானது. மேலும் அருண்மொழிவர்மன் நாவலின் சில பகுதிகள் கட்டுரைத்தன்மை மிக்கதாக இருந்ததாகவும் தனது புரிதலை எடுத்துரைத்தார்.

நிகழ்வில் உரையாற்றுவதாகவிருந்த முனைவர் சேரன் , உடல்நிலை காரணமாகக் கலந்து கொள்ளவில்லையென்று தமிழ்நதி தனதுரையில் குறிப்பிட்டார். 

இறுதியில் நூலாசிரியரிடமிருந்து பிரதிகளைப்பெற்றுக்கொள்ளலாமென்று அறிவிக்கப்பட்டது. இவ்விதமானதொரு போக்கு அண்மைக்காலமாகத்தான் இவ்விதமான நிகழ்வுகளில் பின்பற்றப்படுவதாக அறிகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான நடைமுறை தவிர்க்கப்பட்டு, நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் வாசலில் முன்பு நடைபெற்ற நிகழ்வுகளில் நடைபெற்றுள்ளதைப்போல் நூல்களை விற்க ஒருவரைப்பொறுப்பாளராக நிறுத்தலாமென்று கருதுகின்றேன். மேலும் இவ்விதமான நடைமுறையினால் நூல்களை வாங்க விரும்பும் ஒருவர் தாமதப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நூலை வாங்க வரும், நூலாசிரியரைத் தெரிந்தவர்கள் அந்தச் சமயம் பார்த்து உரையாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் ஏனையவர்கள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியேற்பட்டு விடுகின்றது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் நேரத்துடன் செல்ல விரும்பும் இலக்கிய ஆர்வலர்களுக்கு நூலை வாங்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகின்றது. 

நாவலுக்குப் பார்த்தீனியம் என்ற பெயரை வைத்திருக்காமல் இன்னுமொரு பெயரினை வைத்திருக்கலாமோ என்று படுகின்றது. பார்த்தீனியம் உண்மையில் நச்சுச்செடிதானா என்பதிலும் சந்தேகமுள்ளது. ஒவ்வாமையைப் பார்த்தீனியம் மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனிதர் அன்றாடம் பாவிக்கும் பொருள்கள், கடலை போன்றவை கூட ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியம் களைகளிலொன்றாக இருந்த போதும், நல்லதோர் உரமாகப்பாவிக்கப்படக்கூடியது என்றும் தி இந்து பத்திரிகைக் கட்டுரையொன்றில் வாசித்தது ஞாபகத்திலுள்ளது. அத்துடன் அமெரிக்கக்கண்டத்தில் அது மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது என்பதையும் அறிய முடிகின்றது. 

மேலும் பார்த்தீனியம் ஆரம்பத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பிய கோதுமை மா மூலமே பரவியதாகவும் கருதப்படுகின்றது. மேலும் இலங்கைக்கு இந்தியப்படையினருக்கு உணவுக்காக அனுப்பப்பட்ட ஆட்டிறைச்சி வாயிலாக இலங்கையில் பரவியிருக்கலாமென்று கருதப்பட்டாலும், இது நிரூபிக்கப்பட்டதோர் உண்மையல்ல. அக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அகதிகள், ஏனையவர்கள் மூலமும் பரவியிருக்கலாம்தானே. நச்சாகக் கருதப்படும் பார்த்தீனியம் உரமாகவும் , மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது. 

இவ்விதமான காரணங்களினால் பேரழிவுக்குச் சரியான குறியீடு பார்த்தீனியம் இல்லையென்பதென் கருத்து. இவ்விதமானதொரு நிலையில், பார்த்தீனியம் இலங்கையில் அட்டூழியங்கள் புரிந்த,  அமைதி கொல்லும் படையாகச் செயற்பட்ட, இந்திய அமைதி காக்கும் படையினரைக்குறிக்குமொரு குறியீடாகக் கருதப்படுமானால், இன்னுமொரு திறனாய்வாளர் உரமாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் , மருந்தாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் இந்திய அமைதிப்படையினரை ஒப்பிடும் அபாயமுமுள்ளது. எனவேதான் நாவலுக்குப் பார்த்தீனியம் என்பதற்குப் பதில் இன்னுமொரு பெயரை வைத்திருக்கலாமென்று தோன்றுகின்றது. 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3426:-182-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு இந்த புத்தகம் கிடைச்சிட்டுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். பெளசரிடம் இருந்த கடைசிப் புத்தகம்!

இப்போது "அப்பால் ஒரு நிலம்" வாசிக்கலாம் என்றுள்ளேன். அதன் பின்னர் படிக்க உத்தேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு புத்தகம் கிடைச்சால் எடுத்து வையுங்கள்

Link to comment
Share on other sites

 

2009 இல் வலைப்பூவில் எழுதத் தொடங்கிய போது தமிழ்நதி என்ற பெயர் பரிச்சயமாகியது. ஒரு பதிவில், "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன?" என்ற கேள்வியை ஒரு கூட்டத்தில் எழுப்பியது பற்றியும் அதைத் தொடர்ந்த விவாதங்கள் பற்றியும் எழுதி இருந்தார்.

"பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்? " என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மிகவும் பிடித்திருந்தாலும், ஒரு வித பயத்துடன் தள்ளி இருந்தே அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். பயமென்றால், நிராகரிப்பு பயம் தான்!

**********

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு காவலர் வீட்டுக்கு வந்தார். அப்பா அமைதிப் படைகளை ஆதரித்து மேடையில் பேசியதால் அவருக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து ஆபத்து இருக்கிறதென்றும் அதனால் அவருக்குப் போலிஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடாகி இருப்பதாகவும் சொல்லி ஒரு வாரமோ பத்து நாளோ, வாசலில் ஒரு ஸ்டூலில் தேமே என்று உட்கார்ந்திருந்து விட்டுப் போனார்.

விடுதலைப் புலிகள் என்ற பெயரும் பிரபாகரன் என்ற பெயரும் பயங்கரவாதிகள் என்பதைத் தாண்டி எதிர்மறையாகத் தான் மனதில் பதிந்திருந்தன‌.

அதுவும் ராஜீவ் கொலை நடந்த போது எட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறை. அதிகாலயில் எழுந்த போது ஊரில் பதட்டம் நிறைந்திருந்தது, வீட்டிலும் தொற்றிக் கொண்டது. எதிலும் பட்டுக் கொள்ளாத தாந்தோணியாகிய் நான் விடுமுறையில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயமாகிய "பாட்டு க்ளாஸ் பத்து மணிக்கு...போயே ஆகணும்" என்று அசட்டுத் தனமாக அடம்பிடித்ததும், அம்மாவும் அண்ணனும் அதட்டியதற்காய்க் கோபித்துக் கொண்டு தனியே கிடந்ததும் நினைவுக்கு வருகிறது. அடுத்து அந்த நாட்கள் பரபரப்பானவை. ராஜீவ் கொலை பற்றியே எல்லாரும் பேசினார்கள். எல்‍டிடீஈ என்ற இயக்கத்தின் மீது பயம் வந்தாலும், இவ்வளவு அழகாக அன்பொழுகச் சிரிக்கும் இந்த மனிதர், இந்தச் சிறு பெண் மனிதவெடிகுண்டாகச் செயல்படும் அளவுக்கு என்ன வெறுப்பைச் சம்பாதித்திருப்பார் என்றும் தோன்றியது. மிகவும் தொந்தரவு செய்தது தனு என்கிற போராளியின் ஆளுமை.

ஒன்பதாவது படிக்கும் போது ஈழத்தமிழர்கள் சிலர் எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண், சக மாணவி ஒரு நாள் காற்சட்டை அணிந்து வந்த போது, "அட எல்‍டிடீஈ மாதிரியே இருக்கே! என்று பாராட்டினாள்" நானும் சிலரும் அதிர்ச்சியாகப் பார்த்த போது, "வாட்? தே ஆர் த ஒன்ஸ் ஹூ ஆர் ஃபைட்டிங் ஃபார் அஸ்" (அவர்கள் தாம் எங்களுக்காகப் போரிடுகிறார்கள்) என்று பெருமையாகக் கூறினாள். அவள் முகத்தில் தெரிந்த பெருமிதம் மறக்க முடியாதது.

வெகு காலம் வரையில், அதாவது ஈழப் போரின் உக்கிரம் புரியும் வரையில் அந்தப் பெண் எங்கிருந்து வந்திருப்பாள், என்னவெல்லாம் சந்தித்திருப்பாள் என்று யோசித்தது கூடக் கிடையாது.

*****

முன்பொரு முறை வட்டார‌ வழக்கு மிகுந்திருக்கும் நாவல்களை வாசிப்பதில் உள்ள சிரமத்தையும், அப்படித் தான் எழுத வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பி ஒரு பதிவிட்டிருந்தேன்.
பார்த்தீனியம் நாவல் படித்தவுடன் என் அறியாமை விளங்கியது.
நாவல் முழுக்க பரிச்சயம் அதிகமில்லாத (தெனாலி படத்தைத் தவிர) ஈழத்தமிழில் தான் எழுதப்பட்டிருக்கிறது. சிரமமா? அன்றாட அலுவல் குறுக்கிட்டதால் புத்தகத்தை அவ்வப்போது மூடி வைப்பது தான் சிரமமாக இருந்தது.

ஈழப்போரின் அவலங்கள், கோரங்கள் இதையெலாம் சொல்லும் நாவல்களைக் கேட்டறிந்திருந்தாலும் வாசிக்கத் தைரியமற்றவளாய்த் தவிர்த்திருக்கிறேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.

தாங்க இயலாத கதையொன்றையும் அன்புக்குரியவர் கூறினால் அவரைக் கட்டிக் கொண்டு கேட்கலாமல்லவா? அதுவும் ஒரு காரணம் தமிழ்நதியின் பார்த்தீனியத்தை ஆவலுடன் வாங்கியதற்கு.

இந்நாவல் அரசியல் பேசுகிறது, அரசியல் நாவல் அல்ல, காதல் நிறைந்து கலங்க வைக்கிறது, காதல் நாவலுமல்ல, போராட்டங்களின் வலியை உணர முடிகிறது, பிரசார நாவலும் அல்ல. இது போர் சூழ்ந்த ஒரு பூமியில் பிறந்து வளர்ந்த ஒரு மகத்தான இதயத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும் நேர்மையான படைப்பு என்று தான் கூறத் தோன்றுகிறது.

கதையில் ஏதாவதொரு இடத்தில் வானதியை ஒரு வீராங்கனையாக, "என்னையும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றோ, பரணிக்குத் தெரியாமல் இயக்கத்தில் சென்று சேர்வது போலவோ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஹீரோயிசம் ஏதும் செய்யாமலே எதார்த்தமான படைப்பாக வானதி மனதில் உயர்ந்து நிற்கிறாள்.

போராட்டங்கள், இலட்சியங்கள், இயக்கங்கள் இவற்றுக்கெல்லாம் மத்தியில் உன்னதமான மனித உணர்வுகள் காலடியில் மிதிபடுவத‌ற்கெதிரான, ஒரு சத்தமில்லாத போர்க்குரலாக வானதியின் முடிவைப் பார்க்கிறேன்.

வானதியின் அப்பாவுக்கு வேலை போனதும், மகளைப் படிக்க வைக்கவும் வயிறாரச் சாப்பிட வைக்கவும் தனபாக்கியத்தம்மாள் பட்ட சிரமங்கள் கலங்க வைத்தன. மகளும் தோழிகளும் தங்கி இருக்கும் விடுதிக்கு பலாப்பழத்தை (பிலாப்பழம்)பேருந்து மாற்றி பேருந்தில் அவர் தூக்கி வரும் சிரமத்தை வானதியின் தோழி அவதானித்தது எனக்கு மிகவும் பிடித்த காட்சி.

"இஞ்சேரப்பா பத்மினி வந்திட்டா..." வானதியின் அப்பாவை விவரிக்கின்ற ஆரம்பக் காட்சிகள், பென்சில் கோடிட்டு ரசிக்கத் தக்கவை. வெகுளித்தனமும், வாழ்க்கையின் சின்னச் சின்ன இன்பங்களில் கரைந்து போகிற மனதையுடைய மனிதர்களையெல்லாம் இந்தப் பாழும் போரும் தொடர்ந்த அவலங்களும் என்ன செய்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க நடுங்குகிறது.

அருமைநாயகம் தொடக்கத்தில் தணிகாசலத்திடம் இந்தியப்படைக்கு நம்பிக்கையுடன் வக்காலத்து வாங்கி வாதிடுவதும் பின்பு துரோகத்தின் வலி தாங்காமல் பொருமுவதும் வலி ஏற்படுத்துகிறது.

இராணுவம் உலகெங்கிலும் இப்படித் தானா இல்லை இந்திய இராணுவம் தான் இவ்வளவு....வார்த்தைகளில்லை.

தான் எழுதும் பாத்திரங்களின் மீது படைப்பாளிக்கு மிகுந்த அன்பு இருக்க வேண்டும், எப்படிப்பட்ட பாத்திரமாக இருந்தாலும் என்று அப்பா சொல்வார். தமிழ்நதியின் எழுத்தில் விரவிக்கிடக்கும் மனித நேயமும் உள்ளார்ந்த அன்பும் அவரது கதை மாந்தரை நாமும் ஆழமாக நேசிக்கத் தூண்டுகிறது.

சந்திக்க விரும்புவது ‍ - ஜீவானந்தம்

தோழனாக்கிக் கொள்ள விரும்புவது ‍- பரணி

பொறாமைப் படுவது - வானதியுடன் பழகும் பெண்களும்

அள்ளி அணைத்துக் கொள்ளத் தோன்றுவது - சின்ன நேசன், ஜெனி...ஃபர் :‍(

தோளில் சாய்ந்து கொள்ளத் தோன்றுவது - தனபாக்கியம் அம்மாள்

பேச்சுக் கொடுத்து வம்புக்கிழுக்கத் தோன்றுவது - அருமை நாயகம்

முத்தமிட விரும்புவது ‍ - வேறு யார் வானதி தான்!

@Thamizhnathy Nathy Hats off!!!!

இலண்டனில் வாழும் அன்புத் தோழி கௌரி பரா Gowry Para தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழமான வாசிப்பு உள்ளவர். “பார்த்தீனியம்“குறித்த அவரது பார்வையை இங்கு பகிர்கிறேன். விமர்சனம் என்ற பெயரில் கதையைச் சொல்லிச் செல்லாமல், முழுமையான கருத்து வெளிப்பாடாக இந்தப் பார்வை அமைந்திருக்கிறது.  நன்றி கௌரி.

.....

எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் தொடக்க வரையிலான காலத்தில், “இந்து சமுத்திரம் ஈன்ற முத்து“ என அழைக்கப்படும் இலங்கைத்தீவின், குறிப்பாய் ஈழத்தின் அழிவை, மனித அவலங்களை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நாவல். 

இனப்பிரச்சனையால் சூறாவளியும் சுனாமியுமாக கொந்தளிக்கும் கண்ணீர்த்தீவில் ஒரு பத்து வருட காலக்கடலில் தமிழ்நதி கைதேர்ந்த கப்பலோட்டி போல கதை சொல்லும் நேர்த்தி தனியழகு. கருத்திலும் சரி நீளத்திலும் சரி கொஞ்சம் weight ஆன கதை தான், 500 பக்கங்களைத் தாண்டுகிறது, இந்நாவலில் சங்கமிக்கும் அரசியல் சங்கதிகள் பல, ஏற்கனவே கோவிந்தனின் ” புதியதோர் உலகம்" குணா கவியழகனின் ”நஞ்சுண்ட காடு” என்று இன்ன பிற நூல்களிலும் வந்தவை தான், ஆனால், இதன் முக்கியமான மூலக்கரு இந்திய அமைதிப்படையால் ஈழத்தில் நடந்தேறிய, கொலை , கொள்ளை , பாலியல் வன்புணர்வு மற்றும் அவர்கள் தமிழர்களை அங்குள்ள விடுதலை இயக்கங்களை எப்படி பிரித்து ஆண்டார்கள் என்பதுந்தான். 

நாவல் முழுவதும் ரத்த வாடை, அதையுந் தாண்டி அபரிமிதமான மண் வாசம், ஊரின் பேச்சு வழக்கு, மக்களின் நடை , உடை பாவனை வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போனது, பாத்திரங்களின் நேர்த்தியான வடிவமைப்பு, ஒளிவு மறைவு இல்லாமல் வெட்டு ஒண்டு துண்டு இரண்டு என்று பேசும் மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை , போருக்குள்ளும் வாழ்வாதாரத்திற்கான தொடர்ந்த இடைவிடாத போராட்டம், அவர்களுக்கு வாழ்வின்மீதிருந்த ஓர்மம் எல்லாம் மிகவும் ரசிக்கும் படியாய் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது.

பாத்திரங்களின் வடிவமைப்பின் தெளிவு, வன்னி நிலம் சார்ந்த வர்ணனைகளை அந்த மண்ணுக்கேயுரிய சொல்லெடுத்து அவர்களை ரத்தமும் சதையுமாய் நடமாட வைத்த நேர்த்தி இக்கதையை சுவாரசியமாய் ஆக்கியது. சொல்லாமல் இயக்கத்திற்குப் போய், திடீரென்று ஒருநாள் தாய் முன் தோன்றும் ஒரு மகனை தாய் கட்டி அணைத்தபடி கண்டிக்க பிரயோகித்த வார்த்தைகளை இவ்விடம் பகிர்கிறேன் ”போடா நீயும் ஒரு ஆளெண்டு”. இவ்வளவு தான், மன்னிப்பு, சந்தோசம், கண்டிப்பு, பாசம் எல்லாம் இதில் அடக்கம். அது போல் இதில் வரும் வானதி என்ற பாத்திரத்தின் அப்பா ஒரு கட்டத்தில் யாரோ உயிர் காக்க ஓட, இடம்பெயரச் சொல்லும்போது, "உயிரும் மயிரும் " என்று சலித்துக்கொள்வார். ஒரு சமுதாயத்தின் மொழிப்பிரயோகத்தை அப்படியே சுவை குன்றாமல் எழுத அந்த மண்ணில் பிறந்தவர்களால் தான் முடியும்.

நான் அறிந்த, குளத்தில் முடிகிற ஊரின் பெயர் என்றால், அது மாங்குளம் தான், ஆனால் தமிழ்நதி பின் வரும் ஊர்களுக்கு எல்லாம் வாசகர்களை கையோடு சுற்றுலா கூட்டிச்சென்று இந்நாவலின் வழி காட்டுகிறார். 
குஞ்சுக்குளம், பண்டிக்கெய்த குளம், ஈச்சங்குளம், நெளுக்குளம், மயிலாடுகுளம், ஆரிய குளம், இராசேந்திரன்குளம் ,கல்நாட்டினகுளம், கனகராயன்குளம் , உலுக்குளம்.பாவற்குளம்.பூவரசங்
குளம், கோழியகுளம், விளக்கு வைச்ச குளம் அவற்றில் சில

இக்கதையின் உயிர் நாடியாய் பரணி என்கிற ஒரு போராளியின் காதல் கதை, அவரது காதலி வானதியின் புலன்களினூடாகச் சொல்லப்படுகிறது. போருக்குள் இவர்கள் காதல் பல இன்னல்களையும், சவால்களையும் சந்தித்தபோதும், பசுமையாயும் நீறு பூத்த நெருப்பாயும் இருக்கிறது. வானதிக்கு பரணிமேல் உள்ள காதல் கடிவாளம் இல்லாத குதிரை போல், பரணிக்குள் இருக்கும் கடமையுணர்வு தொடவும் மாட்டேன் விடவும் மாட்டேன் என்கிற ரீதியில் தாமரை இலையில் தண்ணீர் போல் நாவல் முழுதும் உருள்கிறது.

இந்நாவலில் மூன்றாம் கட்டம் என்று நான் நினைக்கிற இறுதிப்பகுதி- இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் ஈழ மண். சொந்த மண்ணில் அகதிகளாக அலைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மக்கள், வீதியெங்கும் குற்றுயிர் குலையுயிருமாக பிணங்களை அடக்க செய்ய ஆட்களும் இல்லாமல் அவகாசமும் இல்லாமல் அநாதையாய் விடப்பட்ட காட்சிகளைக் கண்முன்னே காட்டுகிறார்.

இந்நாவல் நேர்த்தியாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை பல இடங்களில் உணரக்கூடியதாக இருந்தது . அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய போர்க்காவியம். நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது, சிந்திக்கவும் , சிரிக்கவும், அழவும், கோவப்படவும், மனவுளைச்சல் படவும் வைக்கிறது.

பிரியமுள்ள  தமிழ்நதி ,

 நான் கடந்த சில நாட்களாக "பார்த்தீனியம்" வாசித்து முடித்த மனக்களைப்பில் ,துயரத்தில்,குற்றஉணர்வில்  பதற்றத்தில் உழல்கிறேன் இதற்கு  நீங்களே காரணம்  .

எத்தனை அழகாக துவங்கினீர்கள்  நாவலை .காதலின் கிளர்ச்சியை ,பக்குவமின்மையை ,விளையாட்டு பருவத்தை விவரித்து வலை விரித்தீர்கள் நீங்கள் .புத்தக வெளியீட்டு விழாவில் காதல் பகுதியையும் ,உங்கள் மொழி ஆளுமையையும் ,வார்த்தை பிரயோகங்களையும் ,விரவி இருக்கும் பகடியையும் எல்லோரும் பாராட்டியதை நினைவு கூர்ந்தபடி ,நானும் உங்கள் எழுத்தின் விரல் பிடித்து நீங்கள் சுட்டிக் காட்டியவை  அனைத்தையும் "ஆ .."வென்று வாய் பிளந்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன் . அது ஒரு பசுமையான மலை மீதான நடைப்பயணம் போல இருந்தது .ஏறக்குறைய சரி பாதி பகுதிக்கு பின் தான் விளங்கத் துவங்கியது ,நீங்கள் மலை முகட்டில் இருந்து எல்லை தெரியாத இருட்டின் பள்ளத்தாக்கில் எறியப் போகிறீர்கள் என்று ...

ஈழம் குறித்தோ சர்வதேச அரசியலையோ அதிகம் அறிந்துகொள்ள பிரயத்தனப்படாத  என்போன்ற சாமான்ய வாசகர்களுக்கு இது அதிகம் .நீங்கள் மிகக்குறைவாக   இலைமறை காயாகத்தான் விவரித்திருந்தீர்கள்  ..ஆனால் இதுவே இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தினால் ...?

நாவலை வாசித்துக் கொண்டிருந்த பொழுதுகளில் ,பல பகுதிகளை கடக்கும்பொழுது உங்களை அழைக்க வேண்டும் என உந்துதல் இருந்துகொண்டே  இருந்தது ...எத்தனையோ கேள்விகள் முட்டி மோத என்னையுமறியாமல் நான் உங்களிடம்  கேட்டது என்னவோ ...

"உங்களுக்கு எப்படி இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது ?"

"நீங்கள் எப்படி இன்னமும் சிரிக்கிறீர்கள் ?"

உங்களுடன் உரையாடுகையில் நீங்கள் "சபிதா இந்த பக்கம் எனக்கு சரியாக கேட்காது ...நீங்கள் இந்த செவியில்   சொல்லுங்கள் என்பீர்கள் .எதனால் என்று நீங்களும் சொல்லவில்லை நானும் கேட்டதில்லை .நாவலின் மூலமாகத் தான் அறிந்தேன், சன்னங்களுக்கு தப்பி ஓடுகையில்   ்குண்டு வெடித்த சப்தத்தில் உங்களது செவிப்பறை  கிழிந்தது ..."அப்படியா நடந்தது ,அப்படியா நடந்தது " என  நான் பதற்றத்துடன் கேட்க ,நீங்கள் "ஆம்" என்றீர்கள் "இன்று சனிக்கிழமை எனபதைப் போல "

இப்படியான நிதானத்தை உங்களுக்கு எது தந்தது ?துரத்திய வறுமையா ,மரணமா,அல்லது கதவை நாய் பிராண்டும் சப்தம்  போன்ற ஒன்றை தொடர்ந்து ஈனமான முனகலுடன் விடிய விடிய ஒலித்த பெண்ணின் கேவலை கேட்டபடி  தவிப்புடன் ,இயலாமையுடன் கழித்த இரவா ?இன்னமும் முகநூலில் வலிய வம்புச் சண்டை பிடிக்கும் முரடர்களை ,ஆதிக்கவாதிகளை ,இழிவுபடுத்துவதையே குணமாக கொண்ட கீழ்த்தரமானவர்களை  நீங்கள் நிதானமாக நின்று அடிப்பது இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை .நாங்கள் நிறைய பார்த்துவிட்டோம் எனும் மனோபாவம் தானா ?//செத்துப் போகக்கை நோவு தெரியாது .வாழ்க்கையில் இவ்வளவு நாளும் அனுபவிச்ச கஷ்டங்கள் சாவை வலி தெரியாமப் பண்ணிப்போடும் //..

இதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நீங்கள் -என்னை, பிற தோழிகளை சந்திக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .இப்பொழுது இதனை வாசித்து முடித்ததும்    புரிகிறது அது ஏனென்று .எழுத்தென்பதே ஒரு பெரும்துயரம் .ஒருவனின் -ஒருத்தியின்  வாழ்வை ,காதலை ,தோல்வியை அவமானங்களை மற்றொரு முறை வாழ்ந்து பார்த்தே எழுத இயலும் .நீங்களோ அறம் பார்த்துக் கொண்டு சார்பற்ற தன்மையில் நடுநிலையாக எழுதுகையில் எத்தகைய மன உளைச்சலை கடந்திருப்பீர்கள்.பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் நீங்கள் ஒரு இயக்கத்தின் சார்பாகவே சினம் கொண்டிருந்திருக்கலாம் .அதற்கான  எல்லா  நியாமும் இருக்கிறது .என்ன பெரிதாக   அறம் வேண்டியிருக்கிறது ? .இடுப்புக்கு கீழ் புதையல் இருப்பதாக காட்டிய இராணுவ வீரன் விடை பெறுகையில் சிநேகமாக புன்னகைத்தான் என்பதெல்லாம் பெருந்தன்மையின் உச்சம்  .

பாசம் ,குடும்பம் ,காதல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரே லட்சியத்துடன் போன போராளிகளின் கதியை  -முடிவை இந்த ஒற்றை வரி சொல்லியது .போராளி ஒருவன்   வீர மரணம்  அடைந்த தகவலை அவனது வீட்டிற்கு தெரிவிக்க பரணி செல்கிறான் //இரண்டரை ஆண்டுகளுக்கு முந்தைய விடிகாலையொன்றில் பிரிந்து போன  மகன் ,ஒரு வாக்கியமாக வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறான் //

அகதி   வாழ்வினில் அவசியத் தேவைக்கும் அலைகழிந்தததை //கக்கூசுக்குப் போன கோலத்திலேயே செத்துப்போவோமோ எண்டு பயமாக் கிடக்கு //எனும் வாக்கியத்தில் தாக்குகிறது பெண் பாத்திரமொன்று .

//"போ"வென்றதொரு  சொல்லுக்காக  அவர்கள் காத்திருந்தார்கள் .அந்தச் சொல் அவர்களை பசியிலிருந்தும்   நாற்றத்திலிருந்தும்  உறக்கமின்மையிலிருந்தும்,நெருக்கமான கண்காணிப்பிலிருந்தும் கூட விடுதலை செய்ய  வல்லது .முதலில் ஆர அமர மலங் கழிக்க வேண்டும் .விமானங்கள் எழுப்பும் பேரொலியின்கீழும் ,துப்பாக்கிகளின்  கருந்த்துளைகள்  முன்னும்  மல  வாயில்கள் இறுகிப்போயவிட்டன//

கஞ்சாவை விட கெட்ட சாமானான பார்த்தீனிய நாட்டின் ராணுவ அமைப்பின் மீது காறி உமிழ்கிறது  13 வயதே நிரம்பிய ஜெனிபருக்கு இன்னும் பிற குழந்தைகளுக்கு நிகழ்ந்த குரூரம் .வெட்கித் தலை குனிவதைத் தவிர வேறென்ன செய்ய ?ராஜினி ,சுபத்திரா ஜெனிபர்   இவர்களையெல்லாம்  எந்த காலத்தில் நான் இனி மறப்பேனோ ?பிறந்து கண நேரமே ஆன குழந்தைகளை ,நோயாளிகளை ,வயோதிகர்களை கொல்வதும் ,சிறுமிகளை வன்புணர்வு செய்வதிலும் என்ன போர்மரபு அல்லது அரசியல் காரணங்கள் இருக்க முடியும் என இன்னமும் எனக்கு விளங்கவில்லை .இதற்கு முத்தாய்ப்பு அதிகார வர்க்கம் சொன்ன சப்பைக்கட்டு பதில்தான் "சண்டைக் களைப்பினாலையும்   ,எந்த நேரம் என்ன நடக்குமோ எண்டு தெரியாத மனவழுத்தத்தாலையுந்தான்  அப்படி நடந்து கொண்டார்களாம் .இதை விட அலட்சியமான பதில் இருக்க முடியுமா ?

எவனோ ஒரு அந்நியனின் உரசலை "சீ.." என ஒதுக்க இயலாமல் தோலை உரித்து போட்டுவிடலாம் போல எழும் அருவருப்பையே சகிக்க இயலாத பெண்ணால் சொல்லப்படும்  வாசகமே இது //
விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக் கூட ஒரு பெண் மறந்து போகக்கூடும்.ஆனால் தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப் போலக் கையாளப்பட்ட அவமானத்தை ,அருவருப்பை அவளால் ஒருபோதும் மறக்க முடியாது.முதுமை கூடி நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து  திரியும் புழு அது //

Hotel  rwanda திரைப்படத்தை பார்த்த பாதிப்பில் சில நாட்கள் இரவில் வீட்டை சுற்றி யாரோ பதுங்கி இருப்பதை போன்ற பிரமை பீடித்திருந்தது ."பார்த்தீனியம் " வாசித்த பின் எனக்கு துப்பாக்கி குண்டுகளும் ,மரண ஓலங்களும் ,ஈன சுவரத்தில் முனகும் குரல்களும் இன்னும் எத்தனை நாட்களுக்கு வாட்டுமோ தெரியாது .பாமரன் ,நாஞ்சில் நாடன் ,லக்ஷ்மி சரவணகுமார் போன்றோர்கள் வாசிக்கும் பொழுது மனமுடைந்து கண்ணீர் விட்ட தருணத்தை விவரித்தார்கள் .அதை நானும் கடந்து வந்தேன் .அழுகையை அடக்க அடக்க தலை வலித்ததினால்  புத்தகத்தை குப்புற வைத்துவிட்டு,  வாசிக்கவே இத்தனை பெரும்பாடென்றால்  இதை நேரில் கண்டவர்கள் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் ,உறவை இழந்தவர்களின் நிலை என்னவென்றெண்ணி புத்தகத்தை  மறுபடியும் கையிலெடுப்பேன்.போருக்கு பின் பலரும் சித்தம் கலங்கிப் போனதாகவும் ,சில போராளிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொன்னீர்கள் .அது பின்வேறெப்படி இயலும் ?நீங்கள் எல்லோரும் இப்பொழுது வேற்று தேசத்தில்  
சில சவுகரியங்களோடு வாழ தலைப்படலாம் .ஆனால் நினைவில் தங்கிப் போன நரக காலத்தையும் ,துரத்தும் பாதுகாப்பின்மையையும் எப்படி கையாள்கிறீர்கள் ? 

ஐ.பி.கே.எஃப்  என்பதற்கு இன்னொசென்ட் பீப்பில் கில்லிங் ஃபோர்சஸ் என்றும்   இந்திய ராணுவப் படை இலங்கை வந்த தொடக்க காலத்தை தேனிலவு காலங்கள் என்றும் குறிப்பிடுவது black  comedy வகையைச் சார்ந்ததாக இருக்கிறது .

உங்கள் நாவலின் பாதிப்பில் எனக்கொன்று விளங்கியது .பிரபாகரன் ,  சே குவாரா   போன்றோரை தனி மனித வழிபாடு செய்ததில் எந்த பிழையும் இல்லை .அவர்கள் அதற்குத் தகுதியானவர்களே .அவர்கள் வெறும் தலைவர்கள் அல்லர் .அவர்கள் ஒரு கோட்பாடு,சித்தாந்தம் .

இங்கே அரசியல் சாக்கடையில் நெளியும் புழுக்களுக்கு அண்ணாந்து பார்த்தாலும் தெரியாத  வானத்து நட்சத்திரங்கள் அவர்கள் .

முடிவில் சின்ன  மன அமைதியையேனும்   நீங்கள் தந்திருக்க வேண்டும் ..இந்த நாவல் ஏற்படுத்திய ் பாலைவன தாகத்திற்கு கண்ணுக்கு மட்டுமாவது குளுமை ஏற்படுத்தும்  கானல் நீராகவேனும் அது இருந்திருக்கும் .சிலவற்றை  சிலரால் மட்டுமே எழுத இயலும்.இத்தகைய நிகழ்வுகளை கற்பனையில் எழுதிவிட இயலாது .அவ்வாறு எழுதினால்  ,உண்மை  என்பது        எழுத்தெனும் மாயாஜாலத்தில் கண்கூசச் செய்யும் பளபளப்பில் மறைந்து போய்விடும் .இது உங்களால் மட்டுமே எழுதக்கூடிய சமரசம் செய்யப்படாத புதினம் .

பாராட்டுக்களும் ,நிறைய, நிறைய அன்பும்

 

மூலம்-முகநூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் இதை யார் எழுதியது?

Link to comment
Share on other sites

முதல்  பகுதி  தீபா லக்ஸ்மி ஜெயகாந்தனின்மகள் எழுதியது மற்றையது லண்டனில் வசிக்கும் கௌரி என்பவர் இறுதி பகுதி சபீனா எனும் தமிழகத்திலிருக்கும் தமிழ் நதியின் நண்பி எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன்

Link to comment
Share on other sites

  • 1 year later...

கடந்து வந்த பாதை.. பார்த்தீனியம் (நாவல்)

Cover.png

கனகாலமாக வாசிக்கத் தேடிய தமிழ்நதி  எழுதிய பார்த்தீனியம் நாவல், அவரது முயற்சியால் அவரது மருமகனே கடந்த முறை கொழும்பு சென்ற போது எனது கையில் கொண்டு வந்து தந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பேருந்தில் வாசிக்க தொடங்கிய புத்தகம், யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலில் திரும்பும் போதும், பின்னர் கொழும்பிலிருந்து மெல்பேர்ணிற்கு விமானத்தில் பறக்கும் போதும் வழித்துணையானது.  
 
"அக்கா, பார்த்தீனியம் என்றா என்ன?" "பார்த்தீனியம்" நாவலை எழுதிய தமிழ்நதியிடமே உட்பெட்டியில் கேட்டேன். "அது ஒரு மோசமான களை, இந்தியன் ஆமிக் காலங்களில் அவங்களால எங்கட மண்ணில் விட்டுப் போன களை" என்றார். பார்த்தீனியம் என்ற இந்திய இராணுவம் கொண்டு வந்த அந்த மோசமான களை, அந்த கொடிய களை, நாங்கள் ரத்தமும் வியர்வையும் உரமாய் இட்டு, எங்கள் மண்ணில் வளர்த்த விடுதலைப் போராட்டம் எனும் பயிரையே கடைசியில் அழித்து விட்டது என்பது வேதனையான உண்மை. 
 
-------------------------------------------------------------------
"பிளேனால சாப்பாடு போடுறாங்கள்"
"என்ன? ஆர்?"
"இந்தியா"
"ஜெயவர்த்தனா இனி நொட்டிப் பார்க்கட்டுமன்"
மலர்ந்து சிரித்த முகங்கள், நம்பிக்கைக் கீற்றில் மினுங்கின.
------------------------------------------------------------------
 
1980களில் தான் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கியமான பல வரலாற்று சம்பவங்கள் நடந்தேறின. அந்த கொடிய எண்பதுகளில், நிகழ்ந்த பல நிஜ நிகழ்வுகளை பின்னனியாகக் கொண்டு, காதலும், நகைச்சுவையும், வேதனையும், சோகமும் கலந்து,  புனையப்பட்ட ஒரு அருமையான எங்கள் மண்ணின் மணம் மாறாத நாவல், பார்த்தீனியம். 
 
"நான் இயக்கத்திற்கு போகப் போறன்" என்று வசந்தன் (இயக்கப் பெயர் பரணி) அவனது காதலி வானதிக்கு சொல்லும் வசனம், புத்தகத்தின் முதலாவது பக்கத்திலேயே நம்மை எண்பதுகளிற்கு கூட்டிப் போய்விடுகிறது. பின்னேரம் கிரிக்கட் விளையாடின சென் ஜோன்ஸில் படித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு அண்ணா அடுத்த நாள் காலையில் இயக்கத்திற்கு போன நினைவை  அந்தப் பக்கங்கள் மீண்டும் நினைவுபடுத்தின. 
 
"அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள் என்னவானார்கள்? எங்கு போனார்கள்? என்ன செய்தார்கள்?  என்ன எண்ணினார்கள்? " என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும், புலிகளின் மூத்த உறுப்பினருமான க.வே. பாலகுமாரன் "நஞ்சுண்ட காடு" புத்தகத்தில் எழுப்பிய வினாக்களிற்கு, "பார்த்தீனியம்" புத்தகமும் விடையளிக்கிறது. 
 
வசந்தனோடு சேர்த்து பாவற்குளத்திலிருந்து பதின்மூன்று பேர் இயக்கத்தில் இணைய, இரவோடு இரவாக, உறவைப் பிரிந்து, ஊரை விட்டு போகிறார்கள். எந்த இயக்கத்தில் இணைவது என்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக அன்று இருந்ததில்லை. ஒரே ஊரிலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளால் வேறு வேறு இயக்கங்களில் இணைந்து, பின்னாட்களில் இயக்கங்களிற்கிடையிலான சகோதர சண்டைகளில் அநியாயமாக அந்த இலட்சிய இளைஞர்கள் பலியாகும் கணங்களில் நெஞ்சு வலிக்கிறது.
 
------------------------------------------------------------------
"ஊர் நோக்கி செல்லும் செம்மண் வீதியை ஒரு கணம் பார்த்தார்கள். பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே நடக்கத் தொடங்கினார்கள். 
இனிக் காண்போமா?"
---------------------------------------------------
 
இயக்கத்தில் இணையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலுள்ள குடும்பங்களின் கதைகளினூடாக, அன்று இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் இலட்சிய வேட்கையையும் தூய்மையான இனப்பற்றையும் தமிழ்நதி உணர்வோடு பதிவுசெய்துள்ளார். பரணி எனும் இயக்கப் பெயர் ஏற்கும் வசந்தனின் கதாபாத்திரத்தினூடே, இந்தியாவில் இயக்கத்தின் பயிற்சி முகாம் வாழ்க்கையையும், பின்னாட்களில் தாயகம் திரும்பி அரசியல்துறை போராளியாக அவனது போராட்ட வாழ்க்கையையும் எங்களையும் அவர் அனுபவிக்க வைக்கிறார். 
 
பள்ளிநாட்களில் அரும்பும்,  வசத்தன் - வானதி காதல் கதையினூடாகவே பல வரலாற்று நிகழ்வுகளை பார்த்தீனியம் நாவல் காட்சிப்படுத்துகிறது. விரசம் இல்லாத, பயந்து பயந்து காதலிக்கும் அழகிய யாழ்ப்பாணத்து காதலை எங்களை மீண்டும் அனுபவிக்க வைக்கும் எளிமையான வசனங்கள், நாவல் எங்கும் நிரம்பி வழிகின்றன.
 
 
எண்பதுகளில் விடுதலைப் போராட்டத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பின்னிப் பிணைந்திருந்தது.  யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடந்த பல சம்பவங்கள் பரணியின் காதலியான வானதியின் கதாபாத்திரத்தினூடாக நாவலில் விபரிக்கப்படுகிறது. ராகிங், விஜிதரன் காணாமல் போனது, உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், இந்திய இராணுவம் மாணவர்களை கொன்றது என்று நாவல் தொட்டுச் சென்ற சம்பவங்கள் பல. நாவல் ஏனோ  ராஜினி படுகொலை, விமலேஸ்வரன் காணாமல் போனது, செல்வி மாயமானது பற்றி தொடாமலே சென்று விடுகிறது.  
 
-----------------------------------------
"கடைசில நீ தியாகியுமில்லை.. துரோகியுமில்லை, நீ ஆர் அண்ணா"
--------------------------------------
 
இந்திய இராணுவமும் அதனோடிணைந்த மண்டையன் குழு போன்ற இயக்கங்களும் அரங்கேற்றிய அராஐகங்கள் நாவலில் வரும் பக்கங்கள் இதயத்தை நொறுங்க வைக்கின்றன. குறிப்பாக திலீபனின் மரணத்தை தமிழ்நதி அக்கா காட்சிபடுத்தும் அந்த வரிகள், வலிமையானவை, வலி தந்தவை. குறிப்பாக இந்திய இராணுவம்  புரிந்த பாலியல் வல்லுறவுகளும் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளும் இந்த நாவலிற்கு முன்னர் எந்த புத்தகத்திலும் ஆழமாக பதிவுசெய்யப்படவில்லை. 
 
----------------------------------------
"சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது"
--------------------------------------------------------
 
பார்த்தீனியம் நாவல் பற்றி பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது பார்வையை, "தமிழ்நதியின் எழுத்து, வட்டார வழக்கு மொழியைக் கொண்டது. சொலவடைகளும் கவித்துவமான நுண் அவதானிப்புகளும் கொண்டது. தமிழ்நதி, நாவலில் இடம்பெற்றுள்ள திலீபனின் மரணம் மறக்க முடியாத வரலாற்றுசோகம், அந்தப் பக்கங்களைக் கடக்கமுடியாதபடி மனத்துயரம் ஏற்படுகிறது. சமகால ஈழத்தமிழ் நாவல்களில் தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் முக்கியமானது" என்று பதிவு செய்கிறார்.
 
பார்த்தீனியம்.. 
எண்பதுகளில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கிடைத்த அரிய பொக்கிஷம். நாங்கள் கடந்து வந்த பாதையை மீண்டுமொருமுறை பயணிக்க வைத்த, வாசிக்க தவறவிடக் கூடாத ஒரு நல்ல நாவல்.

http://kanavuninaivu.blogspot.ch/2017/07/blog-post_14.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.