Archived

This topic is now archived and is closed to further replies.

நவீனன்

சமூக வலைதளங்களில் தேவை கவனம்!

Recommended Posts

சமூக வலைதளங்களில் தேவை கவனம்!

 

FB7.jpg


 

 

ன்றைய காலகட்டத்தில் மக்கள் உணவில்லாமல் கூட வாழத் தயாராக உள்ளனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் நுழையாமல் அவர்களால் சில மணிநேரம் கூட தாக்குபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டது. நண்பர்கள் கேட்டால் பலர் ATM பாஸ்வேர்டை கூட எளிதில் தந்து விடுவார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களின் பாஸ்வேர்டை உயிர்போகிற காரியம் என்றால் கூட யாரும் தரமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.

இதில், மக்கள் தங்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள, கால் செய்ய, சாட் செய்ய, ஃபோட்டோ பதிவேற்றி தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள, தங்களது கருத்துக்களை பதிவு செய்ய என  அனைத்திற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். இதில் ஒவ்வொருவரும் உலகம் முழுக்க உள்ள நபர்களையும், தன்னோடு படித்த நண்பர்களையும், மேலும் குடும்ப உறுப்பினர்களையும் ஆண், பெண் விகிதசாரமின்றி அனைவரையும் நண்பர்களாகக் கொண்டிருப்பார்கள்.

FB6.jpg

 

 

எவ்வித பிரச்னையும் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கும் நமது பக்கத்தில் திடீரென ஒருநாள், ஆபாச வீடியோஸ் நாம் ஷேர் செய்தது போல் நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும். பலருக்கு நமது பெயரில் டேக் ஆகியிருக்கும். இதனால் நட்பு வட்டாரங்களில் நமது பெயருக்கு களங்கம் ஏற்படும். ஆனால் அந்த வீடியோவை நாம் ஷேர் செய்திருக்கவே மாட்டோம்... பின்பு எப்படி அது நமது பக்கத்தில் ஷேர் ஆனது.

உண்மையில் இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் போல் காட்சி தரும் லிங்குகள், வீடியோவே கிடையாது. சமூக வலைத் தளங்களின் தீயசக்திகளான ஹேக்கர்களால் உருவாக்கப்படும் "ஸ்பேம் புரோகிராம்கள்" தான் அந்த ஆபாச வீடியோ லிங்குகள். இவர்களின் முக்கியநோக்கம் நமது கடவு சொல்லை திருடுவதே.

FB5.jpg

 

 

எதற்காக நமது கடவுச் சொல்லை திருடவேண்டும்:

1.ஒருவருடைய முழுவிவரத்தையும் எடுத்து சமூக விரோத செயலுக்கான போலி ஆவணங்கள் தயாரிக்க.

2.புகழ்பெற்ற மனிதர்களின் அக்கௌண்ட்-ஐ திருடி அவர்களின் அனுமதி இல்லாமலே, தவறான செய்திகள், தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோ-க்களை பதிவேற்றி அவர்களின் நற்பெயரை கெடுக்க.

FB4.jpg3.ஒருவரின் ரகசியங்களை தெரிந்துவைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிக்க.

போன்ற செயல்களுக்காக இணையதள உலகில் கடவுச் சொல்லை திருடி விற்பதற்கு ஒரு சமூக விரோத கும்பலே உங்களை நோட்டமிட்டுகொண்டிருக்கிறது.

FB3.jpgஇது போன்ற ஹேக்கர்களிடம் மாட்டிகொண்டு தவிப்பதைவிட, சில முன்னெச்சரிக்கைகளினால் தேவையற்ற லிங்குகள் மூலம் பரவும் ஸ்பேம் புரோகிராம்களை தடுக்க முடியும்.

 

1.முதலாவதாக இது போன்ற ஸ்பேம் புரோகிராம்கள் அதிக அளவில் 'கேம்'களின் மூலமாகவே பரவுகின்றன. ஃபேஸ்புக்கில், நாம் விளையாடு கேம்களில், ஒரு மூலையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். அதனை, க்ளிக் செய்வதென்பது , நமக்கு நாமே ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்குச் சமம்.

FB2.jpg2.அடுத்து இது போன்று வரும் புரோகிராம்களில் சிலர் உண்மையிலேயே பலான வீடியோக்களை அனுப்புகின்றனர், சிலர் அது மாதிரியான படங்கள் பார்க்கும் ஆர்வத்தில் கிளிக் செய்ய, அந்த புரோகிராம் அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பல பேருக்கு டேக் ஆகிறது.

3. இது போன்ற விளம்பரங்களை, க்ளிக் செய்ததும், அது தனி பாப் அப் விண்டோ ஒன்றை திறக்கும். அவசரகதியில் அதில் நாம் தொடர்ந்து okay என்பதை அழுத்தும் போது, நமது அக்கௌன்ட் ஹேக்கர்கள் வசம் செல்ல வாய்ப்புக்கள் அதிகம்.

 

4. ஃபேஸ்புக்கில், தற்போது அதிக நபர்கள் பயன்படுத்துவது, "நான் போன ஜென்மத்தில் யாராக இருந்தேன்?", "ரஜினியின் எந்தக் கதாப்பாத்திரம் , உங்களுக்கு செட் ஆகும்" போன்ற கேள்விகள் நிச்சயமாய் ஒரு அப்ளிகேஷன் இருக்கும். அதனை பயன்படுத்துவது தவறல்ல. அவற்றை க்ளிக் செய்ததும், அது உங்களிடம் " நான் உங்களது பக்கங்களை ஆராய அனுமதி அளிக்க முடியுமா? என கேட்கும். அவற்றிற்கு நீங்க அனுமதி அளிக்கலாம். ஆனால், சில அப்ளிகேஷன்கள், " உங்கள் சார்பாக , நான் உங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இட்டுக்கொள்ளலாமா ? " எனக் கேட்கும். அவற்றைத் தவிர்த்தல் நலம்.


இதனை தவிர்க்கும் வழி:

படம்-1: முதலில் உங்களின் செட்டிங்ஸ்(Settings) கிளிக் செய்து உள் செல்லவேண்டும்.

படம்-2: அடுத்ததாக இடது புற ஓரத்தில் இருக்கும் பயன்பாடுகள்(Apps) அமைப்பினுள் செல்லவேண்டும்.

 

 FB1.jpg

 

 

படம்-3:மேலே இருக்கும் கேம் பக்கங்கள், மற்றும் இதர பக்கங்கள் அனைத்தும் நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ லைக் செய்த பக்கங்கள் அல்லது உங்களின் நண்பர்கள் மூலமாக நீங்கள் டேக் செய்யப்பட்ட பக்கங்கள். இதன் மூலமாக ஸ்பேம் ப்ரோகிராம்கள் உங்கள் முகநூல் கணக்கிற்கு உள் நுழைகின்றன.

படம்-4 மற்றும் படம்-5-ல் காட்டியுள்ளது போல் அவற்றை உங்கள் கணக்கிலிருந்து நீக்கவும், முடிந்தவரை எல்லா பக்கங்களையும் நீக்குவது சிறந்தது.

இப்போது நீங்கள் அந்த பக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படுவீர்கள், சில நாட்கள் கழித்து வேறு ஒரு நபர்மூலமாக, வேறு பக்கத்திலிருந்து உங்கள் கணக்கில் அத்தகைய ஸ்பேம் புரோகிராம்கள் வரும். இனி இது போல் பக்கங்களும், கேம் அழைப்புகளும் ஸ்பேம் புரோகிராம்களும் உங்கள் நண்பர்கள் வாயிலாக வராமல் இருக்க படம்-6-ல் காண்பிக்கப்பட்டுள்ளது போல் "பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் பிளக் இன்கள்(Apps, Websites and Plugins)"- ஐ டிசேபிள் செய்யவும்.

படம்-7-ல் உள்ளது போல் பிளாட்பார்மை முடக்கினால், பின்வரும் காலங்களில் இதுபோன்று தேவையற்ற போர்னோ வீடியோக்கள், கேம் அழைப்புகள், மற்றும் ஸ்பேம் புரோகிராம்களில் இருந்து உங்களுடைய கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

http://www.vikatan.com/news/tamilnadu/66166-becareful-with-social-networking-sites.art

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை  (சுகததாச அரங்கிலிருந்து எம்.எம்.சில்ஸெ்டர்) 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில்  பெண்களுக்கான  1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி  லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும்.  ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார். கொழும்பு சுகததாச  விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது  தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது. தேசிய சாதனை படைத்த நிமாலி பெண்களுக்கான 1500  மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித்  தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42  செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர். முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம் போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார்.  தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார். யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார். முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா  நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால்  தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. அனிதாவுக்கு மூன்றாமிடம்   பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார். இறுதிக்கு முன்னேறிய பவிதரன் போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில்  காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற  பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார். 100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம்  ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும்,  வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை  பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது. 400 மீற்றர் ஓட்டப்போட்டி ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அசத்திய ஹிருனி விஜேரட்ண   அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார்.  நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார்.  https://www.virakesari.lk/article/62885
    • தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். சைவர்களின் நம்பிக்கையுள்  அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். 😊 https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142
    • தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை.  ஆனால்,  சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு.   பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப்  விலை : இலவசம்  தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம்  இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும்  குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பயன்படலாம்  ( இவ்வானவை தமிழில் இருந்தால் .... )       
    • தாயக  தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும், 2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர்.